!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2022/10 - 2022/11 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, October 31, 2022

மைனா சண்டை

 Myna clash at our house in Chennai


நம்ம வீட்டுத் தோட்டத்தில் மைனா சண்டை


#shorts #bird #birdlovers #birdwatching #birds #birdslover #Myna #clash #fighting #fight #feeding #garden #nature


https://youtu.be/Y0-NqcpsDfU

பால் அபிஷேகம்

 பால முருகனுக்குப் பால் அபிஷேகம்


Milk Abhishekam to Lord Muruga - A short video


https://youtu.be/cP8TOAHgD8g

பால முருகனுக்குப் பால்குட அபிஷேகம் | Paal Kudam Festival

சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டிப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இங்கு எழுந்தருளியுள்ள அருள்மிகு பால முருகனுக்காக ஏராளமானோர் பால்குடம் எடுத்தனர். அபிஷேக ஆராதனை விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவிலிருந்து சில காட்சிகள் இங்கே. வேல்! வேல்! வெற்றி வேல்!

Sunday, October 30, 2022

நீல மயில் மீது ஞால வலம் வந்த | Neela Mayil Meethu | Kanda Sashti

'நீல மயில் மீது ஞால வலம் வந்த' என்ற பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். அழகன் முருகன் அருளால் எல்லா வளங்களையும் பெறுங்கள்.

முருகா என்றதும் உருகாதா | Muruga Enrathum Urugatha | Kantha Sashti

'முருகா என்றதும் உருகாதா மனம் மோகன குஞ்சரி மணவாளா' என்ற, கொஞ்சும் தமிழில் அமைந்த திரைப்பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். இந்த சூரசம்ஹார நாளில் முருகப் பெருமான் அருளைப் பெற்று மகிழுங்கள்.

Saturday, October 29, 2022

தண்டவாளத்திலே தலைவைத்துப் படு | அண்ணா உரை

 'தண்டவாளத்திலே தலைவைத்துப் படு என்று சொன்னாலும் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பணியாற்று என்று சொன்னாலும் இரண்டையும் ஒரே விதமான ஆணை என்று ஏற்றுக்கொண்டு, நிறைவேற்றிக் கொடுப்பவன் என் தம்பி கருணாநிதி' என்பது அண்ணாவின் பேச்சு. இதைப் பலரும் பல இடங்களில் மேற்கோள் காட்டிப் பேசுவார்கள். இதோ அண்ணாவின் குரலில் இதைக் கேளுங்கள்.


The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai speech on Kalaignar Karunanidhi in 1968.


#கலைஞர் #கருணாநிதி #அறிஞர் #பேரறிஞர் #அண்ணா #திமுக #அண்ணாதுரை #Kalaignar #kalaignarforever #arignaranna #annadurai #anna #CNA #DMK #dravidam #karunanidhi #TamilNadu


https://youtu.be/lolMFm_On_0

Friday, October 28, 2022

கலைஞர் கருணாநிதி பற்றிய அறிஞர் அண்ணாவின் உரை | C.N.Annadurai Speech on Kalaignar Karunanidhi

கலைஞர் கருணாநிதியின் 45ஆவது பிறந்தநாள் விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai speech on Kalaignar Karunanidhi in 1968.

நோக்கும் திசைதோறும் | Devotional Song by Prema Narayanaswamy

பழந்தமிழ்ச் சொற்களைத் தேடி எடுத்து, அன்னைக்குப் பாமாலையாகச் சூட்டியுள்ளார், பிரேமா நாராயணஸ்வாமி. 78 வயதில் இதை இயற்றி, இசையமைத்து, கணீர் என்று அவர் பாடுவதைக் கேளுங்கள்.

Thursday, October 27, 2022

கொலுப்படியை அலமாரி ஆக்குவது எப்படி? | How to Convert Kolu Stand to Almirah

கொலுப்படியை அலமாரி ஆக்குவது எப்படி? இதோ ஒரு செய்முறை விளக்கம்.

How to Convert Kolu Stand to Almirah - A demo.

A bite in rain

 இன்று காலை பெய்த திடீர் மழையில் தோசையை அவசரமாய் விழுங்கும் நம் வீட்டுச் செல்லக் குயில்கள்.


A bite in rain by Asian Koels (male & female) at our house this morning in Chennai, Tambaram.


