!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2021/02 - 2021/03 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, February 28, 2021

Life in Nigeria - 1: A Ride in Illupeju, Lagos

ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டங்களை அடுத்து, இப்போது ஆப்பிரிக்கக் கண்டத்தையும் நம் யூடியூப் அலைவரிசை வழியே நீங்கள் கண்டுகளிக்கலாம். இதோ, நைஜீரியாவின் லாகோஸ் நகரச் சாலைகளில் நாம் பயணிக்கலாம், வாருங்கள். நம் ஊரைப் போலவே இருக்கின்ற இந்தப் பகுதிகளைப் பார்த்துவிட்டுச் சொல்வோம், யாதும் ஊரே யாவரும் கேளிர். படமெடுத்து தமிழில் வர்ணனையுடன் அனுப்பிய தம்பிக்கு நன்றி. நைஜீரியாவிலிருந்து மேலும் பல பதிவுகள் வர இருக்கின்றன, தொடர்ந்து இணைந்திருங்கள்.

Uploaded 1000 videos in my YouTube channel

அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் ஆயிரம் காணொலிகளை ஏற்றியுள்ளேன்.  இவற்றுள் பெரும்பாலானவை, கடந்த ஒரே ஆண்டில் உருப்பெற்றவை. பொது முடக்கக் காலத்திலும் செயல்வேகத்துடன் கிளர்ந்து எழுந்தவை. எந்தத் திசையிலும் கிளைவிரிக்கும் சுதந்திரத்துடன் விரிந்தவை. பல்வேறு பிரிவுகளில், தலைப்புகளில், சுவைகளில் அமைந்தவை. அன்பர்கள் இவற்றைப் பார்த்து, உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன். 

உங்களுக்குப் பிடித்திருந்தால், நேயர் குழுவில் இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Uploaded 1000 videos in my YouTube channel in the last one year. Please watch & share your feedback.

https://www.youtube.com/user/annakannan


1000th Video: நித்திலாவின் கலைப்பொருள்கள் | Arts and Crafts of Nithila

நித்திலா புதிது புதிதாக நிறையக் கற்றும் செய்து பார்த்தும் வருகிறார். அவற்றுள் ஓவியங்கள், கலைப்பொருள்கள், பாடல்கள், விளையாட்டுகள் எனப் பலவும் உண்டு. இந்தப் பதிவில் நித்திலா, தமது கலைப்பொருள்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இது, நமது அலைவரிசையின் 1000ஆவது பதிவு.

Friday, February 26, 2021

மதுமிதாவின் பயணங்கள் - ஜெயந்தி சங்கர் நேர்காணல் - 1

கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மதுமிதா, அண்மையில் அமெரிக்கா, இலங்கை நாடுகளுக்குச் சென்றுவந்தார். அவருடைய பயண அனுபவங்களை எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்துகொள்கிறார். சுவையான இந்த உரையாடலைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

Tuesday, February 23, 2021

Fact Check: Is Tamil a National Language in Australia? | தமிழ், ஆஸ்திரேலியாவின் தேசிய மொழியா?

தமிழ், ஆஸ்திரேலியாவின் தேசிய மொழியா? இதோ, ஓர் அலசல்.

#Shorts: Senna Auriculata | Aavaarampoo | ஆவாரம்பூ

மருத்துவக் குணம் நிறைந்த ஆவாரம்பூவின் அழகிய தோற்றம்

நாரைப் பெருங்கூட்டம் | A Gang of Storks

இன்று காலையில் இந்த நாரைப் பெருங்கூட்டத்தைக் கண்டேன்.

Monday, February 22, 2021

#Shorts: Canna Bud | கல்வாழை மொட்டு

கல்வாழைப் பூவைப் பார்த்திருப்பீர்கள். அதன் மொட்டைப் பார்த்திருக்கிறீர்களா?

Inside Petronas Twin Towers

மலேசியாவின் புகழ்பெற்ற இரட்டைக் கோபுரத்தின் உள்ளே ஓர் உலா.

A Ride in Singapore MRT

சிங்கப்பூர் எம்.ஆர்.டி. ரெயிலைப் பார்த்திருக்கீங்களா? நம் நண்பர்கள், 2002 வாக்கில் மேற்கொண்ட இந்தப் பயணத்தைப் பார்க்கும்போது நம் ஊரில் உள்ள பறக்கும் ரெயிலும் மெட்ரோ ரெயிலும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. 

