2008ஆம் ஆண்டு தமிழ் பிரவாகம் இணையக் குழுமத்தின் ஆண்டு விழாவில் அப்துல் ஜப்பாருடன் இணைந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 'இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்' என்ற பொருளில் உரையாற்றினேன். அந்தத் தொகுப்பில் பின்னர் மேலும் சிலரையும் சேர்த்தேன். அந்த உரையின் சுருக்க வடிவம் இங்கே:
வரலாற்றில் நாம் வாழும் இந்தக் காலமானது, தமிழுக்கு மிகப் பெரிய பொற்காலம் என்பேன். இது வரையான காலக்கட்டத்தில் இப்போதுதான் நான்கில் மூன்று பேர் எழுத்தறிவு பெற்றவர்களாய் இருக்கிறார்கள். தமிழ்த் தரவுகள் வேறு எப்போதையும் விட இப்போதுதான் மிக அதிகமாகச் சேமிக்கப்படுகின்றன. அச்சிதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையம், திரைப்படம்.... என இவ்வளவு அதிகமான ஊடகப் பரவல், வரலாற்றில் இப்போதுதான் முதன்முதலில் நிகழ்ந்துள்ளது. நுணுக்கமான பற்பல துறைகள் தோன்றியுள்ளன. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியினால் இலட்சக்கணக்கான புதிய கருவிகள் பிறந்துள்ளன. இவற்றினால், தமிழர்கள் தங்கள் ஆளுமையை உலகம் முழுவதும் நிலைநிறுத்தி உள்ளார்கள்.
இந்தப் பின்னணியில் இணையத்திலும் தமிழர்கள் முத்திரை பதித்து வருகிறார்கள். அவர்களுள் சிலரை இங்கு எடுத்துக் காட்டுவதில் மகிழ்கிறேன்.
தமிழில் தனித்துவமான முதல் முயற்சிகள்:
* நா.கோவிந்தசாமி (இணையத்தில் தமிழைக் கொணர்ந்தவர்)
* கிருஷ்ணமூர்த்தி (பொன்விழி ஓசிஆர், பொன்பென் - கையெழுத்து உணரி உள்ளிட்ட கருவிகள்)
* டி.நாகராஜன் (எழுத்திலிருந்து குரலுக்கு மென்பொருள்)
* சந்தோஷ் தொட்டிங்கல் (எழுத்திலிருந்து குரலுக்கு மென்பொருள்)
* ஏ.ஜி.ராமகிருஷ்ணன் (எழுத்திலிருந்து குரலுக்கு மென்பொருள்)
* நாகராஜன் (இணையவழியில் இலவசக் கல்வி)
* பத்ரி சேஷாத்ரி (ஒலி நூல்கள் உருவாக்கியவர்)
* காசி ஆறுமுகம் (தமிழ்மணம்.காம் - திரட்டி)
* கணேஷ்ராம் (செல்பேசியில் நூலகம், இதர செல்பேசிச் சேவைகள்)
* கணேஷ் பத்மநாபன் (http://www.voicesnap.com)
* விஜயதீபன் (தாயம், பல்லாங்குழி ஆகியவற்றைக் கணினியில் விளையாடும் வழியில் ஆக்கியவர்)
தமிழில் மின்னாக்கம்:
* கல்யாணசுந்தரம் குழுவினர் (மதுரைத் திட்டம்)
* பொள்ளாச்சி நசன் (1000க்கும் மேற்பட்ட மின்னூல்கள் ஆக்கியவர் - ஆங்கிலம் வழி தமிழ் கற்பிப்பவர்)
* நூலகம்.ஆர்க் குழுவினர் (http://noolaham.org)
* மறவன்புலவு க.சச்சிதனந்தன் (தேவாரம்.ஆர்க், தமிழ்நூல்.காம்)
* நா.கண்ணன் குழுவினர் (தமிழ் மரபு அறக்கட்டளை)
* கோ.சந்திரசேகரன் (சென்னை லைப்ரரி.காம் - தமிழ் நூல்கள் மின்னாக்கம்)
* 'விருபா' குமரேசன் (http://www.viruba.com)
தமிழில் எழுதி, எழுத்துரு மாற்றிகள்:
* சுரதா யாழ்வாணன் (பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றி)
* முத்தெழிலன் நெடுமாறன் (அஞ்சல் எழுதி)
* விஸ்வநாதன் (அழகி - ஆங்கில ஒலிபெயர்ப்புவழி தமிழ்த் தட்டச்சு)
* முகுந்தராஜ் (இ-கலப்பையில் பங்களித்தவர்)
* ஹாய் கோபி (எழுத்துரு மாற்றி, பல்வகை தமிழ் மென்பொருள்கள்)
* சர்மா (ஃபிரெஞ்சு - தமிழ் அகராதி, பல்வகை தமிழ் மென்பொருள்கள் )
* நாகராஜன் (என் எச் எம் எழுதி, எழுத்துரு மாற்றி)
* முத்து நெடுமாறன் (செல்லினம்)
தமிழில் ஒருங்குறி எழுத்துருக்கள்
'தேனீ' உமர்தம்பி மற்றும் பலர்
