!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2022/04 - 2022/05 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, April 30, 2022

ஆளி விதைப் பொடி | Flax Seeds Powder Recipe

அருமருந்தான ஆளி விதை (Flax Seeds), எடை குறைக்கும், முடி வளர்க்கும், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும், மாதவிடாய்க் கோளாறுகளைச் சரியாக்கும். ஆளி விதைப் பொடியைச் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, அடை ஆகியவற்றுக்கும் தொட்டுக்கொள்ளலாம். அற்புதச் சக்தி வாய்ந்த ஆளி விதைப் பொடியைத் தயாரிப்பது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். 

How to make tasty Flax Seeds Powder by Sudha Madhavan.

நேந்திரம் வறுவல் தயாரிப்பது எப்படி? | Nendran Chips | Banana Chips

கேரளா ஹாட் சிப்ஸ் கடையில் (தாம்பரத்தில் மட்டும்) தினமும் 200 கிலோ நேந்திரம் வறுவல் சுடச்சுட விற்பனை ஆகிறது. அசல் சுவையும் மொறுமொறுப்பும் கொண்ட நேந்திரம் சிப்ஸ் தயாரிப்பது எப்படி? இங்கே பாருங்கள்.
Watch the making of delicious, crispy Nendran Chips (Banana Chips) by Kerala Hot Chips.

Friday, April 29, 2022

பாவேந்தர் நூலகம் | Pavendhar Library | Central Institute of Classical Tamil

பாரதிதாசன் பிறந்த நாளான இன்று, பாவேந்தர் நூலகத்தைக் காண்போம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் அமைந்துள்ள இந்த நூலகத்தில் 45 ஆயிரம் நூல்கள் உள்ளன. தொல்காப்பியருக்கும் திருவள்ளுவருக்கும் சிலைகள் உள்ளன. இந்த அரிய நூலகத்தினுள் ஓர் உலா.

Thursday, April 28, 2022

58 வயதில் புதிய வேலை | ஜெயந்தி சங்கர் அனுபவங்கள் | Writer Jayanthi Sankar

Writer Jayanthi Sankar enters Medical field at the age of 58.

சிங்கப்பூரில் வாழும் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், தமது 58 வயதில் புதிய துறையைத் தேர்ந்தெடுத்துள்ளார். சிங்கப்பூர் அரசின் சுகாதாரத் துறை வழங்கும் மருத்துவப் பயிற்சியைப் பெற்றுள்ளார். ஓய்வு பெறும் வயதில் புதிய பணியில் ஈடுபட முன்வந்தது எதற்காக? மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்தது ஏன்? உடல் தானம் செய்ய உறுதிமொழி அளித்தது எதனால்? இதோ அவருடன் ஓர் உரையாடல்.

Wednesday, April 27, 2022

OMR at night | Rajiv Gandhi Salai | Rajiv Gandhi IT Expressway

A night ride into Old Mahabalipuram Road (OMR) or Rajiv Gandhi Salai. World Trade Center is the latest dazzling landmark in this IT Expressway. Watch how Chennai and Tamilnadu is growing.

பழைய மகாபலிபுரம் சாலை (OMR) என அழைக்கப்பெற்ற இப்போதைய ராஜிவ்காந்தி சாலை, ஐ.டி. எக்ஸ்பிரஸ்வே (IT Expressway) என்றும் அழைக்கப்பெறுகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் வணிக நிறுவனங்களும் அணிவகுத்து நிற்கும் இந்தச் சாலை, பொன்விளையும் பூமியாகத் திகழ்கிறது. ஓங்கி உயர்ந்து நிற்கும் கட்டடங்களும் வணிக வளாகங்களும் குடியிருப்புகளுமாக ஜொலிக்கிறது.   தமிழ்நாடு பெற்றுவரும் வளர்ச்சியின் அடையாளங்களுள் இதுவும் ஒன்று. இந்தச் சாலையில் உலக வர்த்தக மையம் (World Trade Center), ஒய்யார அழகுடன் ஒளிவீசி நிற்கிறது. இரவில் மின்னொளியில் தகதகக்கும் இந்தச் சாலையின் ஊடே ஒரு பயணம்.