படப்பதிவு: சத்தியநாராயணன்

Sunday, February 21, 2021

திருப்பதி மலைவாசா - கிருஷ்ணகுமார் பாடல் | Tirupati Malaivaasa

திருப்பதி மலைவாசா வெங்கடேசா என்ற இனிய பாடலைக் கிருஷ்ணகுமாரின் கணீர்க் குரலில் கேளுங்கள். நலம்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன், நாராயணா என்னும் நாமம். 

Saturday, February 20, 2021

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் | Koovi Azhaiththaal Kural Koduppaan

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் என்ற இனிய பாடலைக் கிருஷ்ணகுமாரின் குரலில் கேளுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.

என் கால்சட்டைக் காலம் - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 9 | Artist Shyam Interview - 9

ஓவியர் ஸ்யாம், குறும்புகள், சேட்டைகள், லூட்டிகள் நிறைந்த தன் கால்சட்டைக் கால நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். சுவையான இந்த உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

Friday, February 19, 2021

#Shorts: Dallas Hanuman Temple

அமெரிக்காவின் டல்லாஸ் மாநகரில் அமைந்துள்ள காரிய சித்தி அனுமன் திருக்கோவில், இதோ. அழகிய கட்டமைப்புடன், பனியில் நனைந்தபடி, கம்பீரத்துடன் காட்சி தருகிறது. இராம தூதன், அஞ்சனை மைந்தன், சொல்லின் செல்வன், அல்லலைப் போக்கிக் காக்கும் டல்லாஸ் அனுமனை வணங்கி, அருள் பெறுங்கள். படமெடுத்து அனுப்பிய தம்பி மாதவன் ஸ்ரீரங்காச்சாரிக்கு நன்றி.

மதுபானி ஓவியம் வரைவது எப்படி? | How to draw Madhubani Painting?

வர்லி ஓவியத்தை அடுத்து, மதுபானி ஓவியத்தை வரையக் கற்றுத் தருகிறார் நாமக்கல் பாலமூர்த்தி. குழந்தையும் கற்றுக்கொள்ளும் வகையில் எளிமையாக இருக்கிறது. உங்கள் வீட்டுப் பிள்ளைகளிடம் அவசியம் காட்டுங்கள்.

Thursday, February 18, 2021

வர்லி ஓவியம் வரைவது எப்படி? | How to draw Warli Painting?

வர்லி ஓவியம் வரைவது எப்படி? இதோ வரைந்து காட்டுகிறார், நாமக்கல் பாலமூர்த்தி. உங்கள் குழந்தைகளுக்கு இதைக் காட்டுங்கள். அவர்களை இதைப் போல் வரைய ஊக்குவியுங்கள். அவர்கள் வரைவதை வீடியோவாக எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள் (WhatsApp: 9841120975 | annakannan@gmail.com). சிறந்த முயற்சிகளை அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் வெளியிடுவோம்.

Wednesday, February 17, 2021

வாய்ப்பும் அங்கீகாரமும் - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 8 | Artist Shyam Interview - 8

தமது ஓவியங்கள், அவற்றின் பின்னணி ஆகியவற்றை விளக்கும் ஓவியர் ஸ்யாம், தமிழ்நாட்டின் கலைச்செல்வங்களையும் அவற்றின் இப்போதைய நிலையையும் விவரிக்கிறார். ஓவியர்களைக் கூலித் தொழிலாளிகள் போன்று நடத்துவதைக் கண்டிப்பதுடன், ஓவியர்கள் முன்னேற என்ன செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். ஓவியத்தின் மதிப்பு, கலையை வெளிப்படுத்த வேண்டிய இடம், கலைஞர்களிடம் இருக்க வேண்டிய நெகிழ்வுத்தன்மை போன்ற பலவற்றையும் சுட்டிக் காட்டுகிறார். இந்த வெளிப்படையான உரையாடலைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

Tuesday, February 16, 2021

#Shorts: Snowfall in Richmond, Virginia, USA

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில், ரிச்மாண்டு என்ற பகுதியில் நிகழும் பனிப்பொழிவின் எழில்மிகு காட்சிகள் இதோ. படமெடுத்து அனுப்பிய ஸ்ருதி நடராஜன் அவர்களுக்கு நன்றி.