தமிழில் பிழை திருத்திகள்
* தெய்வசுந்தரம் (மென்தமிழ்ச் சொல்லாளர்)
* நீச்சல்காரன் (நாவி, வாணி)
கணிணித் தமிழ் எழுத்தாளர்கள்
* ஆண்டோ பீட்டர்
* காம்கேர் புவனேஸ்வரி
* மு.சிவலிங்கம்
* 'தமிழ் கம்ப்யூட்டர்' ஜெயகிருஷ்ணன்
* நித்யா ஸ்ரீநிவாசன்
தமிழ் இணையப் பயிலரங்குகள்
* மு.இளங்கோவன்
* துரை.மணிகண்டன்
கட்டற்ற மென்பொருள்கள்
* ஆமாச்சு (கட்டற்ற மென்பொருள்கள்)
* ஸ்ரீநிவாசன் (Freetamilebooks)
விக்கிப்பீடியா
* இ. மயூரநாதன்
* மு.இரவிசங்கர்
* செ.இரா.செல்வக்குமார்
* சுந்தர்
* நற்கீரன்
* சிவகுமார்
* உமாபதி
* கனக சிறீதரன்
* குறும்பன்
* கார்த்திக்பாலா
* டானியேல் பாண்டியன்
* தேனி. எம். சுப்பிரமணி
* அருண்
* செல்வம்
* பரிதிமதி
* சந்தோஷ்குரு
* கலாநிதி
* மயூரேசன்
* மு. மயூரன்
* கோபி
* நிரஞ்சன் சக்திவேல்
* டெரென்ஸ்
* சந்திரவதனா
* வினோத்
* சிந்து
* விஜய ஷண்முகம்
* பாலாஜி
* வைகுண்டராஜா
* பாலச்சந்திரன்
* வேர்க்லோரம்
தொழில்நுட்ப நிறுவனங்கள் / அமைப்புகள்
* கூகுள்
* அண்ணா பல்கலை
* ஐஐடி, சென்னை
* மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை
* உத்தமம்
* கணித்தமிழ்ச் சங்கம்
அரசு சார்ந்து இயங்குபவர்கள்:
* எல்காட் குழுவினர் (http://www.elcot.in)
* தமிழ் இணையப் பல்கலைக் குழுவினர் (http://tamilvu.org)
* தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை (http://www.textbooksonline.tn.nic.in)
* தமிழகச் சுற்றுலாத் துறை (http://www.tamilnadutourism.org/virtualtour/index.html)
* தமிழகப் பத்திரப் பதிவுத் துறை (http://www.tnreginet.net)... உள்ளிட்ட துறைகள்.
தனி நபர்களுடன் நிறுவனங்களையும் அரசுத் துறைகளையும் குறிப்பிடக் காரணம், அவற்றின் முயற்சிகள், வலுவான பயன்களை அளித்துள்ளமையாலேயே.
மேலும் பலரும் இருப்பினும் என் நினைவில் இப்போது உள்ள சிலரை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன். தமிழ் இணையத்தில் இயங்கும் பலரும் ஏதோ ஒரு வகையில் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை அளித்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் நான் பெரிதும் போற்றுகிறேன். வாழ்த்துகிறேன். நன்றி பாராட்டுகிறேன். அவர்களின் முயற்சிகளால் தமிழ், பல மடங்குகள் முன்னேறியுள்ளது என உறுதியாக நம்புகிறேன். இந்த முயற்சிகள் நீளட்டும். இவர்களைப் பார்த்து மேலும் பலரும் இந்தத் திசையில் பயணிக்கட்டும். ஒவ்வொருவரிடமிருந்தும் புதுமைகள் உதிக்கட்டும்.
இவர்களின் உதவியோடு, 100% எழுத்தறிவு; கல்வியில் உயரிய நிலை; பண்பாட்டில் செழுமை, தகவல் தொடர்பில் முதலிடம், அறிவியல் - நுட்பங்களில் அகிலம் வியக்கும் புத்தாக்கம், வரலாற்றுப் பதிவுகளில் கூர்மை, வாழ்க்கைத் தரத்தில் உன்னத நிலை, பன்னாட்டு உறவில் புதிய அத்தியாயம், மக்களாட்சிப் பண்புகளை மதிக்கும் பக்குவம்.... ஆகிய இலக்குகளை விரைவில் எட்டுவோம்.

15 comments:
பயனுள்ள தொகுப்பு
தமிழ்க் கணிமை ஆர்வலர்கள் கட்டுரையையும் காணலாம்.
இ-கலப்பை உருவாக்கியவரான முகுந்த் நாகராஜ்?!
நண்பர் முகுந்த் நாகராஜையும் அந்த உரையில் குறிப்பிட்டதாக ஞாபகம். இந்தச் சிறுகுறிப்பில் விட்டுப் போயிற்று. நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றி, சென்ஷி. இப்போது சேர்த்துவிட்டேன்.
