!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2021/12 - 2022/01 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, December 31, 2021

Coimbatore to Velliangiri - A road trip

கோவையிலிருந்து  வெள்ளியங்கிரி அடிவாரம் வரைக்கும் அண்மையில் நாங்கள் சென்றபோது, வழியெங்கும் அருமையான இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசித்தோம். தென்னந்தோப்புகள், வாழைத் தோப்புகள், பாக்குத் தோப்புகள், நெல் வயல்கள், திராட்சைத் தோட்டங்கள், மஞ்சள், சோளம், காலிபிளவர்.... என விதவிதமான பயிர்கள் விளைந்து நிற்கக் கண்டோம். கூடவே புதுப் பொலிவுடன் காட்சி தரும் கோவில்கள், கல்லூரிகள், சாலைகள், பழைமை மாறாத வீடுகள், கடைகள் எனப் பலவும் கண்ணுக்கு விருந்து. கொங்கு மண்ணின் கொஞ்சும் அழகைப் பாருங்கள். எங்கள் பயணக் காட்சிகளின் தொகுப்பு இங்கே. 

#Coimbatore #Kovai #கோவை #கோயம்புத்தூர் #Vellingiri #Velliangiri #வெள்ளியங்கிரி #வெள்ளிங்கிரி

மழையில் நனையும் மடையான் | Indian Pond Heron in rain | Chennai Rain

சற்றுமுன் சென்னை தாம்பரத்தில் பெய்த கனமழையில் நனைந்த மடையான்.

#chennairains #ChennaiRains2021 #Chennai #ChennaiRain #tambaram

Thursday, December 30, 2021

கோதுமை பக்கோடா | Wheat Pakoda

கோதுமை பக்கோடா செய்வது எப்படி? விளக்குகிறார் கோவையிலிருந்து ஜெயஸ்ரீ.

Wednesday, December 29, 2021

#Shorts: Panju Mittai Seller at Coimbatore

கோவையில் இன்று கண்ட பஞ்சுமிட்டாய் வியாபாரி.

8 வடிவ நடைப்பயிற்சி | 8 shaped walk

ஒரு எட்டு நட, ஒரு எட்டு போயிட்டு வா என முன்னோர் சொல்லக் கேட்டிருப்போம். அதற்கு 8 என்றும் பொருள் கொள்ளலாம். 8 வடிவத்தில் நடப்பது உடல் முழுவதற்கும் நன்மை பயக்கும். கோவையில் இன்று காலையில் நானும் என் மச்சினர் சத்தியநாராயணனும் 8 வடிவத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டோம். நீங்களும் நடந்து பாருங்கள்.

Monday, December 27, 2021

Adiyogi 3D Laser Light Show | Isha Yoga

கோவை ஈஷா யோகா வளாகத்திற்கு நேற்று சென்றோம். முன்னிரவு நேரத்தில்  அங்கு லேசர் ஒளிக்காட்சி நடைபெற்றது. லேசர் விளக்கொளியில் ஆதியோகி சிலை உயிர்பெற்று எழுந்தது. விதவிதமான தோற்றங்களில், ஒளிக் கோலங்களில், இப்படியெல்லாம் கூடக் காட்ட முடியுமா என வியக்கும் வகையில் ஒரு வர்ண ஜாலத்தை நிகழ்த்திக் காட்டினார்கள். இதோ அந்தக் காட்சிகள்.

#Coimbatore #Kovai #கோவை #கோயம்புத்தூர் #Isha #Adiyogi #ஈஷா #ஆதியோகி

Chocolate Brownie with Ice Cream | Yari Coimbatore

கோவையின் யாரி உணவகத்தில் நேற்று இரவு சாக்லேட் பிரவுனி ஐஸ்கிரீம் சுவைத்தோம். குளிர்ச்சியான ஐஸ்கிரீம் எப்படி ஆவி பறக்க வருகிறது என்று பாருங்கள்.

