!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2021/04 - 2021/05 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, April 30, 2021

போற்றுவேன் போற்றுவேன் | அண்ணாகண்ணன் பாடல் | கிருஷ்ணகுமார் இசையில்

எந்தச் சுப நிகழ்ச்சியிலும் பாடத்தக்க வகையில் நான் இயற்றிய 'போற்றுவேன் போற்றுவேன்' என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார், ராகமாலிகையாக இசையமைத்துப் பாடியுள்ளார். கண்டும் கேட்டும் மகிழுங்கள்.

This is my first 'lyric video'.

#Shorts: White-breasted Waterhen

நம் ஜன்னலை ஒட்டியுள்ள மாமரத்திலும் வேப்பமரத்திலும் கம்புள்கோழி ஒன்று சிறுநடை பயில்வதைப் பாருங்கள்.

Thursday, April 29, 2021

Playing Cricket @ 76

76 வயதில் கிரிக்கெட் விளையாடும் இளைஞரைப் பாருங்கள்.

Wednesday, April 28, 2021

ஓய்வு பெற்றவர்கள் எதில் முதலீடு செய்யலாம்? | ஸ்ரீராம் நாராயணன் நேர்காணல் - 2

வேறு எவரைக் காட்டிலும், முதியவர்கள், ஓய்வு பெற்றவர்கள், ஓய்வூதியதாரர்கள், எதிர்காலத்தைக் குறித்துப் பெரிதாகத் திட்டமிடாதவர்கள் ஆகியோரின் நிலை, மேலும் சிக்கலாகியிருக்கிறது. வட்டி விகிதம் குறைந்ததால், அதை மலைபோல் நம்பியிருந்தவர்கள், கையைப் பிசைந்து நிற்கிறார்கள். விரைவில் ஓய்வு பெறப் போகிறவர்களுக்கும் இந்தக் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்? எதில் முதலீடு செய்யலாம்? இதோ வழிகாட்டுகிறார், ஸ்ரீராம் நாராயணன். பார்த்துப் பயன் பெறுங்கள். நண்பர்களுக்கும் பெரியவர்களுக்கும் பகிருங்கள்.

Tuesday, April 27, 2021

மீனாட்சி திருக்கல்யாணம் | Meenakshi Thirukalyanam | கிருஷ்ணகுமார்

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், அண்மையில் நடைபெற்றது. இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பானது. பக்தர்கள் வீட்டிலிருந்தே கண்டு வழிபட்டனர். மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, கண்ணன் கணேசன் எழுதிய பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள். மாணிக்கவல்லி மரகதவல்லி அன்னை மீனாட்சி அருள்விழியின் கருணை மழையில் நனையுங்கள்.

A ride in Navi Mumbai during Lockdown

எப்போதும் பரபரப்பாக இயங்கும் நவி மும்பை, ஊரடங்கின்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இதை நமக்காகப் படமெடுத்து அனுப்பிய சாந்தி மாரியப்பனுக்கு நன்றி.

குயிலின் அமுத கானம் - 8 | Singing Cuckoo - 8

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குயிலின் அமுத கானத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பு அமைந்தது. நம் ஜன்னலோரத்து வேப்ப மரத்தில் அமர்ந்த குயில், குரலெடுத்துப் பாடுவதையும் வேப்பங்கொட்டையைத் துப்புவதையும் பாருங்கள்.

Monday, April 26, 2021

ஆலயம் அருளாலயம் | தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி | கிருஷ்ணகுமார்

சித்திரா பவுர்ணமியில் குருவை வணங்குவது மரபு. அந்த வகையில், தபோவனம் சத்குரு ஞானானந்த கிரி சுவாமிகளைப் பற்றி, ஜி.எஸ்.மணி இயற்றிய 'ஆலயம் அருளாலயம்' என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். குருவருள் பெறுங்கள்.