#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birding #birdwatcher #birdlovers #birdlover #AsianKoel #koel #chennai #tambaram #TamilNadu #rain #rainy #birdfeeding #feeding #dosa #food


https://youtu.be/w1ToaDL2Ltg

Wednesday, October 26, 2022

அறிஞர் அண்ணாவின் காஞ்சி உரை | C.N.Annadurai Speech at Kanchipuram | 1962

மூதறிஞர் இராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் அண்ணா தலைமையிலான தி.மு.க., கூட்டணி அமைத்து, தேர்தலைச் சந்தித்தது. 1962 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், இராஜாஜியுடன் ஒரே மேடையில் நின்று அண்ணா பேசினார். அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையைக் கேளுங்கள். 

The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai speech at Kanchipuram in 1962.

ஈகுவடாரில் ஒலித்த தமிழ்க் கவிதை | Tamil Poem in Ecuador | Sethu Kumanan

ஈகுவடார் நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கவிஞர்கள் மாநாட்டில், கவிஞர் சேது குமணன் (சேது பாஸ்கரா குழுமக் கல்வி நிறுவனங்களின் தாளாளர்) பங்கேற்றுத் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை வழங்கியுள்ளார். உலக அரங்கில் ஒலித்த தமிழ்க் கவிதையைக் கேளுங்கள்.

Sethu Kumanan presents his poem in Tamil & English at World Congress of Poets in Ecuador.

Asian Koel's yawn

 Asian Koel's yawn in this morning at my window side.


இன்று காலையில் என் ஜன்னல் அருகில் கொட்டாவி விட்ட குயில்.


#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birding #birdwatcher #birdlovers #birdlover #AsianKoel #koel #chennai #tambaram #TamilNadu #yawn


https://youtu.be/r5N1Epjvbg0

Tuesday, October 25, 2022

அறிஞர் அண்ணாவின் ஆங்கில உரை | C.N.Annadurai Speech in English

தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் அண்ணா அழகாகப் பேசக் கூடியவர். அண்ணாவின் ஆங்கிலப் புலமையும் பேச்சாற்றலும் ஆளுமைத் திறனும் புகழ் பெற்றவை. பாராளுமன்றத்திலும்  வீறுடன் முழங்கியவர். சென்னை வழக்குரைஞர் சங்கத்தில் அண்ணா ஆற்றிய ஆங்கில உரையை இங்கே கேளுங்கள்.

The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai speech in English at The Madras Bar Council.

நம்ம வீட்டுத் தீபாவளி 2022 | Diwali Celebration 2022

நம்ம வீட்டுத் தீபாவளி கொண்டாட்டம், சில காட்சிகள்.

Diwali celebration at our house. Few moments in video.

#Diwali #diwali2022 #diwalispecial #diwalicelebration #diwalivibes #deepavali #deepawali #tamilnadu #india #Deepawali2022 #Deepavali #DeepavaliSpecial #deepavalifestival #தீபாவளி #Dhanteras #diwaliwishes #diwalicrackers

Monday, October 24, 2022

Mahalakshmi Ashtakam | மகாலட்சுமி அஷ்டகம்

தீபாவளித் திருநாளை லட்சுமி பூஜை என்றும் அழைப்பார்கள். இந்நன்னாளில் திருமகளை வணங்கி வழிபடுவதன் மூலம் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெறலாம். சக்தி வாய்ந்த மகாலட்சுமி அஷ்டகம் ஸ்தோத்திரத்தை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமாரும் மூவரசம்பட்டு சகோதரிகளுள் ஒருவரான மாதங்கியும் அடுத்தடுத்துப் பாடக் கேளுங்கள். உங்கள் இல்லத்தில் மகாலட்சுமி தங்கி, நிலைபெற்று, எல்லாச் செல்வங்களையும் வாரி வழங்கட்டும். 

Sunday, October 23, 2022

அரிசி பொட்டுக்கடலை முறுக்கு செய்வது எப்படி? | Arisi Pottukkadalai Murukku

அசத்தல் சுவையில் ஆளையே தூக்கும் அரிசி பொட்டுக்கடலை முறுக்கு செய்வது எப்படி? ஹேமமாலினி வழங்கும் செய்முறை இதோ. தீபாவளி நல்வாழ்த்துகள்.

Arisi Pottukkadalai Murukku Recipe by Hemamalini Lokanathan.