நன்றி அண்ணா கண்ணன். முதன் முதலா தமிழ்ல டைப் அடிக்க ஆரம்பிச்சு பதிவுலகத்துல உலா வர்றவரைக்கும் இவரோட எ-கலப்பைதான் நிறைய்ய பேருக்கு உதவியிருக்குது.
பலரையும் நினைவுகூர்ந்தது மிக நன்று!!!
இ-கலப்பை உருவாக்கியது முகுந்த் நாகராஜன் அவர்களா!?
அண்மையில் தான் அவரது கவிதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது.
நன்று!
அனைவருக்கும் வாழ்த்துகள்!
மன்னியுங்கள். எ-கலப்பையை உருவாக்கியவர், முகுந்தராஜ்; தவறுதலாக முகுந்த் நாகராஜ் என வந்துவிட்டது. இப்போது திருத்திவிட்டேன். முகுந்த் நாகராஜன், கவிஞர்; இன்ஃபோசிஸில் பணியாற்றுபவர்; இவர் வேறு; முகுந்தராஜ் வேறு. நல்லவேளை, அத்திவெட்டி ஜோதிபாரதி குறிப்பிட்டதால், இந்தக் குழப்பத்தைத் தெளிவிக்க முடிந்தது.
மிக நல்ல தொகுப்பு...
இ-கலப்பை,கடலைமிட்டாய் முதலான மென்பொருள்களை ஆரம்பகாலத்திலிருந்து பயன்படுத்துகின்றேன்..
அழகிய தமிழை இணையத்தில் தவழ விட்ட இந்த முயற்சிகளிலுக்கு, எல்லா பதிவுலக நண்பர்களின் சார்பாக எனது நன்றிகள்..
Just a quick note. will give more details:
(a) Bala Swaminathan did the first Tamil editor for the internet. It was called Madurai editor, and worked in plain VT100 terminal, no Tamil fonts - just with existing ASCII keyboard, Tamil letters are shown. In 1990s.
(b) Muthezilan (Muthu) Nedumaran - Anjal editor that was used widely in Tamil.net days.
(c) Bala Pillai (Malaysia/Australia), founder of http://tamil.net that led to Tamil 8-bit fonts like TSCII.
(d) Ravindran K. Paul, Malaysia.
Very important. He is the *Inventer* of Phonetic keyboards
- Thunaivan class of Tamil keyboards, including TN Govt. approved Tamil99 keyboard.
Ravi introduced Phonetic keyboard
called Thunaivan back in 1986
when he was a student in Singapore.
This later led to Kaniyan keyboard of N. Govindasamy and then Tamilnet99 (approved by Tamil99 keyboard).
Tamil Typewriter keyboard needs to be deprecated, and Tamil99 keyboard should be taught in Tamil Nadu. Thunaivan, or Tamilnet99 breaks the importance for the glyph shapes of ligated u/uu uyirmey letters which is important for Tamil's future.
(e) Kumarasamy Mallikarjunan, Virginia Tech, introduced Tavulte Keyman software in pre-eKalappai version.
For an year or two, Tavulte keyman editor for Tamil worked. Then mainly Muthu's Anjal & Kumar Mallli's (a prof. of Food Engineering) Tavulte editors were
popular.
S. Muguntharaj (of Sendhamangalam, Namakkal) released e-kalappai
for later Windows versions. Now, S. Muguntharaj lives in Brisbane, Australia. E-kalappai, Umar's Thenee, Tamilmanam thiratti,
were important for Tamil blogosphere to get started off the ground.
More later,
N. Ganesan
அருமையான தகவல்களை அள்ளித் தரும் நா.கணேசன் அவர்களுக்கு நன்றிகள். மேலும் பலரையும் நினைவுகூருங்கள். தமிழ்க் கணிமை, இணைய சாதனையாளர்கள் குறித்து ஒரு தனித் தளம் அமைந்தால் நன்றாய் இருக்கும்.
தமிழுக்காக உழைத்தவர்கள் அனைவரையும் தெரிந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி!!
என்றும் அன்படன்
செல்வ.முரளி
இரண்டு கட்டுரைகள்:
கணித்தமிழ் – கடந்து வந்த பாதையும், தற்போதைய நிலையும் (ஃபெட்னா மாநாடு, 2008)
http://nganesan.blogspot.com/2009/06/soundar-fetna-2008.html
பதிவுலகின் கலைச்சொற்கள் - கணிவரலாற்றில் ஓர் ஏடு!
http://nganesan.blogspot.com/2009/07/valaippathivu.html
நா. கணேசன்
நல்ல தொகுப்பு!
அண்ணாகண்ணன்,
தேனீ,வைகை ஒருங்குறி எழுத்துருக்கள் மற்றும் பல செயலி,நிரழிகளைத் தந்த அதிரை உமர்தம்பி அவர்களைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்.
தொகுப்புக்கு நன்றி.
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தொகுப்பு. நல்ல முயற்சி. வளரட்டும்.
இன்னம்பூரான்
Post a Comment