மலையாளக் கரையோரம் - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 13

திருச்சூர் பூரம் திருவிழா அனுபவங்களில் தொடங்கி, ஒட்டுமொத்தக் கேரள அனுபவங்களையும் சுவையாக விவரிக்கிறார், ஓவியர் ஸ்யாம். இதில் யானை பவனி, வெடிகட்டு, தொலைக்காட்சியில் பூரம் திருவிழாவைப் பார்த்தபடி நடனமாடும் மலையாளி எனப் பலவற்றின் காணொலிக் காட்சிகளையும் இடையிடையே நீங்கள் கண்டு களிக்கலாம். சுவையான இந்த உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

Sunday, April 25, 2021

இரட்டை இலை | IRATTAI ILAI | DOUBLE LEAF

இரட்டை இலையின் அழகைப் பாருங்கள்.

Saturday, April 24, 2021

சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்வது? | ஸ்ரீராம் நாராயணன் நேர்காணல் - 1

பரவலாக வட்டி விகிதங்கள் குறைந்துவிட்ட நிலையில், இனி வட்டி வருவாயை மட்டும் நம்பி வாழ்க்கையை நடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வட்டி வருவாயை மட்டுமே நம்பி இருந்த ஏழை, நடுத்தர மக்கள், சிறு முதலீட்டாளர்கள் பலரும் செய்வதறியாது நிற்கின்றார்கள். இந்தப் பின்னணியில் இப்போது நாம் என்ன செய்வது? நமக்கு முன்னுள்ள வாய்ப்புகள் என்னென்ன? அமெரிக்கவாழ் நண்பரும் இந்திய நிதிச் சந்தையைத் தொடர்ந்து கவனித்து எழுதி வருபவருமான ஸ்ரீராம் நாராயணன், நம் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார். பார்த்துப் பயன் பெறுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Playing with Pyramid Blocks

அடுக்குகளை வைத்து எப்படி விதவிதமாகப் பிரமிடு கட்டுவது என்று ஒரு விளையாட்டு. இங்கே நமக்காகப் பிரமிடுகளை உருவாக்கிக் காட்டுகிறார், சகஸ்ரா அஜய்.  

இதைப் பார்த்த பிறகு ஒரு யோசனை. இப்படியான அடுக்குகளை வைத்து எப்படிக் கோவில் கட்டுவது என்பதை ஒரு விளையாட்டாகச் சொல்லித் தரலாமே. நம் தஞ்சாவூர்ப் பெரிய கோவிலை, திருவரங்கம் கோவிலை, திருவில்லிபுத்தூர்க் கோவிலைச் சீனாவிலும் ஜப்பானிலும் கொரியாவிலும் கட்டி எழுப்பிக் குழந்தைகள் விளையாடினால் எப்படி இருக்கும்?

கலைஞர் பற்றி ஜெயகாந்தன் - சுகதேவ் நேர்காணல் | Sugadev Interviews Jayakanthan

தன் எழுத்துகளால் சமூகத்தில் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தியர், ஞானபீட விருது பெற்றவர், கம்பீரத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்தவர், எந்தக் கருத்தையும் துணிவுடன் உரைக்கும் ஆளுமை படைத்தவர், ஆற்றல்மிகு எழுத்தாளர், ஜெயகாந்தன். அவருடைய 87ஆவது பிறந்த நாளான இன்று, அவரது குரலைக் கேளுங்கள். உடன் உரையாடுபவர், மூத்த பத்திரிகையாளர் சுகதேவ்.

A ride in Ohio - Part 3

அமெரிக்காவில் இப்போது வசந்த காலம். மொட்டையாக இருந்த மரங்களில் பூக்களும் இலைகளும் பெருகத் தொடங்கியுள்ளன. வசந்த காலத்துப் பனிப் பொழிவில் ஊரே உஜாலாவுக்கு மாறியிருக்கிறது. பார்த்து மகிழுங்கள். படமெடுத்து அனுப்பிய திலகா சுந்தருக்கு நன்றி.

Friday, April 23, 2021

பூலோக வைகுந்தம் ஸ்ரீரங்கம் | SRIRANGAM | BOOLOKA VAIKUNTAM | THE PARADISE ON EARTH

பூலோக வைகுந்தம் எனப் போற்றப்படும் திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்குள் ஒரு சிறு உலா. 

#Shorts: Yellow-billed Babblers

உண்மையில் காக்கைகளைவிட, சேர்ந்து உண்ணுவது, உட்கார்வது, பறப்பதற்கு நல்ல உதாரணம், தவிட்டுக் குருவிகள். இதோ, இங்கே தவிட்டுக் குருவிகள் சேர்ந்துண்ணும் அழகைப் பாருங்கள்.

