நாமங்களில் மிகச் சக்தி வாய்ந்தது, ராம நாமம்.
மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக்
கண்களில் தெரியக் கண்டான்
என்று இராமாயணத்தில் கம்பர் பாடுகிறார்.
இந்த மூல மந்திரத்தின் பயன்கள் என்னென்ன? அதையும் சொல்கிறார் கம்பர்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்று இரண்டெழுத்தினால்.
ராம நாமத்தை இந்தக் குழந்தைகள் பாடுவதைக் கேளுங்கள்.
No comments:
Post a Comment