Tuesday, April 26, 2022

தமிழ் படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு | செம்மொழி இயக்குநர் சந்திரசேகரன்

தமிழ் படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு என்கிறார், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் முழுநேர இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன். செம்மொழி நிறுவனப் பணிகள், இதர தென்னிந்திய மொழிகளுக்குச் செம்மொழித் தகுதி அளித்தது சரியா,  சமஸ்கிருதத்துக்கு மத்திய அரசு ஏன் அதிக நிதி ஒதுக்குகிறது, தமிழை மத்திய அரசு புறக்கணிக்கிறதா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் அளித்துள்ளார். அவருடன் ஓர் உரையாடல். 

Sunday, April 24, 2022

SnowWhite & Dora

சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்சுக்குச் சென்றோம். தற்செயலாக ஸ்நோஒயிட்டையும் டோராவையும் சந்தித்தோம்.

Surprise meet with SnowWhite & Dora at Super Saravana Stores, Chrompet, Chennai.

https://youtu.be/HzeSrf-CCDk

ஜெயகாந்தன் - 88

ஞானபீடம், பத்ம பூஷன் உள்ளிட்ட உயர் விருதுகள் பெற்ற,  நினைவில் வாழும் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் 88ஆவது பிறந்த நாளில் (ஏப்ரல் 24) அவரது குரலைக் கேளுங்கள்.


#ஜெயகாந்தன் #JK #Jayakanthan #ஜேகே #எழுத்தாளர் #தமிழ் #தமிழ்நாடு #Tamil #Writer #Tamilnadu


https://youtu.be/56s_Wn6NHD0

ஓலைச் சுவடிகளும் போலிச் சுவடிகளும்: ஒளவை நடராசன் உடன் நேர்முகம் | அவ்வை நடராசன்

கேட்டார்ப் பிணிக்கும் வகையில் உரையாற்றும் பேச்சாளர். எளிமையும் வலிமையும் இணைந்த அன்பாளர். சிறந்த சிந்தனையாளர். சிறப்புகள் பல வாய்ந்த ஒளவை நடராசன் அவர்கள்,  தமிழ் ஓலைச் சுவடிகள் சேகரிப்புக் குறித்து, சில கருத்துகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

உ.வே.சாமிநாதையருக்குப் பின்னால் ஓலைச் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பெற்ற புதிய நூல் ஏதும் இருக்கிறதா என்ற அவரின் கேள்வி, ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. 2011 மார்ச் 14 அன்று, சென்னை, தி.நகரில் உள்ள அவரின் அலுவலகத்தில் இந்த நேர்முகம் பதிவானது. அவருடனான குரல் நேர்காணலை, இங்கே கேட்கலாம்.

#Avvai87 #அவ்வை87 #ஔவை87 #interview #நேர்முகம் #நேர்காணல்  #discussion #AvvaiNatarajan #அவ்வைநடராஜன் #அவ்வைநடராசன் #ஔவைநடராஜன் #தமிழறிஞர் #ஔவை #அவ்வை #Avvai #Nataran #தமிழ் #tamil #TamilNadu #ஓலைச்சுவடி #சுவடி #உவேசா

Saturday, April 23, 2022

உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்வது எப்படி? | Potato Podimas Recipe

இன்னும் இன்னும் எனக் கேட்டு வாங்கிச் சாப்பிட வைக்கும், சுவையும் சத்தும் நிறைந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். 

How to make tasty Potato Podimas by Sudha Madhavan.

#PotatoPodimas #Potato #Podimas #உருளைக்கிழங்கு #பொடிமாஸ் #உருளைபொடிமாஸ் #உருளை #cook #cooking #recipe #southindian #tamilrecipe #Indianrecipe #உணவு #food #foodblog #foodblogger #foodexperience #tamilfood #indianfood #indianfoodblogger #indianfoodbloggers #sidedish #dish #dishes #kitchen #lunch #dinner #indianspecial #special #taste #Indian #indiandish #சமையல் #சாப்பாடு #samayal #sappadu #சுதாமாதவன் #SudhaMadhavan #tasty #விருந்து #foodie