இக்காலக் காதல் - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 7 | Artist Shyam Interview - 7

ஓவியர் ஸ்யாம் உடனான உரையாடல் தொடர்கிறது. செல்பேசி என்ற கருவி, தகவல் தொடர்பில் மட்டுமின்றி, காதலிலும் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. காதலர் மனங்களிலும் பெரும் மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. அவை என்னென்ன என்று விளக்குவதோடு லிவிங் டுகெதர், ஒழுக்க நிலைப்பாடுகள், பெண்களிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றம் எனப் பலவற்றையும் விவரிக்கிறார். குட் டச் (Good Touch), பேட் டச் (Bad Touch) எனக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதால் ஏற்படும் பிரச்சினைகளையும் எடுத்துரைக்கிறார். இக்காலக் காதலைக் கண்ணாடி போல் காட்டும் இந்த உரையாடலைக் கேளுங்கள்.

Monday, February 15, 2021

Sounce Blue Strap - Product Review

Sounce Blue Strap - Product Review from the user.

Sounce கைப்பட்டையை (Strap) வாங்கிப் பயன்படுத்தி எமது மதிப்பாய்வை இங்கே வழங்கியுள்ளோம்.

Sunday, February 14, 2021

கண்ணைக் கட்டிவிட்டால் வரைய முடியுமா? - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 6

கண்ணைக் கட்டிவிட்டால் உங்களால் ஓவியம் வரைய முடியுமா? என ஓவியர் ஸ்யாமுக்கு ஒரு சவால் விடுத்தோம். அதை உடனே ஏற்றுக்கொண்டு, என்ன வரைய வேண்டும் என்று கேட்டார். ஒரு காதல் காட்சியை வரையக் கேட்டோம். அவர் என்ன வரைந்திருக்கிறார் என்று பாருங்கள். அத்துடன், இந்தக் காதலர் தினத்தில் அவரது காதல் அனுபவங்களையும் காதல் பற்றிய, காதலர்கள் பற்றிய அவரது அதிரடியான கருத்துகளையும் நம்முடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். பாருங்கள், கேளுங்கள்.

Saturday, February 13, 2021

#Shorts: Top View of Canada - From 32nd Floor

பனிபொழியும் கனடாவின் மிஸ்ஸிசாகா மாநகரை 32ஆவது மாடியிலிருந்து கண்டு ரசியுங்கள். 

படப்பிடிப்பு: ராம் பிரியா

கனடாவில் தமிழ் | Tamil in Canada

பல்லின மக்கள் வாழும் கனடாவில், அனைத்து இன மக்களுக்கும் அவர்களின் மொழிகளுக்கும் உரிய மதிப்பு அளிக்கிறார்கள். கனடாவின் மிஸ்ஸிசாகா மாநகரில், தமிழும் மணக்கிறது. நமது கடந்த காலத்தில் பெருமை. நமது வருங்காலத்தில் நம்பிக்கை என்ற வாசகம் இங்கே இதர மொழிகளுடன் இணைந்து நிற்கிறது. இந்த மொழிபெயர்ப்பை இன்னும் மேம்படுத்தலாம். இதே வாசகம், நமது கடந்த காலத்தின் மீது பெருமை. நமது வருங்காலத்தின் மீது நம்பிக்கை என அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

படமெடுத்து அனுப்பிய என் தங்கை ராம் பிரியாவுக்கு நன்றி.

Snowfall in Canada | கனடாவில் பனிப்பொழிவு

கனடாவின் மிஸ்ஸிசாகா மாநகரில் இனிதே பனி பொழிந்து வருகிறது. அதில் மக்கள் ஸ்கேட்டிங் செல்கிறார்கள். பனிப்பொழிவின் அழகையும் கனடாவின் அழகையும் ஒரே நேரத்தில் பருகுங்கள். படமெடுத்து அனுப்பிய என் தங்கை ராம் பிரியாவுக்கு நன்றி.