Thursday, April 22, 2021

ராம நாமமே துதி மனமே | தஞ்சாவூர் சங்கர ஐயர் | கிருஷ்ணகுமார்

தஞ்சாவூர் சங்கர ஐயர் இயற்றிய ராம நாமமே துதி மனமே என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். ராம நாமத்தை ஜபியுங்கள். 

இராமருக்குத் தாடி, மீசை ஏன்? - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 12

இராமரைத் தாடி, மீசையுடன் வரைந்தது ஏன்? இராமர் 30 அடி உயரமும் சீதை 25 அடி உயரமும் இருந்தார்களா? ஓவியத்தில் இராமரையும் கிருஷ்ணரையும் எப்படி வேறுபடுத்தி வரைகிறீர்கள்? அவதார் படத்தின் பாத்திரத்துக்கு இராமர்  தூண்டுதலாக இருந்தாரா? சில ஓவியங்களை அல்லது சிற்பங்களை எங்கிருந்து பார்த்தாலும் நம்மையே பார்ப்பது போல் இருப்பது எப்படி? இத்தகைய கேள்விகள் பலவற்றுக்கும் ஓவியர் ஸ்யாம், ஸ்ரீ ராம நவமி அன்று பதில் அளித்தார். அவருடைய சுவையான பதில்களைப் பாருங்கள்.

Wednesday, April 21, 2021

வால்மீகியின் இராம காதை - எளிய பாடலாக | கிருஷ்ணகுமார்

மூல வடிவமான வால்மீகி இராமாயணத்தை எளிய தமிழ்ப் பாடலாக நமக்கு வழங்குகிறார், கான பிரம்மம் கிருஷ்ணகுமார். கேட்டு மகிழுங்கள். இந்த இராம நவமியில் அண்ணல் இராமபிரான் அருள் பெறுங்கள்.

சீர்காழிச் சீராம விண்ணகரம் - ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாணம்

இந்த ஸ்ரீ ராம நவமியில், சீர்காழிச் சீராம விண்ணகரம் - ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு களியுங்கள். 

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இ‘ராம’ என்று இரண்டு எழுத்தினால்

எனக் கம்பநாடன் கூற்றுக்கு அமைய, உங்களுக்கு எல்லா நலன்களும் பெருகட்டும். உங்கள் இல்லத்தில் மங்கலமும் மகிழ்ச்சியும் திகழட்டும். 

அர்ச்சகர் - சாரங்கன் பட்டாச்சாரியார்
ஒருங்கிணைப்பு - ராம்குமார்

Tuesday, April 20, 2021

சீதம்மா மாயம்மா | Seethamma Mayamma | Thyagaraja Kriti | Krishnakumar

இராம நவமியை முன்னிட்டு, தியாகராஜர் கிருதியான 'சீதம்மா மாயம்மா' என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.  இராமபிரான் அருள் பெறுங்கள்.

Singapore Sri Krishnan Temple & Chinese Temple

சிங்கப்பூரின் வாட்டர்லூ தெருவில் கிருஷ்ணன் கோவிலும் சீனக் கோவிலும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இதில் ஒரு கோவிலுக்கு வரும் பக்தர்கள், அடுத்த கோவிலுக்கும் சென்று வழிபடுகின்றனர். பல்லின மக்கள் வாழும் சிங்கப்பூரில், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக இவை திகழ்கின்றன. இந்தக் கிருஷ்ணன் கோவில், 1870இல் கட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் மிகப் பழைமையான கோவில்களுள் ஒன்றான இது, அந்நாட்டின் தேசிய நினைவுச் சின்னமாகவும் அறிவிக்கப்பெற்றுள்ளது. இராம நவமியை முன்னிட்டு, இந்தக் கோவில்களைக் கண்டு மகிழுங்கள்.

Sri Krishnan Temple & Kwan Im Thong Hood Cho Temple are situated next to next in Waterloo Street, Singapore. These temples are known for having evolved a social practice termed "cross-worshipping", where many devotees of either temple also worship at the other. This practice is commonly seen as a microcosm of Singapore's multi-religious society.

