!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வேதியியல் நோபல் பரிசு: தமிழர் இராமகிருஷ்ணன் சாதனை ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, October 07, 2009

வேதியியல் நோபல் பரிசு: தமிழர் இராமகிருஷ்ணன் சாதனை


2009ஆம் ஆண்டு, வேதியியல் துறைக்கான நோபல் பரிசினை வெ.இராமகிருஷ்ணன் (57) என்ற தமிழர் வென்றுள்ளார். ரிபோசோம் குறித்த ஆய்வுக்காக அவருக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பெற்றுள்ளது. புதிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்குவதில் இந்த ஆய்வு பயன்படும்.

1952இல் சிதம்பரத்தில் பிறந்தவர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன். 1976இல் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலையில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஆர்.சி. மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தின் அமைப்பியல் கல்விப் பிரிவில் குழுத் தலைவராகப் பணியாற்றுகிறார்.

இவர், இந்தப் பரிசை வேறு இருவருடன் பகிர்ந்துகொள்கிறார். அவர்களுள் ஒருவர்: அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் உள்ள ஹோவர்ட் ஹூக்ஸ் மருத்துவக் கழகத்தில் (Yale University, Howard Hughes Medical Institute) பணியாற்றும் தமஸ் ஏ.ஸ்டீட்ஸ் (Thomas A. Steitz); இன்னொருவர்: இஸ்ரேலில் உள்ள வீஸ்மன் அறிவியல் கழகத்தில் (Weizmann Institute of Science Rehovot, Israel) பணியாற்றும் அடா ஈ.யோனத் (Ada E. Yonath) என்ற பெண்.

இராமகிருஷ்ணனின் ரிபோசோம் ஆய்வு குறித்து ஜெர்மானிய இணையதளம் தரும் தகவல், இது:

His research into the atomic structure of the ribosome, the large protein-RNA complex that translates the genetic codes into proteins, has shed light on antibiotic function, and the mechanism of tRNA and mRNA recognition and decoding by the ribosome.

சாதனை படைத்துள்ள இராமகிருஷ்ணனைப் பெரிதும் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் விவரங்களுக்கு:

http://www.webnewswire.com/node/469548

http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2009/

http://www.mrc-lmb.cam.ac.uk/ribo/homepage/ramak/index.html

========================================
படத்திற்கு நன்றி: http://www.cef-mc.de

5 comments:

ராஜ நடராஜன் said...

தகவலுக்கு நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சாதனை படைத்துள்ள இராமகிருஷ்ணனைப் பெரிதும் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.//


ஒவ்வொரு இந்தியனும் வாழ்த்துகிறான்

Unknown said...

இங்கேயும் வாழ்த்துகிறேன். இது குறித்த எனது பதிவு - http://kvraja.blogspot.com/2009/10/blog-post_07.html

குப்பன்.யாஹூ said...

thanks for sharing, our wishes to him.

Jawahar said...

பெருமை சேர்த்த தமிழனை வாழ்த்துவதில் உங்களோடு கை கோர்க்கிறேன்.

http://kgjawarlal.wordpress.com