Thursday, February 11, 2021

Bird Show at Singapore Jurong Bird Park

சிங்கப்பூரில் உள்ள ஜுராங் பறவைகள் பூங்கா, ஆசியாவிலேயே மிகப் பெரிய பறவைகள் பூங்கா. இதில் பறவைகளின் சாகச நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறுகிறது. அதில் விதவிதமான பறவைகள் பேசுகின்றன. மிதிவண்டி ஓட்டுகின்றன. பார்வையாளர் கைகளில் வந்து அமர்கின்றன. அரங்கத்தைச் சுற்றி வருகின்றன. இந்த வேடிக்கை விநோதக் கேளிக்கைக் காட்சியை இங்கே கண்டுகளியுங்கள்.

படப்பிடிப்பு - ஹேமமாலினி

#Shorts: Yellow-billed babbler

மின்கம்பியில் ஒரு தவிட்டுக் குருவி

Frog and a Cat | தவளையும் பூனையும்

தவளையைக் கவ்விக்கொண்டு பூனை ஓடுவதை இன்று காலை கண்டேன். தவளை அசைவற்றுச் செத்தது போல் கிடக்க, பூனை அதைக் காலாலும் வாயாலும் தட்டித் தட்டிக் கிளப்ப, தவளை ஓர் எம்பு எம்பும். திரும்பவும் தவளை அசைவற்றுக் கிடக்க, பூனை அதை இங்கும் அங்கும் இழுக்கும். மீண்டும் இதே விளையாட்டு. 

பாருங்கள், செம்மையாக இருக்கிறது.

Wednesday, February 10, 2021

#Shorts: Butterfly on a grass

இன்று கண்ட ஒரு வண்ணத்துப்பூச்சி.

நாம பஜனை | ராம நாம மகிமை | Nama chanting | Rama Rama

நாமங்களில் மிகச் சக்தி வாய்ந்தது, ராம நாமம்.

மும்மைசால் உலகுக்கெல்லாம் 
மூல மந்திரத்தை முற்றும் 
தம்மையே தமர்க்கு நல்கும் 
தனிப் பெரும் பதத்தை, தானே 
இம்மையே, எழுமை நோய்க்கும் 
மருந்தினை இராமன் என்னும் 
செம்மைசேர் நாமம் தன்னைக் 
கண்களில் தெரியக் கண்டான் 

என்று இராமாயணத்தில் கம்பர் பாடுகிறார்.

இந்த மூல மந்திரத்தின் பயன்கள் என்னென்ன? அதையும் சொல்கிறார் கம்பர். 

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே 
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே 
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்று இரண்டெழுத்தினால்.

ராம நாமத்தை இந்தக் குழந்தைகள் பாடுவதைக் கேளுங்கள்.


ஜோதிடப் பார்வையில் காதலும் திருமணமும் | வேதா கோபாலன் | Astrological View about Love and Marriage

காதலர் தினச் சிறப்புப் பதிவு.

திருமணத்துக்கு முன்பு ஜாதகம் பார்த்துத் தீர்மானிப்பது போல், காதலிக்கும் முன்பும் ஜாதகம் பார்த்துத் தீர்மானிக்கலாமா? எந்தெந்தப் பொருத்தங்களை முக்கியமாகப் பார்க்க வேண்டும்? திருமணம் தள்ளிப் போவதற்கு என்ன காரணம்? ஜாதகம் பார்த்தும் பார்க்காமலும் செய்த திருமணங்கள் எப்படி இருக்கின்றன? இத்தகைய கேள்விகள் பலவற்றுக்கும் ஜோதிடர் வேதா கோபாலன் பதில் அளிக்கிறார்.

Tuesday, February 09, 2021

Monkey Show at Singapore Zoo

சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் இந்த உராங் உடான் குரங்கு செய்யும் சேட்டைகளைப் பாருங்கள். பதிவின் இறுதியில், சிங்கப்பூரின் பொம்மைக் கடை ஒன்றையும் கண்டுகளியுங்கள்.

