!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2020/06 - 2020/07 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, June 30, 2020

Heavy rain at Tambaram | தாம்பரத்தில் கனமழை

சென்னை, தாம்பரத்தில் இன்று மாலை அரை மணி நேரம் சற்றே கனமழை பெய்தது. உள்ளம் துள்ளச் செய்யும் அந்தக் குதூகலக் காட்சியைப் பாருங்கள்!



Cat on the move

Cat on the move!



 

எருமையின் தீனக் குரல் | Buffalo voice

வழி தவறியதோ, கன்றைத் தேடியதோ, பசியோ, தாகமோ, எதனாலோ எருமை நேற்று இப்படி தீனக் குரல் எழுப்பியவாறு சென்றது.



Nothing will stop you | தடை அதை உடை

வேலிக்குள் அடைபட்டாலும்

விடாமல் முயற்சி செய்!

மூலைக்குள் முடங்கிடாமல்

முழுவீச்சில் பயிற்சி செய்!

மலைபெயர்க்க வேண்டாம்! நீ

மனம்விழித்தால் போதும்! நீ

தலையெடுத்து வந்தால்ஓர்

தலைமுறையே தலையெடுக்கும்!



- அண்ணாகண்ணன்



 

Monday, June 29, 2020

Sunset at Chennai - 7

Sunset at Chennai today!



சென்னையில் இன்றைய சூரிய அஸ்தமனம்!



Butterfly - 3 | வண்ணத்துப்பூச்சி - 3

நேற்று கண்ட வண்ணத்துப்பூச்சியை அதே இடத்தில், அதே நேரத்தில் இன்றும் கண்டேன். எப்படிப் பறக்க வேண்டும் என்று அது பறந்து காட்டியது.



லில்லி | Lily

லில்லி மலருக்குக் கொண்டாட்டம்!



Sunday, June 28, 2020

Sunset at Chennai - 6

தண்ணீரில் எண்ணெய் கலந்தால் எப்படி வானவில்லின் ஏழு நிறங்களும் வெளிப்படுமோ, அப்படி இன்றைய அஸ்தமனத்தில் வானவில்லின் வண்ணக் கலவை மின்னியது!



காலமையா காலம் - அண்ணாகண்ணன் பாடல்

எனது புதிய பாடல்!



 My new song!



Butterfly - 2 | வண்ணத்துப்பூச்சி - 2

தழையில் ஆழ்ந்து லயித்திருக்கும் வண்ணத்துப்பூச்சி, தன் செயலை ஒரு யோகம்போல் செய்வதைப் பாருங்கள்!



Saturday, June 27, 2020

குயில் தந்த தரிசனம் | A darshan from Cuckoo

இன்று எனக்குக் குயில் தந்த தரிசனம்!



Sunset at Chennai - 5

சென்னையில் இன்றைய சூரிய அஸ்தமனம்!



கொத்துமலர் போலே முத்துநகை வீசு!

Greet your friends and family with this video!



உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இந்தக் காணொலியை அனுப்பி வாழ்த்துங்கள்.



Friday, June 26, 2020

ஓணான் யோகாசனம் | Lizard Yoga

இந்த ஓணான் செய்யும் யோகாசனத்தின் பெயர் என்ன?



பறவை குளிக்கிறது! | A bird is taking bath!

இது எந்தப் பறவை என்று உங்களுக்குத் தெரியுமா?



Do you know, which bird it is?



நாகஸ்வர இசைக்கு ஆடும் நந்தியாவட்டை

Greet your friends and family with this video!



உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இந்தக் காணொலியை அனுப்பி வாழ்த்துங்கள்.



Thursday, June 25, 2020

Sunset at Chennai - 4

சென்னையில் இன்றைய சூரிய அஸ்தமனம்!



பிரம்ம கமலம் | Brahma Kamal | Queen of the night

பிரம்ம கமலம், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து, ஓரிரு நாட்களில் உதிர்ந்துவிடும். இந்தத் தாவரத்தின் இன்னொரு சிறப்பு, இதன் இலையை வெட்டி வைத்தாலே புதிதாக முளைத்துவிடும். மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் பிரம்மன் வீற்றிருப்பது போலவே இதன் அமைப்பு இருப்பதால், பிரம்ம கமலம் என்று அழைக்கப்படுகிறது. இதைப் பார்ப்பவர்களுக்கு நன்மை உண்டாகும் என்று நம்பப்படுகிறது. இந்த அபூர்வ மலரை இங்கே பாருங்கள்.