Friday, April 22, 2022

உங்கள் சமையல் மேடை பளபளக்க | A to Z House Cleaning | The Big Team

இன்று எங்கள் வீட்டைச் சுத்தம் செய்து முடித்தோம். படிப்படியாக இதை நிறைவேற்றி முடித்துள்ளது, தி பிக் டீமின் (The Big Team) இளம் அணி. முதல் முறையாக இவர்களின் சேவையைப் பயன்படுத்தியுள்ளோம். போகாத கறைகளையும் தேய்த்துப் போக்கினார்கள். எட்டாத ஒட்டடையையும் எட்டித் துடைத்தார்கள். விடாப்பிடி அழுக்கையும் விரட்டினார்கள். சுவர்களுக்கு வண்ணம் பூசுவது, தச்சுவேலை, பிவிசி கதவு அமைப்பது, இரும்பைப் பற்றவைப்பது (வெல்டிங்) போன்ற பல வேலைகளையும் திறம்பட முடித்துள்ளார்கள். சமையல் மேடைத் தொட்டியை இவர்கள் எப்படிப் பளபளக்க வைக்கிறார்கள் என்று பாருங்கள். நம் நேயர்களுக்காகச் சிறப்புச் சலுகை ஒன்றையும் வழங்க முன்வந்துள்ளார்கள். அது என்ன என்பதை வீடியோவின் உள்ளே பாருங்கள்.

#chennai #cleaning #cleaningservice #cleaningservices #floorcleaning #bedrrom #kitchen #bathroom #toilet #marblecleaning #wallpainting #carpenter #welder #welding #painting #painter #carpentry #deepcleaning #housecleaning #homecleaning #residence #residential #atoz #allclean #hygenic #thebigteam #bigteam #tambaram #சென்னை #பெயின்டிங் #வெல்டிங் #கிளீனிங் #திபிக்டீம்

Thursday, April 21, 2022

சாதம் உண்ணும் குயில் | Asian Koel eats boiled rice

நம் வீட்டு மதில் சுவரில் தினமும் பல முறைகள் உணவு வைப்போம். இவற்றைக் குயில், காக்கை, மைனா, தவிட்டுக் குருவி, செம்போத்து, பூனை, அணில் எனப் பலவும் வந்து வாடிக்கையாக உண்ணும். சாதத்தைக் குயில் உண்ணும் காட்சி இதோ. இதைப் படமெடுத்துப் பகிர்வது, அவரவர் தங்கள் வீட்டில் இப்படி உணவிடுவதற்கு உந்துதலாக இருக்கும் என்பதற்காகவே. 

Wednesday, April 20, 2022

Digital boards in highways

 தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சாலையின் மேலே டிஜிட்டல் பலகைகளை வைத்துள்ளதை அண்மையில் கவனித்தேன். வண்டிகள் போகும் வேகத்தில் இவற்றைப் படிக்க இயலாது. பகல் வெளிச்சத்தில் இந்த எழுத்துகள் சரியாகத் தெரியாது. ஓரத்தில் நிறுத்திப் படிக்கலாம். அவசரச் செய்திகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க இது ஒரு வழியாக இருக்கலாம். ஆனால், வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சாலையிலிருந்து சற்றே திசை திருப்பவும் இடம் உண்டு. இதைப் படிப்பதற்காக வாகனத்தை அந்த இடம் வந்ததும் மெதுவாகச் செலுத்தினாலும் பின்னால் வரும் வாகனங்கள் மோதும் வாய்ப்பும் உண்டு. இந்தப் பலகைகள் தேவையா? உங்கள் கருத்தை எழுதுங்கள்.

https://youtu.be/5nbRXhWoqKQ

Tuesday, April 19, 2022

மதுரையில் ஒரு ஸ்மார்ட் ஓட்டல், மாஸ்க்வா | Moskva - a smart hotel at Madurai

Moskva - a smart hotel at Madurai

மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் விடுதி அறைகளைத் தேடியபோது, ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு வகையில் குறைகள் இருந்தன. சில இடங்களில்  வண்டிகளை நிறுத்த இடம் இல்லை. சில இடங்களில் அறை மட்டும் இருந்தது, உணவகம் இல்லை. இன்னும் சில, கோவிலுக்குப் பக்கத்தில் இல்லை. இவை எல்லாம் உள்ள இடங்களில் அறை வாடகை அதிகமாக இருந்தது. 