Monday, April 19, 2021

அன்பே ஆரமுதே அருட்கடலே | தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி | கிருஷ்ணகுமார்

ஞானானந்தகிரி சுவாமிகள், ஓர் அத்வைத வேதாந்தி. ஆதிசங்கரர் இந்தியாவில் உருவாக்கிய நான்கு அத்வைத மடங்களுள் ஒன்றான ஜோதிர்மடத்தின் பீடாதிபதியாக விளங்கியவர். இமயமலையில் தவமியற்றி, கங்கோத்ரியில் பல ஆண்டுகளைக் கழித்த ஞானானந்தர், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றதோடு, திபெத், நேபாளம், இலங்கை, மலேசியா முதலிய இடங்களுக்கும் சென்று வந்தார். 

திருக்கோவிலூருக்கு அருகில் தபோவனம் ஒன்றை ஏற்படுத்தி, பக்தர்களுக்கு வழிகாட்டினார். நாம சங்கீர்த்தனத்தில் பெரிதும் ஆர்வமுடைய ஞானானந்தரைப் பின்பற்றி இன்றளவும் இவர்தம் சீடர்கள் பஜனைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இவரைப் பற்றிய 'அன்பே ஆரமுதே அருட்கடலே' என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். குருவருளும் திருவருளும் பெறுங்கள்.

#Shorts: Agarbathi against Gravity

Have you ever seen such a rise against gravity in an agarbathi?

நம் வீட்டில் புவியீர்ப்பை மீறி, வான் நோக்கி நிமிர்ந்த அகர்பத்தியின் சாம்பல். இது மாதிரி பார்த்திருக்கீங்களா?

Sunday, April 18, 2021

உருகி உருகி உன்னை அழைக்கின்றேன் | URUGI URUGI UNNAI AZHAIKINDREN | தபோவனம் ஞானானந்தா

தபோவனம் சத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி அவர்களைப் பற்றிய 'உருகி உருகி உன்னை அழைக்கின்றேன்' என்ற புகழ் பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். குருவருள் பெறுங்கள்.

நடிகர் விவேக்கிற்குச் சிலை வைக்கணும் - ஓவியர் ஸ்யாம்

நடிகர் விவேக்கிற்கு ஓவியர் ஸ்யாம், தன் ஓவியத்தின் மூலம் அஞ்சலி செலுத்துகிறார். விவேக் உடனான தம் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். விவேக்கிற்குச் சிலை வைக்கணும் என்று அவர் சொல்வது ஏன்? பதிவைப் பாருங்கள்.

Saturday, April 17, 2021

விதைகள் | Seeds

மயில் மாணிக்கம், புடலை, வெண்டை, மிளகாய், தூதுவளை, காராமணி ஆகியவற்றின் விதைகள் எப்படி இருக்கும் தெரியுமா? அவற்றை அந்தந்தச் செடிகொடியிலிருந்து எப்படி எடுக்க வேண்டும் தெரியுமா? இந்த விதைகள் உங்களுக்கு வேண்டுமா? இந்தப் பதிவைப் பாருங்கள்.

#Shorts: Climbing Cats

மரமேறும் பூனைகள்

Friday, April 16, 2021

A Ride to Palm Springs, USA

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், பாம் ஸ்ப்ரிங்ஸ் (Palm Springs) என்ற பகுதியில் உள்ள ஆண்ட்ரியாஸ் கேன்யான் (Andreas Canyon), இந்தியன் கேன்யான் (Indian Canyon) ஆகியவை புகழ் பெற்றவை. இங்கே பழைமை வாய்ந்த பனை மரங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் பனைமர உயரத்திற்குப் பனையோலைகள் தொங்குகின்றன (கலிபோர்னியக் கூந்தல் பனை?).

இந்தப் பயணத்தில் அமெரிக்காவின் நெடுஞ்சாலைகளின் இரு புறத்தையும் நாம் பார்த்துக்கொண்டே போகலாம். வழியெங்கும் உள்ள மலைகள், மரங்கள், காற்றாலைகள், சாலை அமைப்பு, கட்டமைப்பு... எனப் பலவற்றையும் நாம் கண்டுகளிக்கலாம். அமெரிக்காவின் விரிந்து பரந்த நிலப்பரப்பையும் ஒவ்வொரு நிலப்பரப்பின் தன்மையையும் நாம் பார்க்க முடியும். தமிழ்ப்பெண் ஒருவர் மகிழுந்தை ஓட்டிச் செல்ல, தமிழில் பேசியபடி அனைவரும் பயணிப்பது, கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுவரை பார்க்காத அமெரிக்காவை, இதில் நீங்கள் பார்க்கலாம்.