#Coimbatore #Kovai #கோவை #கோயம்புத்தூர் #chocolate #chocolatebrownie #icecream

#Shorts: Banana Seller

கோவையில் கண்ட வாழைப்பழ வியாபாரி. வாழைப்பழம் என ஒரே வார்த்தையில் குரலெழுப்புவது சரியா? அல்லது இவர் சொல்வது போல் எல்லா வகைகளையும் சொல்வது சரியா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

#Coimbatore #Kovai #கோவை #கோயம்புத்தூர் #வாழைப்பழம் #Banana 

Sunday, December 26, 2021

வரி வாலாட்டிக் குருவி | வெண்புருவ வாலாட்டி| Voice of White-browed Wagtail

வரி வாலாட்டிக் குருவி (White-browed wagtail) அல்லது வெண்புருவ வாலாட்டி என்பது இந்தியாவில் காணப்படும் ஒரே ஓர் இடம்பெயரா வாலாட்டிக் குருவி. இதன் உடலின் மேலே கருப்பு மற்றும் கீழே வெள்ளையுடன், வெள்ளைப் புருவமும் கொண்டது. இது தனது நீண்ட வாலிறகைத் தொடர்ந்து ஆட்டும் பண்பினைக் கொண்டது. நீண்ட தூரங்களுக்கு மிக வேகமாகப் பறக்கும். மணிக்கு 40 கி. மீ. வேகத்தில் பயணிக்கும். 

இந்தியாவில் பண்டைய காலங்களில், இந்தச் சிற்றினம் கூண்டுப் பறவையாக வளர்க்கப்பட்டது. இதன் குரலுக்காகப் பாராட்டப்பட்டது. இதன் மார்பில் விஷ்ணுவின் சாலிகிராம் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதால் இதைக் காண்பதை நல்ல சகுனமாகக் கருதினர். இந்தப் பறவை எங்கு அமர்கிறது, என்ன செய்கிறது என்பதன் மூலம் எதிர்காலம் பற்றிய பல்வேறு நம்பிக்கைகள் சரத்சந்திர மித்ராவால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. (விக்கிப்பீடியா)

பலவிதமான ஒலிக் குறிப்புகளுடன் கூடிய இதன் குரலைக் கேளுங்கள்.

Saturday, December 25, 2021

கிறிஸ்துமஸ் கோலங்கள் | Christmas Kolangal

தமிழக வீதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரையப்பெற்ற கோலங்கள் சிலவற்றை இங்கே கண்டுகளியுங்கள். உங்கள் பகுதியில் தென்படும் கோலங்களை எமக்குப் படம் எடுத்து அனுப்புங்கள் (annakannan@yahoo.co.in). அடுத்த பதிப்பில் வெளியிடுவோம். 

தொகுப்பு - சுதா மாதவன்

யாவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

Friday, December 24, 2021

விஷ மூங்கில் | Spider Lily

இதன் பெயர் விஷ மூங்கில் (Spider Lily). பூச்சிக் கடி, பாம்புக் கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. அழகுக்காகவும் இதை வளர்க்கிறார்கள். இதைப் பற்றிய ஆங்கில விளக்கத்தில், நாட்டு மருந்து என்பதை folk remedy எனக் குறித்திருப்பது சரியா? பார்த்துச் சொல்லுங்கள்.

#Shorts: Ants on leaf

இலைமேலே எறும்புகள்

ஆழியாறு சிறுவர் ரயில் | Aliyar Children's Train

கோவை மாவட்டம், ஆழியாறு அணைப் பூங்காவில் சிறுவர் ரயில் ஒன்று ஓடுகிறது. பெரியவர்களும் உடன் செல்லலாம். மிகப் பழைய ரயில். உட்காரும் இருக்கை உள்பட, முழுவதும் இரும்பினால் ஆனது. சற்று தடதடவென்று செல்லும். தலா ரூ.30 கட்டணத்திற்கு எத்தனை ரவுண்டு அடிக்கிறார்கள் என்று பாருங்கள்.

Thursday, December 23, 2021

தம்பட்டை அவரை அறுவடை | Thambattai Avarai | Sword Beans Harvest

தேசிய விவசாயிகள் தினமாகிய இன்று, நம் மாடித் தோட்டத்து அறுவடையைப் பாருங்கள். தம்பட்டை அவரை, மூக்குத்தி அவரை, நட்சத்திர வெண்டை உள்ளிட்டவற்றைப் பறிக்கும் காட்சிகள், இதோ உங்களுக்காக.