Diwali Rockets

 சென்னை, தாம்பரத்தில் உள்ள நம் தெருவில் நேற்று இரவு சீறிப் பாய்ந்த ராக்கெட்டுகள்.


Diwali Rockets at our street in CTO Colony, West Tambaram, Chennai. 


தீபாவளி நல்வாழ்த்துகள்.


#Diwali #diwali2022 #diwalispecial #diwalicelebration #diwalivibes #deepavali #deepawali #tamilnadu #india #Deepawali2022 #Deepavali #DeepavaliSpecial #deepavalifestival #தீபாவளி #Dhanteras #diwaliwishes #diwalicrackers


https://youtu.be/rAOWRKrS9b0

குலாப் ஜாமூன் செய்வது எப்படி? | Gulab Jamun in Simple Steps

மிக எளிதாக, குலாப் ஜாமூன் செய்வது எப்படி? ஹேமமாலினி வழங்கும் செய்முறை இதோ.

Gulab Jamun in simple steps. Recipe by Hemamalini Lokanathan.

#Diwali #diwali2022 #diwalispecial #diwalicelebration #diwalivibes #deepavali #deepawali #tamilnadu #india #diwalisweets #sweets #snacks #Deepawali2022 #Deepavali #DeepavaliSpecial #deepavalifestival #தீபாவளி #Dhanteras

Saturday, October 22, 2022

Asian Koel Vs Crow | குயிலும் காக்கையும்

Asian Koel Vs Crow - A rare & close-up video.

காக்கைக் கூட்டில் குயில் முட்டையிடுவது தெரிந்ததே. அப்போது காக்கை, குயிலை விரட்டும். அதன் பிறகு எப்போது காக்கையைக் கண்டாலும் குயில் பறந்தோடி ஒளியும். இன்று ஓர் ஆச்சரியம். முதலில் குயிலைக் காக்கை விரட்டுகிறது. பிறகு குயில், துணிச்சலுடன் காக்கையை வெருட்டுகிறது. 'என் உணவை நீ எடுக்கிறாயா?' என்ற உரிமையில் குயில் தன் வாயை அகலத் திறந்து, காக்கையின் அருகில் சென்று மிரட்டுகிறது. ஒரு வாய் உணவுடன் காக்கை பறந்தோடிப் போகிறது. இந்த அதிசயக் காட்சியைப் பாருங்கள்.

https://youtu.be/BvYk1jsWWZw

Friday, October 21, 2022

Anna Speech: What is in Hindi?

 CN Annadurai, the Ex Chief Minister of Tamilnadu, said in 1967 at Karaikudi Alagappa College, 'one can learn Hindi in three months; because after that, what else in that language to learn?' Listen the short form of his speech here.

#Hindi #Hindiimposition #annaarivalayam #annadurai #cna #language #politics #அண்ணா #இந்திதிணிப்பு #இந்தி

https://youtu.be/uHOiOXKHclg

இந்தியிலே என்ன இருக்கிறது? | அண்ணா உரை | Anna Speech on Hindi Imposition

மூன்று மாதத்திற்கு மேலே படிப்பதற்கு இந்தியிலே என்ன இருக்கிறது? அண்ணாவின் அடுக்கடுக்கான கேள்விக் கணைகள் இங்கே. காரைக்குடி அழகப்பா கல்லூரியில் 1967இல் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி இதோ.

அ.மாதவையாவின் கடைசிக் கோரிக்கை | டேவிட் பிரபாகர் உரை

David Prabhakar speech on A.Madhaviah's last appeal.

அ.மாதவையா இலக்கிய அரங்கம் என்ற நிகழ்ச்சியை, சாகித்திய அகாதெமியும் சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து, 2022 அக்டோபர் 18 அன்று சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் நடத்தின. இந்த நிகழ்ச்சியில், சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் டேவிட் பிரபாகர் வழங்கிய வாழ்த்துரை இங்கே.

Wow Chromepet

Visited Chennai, Chromepet yesterday night. Business entities' dazzling beauty is bringing the celebration mood for Diwali festival. Watch the jewels on the Earth.