படப்பிடிப்பு - ஹேமமாலினி லோகநாதன்

Thursday, April 15, 2021

குப்பைமேனியை உண்ணும் பூனைகள் | Cat eats Kuppaimeni | Acalypha Indica

தன் உடலில் உள்ள நச்சுகளை நீக்க, குப்பைமேனி இலைகளையும் வேர்களையும் பூனை சாப்பிடும். இதனால் குப்பைமேனிக்குப் பூனைவணங்கி என்ற பெயரும் உண்டு. நம் தெருவில் ஒரு வீட்டில் குப்பைமேனிச் செடிகளைப் பிடுங்கி வீதியில் தூக்கிப் போட, பூனைகள் அவற்றை ஆவலுடன் கடித்து உண்பதைப் பாருங்கள். 

Wednesday, April 14, 2021

ஆரோக்கியத்தின் ரகசிய சாவி - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 11

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஓவியர் ஸ்யாம் தமது ஆரோக்கியத்தின் ரகசியங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மார்க்கண்டேயராக, என்றும் இளைஞராக விளங்கும் அவரது வாழ்க்கை முறை, உணவு முறை, மருத்துவ முறை ஆகியவை, பிறருக்கு வழிகாட்டக் கூடியவை. அனுபவம் சார்ந்த இந்தக் குறிப்புகள், உங்கள் அன்றாடச் சிக்கல்கள் பலவற்றைத் தீர்க்கக் கூடியவை. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

பிலவ - தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் | 12 ராசிகளுக்கும் | வேதா கோபாலன்

நண்பர்கள் அனைவருக்கும் பிலவ தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்தப் புத்தாண்டு உங்களுக்கு எப்படி இருக்கும்? வேதா கோபாலன் வழங்கும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்களைப் பாருங்கள்.

Tuesday, April 13, 2021

தண்டுக் கீரையை உண்ணும் பூனை | Cat is eating Thandu Keerai

நேற்று இரவு 7 மணியளவில் எங்கள் வீட்டின் எதிரே வளர்ந்திருந்த தண்டுக் கீரைச் செடியைப் பூனை ஒன்று உண்ணக் கண்டேன். பூனையை வளர்ப்பவரிடம் கேட்டதற்கு, சும்மா கடிக்கும், சாப்பிடாது என்றார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Monday, April 12, 2021

சென்னை மெட்ரோவில் ஒரு சிற்றுலா | A ride in Chennai Metro

சென்னை மெட்ரோவில் 2020 டிசம்பர் 10ஆம் நாள் (எங்கள் திருமண நாள்) குடும்பத்துடன் சிற்றுலா வந்தோம். அதில் சில காட்சிகள் இங்கே.

சந்திர சேகரேந்திர சரஸ்வதியே சரணம் | Chandra Sekarendra Saraswathi

சந்திர சேகரேந்திர சரஸ்வதியே சரணம்
காஞ்சிவாழ் தயாநிதியே

என்ற பாடலைக் கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். காஞ்சி மகான் அருள் பெறுங்கள்.

Sunday, April 11, 2021

நம்ம வீட்டு மாங்காய் | Mangoes at our Garden

மங்கல நிகழ்வுகளில் மாவிலைகள் கட்டுவார்கள். மாவிலைகள் எப்போதுமே இருக்கின்ற மாமரம், எத்தனை மங்கலகரமானது! இந்தப் பருவத்தின் முதல் விளைச்சலாக, நம் வீட்டு மாமரத்தின் கொடை இதோ.

Sparkling Sun | மின்னும் சூரியன்

மாமரக் கிளைகளின், இலைகளின் ஊடே மின்னும் சூரியன்!