#தேசியவிவசாயிகள்தினம் #IndianNationalFarmersDay #NationalFarmersDay #FarmersDay #விவசாயிகள்தினம் #விவசாயிகள் #Farmers

எருமையின் மீது ஆனைச்சாத்தன் | Black Drongo on Buffalo

நிறைய இரட்டைவால் குருவிகளைப் பார்த்திருக்கிறேன். கால்நடைகள் மீது அமர்ந்து வந்ததைப் பார்த்த நினைவு இல்லை என நண்பர் ஐயப்பன் கிருஷ்ணன், நோக்கர் (Facebook) உரையாடல் ஒன்றில் கூறியிருந்தார். இதோ, எருமையின் மீது இரட்டைவால் குருவி அமர்ந்து வருவதைப் பாருங்கள்.

#Shorts: Coimbatore Butterfly

கோயம்புத்தூர் பட்டாம்பூச்சி

Wednesday, December 22, 2021

அரவிந்த மலர்ப்பாதம் | கிருஷ்ணகுமார் | Aravinda Malarpadam | Krishnakumar

ஞானானந்த மண்டலியில் அனுதினமும் பாடப்படும் 'அரவிந்த மலர்ப்பாதம்' என்ற பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் பாடுகிறார். கேட்டு மகிழுங்கள்.

நித்திலாவின் படகு சவாரி | Children's Self Rowing Boat | Nithila's Boat Ride

ஆழியாறு அணைப் பூங்காவில் சிறுவர்கள் தாங்களாகவே படகு ஓட்டும் வகையில் ஒரு வாய்ப்பினை வழங்குகிறார்கள். ஒருவருக்கு ரூ.40 மட்டுமே கட்டணம். நித்திலாவின் உற்சாகமான படகு சவாரி இங்கே.

Coimbatore to Pollachi Road | How Smooth this Road? | Test Drive

கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலை எப்படி இருக்கிறது? தார்ச் சாலை - சிமெண்டுச் சாலை ஆகிய இரண்டில் எது சிறந்தது?  இதோ ஒரு சோதனை ஓட்டம்.

மயிலொன்று கண்டேன் | Peacock on the move

கவியருவியில் முதலில் கண்டது இந்த மயிலைத்தான். கோவை மாவட்டம், கவியருவியின் சாலையோரத்தில் அச்சமின்றி இரைதேடிக்கொண்டு இருந்தது. வாகனங்களின் இரைச்சலை இது கண்டுகொள்ளவே இல்லை. இது என் இடம் என்ற உரிமையுடன், சுதந்திரத்துடன் சுற்றி வந்தது. இந்தச் சுதந்திரம், இதன் அழகை இன்னும் ஒரு படி கூட்டிவிட்டது. இந்தக் கான மயிலைக் கண்டு மகிழுங்கள்.

A visit to Srinivasa Ramanujan Memorial at Kumbakonam

இன்று கணித மேதை ராமானுஜனின் 134ஆவது பிறந்த நாள். 32 ஆண்டுகளே வாழ்ந்த ராமானுஜன், மறைந்து 100 ஆண்டுகள் கடந்த பிறகும், கணித உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருக்கிறார். இவரது பிறந்த நாளை இந்தியாவின் கணித நாளாகக் கொண்டாடுகிறோம். கும்பகோணத்தில் உள்ள, இராமானுஜனின் நினைவு இல்லத்தைக் கடந்த ஆண்டு ஆவணப்படுத்தினேன். அவரது அறையும் பயன்படுத்திய கட்டிலும் பார்த்துக்கொண்டிருந்த ஜன்னலும் அப்படியே உள்ளன. ராமானுஜன் நடமாடிய இடத்தை நீங்களும் பாருங்கள்.

Tuesday, December 21, 2021

குரங்கு அருவி | கவியருவி | Monkey Falls

கோவை மாவட்டத்தின் வால்பாறை நகராட்சியில், ஆழியாறு பகுதியை அடுத்துள்ள கவியருவி என்ற குரங்கு அருவிக்குச் சென்று குளித்து வந்தோம். எங்கள் பயணக் காட்சிகளின் தொகுப்பு இங்கே.