படப்பிடிப்பு: ஹேமமாலினி

நீச்சல்காரனின் கணித்தமிழ் ஆக்கங்கள் - 2 | Neechalkaran Rajaraman Interview - 2

நண்பர் நீச்சல்காரன் என்கிற இராஜாராமன், தனது கணித்தமிழ் ஆய்வுகளை, புதிய முயற்சிகளை, தேடல்களை தொடர்ந்து விவரிக்கிறார். பொது வெளியில் வைக்கப்படாத அவரது தனிப்பட்ட மென்பொருள்கள், நிரல் பணிகள் உள்ளிட்ட பலவற்றையும்  இந்த அமர்வில் நமக்குச் செயல்படுத்திக் காட்டுகிறார். தமிழில் எத்தனை இணையத்தளங்கள் உள்ளன? எத்தனை வலைப்பதிவுகள் உள்ளன? இதோ தரவுகள். உரிய ஆதரவு அமைந்தால், தமிழுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இந்த நேர்காணலின் வழியே நாம் தெரிந்துகொள்ளலாம்.

ஜோதிடர் வேதா கோபாலன் பதில்கள் | Astrologer Vedha Gopalan Answers

ஜோதிடர் வேதா கோபாலன், 2021 பிப்ரவரி 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு நேரலையில் நம் நேயர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். 

* விதியை மாற்ற முடியாது எனில், பரிகாரத்தால் என்ன பலன்?
* ஜாதகம் இல்லாமல் பலன் பார்க்க முடியுமா?
* கொரோனா நிலை எப்போது மாறும்?
* குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் பார்க்கலாம்?
* ஜோதிடம் கணக்கா? உள்ளுணர்வா?
* சிசேரியனுக்கு நேரம் பார்க்கலாமா?
* குடும்பத்தில் எல்லோர் ஜாதகமும் தேவையா?

இத்தகைய கேள்விகள் பலவற்றுக்குப் பதில் அளித்தார். இயல்பான உரையாடலுடன் கூடிய அவரது பதில்களைக் கேளுங்கள்.

Sunday, February 07, 2021

#Shorts: Dog play in snow at New York

நியூயார்க் பனியில் துள்ளிக் குதித்து விளையாடும் நாய்.

மீன் குளம் | Fish Pond

சென்னை, எழும்பூர், அசோகா விடுதி வளாகத்தில் உள்ள மீன்குளத்தில்... 

#Shorts: Moringa Canopy

நம் வீட்டு மாடித் தோட்டத்தில் முருங்கைப் பந்தல்.

முருகன் பாட்டுப் போட்டி முடிவுகள்

தைப்பூசத்து அன்று அறிவித்த முருகப் பெருமான் பாட்டுப் போட்டிக்கான முடிவுகளை முனைவர் வ.வேசு. அறிவித்துள்ளார். வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள். பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துகள். முனைவர் வ.வே.சு. அவர்களுக்கும் ஓவியர் ஸ்யாம் அவர்களுக்கும் நன்றிகள்.

Saturday, February 06, 2021

காஞ்சி மகான் என்ற சொல்லே மந்திரம் - கிருஷ்ணகுமார் பாடல்

காஞ்சிப் பெரியவரின் நட்சத்திரம் அனுஷம். இன்று தை மாதம் அனுஷ நட்சத்திரத்தில், காஞ்சி மகான் என்ற சொல்லே மந்திரம் எனும் பாடலைக் கிருஷ்ணகுமாரின் குரலில் கேளுங்கள். காஞ்சி மகானின் அருளைப் பெறுங்கள்.

Sea Lion Show at Singapore Zoo | கடல் சிங்கத்தின் சாகசங்கள்

சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் கடல் சிங்கத்தின் சாகசங்களைப் பாருங்கள். 

Sea Lion Show at Singapore Zoo. Video by Hemamalini Lokanathan

Friday, February 05, 2021

#Shorts: V Shaped Vegetable | Cowpea | Black-eyed pea

நம் வீட்டு மாடித் தோட்டத்தில் கவை (V) வடிவில் காய்க்கும் தட்டைக்காய். இதைக் காராமணி, தட்டைப்பயறு என்றும் அழைக்கிறோம்.