Saturday, April 10, 2021

மும்பையில் ஓர் உலா | A Trip into Mumbai

மும்பை மாநகரில் 2015இல் குடும்பத்துடன் ஓர் உலாச் சென்றோம். மும்பையின் பிரமாண்டத்தையும் வானுயர்ந்த கட்டடங்களையும் கடல் மீது எழுப்பிய பாலத்தையும் இதில் நீங்கள் பார்க்கலாம். அடுத்து மும்பையிலிருந்து ஷிர்டிக்குப் பயணித்தோம். அந்தப் பகுதிகள் இன்னும் கிராமிய மணத்துடன் இருக்கின்றன. இங்கே நூறு கிலோமீட்டருக்குள் நூற்றாண்டு இடைவெளியை நீங்கள் காணலாம்.

#Shorts: தூதுவளை | Solanum Trilobatum

நம் வீட்டுத் தோட்டத்தில் தூதுவளைக் கொடி. இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

Friday, April 09, 2021

#Shorts: Red vented Bulbul - A closeup look

என் ஜன்னலுக்கு அருகே சின்னான் (செங்குதக் கொண்டைக் குருவி), சற்றே இளைப்பாறியது. செங்குதம் என அழைப்பதற்கு ஏற்ப, அதன் வாலடி இரத்தச் சிவப்பாக இருப்பதைப் பாருங்கள்.

கற்றாழை - அப்படியே சாப்பிடலாம் | Aloe Vera

கற்றாழை எதற்கு மருந்து? அதை எப்படிச் சாப்பிடுவது? எப்போது சாப்பிடுவது? இதோ பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

Thursday, April 08, 2021

கலைஞர் பற்றி ஜெயகாந்தன் - சுகதேவ் நேர்காணல் | Sugadev Interviews Jayakanthan

முரசொலி அறக்கட்டளை வழங்கிய கலைஞர் விருதினை 2007இல் ஜெயகாந்தன் பெற்றார். அப்போது, இந்த விருது தனிச் சிறப்புக்குரியது எனக் குறிப்பிட்டார். விருதினைப் பெற்றதற்காக, ஜெயகாந்தன் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்தத் தருணத்தில், மூத்த பத்திரிகையாளர் சுகதேவ், ஜெயகாந்தனைச் சந்தித்து உரையாடினார். இவர்களின் உரையாடல், அண்ணாகண்ணன் ஆசிரியராக இருந்த தமிழ் சிஃபி இணைய இதழில் 2007 மார்ச் 6ஆம் தேதி வெளியானது. ஜெயகாந்தன் நினைவு நாளான இன்று (ஏப்ரல் 8), ஜெயகாந்தனின் குரலைக் கேளுங்கள்.

நியூசிலாந்தில் வீட்டுத் தோட்டம் | Home Garden in New Zealand

நம் யூடியூப் அலைவரிசையில் இது வரை ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆப்பிரிக்க  கண்டங்களிலிருந்து காட்சிகளை வழங்கினோம். இப்போது, ஓசியானியா கண்டத்திலிருந்து ஒரு பதிவு.

சொர்க்கப் பறவை (Bird of Paradise) உள்ளிட்ட அரிய வகைப் பூக்களையும் தாவரங்களையும் வளர்த்து வரும், நியூசிலாந்தில் வாழும் திருமதி துளசி கோபால் அவர்களின் வீட்டுத் தோட்டம் இதோ. கண்டு மகிழுங்கள்.

Wednesday, April 07, 2021

A simple idea - 9

ஒரு காலி டப்பாவை செல்பேசிக் கூடாக உருவாக்க முடியும். எப்படி என்று பாருங்கள்.

Tuesday, April 06, 2021

அதிசார குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 | வேதா கோபாலன் | Athisara Gurupeyarchi Palan 2021

இன்று (06-04-2021) குருபகவான் மகர ராசியிலிருந்து அதிசாரமாக கும்ப ராசிக்குப் பெயர்ச்சி அடைந்தார். 15-09-2021 வரை கும்ப ராசியிலேயே சஞ்சரித்து, மீண்டும் மகர ராசிக்குத் திரும்புவார். இந்த அதிசார குருப்பெயர்ச்சி, உங்களுக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை உரிய பரிகாரங்களுடன் ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.

Monday, April 05, 2021

Cat on the car

Cat on the car.