ஆனால், இவை எல்லாவற்றுடன், ஓரளவு குறைவான வாடகையில் மாஸ்க்வா விடுதியில் அறை கிடைத்தது. அதிலும் இன்னோர் ஆச்சர்யம், ஸ்மார்ட் பூட்டு, ஸ்மார்ட் திரை, ஸ்மார்ட் சுவிட்சுகள், ஸ்மார்ட் ஏ.சி... என நவீன நுட்பங்களுடன் அறை அமைந்திருந்தது. மாஸ்க்வா என்பது, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ என்பதன் ஒலிபெயர்ப்பு. ரஷ்யாவில் ஓடும் நதி ஒன்றுக்கும் மாஸ்க்வா என்று பெயர். வைகை பாயும் மதுரையில் மாஸ்க்வா தனி முத்திரை பதிக்கிறது. இதோ மாஸ்க்வா விடுதியில் நாங்கள் தங்கியிருந்த அறைக்குள் ஓர் உலா. எதிர்காலத்தில் நம் ஸ்மார்ட் இல்லங்கள், இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

#smart #technology #panasonic #toyama #hotelmoskva #hotel #moskva #remote #remotecontrol #smartdisplay #smartac #smartswitches #smartfan #smartlight #smarthouse #smartroom #future #modern #madurai #hospitality #lodge #restaurant #மதுரை 

Monday, April 18, 2022

புத்தியைத் தீட்டு

 கத்தியையும் தீட்டு, புத்தியையும் தீட்டு.


Sharp your weapons and mind.


https://youtu.be/9FFCyMqW6wk

கின்னிக் கோழி | Guinea Fowl

கின்னிக் கோழி, ஜீன் கோழி என அழைக்கப்பெறும் கீனியா (Guinea Fowl) பறவைகளை இன்று பார்த்தேன். துருதுருவென விளையாடிய அவற்றின் அழகைப் பாருங்கள்.

A pair of Guinea Fowl's play this morning.

#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #Birdsofparadise #birds_nature #birding #nature #NaturePhotography #NatureBeauty #garden #birdwatcher #birdlovers #birdlover #birdingphotography #birders #birdlife #GuineaFowl #Guinea #Chennai #Tamilnadu #India #Tambaram #jinkoli #ginnikoli #கின்னிக்கோழி #ஜீன்கோழி #பறவை #சென்னை #தாம்பரம் #தமிழ்நாடு

Sunday, April 17, 2022

கொத்துமல்லி பச்சடி | Kothumalli Pachadi

மீண்டும் மீண்டும் உண்ணத் தூண்டும் சுவையும் சத்தும் மணமும் நிறைந்த கொத்துமல்லி பச்சடி செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். 

How to make tasty Kothumalli Pachadi (Coriander Gravy) by Sudha Madhavan.

#Kothumalli #kothamalli #malli #Pachadi #Coriander #foodie #Gravy #cook #cooking #recipe #southindian #tamilrecipe #Indianrecipe #உணவு #food #foodblog #foodblogger #foodexperience #tamilfood #indianfood #indianfoodblogger #indianfoodbloggers #sidedish #dish #dishes #kitchen #lunch #dinner #indianspecial #special #taste #Indian #indiandish #சமையல் #சாப்பாடு #samayal #sappadu #tasty #கொத்துமல்லி #கொத்தமல்லி #மல்லி #நறுமணம்

பேப்பர்காரர் லூர்துசாமி நேர்காணல் | Paper Man Loordusamy Interview

பழைய பேப்பர், பிளாஸ்டிக், எவர்சில்வர், பித்தளை, இரும்பு, செப்பு, ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், பேட்டரி போன்ற பலவற்றையும் வாங்கி விற்கும் லூர்துசாமியுடன் ஒரு சந்திப்பு. இந்தப் பொருள்கள் கிலோ என்ன விலை தெரியுமா? நாம் குப்பை எனத் தூக்கி எறியும் பொருள்களுக்கு உள்ள சந்தை மதிப்பு எவ்வளவு? அவரே சொல்கிறார், கேளுங்கள்.