உடுமலைப்பேட்டையின் காற்றாலைகள் | Windmills at Udumalaipet

வெறுங்கையால் முழம் போடலாம். காற்றிலும் காவியம் தீட்டலாம். வெட்டவெளி, பொட்டல் காடு என்று வர்ணித்த இடங்கள், இன்று கோடிகளைக் குவித்து வருகின்றன. தமிழகத்தின் முக்கியமான காற்றாலை மையங்களுள் ஒன்றாக, உடுமலைப்பேட்டை திகழ்கிறது. ஆண்டு முழுவதும் காற்று வீசும் இடங்களையே இதற்குத் தேர்வு செய்கிறார்கள். ஒவ்வொரு காற்றாலையும் பல கோடிகள் செலவில் அமைக்கப்படுகின்றன. அதே போல, இவற்றிலிருந்து பல ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியான மின்சாரம் உற்பத்தி செய்து, லாபம் ஈட்டுகிறார்கள். பரபரப்பான சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் காற்றாலைகளைக் கண்டு களியுங்கள். 

#Shorts: Windmill 1x2x3x

உடுமலைப்பேட்டையில் ஒரு காற்றாலை.

Monday, December 20, 2021

கோவை விமான நிலைய உள்ளழகு | Interior Decoration of Coimbatore Airport

Interior Decoration of Coimbatore Airport - A mini tour.

கோவை விமான நிலையத்தின் உள்ளழகு எப்படி இருக்கு? இதோ ஒரு சிறு உலா.

சென்னை விமான நிலைய உள்ளழகு | Interior Decoration of Chennai Airport

Interior Decoration of Chennai Airport - A mini tour.

சென்னை விமான நிலையத்தின் உள்ளழகு எப்படி இருக்கு? இதோ ஒரு சிறு உலா.

Sunday, December 19, 2021

எழுத்தால் சமூக மாற்றம் நிகழுமா? | எழுத்தாளர் கே.ஜி.ஜவர்லால் நேர்காணல் - 3

எழுத்தால் சமூக மாற்றத்தை உருவாக்க முடியுமா? கதையில் செய்தி ஏதும் சொல்ல வேண்டுமா? கடினமான நடையில் எழுதுவது உகந்ததா? புரிந்தால் புரிந்துகொள், புரியாவிட்டால் சொறிந்துகொள் என்று சுஜாதா சொன்னது ஏன்? நல்ல எழுத்து எப்படி இருக்க வேண்டும்? எழுத்தாளர் கே.ஜி.ஜவர்லாலின் அனுபவப் பகிர்வு இங்கே. இதில் அவர் சொல்லும் காட்சிக்கு நீங்கள் ஒரு கதை எழுதி அனுப்புங்கள். சிறந்த கதையை அவர் தேர்ந்தெடுப்பார்.

Saturday, December 18, 2021

சென்னையிலிருந்து கோவைக்கு விமானப் பயணம் | Chennai to Coimbatore | Flight Trip

சென்னையிலிருந்து கோவைக்கு இண்டிகோ விமானத்தில் வந்து சேர்ந்தோம். ஹரி நாராயணனின் முதல் விமானப் பயணம் இது. எங்கள் பயணக் காட்சிகளின் தொகுப்பு இங்கே.

இதில் தமிழகத்தை ஒரு பறவைப் பார்வையில் நீங்கள் காணலாம். கீழே காணும் அனைத்தும் தமிழ் மண், மேலே காணும் யாவும் தமிழ் வான். தமிழகத்தின் வளங்கள், வயல்கள், ஆறுகள், காடுகள், ஆலைகள், மனைகள், வீடுகள், மக்கள் அடர்த்தி... என அனைத்தையும் ஒரே வீச்சில் கண்டு மகிழுங்கள்.

Friday, December 17, 2021

#Shorts: Spiral Potato

Spiral Potato; street food at Chennai.

Thursday, December 16, 2021

திருப்பாவை - 30 பாசுரங்கள் | ஸ்வேதா குரலில் | Tiruppavai - 30 Songs

தனித்துவம் மிக்க தமிழ்க்கவி, அமுதெனத் தமிழ்செய்த அருட்கவி, எண்ணமும் வண்ணமும் புதுக்கிய ஏரார்ந்த செல்வி, தமிழ்நிலத்தின் தவப்பயன், ஆயிரம் ஆண்டுகளின் பெருமிதம், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவை இதோ. 30 பாசுரங்களும் ஒரே பதிவாக. செல்வி ஸ்வேதா பாடுகிறார். பார்த்து மகிழுங்கள்.

Wednesday, December 15, 2021

வீட்டுக்கு வந்த குரங்கு | Monkey visit to our house

இன்று காலை எங்கள் வீட்டுக்கு வந்த குரங்கு.