 நம் நண்பரின் நண்பர் ஸ்ரீமதி, இதனைப் பெங்களூரிலிருந்து அனுப்பியுள்ளார். நண்பர்கள் இருவருக்கும் நன்றி.



 

A simple idea - 2

An interesting idea!



இதோ ஒரு யோசனை!



முகமூடி விற்பவர் | Mask seller

முகமூடி விற்பவருடன் ஒரு நேர்காணல்.



An interview with Mask seller.



செம்பருத்தி போலே இன்புறுத்தி வாழ்க!

Greet your friends and family with this video!



உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இந்தக் காணொலியை அனுப்பி வாழ்த்துங்கள்.



Wednesday, June 24, 2020

Sunset at Chennai - 3

இன்று சென்னையில் சூரியன் மறையும் காட்சி!



How it looks like?

How it looks like?



இதைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தெரிகிறது?



மாந்தளிர் போலே மகிழ்வெய்தி வாழ்க!

மாந்தளிர் போலே மகிழ்வெய்தி வாழ்க!

---------------------------------------------



Greet your friends and family with this video!



உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் இந்தக் காணொலியால் வாழ்த்துங்கள்.



Tuesday, June 23, 2020

Spider's Furious Attack | சிலந்தியின் வெறித் தாக்குதல்

Caution: Don't see this video, if your heart is weak.



இதயம் பலகீனமானவர்கள், இதைப் பார்க்க வேண்டாம்.



Evening sky at Chennai - 5

இன்றைய சென்னையின் அந்தி வானம், வானவில்லின் வர்ண ஜாலத்துடன்.



Today's evening sky at Chennai with a spectrum of rainbow colors.



மதில் மேல் பூனை | Cat on the wall

பூனை எந்தப் பக்கம் குதிக்கும்?



Which side the Cat will jump on?



 

ஓணான் | Oriental garden lizard

இந்த ஓணான் எடுப்பது பஸ்கியா, தண்டாலா என்று பார்த்துச் சொல்லுங்கள்.



Let the day bloom! இந்நாள் மலர்க!

Let the day bloom!



இந்நாள் மலர்க!



Monday, June 22, 2020

IFSC குறியீட்டைக் கண்டறிவது எப்படி? | A tutorial on How to find IFSC code?

உங்கள் வங்கிக் கணக்கின் IFSC குறியீட்டைக் கண்டறிய, இதோ சில எளிய வழிகள்.



Evening sky at Chennai - 4

Heavy dark clouds, chill weather, drizzling, lightning... yes... rain rain come again!



அடர்கருமுகில் சூழ்ந்த, குளிர் மேவிய, தூறல் விழுந்த, மண்வாசம் எழுந்த, மின்னல் வெட்டிய, சென்னையின் மிரட்டலான அந்தி வானம்!



Draganfly's nod | தலையசைக்கும் தும்பி

A dragonfly's head is all eyes. If you look at a dragonfly's head, you might notice one thing in particular — or rather, 30,000 things in particular.



The area of an odonate's head is comprised primarily of its enormous compound eyes, which contain 30,000 facets, each bringing in information about the insect's surroundings. Dragonflies have near-360-degree vision, with just one blind spot directly behind them. This extraordinary vision is one reason why they're able to keep a watch on a single insect within a swarm and go after it while avoiding mid-air collisions with other insects in the swarm.



They not only have an exceptional field of vision, but they can see the world in colors we can't even imagine. (Ref: Treehugger)



Sunday, June 21, 2020

Evening sky at Chennai -3

சென்னையின் அந்தி வானம், சூரிய கிரகணத்திற்குப் பிறகு.



Evening sky at Chennai, after Solar eclipse.



தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் இணையவழியே உறுப்பினர் ஆவது...

17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் நீங்கள் இணையவழியே உறுப்பினர் ஆக முடியும். இதோ ஒரு வழிகாட்டி.