Saturday, April 16, 2022

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் | Madurai Meenakshi Sundareshw...

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அண்மையில் சென்று வந்தோம். இதோ சில காட்சிகள்.

Our recent visit to Madurai Meenakshi Sundareshwarar Temple.

#Madurai #Meenakshi #Sundareshwarar #Temple #Hindu #Shakti #Amman #Meenatchi #Hindutemple #Ammantemple #Shiva #Shivatemple #Gopuram #மதுரை #மீனாட்சி #கோவில் #கோயில் #ஆலயம் #அம்மன் #சிவன் #சிவா #ஈஸ்வரன் #மீனாட்சியம்மன் #மீனாக்ஷி #சுந்தரேஸ்வரர் #சுந்தரேஷ்வரர் #கோபுரம்

Friday, April 15, 2022

அதிசார குருப்பெயர்ச்சி பலன்கள் -2022-23 | வேதா கோபாலன் | மீனம்

அதிசார குருப்பெயர்ச்சி, மீன ராசிக்கு எப்படி இருக்கும்? விரிவான பலன்களை ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

அதிசார குருப்பெயர்ச்சி பலன் - 2022-23 | வேதா கோபாலன் | கும்பம்

அதிசார குருப்பெயர்ச்சி, கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்? விரிவான பலன்களை ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

அதிசார குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-23 | வேதா கோபாலன் | மகரம்

அதிசார குருப்பெயர்ச்சி, மகர ராசிக்கு எப்படி இருக்கும்? விரிவான பலன்களை ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

அதிசார குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-23 | வேதா கோபாலன் | தனுசு

அதிசார குருப்பெயர்ச்சி, தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்? விரிவான பலன்களை ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Thursday, April 14, 2022

அதிசார குருப்பெயர்ச்சி பலன் 2022-23 | வேதா கோபாலன் | விருச்சிகம்

2022 ஏப்ரல் 14 அன்று நடைபெறும் அதிசார குருப்பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்? விரிவான பலன்களை ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

அதிசார குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-23 | வேதா கோபாலன் | துலாம்

2022 ஏப்ரல் 14 அன்று நடைபெறும் அதிசார குருப்பெயர்ச்சி, துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்? விரிவான பலன்களை ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

அதிசார குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-23 | வேதா கோபாலன் | கன்னி

2022 ஏப்ரல் 14 அன்று நடைபெறும் அதிசார குருப்பெயர்ச்சி, கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்? விரிவான பலன்களை ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

அதிசார குருப்பெயர்ச்சி பலன் 2022-23 | வேதா கோபாலன் | சிம்மம்

2022 ஏப்ரல் 14 அன்று நடைபெறும் அதிசார குருப்பெயர்ச்சி, சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்? விரிவான பலன்களை ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

அதிசார குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-23 | வேதா கோபாலன் | கடகம்

2022 ஏப்ரல் 14 அன்று நடைபெறும் அதிசார குருப்பெயர்ச்சி, கடக ராசிக்கு எப்படி இருக்கும்? விரிவான பலன்களை ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

அதிசார குருப்பெயர்ச்சி பலன் 2022-23 | வேதா கோபாலன்| மிதுனம்

2022 ஏப்ரல் 14 அன்று நடைபெறும் அதிசார குருப்பெயர்ச்சி, மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்? விரிவான பலன்களை ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

அதிசார குருப்பெயர்ச்சி பலன் 2022-23 | வேதா கோபாலன் | ரிஷபம்

2022 ஏப்ரல் 14 அன்று நடைபெறும் அதிசார குருப்பெயர்ச்சி, ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்? விரிவான பலன்களை ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

அதிசார குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-23 | வேதா கோபாலன் | Mesham

2022 ஏப்ரல் 14 அன்று நடைபெறும் அதிசார குருப்பெயர்ச்சி, மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்? விரிவான பலன்களை ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Wednesday, April 13, 2022

சுசீந்திரம் அதிசயச் சிற்பம் | Suchindram Sculpture Marvel

சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் உள்ள பிரமிக்க வைக்கும் சிற்பங்களுள் இது ஒன்று. ஒரு காதில் ஈர்க்கை விட்டால் மறுகாதில் வரும் வகையில் செதுக்கப்பட்டுள்ள அதிசய, அற்புத, உன்னதச் சிற்பம். இந்தக் கலை நுணுக்கத்தின் வழியே சிற்பி ஓர் அரிய தத்துவத்தையும் சொல்கிறார், பாருங்கள்.