சமயபுரத்தாளே சங்கரியே | பிரேமா நாராயணஸ்வாமி பாடல் | Samayapuram Mariyamman

சமயபுரத்தாளே சங்கரியே
சக்தி உமையாளே ஸ்யாமளியே
எனத் தொடங்கும் இனிய பாடலை இயற்றி, இசையமைத்துப் பாடியுள்ளார், திருமதி பிரேமா நாராயணஸ்வாமி. இந்த வெள்ளிக்கிழமைக்கு மங்கலம் சேர்ப்பதுடன், நம் மனத்துக்கு மகிழ்வையும் அமைதியையும் நிறைவையும் தருகிறது, இந்தப் பாடல். கேட்டு மகிழுங்கள், அம்பிகையின் அருள் பெறுங்கள்

Thursday, February 04, 2021

நீச்சல்காரனின் கணித்தமிழ் ஆக்கங்கள் - 1 | Neechalkaran Rajaraman Interview - 1

நண்பர் நீச்சல்காரன் என்கிற இராஜாராமன், வாணி, நாவி பிழைதிருத்திகள் உள்பட, பல்வேறு மென்பொருள்களைத் தமிழில் உருவாக்கியவர். கனடா இலக்கியத் தோட்டம் விருது, தமிழக முதலமைச்சரின் கணித்தமிழ் விருது ஆகியவற்றைப் பெற்றவர். தமது மென்பொருள்கள், தேடல்கள், ஆய்வு முயற்சிகள் அனைத்தையும் இந்த அமர்வில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

Technology & Tools used for Concrete Roof Construction

வீடு கட்டும்போது தளம் போடும் காட்சியை இங்கே பார்க்கலாம். முன்பெல்லாம் கான்கிரீட் கலவையைத் தலையில் சுமந்து மேலே ஏற்றினார்கள். இப்போது ஓர் ஏணியை வைத்து, நின்ற இடத்திலிருந்தே மேலே ஏற்றிவிடுகிறார்கள். தொழில்நுட்பத்தை உரிய விதத்தில் பயன்படுத்தினால், அது நம் வாழ்வை எளிமையாக்கும். சிரமங்களைக் குறைக்கும். வேலையைத் துரிதப்படுத்தும்.

Wednesday, February 03, 2021

Dolphin Show at San Diego | 2004

என் மனைவி ஹேமமாலினி, 2004இல் அமெரிக்காவில் சிறிது காலம் பணியாற்றினார். அப்போது அங்கே அவர் சென்று வந்த சுற்றுலாத் தலங்கள் சிலவற்றைத் தனது கேம்கார்டரில் படம் பிடித்தார். அவரது படப்பிடிப்பில், சான்டியாகோ  மாநகரில் நடந்த டால்பின் காட்சிகள் இரண்டை இங்கே நீங்கள் பார்க்கலாம். பல வகையான டால்பின்கள் துள்ளிக் குதிப்பதும் உயரம் தாண்டுவதும் தலைகீழாகப் படுப்பதும் பார்வையாளர்கள் மீது தண்ணீரை வாரி அடிப்பதும் குழந்தைகளுடன் விளையாடுவதும் பயிற்சியாளர்கள் அவற்றின் மீது படுத்தும் அமர்ந்தும் நின்றும் பயணிப்பதும் மிகச் சுவையான காட்சிகள். பார்த்து மகிழுங்கள்.

Tuesday, February 02, 2021

#Shorts: Tail dance

நாயின் வாலின் நடனம் கண்டால்
நான் இசைப்பேன் தகதோம் 

என 25 ஆண்டுகளுக்கு முன் எழுதினேன். பின்னர் அந்தக் கவிதை, 32 மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றது.  இன்று இந்த நாய்க்குட்டியின் வால் நடனத்தைக் கண்டதும் அந்த வரிகள் நினைவுக்கு வந்தன.

#Shorts: Annual Moringa Seedling

நம் வீட்டு மாடித் தோட்டத்தில் செடி முருங்கை நாற்று.

2021 பிப்ரவரி மாத ராசி பலன்கள் | வேதா கோபாலன் | Vedha Gopalan | 2021 February Predictions

2021 பிப்ரவரி மாதம் எப்படி இருக்கும்? எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள்? இதோ, ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் அவர்கள், உரிய பலன்களைக் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். 

Monday, February 01, 2021

வேண்டும் வேண்டும் - பிரேமா நாராயணஸ்வாமி பாடல் | Prema Narayanaswami

திருமதி பிரேமா நாராயணஸ்வாமி இயற்றி, இசையமைத்துப் பாடிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். 77 வயதிலும் ஊக்கத்துடன் அவர் பாடுவதைக் கேட்டால் உங்களுக்கும் ஊக்கம் பிறக்கும்.