பல்லின மக்கள் வாழும் கனடாவில், அனைத்து இன மக்களுக்கும் அவர்களின் மொழிகளுக்கும் உரிய மதிப்பு அளிக்கிறார்கள். கனடாவின் மிஸ்ஸிசாகா மாநகரில், தமிழும் மணக்கிறது. நமது கடந்த காலத்தில் பெருமை. நமது வருங்காலத்தில் நம்பிக்கை என்ற வாசகம் இங்கே இதர மொழிகளுடன் இணைந்து நிற்கிறது. இந்த மொழிபெயர்ப்பை இன்னும் மேம்படுத்தலாம். இதே வாசகம், நமது கடந்த காலத்தின் மீது பெருமை. நமது வருங்காலத்தின் மீது நம்பிக்கை என அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
படமெடுத்து அனுப்பிய என் தங்கை ராம் பிரியாவுக்கு நன்றி.
No comments:
Post a Comment