Tuesday, April 12, 2022

#Shorts: நான் வாங்கிய பல்பு

இன்று நான் வாங்கிய பல்பு.

Monday, April 11, 2022

ஜிகர்தண்டா கடை போட விருப்பமா? | Jigarthanda Business | Jigarthanda Franchise

கொளுத்தும் கோடைக்குக் குளிர்ச்சியான பானம். தகிக்கும் வெப்பத்தைத் தணிக்கும் பானம். இதயத்திற்கு இதமான ஜிகர்தண்டாவை நீங்கள் ஒரு தொழிலாகச் செய்யலாம். மதுரை பேமஸ் ஜிகர்தண்டா நிறுவனத்தின் பிரான்சைஸ் பெறுவது எப்படி? இதற்கு எவ்வளவு முதலீடு தேவை? கடை வைக்க என்னென்ன தேவை? இதோ வழிமுறைகள். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள். யாருக்கேனும் பயன்படலாம்.

Sunday, April 10, 2022

நாம பஜனை | ராம நாம மகிமை | Nama chanting | Rama Rama

நாமங்களில் மிகச் சக்தி வாய்ந்தது, ராம நாமம்.

மும்மைசால் உலகுக்கெல்லாம் 
மூல மந்திரத்தை முற்றும் 
தம்மையே தமர்க்கு நல்கும் 
தனிப் பெரும் பதத்தை, தானே 
இம்மையே, எழுமை நோய்க்கும் 
மருந்தினை இராமன் என்னும் 
செம்மைசேர் நாமம் தன்னைக் 
கண்களில் தெரியக் கண்டான் 

என்று இராமாயணத்தில் கம்பர் பாடுகிறார்.

ராம நாமத்தை இந்தக் குழந்தைகள் பாடுவதைக் கேளுங்கள்.

#ramanavami #ராமநவமி

சீர்காழிச் சீராம விண்ணகரம் - ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாணம்

சீர்காழிச் சீராம விண்ணகரம் - ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு களியுங்கள். 

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே-
இம்மையே இ‘ராம’ என்று இரண்டு எழுத்தினால்

எனக் கம்பநாடன் கூற்றுக்கு அமைய, உங்களுக்கு எல்லா நலன்களும் பெருகட்டும். உங்கள் இல்லத்தில் மங்கலமும் மகிழ்ச்சியும் திகழட்டும். 

சீதம்மா மாயம்மா | Seethamma Mayamma | Thyagaraja Kriti | Krishnakumar

ராம நவமியை முன்னிட்டு, தியாகராஜர் கிருதியான 'சீதம்மா மாயம்மா' என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.  இராமபிரான் அருளைப் பெறுங்கள்.

#ramanavami #ராமநவமி

#Shorts: Ananta Natanam

பக்தி ஆனந்த, உற்சாக, பரவச நடனம்.

புங்கை மரப் பூக்கள் | Pongame Oiltree Flowers | Millettia Pinnata

இந்த நாள் இனிய நாள்.

நம் வீட்டு எதிரில் அமோகமாய்ப் பூத்திருக்கும் புங்கை மரப் பூக்களின் பேரழகைப் பாருங்கள்.

Saturday, April 09, 2022

கீரை சாதம் செய்வது எப்படி? | Keerai Saadam | Keerai Mixed Rice

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடக் கூடிய, சுவையும் சத்தும் நிறைந்த கீரை சாதம் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். 

How to make tasty Keerai Saadam (Keerai Mixed Rice) by Sudha Madhavan.