#SaravanaStores #Pothys #TheChennaiSilks #SriKumaranThangaMaligai #KalyanJewellery #Tanishq #Chrompet #Chennai #Diwali #diwali2022 #diwalisale #diwalidecor #diwalidecorations #diwalioffer #diwalispecial #diwalicelebration #diwalicollection #diwalishopping #diwalivibes #deepavali #deepawali #tamilnadu #india #தீபாவளி #சென்னை


https://youtu.be/K8Fits2b73s

Thursday, October 20, 2022

அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் | கல்யாணராமன் உரை | Kalyanaraman speech

அ.மாதவையா இலக்கிய அரங்கம் என்ற நிகழ்ச்சியை, சாகித்திய அகாதெமியும் சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து, 2022 அக்டோபர் 18 அன்று சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் நடத்தின. இந்த நிகழ்ச்சியில், மாநிலக் கல்லுரியின் முதல்வர் இரா.கல்யாணராமன்,  அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் - ஓர் இலக்கிய ஆய்வு என்ற தலைப்பில் உரையாற்றினார். இவர் பேசி முடித்தவுடன் அடுத்துப் பேசிய கவிஞர் வைகைச்செல்வி, 'மழை அடித்து ஓய்ந்தது போல் இருந்தது' எனக் குறிப்பிட்டார். இந்த இலக்கிய மழையில் நனையுங்கள்.

R.Kalyanaraman speech on A.Madhaviah's Padmavathi Sarithiram.

Wednesday, October 19, 2022

Drone Patrol at Marina Beach

Drone Patrol at Chennai Marina Beach, the second longest urban beach in the world.

அ.மாதவையா சிறுகதைகள் | மாலன் உரை | Maalan on A.Madhaviah

Maalan speech on A.Madhaviah short stories.

அ.மாதவையா இலக்கிய அரங்கம் என்ற நிகழ்ச்சியை, சாகித்திய அகாதெமியும் சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து, 2022 அக்டோபர் 18 அன்று சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் நடத்தின. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய எழுத்தாளர் மாலன், அ.மாதவையா சிறுகதைகள் என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இதோ.

Monday, October 17, 2022

கல்லிலே சிலைவடித்து | அம்மன் பாடல் | லோகேஸ்வரி

புகழ்பெற்ற திரைப் பாடல்களின் மெட்டில் பக்திப் பாடல்கள் இயற்றிப் பாடி வருகிறார், லோகேஸ்வரி. கண்ணதாசன் இயற்றிய 'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?' என்ற பாடலின் மெட்டில் 'கல்லிலே சிலைவடித்து' என்ற பாடலை இயற்றிப் பாடியுள்ளார். கண்ணதாசன் நினைவு நாளான இன்று இதை வெளியிடுவது தற்செயலானது.

Nayanthara Painting by V.Krithika

Nayanthara Painting by V.Krithika, a class 9 student, from Tindivanam, Tamilnadu.


#Nayan #Nayanathara #NayantharaVigneshShivan #nayantharanews #nayanthara75 #நயன்தாரா #painting #paintings #art #Artist #artistic #beauty #amazing #TamilNadu


https://youtu.be/-pKfR78TRZA

Bird Feeding: A clash for Dosa

ஒருவாய் தோசைக்காகத்தான் இவ்வளவும். பெரிய துண்டினைப் பெண்குயில் லபக் என விழுங்க, அதைத் தவிட்டுக் குருவி ஆவலுடன் பார்க்க, ஆண்குயில் மேலிருந்து அதன் மீது குதித்து விரட்ட, இன்னும் பல ருசிகர காட்சிகள் இதோ.

Asian Koels (Male & Female), Yellow-billed Babbler, Myna & Squirrel are aggressive to get their piece of Dosa.

Sunday, October 16, 2022

Dr.TVG 90 | Dr.T.V.Gopalakrishnan - 90th Birthday Celebration

பத்மபூஷண் விருது பெற்ற சங்கீத கலாநிதி டாக்டர் டி.வி.கோபாலகிருஷ்ணன் அவர்களின் 90ஆவது பிறந்த நாள் விழா இன்று மாலை நடைபெற்றது. தாம்பரம் மியூசிக் கிளப்பின் 25ஆவது ஆண்டுப் பெருவிழாவும் இணைந்து நடந்தது. சென்னை, தாம்பரம், ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி அரங்கில் இசைவாணர்கள் ஏராளமானோர் கூடினர். திருவையாறு பாணியில் இசை ஆராதனை நடத்தினர். அதிலிருந்து ஒரு பகுதி இங்கே.