புடலைக்கு ஒரு கல்கட்டு | A stone tail to Snake Gourd

நம் மாடித் தோட்டத்தில் ஒரு புடலங்காய் (பாம்புப்புடலை) காய்த்துள்ளது. அது நீளமாக வளர்வதற்காகக் கல்கட்டி விட்டிருக்கிறோம். அந்த ருசிகரக் காட்சி இங்கே.

Tuesday, December 14, 2021

Fountain of Wealth | The largest fountain in the world | Guinness Record

இது, உலகின் மிகப் பெரிய நீரூற்று எனக் கின்னஸ் சாதனை (1998) படைத்தது. செல்வ நீரூற்று (The Fountain of Wealth) எனப் பெயர் பெற்றது. சிங்கப்பூரின் சன்டெக் சிட்டி என்ற வணிக வளாகத்தில் அமைந்துள்ளது. நீரூற்றுடன் வண்ண விளக்குகளும் லேசர் ஒளிக் காட்சிகளும் எழுத்துகளும் அலங்கரிக்கின்றன. இந்த நிகழ்வில், நம் அன்புக்கு உரியவர்களுக்கு லேசர் செய்திகளும் வாழ்த்துகளும் விடுக்கலாம். தொழில்நுட்பத்தில் 2002ஆம் ஆண்டிலேயே சிங்கப்பூர் எந்த அளவுக்கு முன்னேறியிருந்தது என்பதை இந்தக் கோலாகலக் காட்சிகள் காட்டுகின்றன. 

இதில் இன்னொரு சிறப்பும் உண்டு. ஒவ்வொரு நாளும் சில நேரங்களில் பெரிய நீரூற்றை நிறுத்திவைப்பர். அதன் மையப் பகுதியில் உள்ள சிறிய நீரூற்றை இயக்குவர். அதை மூன்று முறை சுற்றி வருபவர்களுக்கு அதிர்ஷ்டம் சேரும் என்பது நம்பிக்கை. இந்தப் பதிவின் தொடக்கத்தில், அந்தச் சிறிய நீரூற்றைப் பலரும் சுற்றி வருவதைப் பார்க்கலாம். அவர்களுடன் என் மனைவி ஹேமமாலினியும் சுற்றி வருகிறார். 

சத்தியநாராயணனின் படப்பதிவைப் பார்த்து மகிழுங்கள்.

The Fountain of Wealth (Malay: Air Pancut Kekayaan, Chinese: 财富之泉) is listed by the Guinness Book of Records in 1998 as the largest fountain in the world. It is located in one of Singapore's largest shopping malls, Suntec City.

During certain periods of the day, the fountain is turned off and visitors are invited to walk around a mini fountain at the centre of the fountain's base, three times for good luck. At night, the fountain is the setting for laser performances, as well as live song and laser message dedications between 8 pm to 9 pm daily. It is situated in such a way the fountain is the hub of the shopping mall (Wiki).

Video captured by SathyaNarayanan.L in 2002

#Shorts: What's Your Name?

மலரே, உன் பெயர் என்ன?

Hi Flower, What's Your Name?

Monday, December 13, 2021

மஞ்சள் அறுவடை | Manjal Aruvadai | Turmeric Harvest

எங்கள் மாடித் தோட்டத்தில் இன்று மஞ்சள் அறுவடை.

Sunday, December 12, 2021

எழுத்தில் மசாலா எதற்காக? | எழுத்தாளர் கே.ஜி.ஜவர்லால் நேர்காணல் - 2

எழுத்தில் மசாலாத் தன்மை இருக்க வேண்டுமா? செக்ஸ் - போர்னோ இரண்டுக்குமான வேறுபாடு என்ன? புகழ்பெற்ற எழுத்தைக் காப்பியடித்து எழுதலாமா? அண்ணாவின் பாணியைக் கருணாநிதி காப்பியடித்தது ஏன்? ரஜினி - கமல் பாணி என்ன வித்தியாசம்? வெகுஜன எழுத்து, இலக்கியம் ஆகுமா? அதிகம் பேர் படிப்பது இலக்கியம் இல்லையா? எழுதும் கலை குறித்து, எழுத்தாளர் கே.ஜி.ஜவர்லாலின் யதார்த்தமான பதில்கள் இங்கே.