மகிழுந்து மேலொரு பூனை.

பெல்ஜியத்தில் வீட்டுத் தோட்டம் | Home Garden in Belgium

அழகுணர்வும் ரசனையும் ஒரு புள்ளியில் சேர்ந்தால் எப்படி இருக்கும்? இதோ இப்படித்தான் இருக்கும். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் ராகுல், ஸ்வேதா தம்பதியினரின் வீட்டுத் தோட்டம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

Sunday, April 04, 2021

#Shorts: Sunset at 600% Speed

Increased the speed from 100% to 600%

பொறுமையாகப் பார்ப்பதற்குப் பலருக்கும் நேரம் இருப்பதில்லை. எனவே, 100% வேகத்தில் எடுத்த இந்தக் காட்சிகளை 600% வேகத்திற்கு முடுக்கியுள்ளேன். 

சூரியன் மறையும் காட்சிகள் - ஒரு தொகுப்பு

சூரியன் மறையும் காட்சிகள் - ஒரு தொகுப்பு.

A playlist of Sunset.
https://www.youtube.com/playlist?list=PLMaFf7VrfFhKB7XMEfGM4GFmIYOD7VuR8Birch Aquarium | San Diego

அமெரிக்காவின் சான் டியாகோ மாநகரில் அமைந்துள்ள பிர்ச் நீர்வாழ் உயிரினக் காட்சியகத்தின் உள்ளே ஓர் உலா. நட்சத்திர மீன்கள், கடல் குதிரை, ஆக்டோபஸ், ஜெல்லி மீன்கள், சிங்க மீன்கள்... என 380 வகைகளில் அமைந்த 3000 உயிரினங்கள் இங்கே வலம் வருகின்றன. ஆழ்கடலுக்குள் சென்றுவந்த அனுபவத்தை இவை தருகின்றன. பார்த்து மகிழுங்கள்.

படப்பிடிப்பு - ஹேமமாலினி லோகநாதன்

Saturday, April 03, 2021

சந்தன முல்லை | Santana Mullai | Jasminum Auriculatum

நம் வீட்டு மொட்டை மாடியில் பூத்திருக்கும் சந்தன முல்லை இதோ. அனல் பறக்கும் கோடையில் இந்தப் பூக்களைக் காண்பதே கண்ணுக்கு அத்தனை நிறைவாகவும் குளிர்ச்சியாகவும் மனத்திற்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

தி.மு.க. தேர்தல் பரப்புரை - அம்பத்தூர்

சற்றுமுன் சென்னை, அம்பத்தூரில் நடைபெற்ற தி.மு.க. தேர்தல் பரப்புரை.

Friday, April 02, 2021

அபிராமி அந்தாதி | கிருஷ்ணகுமார் | Abirami Anthadhi | Krishnakumar

அமுதத் தமிழில் அபிராமி பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பாடல்கள், இதோ உங்களுக்காக. திருமதி மங்களம் சங்கரநாராயணன் இசையமைப்பில், கிருஷ்ணகுமாரின் கணீர்க் குரலில் கேட்டு மகிழுங்கள். அபிராமவல்லியின் அருள் பெறுங்கள்.

நான் நடிக்க வந்தது எப்படி? - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 10

'கட்டில்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார் ஸ்யாம். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் நடிக்க அழைத்தபோது ஸ்யாம் நடிக்காதது ஏன்? இப்போது தாடி வளர்ப்பது ஏன்? கத்திச் சண்டை கற்றுக்கொள்ளுங்கள் என்று இயக்குநர் சொன்னது ஏன்? சட்டென அழுவதற்குச் சக நடிகை பயன்படுத்தும் உத்தி எது? அதிகமாக ரீ டேக் வாங்கிய காட்சி எது? பிடித்த நடிகர்கள் யார் யார்? இதோ மனம் திறக்கிறார், ஸ்யாம். பார்த்து மகிழுங்கள்.

Thursday, April 01, 2021

நித்திலமே நித்திலம்!

நான் இயற்றிய 'நித்திலமே நித்திலம்' பாடலை எனது வேண்டுகோளை ஏற்று, கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன் அழகாகப் பாடித் தந்துள்ளார். கேட்டு மகிழுங்கள்.