Best Bridal Gold Jewellery Award to Pothys Swarna Mahal

Best Bridal Gold Jewellery Award to Pothys Swarna Mahal.

2022ஆம் ஆண்டுக்கான, மணப்பெண் தங்க நகைப் பிரிவில், சிறந்த நகைக்கான தேசிய விருதினைப் போத்தீஸ் சுவர்ண மகால் பெற்றுள்ளது. இதை முன்னிட்டு, போத்தீஸ் நிர்வாக இயக்குநர் ரமேஷ், செய்தியாளர்களைச் சந்தித்தார். ஒருவரால் மூன்று கிலோ எடையுள்ள நகையை அணிய முடியுமா என்பதற்கு அவர் அளித்த பதிலைப் பாருங்கள்.

Belur Chennakeshava Temple | Karnataka Tour | Incredible India

பேளூர் சென்னகேசவப் பெருமாள் கோவில், சிற்ப எழிலும் நேர்த்தியும் துல்லியமும் கொண்ட அரிய கலைக் கருவூலம். இத்தனை நுணுக்கமும் வேலைப்பாடும் கைத்திறனும் சாத்தியம்தானா என உலகே வியக்கின்ற உன்னதம். இந்தத் திருக்கோவிலின் உள்ளே ஓர் உலா. வெ.சுப்பிரமணியன் வர்ணனையுடன் பார்த்து மகிழுங்கள்.

Saturday, October 15, 2022

White Sauce Pasta | Cream Centre Veg Bistro | Food Review

White Sauce Pasta at Cream Centre Veg Bistro. A food review.

#food #cheese #foodie #foodphotography #tasty #Indian #Chennai #restaurants #lunch #Dinner #dinnertime #Review #cream #veggies #vegetarian #VEGETABLES #sappadu #colorful #White Sauce #Pasta #Sauce #WhiteSaucePasta #CreamCentre #FoodReview #cheeseball

Friday, October 14, 2022

ஆணிச் செருப்பு

 பழநியில் ஆணிச் செருப்பு அணியும் பக்தர்


Nail Cheppal at Palani Hill, Tamilnadu.


#palani #nailchappal #chappal #nail #TamilNadu #bhakti #lordmurugan #murugar #பழநி #பழனி #ஆணிச்செருப்பு #செருப்பு #temple #hindu #hindus #devotee 


https://youtu.be/RC64nMzIOUs

Aakriti Homestay | Chikmagalur | Resort Review

How is Aakriti Homestay at Chikmagalur? Here is a review by V.Subramanian, based on his recent stay in this resort.

Bhagyada Lakshmi Baramma in Tamil | தமிழில் பாக்யாத லக்ஷ்மி பாரம்மா

'பாக்யாத லக்ஷ்மி பாரம்மா' என்ற புகழ்பெற்ற கன்னடப் பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு இதோ. சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம், அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தின் நவராத்திரி விழாவில் பாடப்பெற்றது.

Thursday, October 13, 2022

Mickey Mouse & Spiderman

 Mickey Mouse met Spiderman; then they both met Nithila & Hari Narayanan. Event at Super Saravana Stores, Purasaiwalkam, Chennai.

#Spiderman #Mickeymouse #Mickey #mouse #fun #kids #Saravanastores #shopping #children #chennai

https://youtu.be/fDCOS0v9zVw

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து | Chittu Kuruvi Mutham Koduthu | Janaki

'சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து' என்ற இனிய பாடல் இதோ. கண்ணதாசன் இயற்றி, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த பாடல். 1964இல் வெளியான 'புதிய பறவை' திரைப்படத்தில் இடம்பெற்றது. காலத்தை வென்ற இந்தப் பாடலை, மெல்லிசைப் பாடகி ஜானகி பாடக் கேளுங்கள்.

Kallathigiri Falls (Chikmagalur) | Karnataka Tour | Incredible India

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் அருகில் உள்ள காளத்திகிரி அருவியைக் காண வாருங்கள். வழிபாட்டுத் தலமாகவும் பரிகாரத் தலமாகவும் அமைந்துள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார், வெ.சுப்பிரமணியன்.

A visit to Kallathigiri Falls, also known as the Kalhatti Falls or Kalhattigiri Falls, near Chikmagalur in Karnataka. Experience the Incredible India. A video by V.Subramanian.