Saturday, December 11, 2021

ஓடி விளையாடு பாப்பா | Oodi Vilaiyadu Pappa | மகாகவி பாரதி

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 'ஓடி விளையாடு பாப்பா', சுதா மாதவன் வாசிப்பில். இதோ. உங்கள் வீட்டுப் பிள்ளைகளைக் கேட்கச் சொல்லுங்கள். அவர்களையும் உடன் இணைந்து சொல்லச் சொல்லுங்கள். 

ஓவியத்திற்கு நன்றி - ஓவியர் ஜீவா

A2B Pigeon | A2B புறா

இந்தப் புறா கூடு கட்டியிருக்கும் இடத்தைப் பாருங்க!

ஆன்மாவான கணபதியின் | மகாகவி பாரதி | நாகி நாராயணன்

மகாகவி சுப்ரமணிய பாரதியார் இயற்றிய 'ஆன்மாவான கணபதியின்' என்ற பாடலை நாகி நாராயணன் குரலில் கேளுங்கள். இந்தப் பாடல், விநாயகர் நான்மணி மாலையில் இடம் பெற்றுள்ளது. 'யான் முன்னுரைத்தேன் கோடிமுறை. இன்னுங்கோடி முறைசொல்வேன்' என அவர் அழுத்தமாகச் சொல்வது எதை என்று கேளுங்கள். பாரதி பிறந்த நாளில் அவரைப் போற்றுவோம். அவரது வாக்கினை நெஞ்சினில் ஏந்துவோம். 

Friday, December 10, 2021

முன்னதாக ஓய்வுபெற! | How to Retire Early? | ராமகிருஷ்ணன் நாயக்

அடிப்படைத் தேவைகளுக்கே ஆயுள் முழுவதும் உழைக்க வேண்டுமா? என் விருப்பப்படி என் வாழ்வை அமைக்கும் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெறுவது எப்படி? எப்போது? முன்னதாகவே ஓய்வுபெற்று, வாழ்வை அனுபவிக்க என்ன வழி?  பலருக்குள்ளும் இருக்கும் இந்தக் கேள்விகளுக்கு விடை இதோ. முன்னதாக ஓய்வுபெற என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு திட்டமிட வேண்டும்? எவ்வகையில் முதலீடு செய்ய வேண்டும்?  அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.

#Shorts: Tap Tap

இப்படி டப்பு டப்புன்னு தட்டுவதிலிருந்தே ஆங்கிலத்தில் Tap என்ற சொல் உருவாகியிருக்கோ!

Thursday, December 09, 2021

Shorts: Gymnastic Pygmy Wisp

ஜிம்னாஸ்டிக் செய்யும் ஊசித் தட்டான்!

நா.கண்ணனின் கவிதைகள் குறித்து அண்ணாகண்ணன்

முனைவர் நா.கண்ணனின் மிசித்ர கவிதைகள் குறித்த எனது கருத்துரை. 

Tuesday, December 07, 2021

கொக்கி நடை | எழுத்தாளர் கே.ஜி.ஜவர்லால் நேர்காணல் | Writer KG Jawarlal Interview

சுஜாதா நடையில், ஓ.ஹென்றி பாணியில், வெகுஜன எழுத்தில் முத்திரை பதித்து வருகிறார், கே.ஜி.ஜவர்லால். எந்தத் தலைப்பில், எவ்வளவு பக்கம் எழுதினாலும் வாசகர்களை முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை படிக்க வைக்கிறார். விறுவிறுப்பான நடையின் மூலம் வாசகர்களைக் கொக்கி போட்டு இழுத்து படிக்க வைப்பது எப்படி? சூட்சுமத்தைச் சொல்லித் தருகிறார் கே.ஜி.ஜவர்லால். பார்த்துப் பயன்பெறுங்கள்.

Monday, December 06, 2021

#Shorts: Butterfly on Hibiscus

செம்பருத்தியில் ஒரு வண்ணத்துப்பூச்சி

Sealife Adventure | Aquarium | Zooquarium | England

இங்கிலாந்தின் சவுத் எண்ட் என்ற பகுதியில், கடலுயிர்கள் - காட்டுயிர்கள் ஆகியவை இணைந்த புதுமையான அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார்கள். அதன் ஒரு பகுதியாக, ஏராளமான கடலுயிர்களை, எளிதில் காணக் கிடைக்காத அரிய உயிரினங்களை இந்தப் பதிவில் கண்டுகளியுங்கள். 