#cook #cooking #recipe #southindian #tamilrecipe #Indianrecipe #உணவு #food #foodblog #foodblogger #foodexperience #tamilfood #indianfood #indianfoodblogger #indianfoodbloggers #sidedish #dish #dishes #kitchen #Keerai #KeeraiSaadam #Saadam #MixedRice #Rice #varietyrice #lunch #dinner #indianspecial #special #taste #Indian #indiandish #கீரைசாதம் #கீரை #சாதம் #முளைக்கீரை #சமையல் #சாப்பாடு #samayal #sappadu #சுதாமாதவன் #SudhaMadhavan #tasty #விருந்து

சிட்லபாக்கம் ஏரியில் நடைப்பயிற்சி | சிட்லபாக்கம் நீர்வனம்

மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு, புதுப் பொலிவுடன் திகழும் சிட்லபாக்கம் ஏரிக்கரையில் ஒரு நடைப்பயிற்சி.

My morning walk at Chitlapakkam lake.

Friday, April 08, 2022

மாங்காய் பறிச்சேன், இப்படி ஆயிடுச்சு | Mango Plucking Experience

மாங்காய் பறிச்சேன் இப்படி ஆயிடுச்சு. நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!

பாதாளச் சாக்கடையின் உள்ளே | Inside a Sewage

Inside look of a Sewage.

தாம்பரத்தில் ஆங்காங்கே பாதாளச் சாக்கடைப் பணிகள் நடந்து வருகின்றன. சாலை நடுவே உள்ள மூடியை மட்டுமே பலரும் பார்த்திருப்போம். இதன் உள்ளமைப்பு எப்படி இருக்கிறது? கழிவுநீர்க் குழாய்கள் எந்த அளவில் உள்ளன? இவை எவ்வளவு கழிவு நீரைத் தாங்கும்? இதோ, பாதாளச் சாக்கடையின் உள்ளே ஒரு பார்வை.

Thursday, April 07, 2022

மாங்காய் அறுவடை 2022 | Mango Harvest 2022

இன்று நம்ம வீட்டுத் தோட்டத்தில் மாங்காய் அறுவடை.

Mango harvest today at our home garden.

Wednesday, April 06, 2022

மதுரை பேமஸ் ஜிகர்தண்டா | Madurai Famous Jigarthanda

அனல் பறக்கும் கோடைக்கு இதமாக இதோ ஜில்ஜில் ஜிகர்தண்டா. மதுரை பேமஸ் ஜிகர்தண்டா கடைக்காரர், எப்படித் தயாரிக்கிறார், என்னென்ன சேர்க்கிறார் என்று பாருங்கள்.

Our first experience with Madurai Famous Jigarthanda.

பி.எப்., கிராஜுவிட்டி நிதியை என்ன செய்யலாம்? | How to manage Provident Fund and Gratuity?

பி.எப்., கிராஜுவிட்டி நிதியை என்ன செய்யலாம்? மிகப் பயனுள்ள ஆலோசனைகளை வழங்குகிறார், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

Tuesday, April 05, 2022

A simple idea - 15 | மதுரையில் ஒரு புதுமை

மதுரையில் நான் கண்ட ஒரு புதுமை

A simple solution at Madurai.

#மதுரை #Madurai #townplanning #city #planning #management #maduraicorporation #parking #தீர்வு #solution #idea #simple #simplicity #minimalism #jugaad #யோசனை #India #Tamilnadu #தமிழ்நாடு

Monday, April 04, 2022

சீருடையில் கல்லூரி மாணவியர் | Kanyakumari College Girls in Uniform

கல்லூரிகளைக் கடந்து செல்லும் போதெல்லாம் மாணவ - மாணவியர், பெரும்பாலும் வண்ண உடைகளில் இருப்பதையே பார்த்திருக்கிறேன். கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர் அத்தனைப் பேரும் சீருடையில் இருப்பதைக் கண்டு வியந்தேன் (சற்று ஓரத்தில் இருந்த மாணவர்களும் இவ்வாறு சீருடையில் இருக்கிறார்கள்). இது போல் வேறு இடங்களில் பார்த்திருக்கிறீர்களா?

Kanyakumari College Girls in Uniform

#Kanyakumari #College #Girls #Uniform #tamilnadu #students #கன்னியாகுமரி #மாணவர் #மாணவியர் #சீருடை #தமிழ்நாடு

நுங்கு நன்னாரி சர்பத் | Nungu Nannari Sarbath

இந்தக் கொடுமையான கோடைக்கு நுங்கு நன்னாரி சர்பத், ஒரு வரப்பிரசாதம். சுசீந்திரத்தில் இந்தக் கடைக்காரர் இதை எப்படித் தயாரிக்கிறார் என்று பாருங்கள்.