#tour #tourism #karnataka #karnatakatourism #Kallathigiri #falls #waterfalls #Chikkamagaluru #chikmagalur #incredibleindia #india #indiatourism #indiatour #hill #hills #beauty #beautiful #beautifulview #சுற்றுலா

Wednesday, October 12, 2022

Murukku Sandwitch | The Ice Place | Food Review

முறுக்கு சாப்பிட்டிருப்பீங்க, சாண்ட்விட்ச் சாப்பிட்டிருப்பீங்க. முறுக்கு சாண்ட்விட்ச் சாப்பிட்டிருக்கீங்களா? இங்கே பாருங்க.

Review of Murukku Sandwitch from The Ice Place, a restaurant at Tambaram, Chennai.

How to Face Job Interview? | Learn English with Nirmala Raghavan

How to Face Job Interview? Practical tips by Nirmala Raghavan.

வேலைக்கான நேர்முகத் தேர்வை எப்படி எதிர்கொள்வது? நிர்மலா ராகவன் தரும் குறிப்புகளைப் பாருங்கள்.

Tuesday, October 11, 2022

Art of Parenting - Part 2 | Speech by Nirmal

பெற்றோர் அனைவரும் அவசியம் பாருங்கள். உங்களுக்குத் தெரிந்த பெற்றோருடன் பகிருங்கள்.

Art of Parenting - 2nd part of the speech by Nirmal at Sri Sankara Vidyalaya Matriculation Higher Secondary School, East Tambaram, Chennai. Every parent must watch this video. Please share with all parents.

ஹேமமாலினி அண்ணாகண்ணன் வீட்டுக் கொலு | Kolu by Hemamalini Annakannan

சென்னை, தாம்பரத்தில் வசிக்கும் ஹேமமாலினி அண்ணாகண்ணன் வீட்டுக் கொலு இதோ. நித்திலா, அபிநயா, காயத்ரி, ஹரி நாராயணன், தங்கம் மாமி ஆகியோரின் பாடல்களையும் கேட்டு மகிழுங்கள்.

Monday, October 10, 2022

Kemmangundi Hill Station

A visit to Kemmangundi hill station. Video by Subramanian V

கர்நாடக மாநிலம், சிக்மகளூரு அருகில் உள்ள கெம்மண்குண்டி என்ற சுற்றுலாத் தலம் குறித்து அறிவீர்களா? அங்கே சென்று வந்த வெ.சுப்ரமணியன், இந்தப் பதிவின் மூலமாக நம்மையும் அங்கேயே அழைத்துச் செல்கிறார். அவருடன் இணைந்து, இயற்கை அழகு கொஞ்சும் இந்த மலையைக் கண்டு களிப்போம் வாருங்கள்.

#tour #tourism #karnataka #karnatakatourism #kemmangundi #Chikkamagaluru #chikmagalur #incredibleindia #india #indiatourism #indiatour #hill #hills #hillstation #sunset #viewpoint #garden #botanical #resort #resorts #beauty #beautiful #beautifulview #சுற்றுலா

Asian Koel Female & Male

நான் ஓர் அதிர்ஷ்டசாலி. ஆண்குயிலும் பெண்குயிலும் ஒன்றாகச் சேர்ந்து இருப்பதைப் பார்ப்பதே அரிது. இவற்றை நம் வீட்டு ஜன்னல் வழியே அடிக்கடி பார்க்கிறேன், படமும் எடுக்க முடிகிறது எனில், இதை வேறு எப்படி அழைப்பது? இந்த அரிய காட்சியைப் பார்த்து மகிழுங்கள்.

Iam lucky to watch & record both Male & Female of Asian Koel, again and again from my window side. Enjoy this video.

Sunday, October 09, 2022

வள்ளலார் காட்டும் மரணமிலாப் பெருவாழ்வு | வி.கிருத்திகா பேச்சு

திண்டிவனத்தில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் செல்வி வி.கிருத்திகா, 'வள்ளலார் காட்டும் மரணமிலாப் பெருவாழ்வு' என்ற தலைப்பில் இன்று ஆற்றிய உரை இங்கே.

Ramalinga Vallalar's Deathless Life - Speech by V.Krithika, a class 9 student, from Tindivanam, Tamilnadu.

குயில் சண்டை

 குயில்களின் சண்டையைப் பார்த்திருக்கிறீர்களா?


Asian Koels fight at my window side.