வகை வகையாக, வண்ண வண்ணமாக வலம் வரும் மீன்களும் இதர உயிரினங்களும் உங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளக் கூடியவை. முக்கியமாக, இவற்றை உங்கள் பிள்ளைகளுக்கும் மாணவர்களுக்கும் காட்டுங்கள். உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகம் சுற்றிப் பார்க்கலாம். அத்துடன், உற்சாகமாகக் கல்வியும் கற்கலாம்.

படப்பதிவு - நவ்யா

Sunday, December 05, 2021

Foal | Baby Horse

தாம்பரம் வீதிகளில் தெருநாய்களைப் போல் தெருக்குதிரைகளும் இருக்கின்றன. யாரும் இவற்றை வளர்ப்பது போல் தெரியவில்லை. ஆனாலும் இந்தத் தாய்க்குதிரை தானே புல்தேடி உண்டு, தன் குட்டிக்கும் பாலூட்டி வளர்க்கிறது. புல்லுண்ணும் தாய்க்குதிரையை, தாயை விட்டுப் பிரியாத குதிரைக் குட்டியை இங்கே பாருங்கள்.

Saturday, December 04, 2021

13 வாத்துகள் | 13 Ducks

13 வாத்துகள் நீந்தி விளையாடுவதும் நீரில் தலையை அமிழ்த்துவதும் சிறகடிப்பதும் சிறகைக் கோதுவதுமாக அதகளம் செய்வதைப் பாருங்கள்.

#Shorts: A bite

How is the bite?

Friday, December 03, 2021

2022 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன் | 12 ராசிகளுக்கும்

2022 உங்களுக்கு எப்படி இருக்கும்? வாக்குப் பலிதமும் சரஸ்வதி கடாட்சமும் நிறைந்த மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இங்கே. 12 ராசிகளுக்கும் உரிய பலன்களை ஒரே பதிவாக வழங்கியுள்ளோம். உங்கள் குடும்பத்தாருடன், நண்பர்களுடன் பகிருங்கள்.

Thursday, December 02, 2021

மீனம் | 2022 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன்

2022 மீன ராசிக்கு எப்படி இருக்கும்? வாக்குப் பலிதமும் சரஸ்வதி கடாட்சமும் நிறைந்த மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

கும்பம் | 2022 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன்

2022 கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்? வாக்குப் பலிதமும் சரஸ்வதி கடாட்சமும் நிறைந்த மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

மகரம் | 2022 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன்

2022 மகர ராசிக்கு எப்படி இருக்கும்? வாக்குப் பலிதமும் சரஸ்வதி கடாட்சமும் நிறைந்த மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

தனுசு | 2022 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன்

2022 தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்? வாக்குப் பலிதமும் சரஸ்வதி கடாட்சமும் நிறைந்த மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

விருச்சிகம் | 2022 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன்

2022 விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்? வாக்குப் பலிதமும் சரஸ்வதி கடாட்சமும் நிறைந்த மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

துலாம் | 2022 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன்

2022 துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்? வாக்குப் பலிதமும் சரஸ்வதி கடாட்சமும் நிறைந்த மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

கன்னி | 2022 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன்

2022 கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்? வாக்குப் பலிதமும் சரஸ்வதி கடாட்சமும் நிறைந்த மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

சிம்மம் | 2022 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன்

2022 சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்? வாக்குப் பலிதமும் சரஸ்வதி கடாட்சமும் நிறைந்த மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

Wednesday, December 01, 2021

கடகம் | 2022 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன்

2022 கடக ராசிக்கு எப்படி இருக்கும்? வாக்குப் பலிதமும் சரஸ்வதி கடாட்சமும் நிறைந்த மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

மிதுனம் | 2022 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன்

2022 மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்? வாக்குப் பலிதமும் சரஸ்வதி கடாட்சமும் நிறைந்த மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

ரிஷபம் | 2022 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன் | Rishabam | 2022 Yearly Predictions

2022 ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்? வாக்குப் பலிதமும் சரஸ்வதி கடாட்சமும் நிறைந்த மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

மேஷம் | 2022 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன் | Mesham | 2022 Yearly Predictions

2022 மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்? வாக்குப் பலிதமும் சரஸ்வதி கடாட்சமும் நிறைந்த மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.