Nungu Nannari Sarbath - A chill, cool companion for this summer.

#Shorts: OMG

OMG இந்தப் பறவை செய்வதைப் பாருங்கள். Mallard Duck's Magic.

Sunday, April 03, 2022

பச்சைப் பயறு மசால் வடை | Pachai Payaru Masal Vadai | Mung Bean Masal Vadai

சுவையும் சத்தும் நிறைந்த, மொறுமொறுப்பான பச்சைப் பயறு மசால் வடை செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். How to make tasty, crunchy Pachai Payaru Masal Vadai by Sudha Madhavan. #cook #cooking #recipe #southindian #tamilrecipe #Indianrecipe #உணவு #food #foodblog #foodblogger #foodexperience #tamilfood #indianfood #indianfoodblogger #indianfoodbloggers #sidedish #dish #dishes #kitchen #Vada #PachaiPayaru #MasalVadai #Payaru #Masal #Vadai #snacks #indiansnacks #indianspecial #special #taste #Indian #indiandish #பச்சைப்பயறு #மசால்வடை #பயறு #மசால் #வடை #சமையல் #சாப்பாடு #samayal #sappadu #சுதாமாதவன் #SudhaMadhavan #tasty #விருந்து

சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - 12 ராசிகளுக்கும் | Subakrithu Tamil New Year Predictions

12 ராசிகளுக்குமான சுபகிருது வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. மூத்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Saturday, April 02, 2022

#Shorts: Chasing the Sun

Chasing the Sun or Running with Sun? Can you suggest a better title?

இதற்கு என்ன தலைப்பு வைக்கலாம்? உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

#sun #chase #run #fast #beat #evening #nature #sunset #drive #ride #சூரியன்

கண்ணாடியில் மோதிய குயில் | Asian Koel hits the glass window

இன்று காலையில் நம் வீட்டு ஜன்னல் அருகில் இந்தக் குயில் வந்து அமர்ந்தது. வழக்கம் போல் கருவேப்பிலைப் பழங்களை உண்டது. அப்புறம்தான் அந்த விபரீதம் நடந்தது. டமார்....!

Asian Koel hits our glass window today.

#AsianKoel #Koel #குயில் #ஆண்குயில் #கோகிலம் #குக்கூ #Eudynamysscolopaceus #window #cuckoo #glasswindow #birdhitswindow #koelhitswindow #bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #Birdsofparadise #birds_nature #birding #nature #NaturePhotography #NatureBeauty #garden #birdwatcher #birdlovers #birdlover #birdingphotography #birders #birdlife #பறவை #தோட்டம் #வீட்டுத்தோட்டம் #சென்னை #தாம்பரம் #தமிழ்நாடு #Chennai #Tamilnadu #India #Tambaram

Friday, April 01, 2022

தமிழ்நாட்டின் சுங்கச் சாவடிகள் | Tollgates of Tamilnadu | Toll Plaza

தமிழ்நாட்டின் 27 சுங்கச் சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல், 5 முதல் - 50 ரூபாய் வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. பாஸ்டேக் (FASTag) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நீண்ட வரிசைகளில் காத்திருப்பது முடிந்தது. சில நொடிகளில் கட்டணம் செலுத்தி, சுங்கச் சாவடியைக் கடக்க முடிகிறது. ஏற்கெனவே சாலைகளின் தரம் குறித்தும் நம் அலைவரிசையில் பதிவு செய்துள்ளோம். இப்போது இந்தத் தொகுப்பில் சுங்கச் சாவடிகளின் தரம், அமைப்பு, வடிவமைப்பு, அழகு, செயல் திறம் உள்ளிட்ட பலவற்றையும் நாம் கவனிக்கலாம். இதோ தமிழ்நாட்டின் சுங்கச் சாவடிகள் ஊடாக ஒரு பயணம்.

Tollgates of Tamilnadu - A video tour.