#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #birds_nature #birding #garden #birdwatcher #birdlovers #birdlover #asiankoel #koel #cuckoo #fight #attack


https://youtu.be/FfAQ9mqgWKU

Saturday, October 08, 2022

Bird feeding: High Drama at the lunch

தவிட்டுக் குருவி, காக்கை, மைனா, குயில், சின்னான், அணில்... என அடுத்தடுத்து வந்து, போட்டியிட்டு நம் வீட்டு சாம்பார் சாதத்தைச் சுவைக்கும் காட்சி இதோ. இந்த உயிர்களுக்கு இடையிலான உறவுகளை, உணர்வுகளை, மனப் போராட்டங்களைப் பாருங்கள்.

Our regular visitors Yellow-billed Babblers, Crow, Myna, Asian Koel, Red vented Bulbuls, Squirrels.... graciously accepted our food (Sambar rice) today. Watch the high drama!

#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #birds_nature #birding #feeding #food #garden #birdwatcher #birdlovers #birdlover #squirrel

Art of Parenting - Speech by Nirmal

பெற்றோர் அனைவரும் அவசியம் பாருங்கள். உங்களுக்குத் தெரிந்த பெற்றோருடன் பகிருங்கள்.

Art of Parenting, a speech by Nirmal at Sri Sankara Vidyalaya Matriculation Higher Secondary School, East Tambaram, Chennai. Every parent must watch this video. Please share with all parents.

Friday, October 07, 2022

An Artistic Kolu | Navaratri Kolu | நவராத்திரி கொலு

An Artistic Kolu at Chennai.

விஷ்ணு துர்க்கைக்கு வெள்ளிக் கவசம் | Velli Kavasam to Sri Vishnu Durga

சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஷ்ணு துர்க்கைக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து, நவராத்திரியை மக்கள் கொண்டாடினார்கள். ஊர்கூடி நடத்திய இந்த உற்சாகத் திருவிழாவைக் கண்டு களியுங்கள்.

Thursday, October 06, 2022

அருணா ஸ்ரீதர் வீட்டுக் கொலு | Kolu by Aruna Sridhar | Navaratri Kolu

குத்துவிளக்கை அம்பிகையாக அலங்கரிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், குத்துவிளக்கைக் கணபதியாக, கணபதி அம்பாளாக, கணாம்பாளாக அலங்கரித்துள்ளதைப் பார்த்துள்ளீர்களா? இதோ அருணா ஸ்ரீதர் வீட்டுக் கொலுவில் இந்தப் புதுமையைக் கண்டு மகிழுங்கள்.

Wednesday, October 05, 2022

ரஞ்சனி சதீஷ் வீட்டுக் கொலு | Kolu by Ranjani Satish | Navaratri Kolu | ந...

சென்னை, மூவரசம்பட்டில் வசிக்கும் ரஞ்சனி சதீஷ் வீட்டுக் கொலு இதோ. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வரலாற்றைக் கருப்பொருளாகக் கொண்டு அழகான கொலுவைப் படைத்திருக்கிறார். இவர் மகள் மாதங்கியின் பாடலையும் கேட்டு மகிழுங்கள்.

வேதவல்லி பாலாஜி வீட்டுக் கொலு | Kolu by Vedavalli Balaji

சென்னை, அம்பத்தூரில் வசிக்கும் வேதவல்லி பாலாஜி வீட்டுக் கொலு இதோ. எளிதில் காணக் கிடைக்காத, அநேக அரிய பொம்மைகளின் அழகிய அணிவரிசை.

#Navratri #Kolu #Golu #navratri2022 #navaratri #doll #Dolls #art #artist #India #TamilNadu #tradition #culture #Hindu #Chennai #நவராத்திரி #கொலு

Kolu by Vedavalli Balaji at Ambattur, Chennai.

Tuesday, October 04, 2022

ஐஸ்வர்யா பரத்வாஜ் வீட்டுக் கொலு | Kolu by Aishwarya Barathwaj

சென்னை, பழவந்தாங்கலில் வசிக்கும் ஐஸ்வர்யா பரத்வாஜ் வீட்டுக் கொலு இதோ. கல்கருடன், அத்தி மரத்தால் செய்த அம்மன், பச்சை மகாலட்சுமி, தத்ரூபமான தீமிதி திருவிழா, சப்த மாதா, முப்பெருந்தேவியரின் அரிய படங்கள்... எனக் கண்கவர் கொலு. ஐஸ்வர்யா, நித்திலா பாடல்களுடன்.

பானுமதி ரங்காச்சாரி வீட்டுக் கொலு | Kolu by Banumathi Rangachari

சென்னை, புதுப் பெருங்களத்தூரில் வசிக்கும் பானுமதி ரங்காச்சாரி வீட்டுக் கொலு இதோ. யானைக்குள் இன்னொரு யானை இருப்பதைப் பாருங்கள்.

Monday, October 03, 2022

மீரா சேஷகோவிந்தராஜன் வீட்டுக் கொலு | Kolu by Meera Sesha Govindarajan

சென்னை, கந்தன்சாவடியில் வசிக்கும் மீரா சேஷகோவிந்தராஜன் வீட்டுக் கொலு இதோ. 

எனை நீ மறவாதே | Enai Nee Maravathe | Krishnakumar

எம்.‌எம். தண்டபாணி தேசிகர் இயற்றிய 'எனை நீ மறவாதே அங்கயற்கண்ணி எனை நீ மறவாதே' என்ற புகழ் பெற்ற பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

சனிப்பெயர்ச்சி பலன் 2023-25 | மீனம் | வேதா கோபாலன் | SaniPeyarchi Palan for Meenam

ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், 2023 - 25 ஆண்டுகளுக்கான, மீன ராசிக்கு உரிய சனிப்பெயர்ச்சி பலன்கள் இதோ.

Saturn Transit Predictions (SaniPeyarchi Palan) for Meenam by astrologer Vedha Gopalan.

Sunday, October 02, 2022

Mahatma Gandhi

 Mahatma Gandhi at Saravana Stores, Chennai.


#GandhiJayanti #GandhiJayanti2022 #gandhijayanthi #Gandhiji #gandhiquotes #GandhiTalks #Gandhi #GandhiJayantiSpecial #MKGandhi #MahatmaGandhiJayanti #Mahatma #MahatmaGandhi #MahatmaGandhiji #காந்தி_ஜெயந்தி #காந்தி 


https://youtu.be/D0V7UH8Fdb0

Mahatma Gandhi Speech at IARC | 1947

1947இல் மகாத்மா காந்தி ஆற்றிய உரை இங்கே. எவ்வளவு இயல்பாகவும் எளிமையாகவும் நகைச்சுவை உணர்வோடும் அவர் பேசுகிறார் என்று கேளுங்கள்.

M. K. Gandhi's Speech at Inter-Asian Relations Conference, 1947

#GandhiJayanti #GandhiJayanti2022 #gandhijayanthi #Gandhiji #gandhiquotes #GandhiTalks #Gandhi #GandhiJayantiSpecial #MKGandhi #MahatmaGandhiJayanti #Mahatma #MahatmaGandhi #MahatmaGandhiji #காந்தி_ஜெயந்தி #காந்தி 

தீப ஜோதியாய் வருவாய் | Deepa Jothiyaai Varuvaai | Lakshmi Song

திருமகளைப் போற்றும் 'தீப ஜோதியாய் வருவாய்' என்ற இந்தப் பாடலை, தபோவனத்தில் தினசரி அதிகாலை பாடுகிறார்கள். கன்னிப் பெண் ஒருவர் கையில் விளக்கேந்தி நடக்க, ஆசிரமத்தில் உள்ள அனைவரும் அவரைச் சூழ்ந்து பாடியபடி செல்வது வழக்கம். இந்த இனிய பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமாரும் அவர் மகள் ஷ்ரேயா கிருஷ்ணகுமாரும் பாடக் கேளுங்கள். இந்த நவராத்திரியில் திருமகளின் அருள், எங்கும் நிறைவதாக!

சனிப்பெயர்ச்சி பலன் 2023-25 | கும்பம் | வேதா கோபாலன் | SaniPeyarchi Palan for Kumbam

ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், 2023 - 25 ஆண்டுகளுக்கான, கும்ப ராசிக்கு உரிய சனிப்பெயர்ச்சி பலன்கள் இதோ.

Saturday, October 01, 2022

நவராத்திரி கொலு | கற்பக விநாயகர் திருக்கோவில் | Navaratri Kolu

சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தை அலங்கரிக்கும் நவராத்திரி கொலுவைக் கண்டு களியுங்கள்.