A step by step tutorial to get membership through online in Tamilnadu Unorganised Workers Welfare Board.



Saturday, June 20, 2020

Q&A: How to make a medicine available in all Medi shops? | மருந்தை எங்கு...

My answer to Mrs.Sudha Madhavan.



ஒரு மருந்தை எல்லா மருந்துக் கடைகளிலும் கிடைக்கச் செய்வது எப்படி? சுதா மாதவன் அவர்களின் கேள்விக்கு எனது பதில் இங்கே.



 

A free ride of Cuckoo on Buffalo - 2

நீள முகமும், நிமிர்ந்திருக்கும் கொம்புகளும்,

பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும்,

மிஞ்சுப் புறச்சுமையும், வீரத் திருவாலும்,

வானத் திடிபோல 'மா'வென் றுறுமுவதும்,

ஈனப் பறவை முதுகின்மிசை ஏறிவிட்டால்

வாலைக் குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும்,

பல்
காலம்நான் கண்டு கடுமோக மெய்திவிட்டேன்.



வந்துமது காதில் மதுரவிசை பாடுவேன்;

வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன்,

வாலிலடி பட்டு மனமகிழ்வேன், 'மா' வென்றே

ஓலிடுநும் பேரொலியோ டொன்றுபடக் கத்துவேன்,

மேனியுளே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன்,

கானிடையே சுற்றிக் கழனியெலாம் மேய்ந்து, நீர்

மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில்
பக்கத்திருந்து பலகதைகள் சொல்லிடுவேன்



(குயில் பாட்டில் குயில், காளையிடம் பேசுவதாக, பாரதியின் வரிகள்)



பந்து விளையாடும் நாய்கள் | Dogs playing with ball

Play dogs!



Friday, June 19, 2020

Evening sky at Chennai -2

இன்றைய சென்னையின் அந்தி வானம்!



 Today's evening sky at Chennai!



 

SUN DIRECT

No explanation required.



விளக்கம் தேவையில்லை.



கம்பியில் ஒரு தும்பி | Dragon fly on wire

இந்தத் தும்பி உட்கார்ந்திருக்கும் விதத்தில் ஒரு யோக நிலை தெரிகிறது. இது என்ன யோகா என்று உங்களுக்குத் தெரியுமா?



Find the Yoga position from this Dragon fly.



 

Thursday, June 18, 2020

இந்தக் குயிலுக்கு என்ன ஆயிற்று?

இந்த இளங்குயிலுக்குத் தொண்டை கட்டியிருக்கிறதா? குரலே மாறியிருக்கிறதே!



 

எழில்மிகு, பயன்மிகு வேப்பம்பூ!

வேம்பு, சர்வ ரோக நிவாரணி என அழைக்கப்படுகின்றது. வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன. வேப்பம்பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. உடல் பலம் பெறும். வயிற்றில் உள்ள கிருமிகளைக் கொல்லும். இது, புற்றுநோயைக் குணப்படுத்தும் எனச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா காலத்தில் இதை உட்கொள்வது, நமது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். மேலும், வேப்பம்பூ ரசம், சுவையானதும் மணம் மிக்கதும் கூட. வேம்பினை வளர்ப்போம். வேம்பினை உண்போம். மேலும் வல்லமை பெறுவோம்.



 

Puppies fight | நாய்க்குட்டிகளின் சண்டை

ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்

சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?



 

Wednesday, June 17, 2020

Evening sky at Chennai | சென்னையின் அந்தி வானம்

Q&A: இரண்டு கட்டுரைகளை ஒப்பிடுவது எப்படி? | How to compare two articles?

முனைவர் ம.ரமேஷ் அவர்களின் கேள்விக்கு எனது பதில் இங்கே.



Butterfly | வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சி, பூக்களை மொய்த்துத் தானே பார்த்திருப்பீர்கள். இங்கே ஒரு வண்ணத்துப்பூச்சி, எலுமிச்சை இலைகளை எப்படி மொய்க்கிறது பாருங்கள்.



Not with any flower; this Butterfly fell in love with Lemon leaves.



Vegetable vendor in two-wheeler

தள்ளுவண்டியில் காய்கறி விற்பவர்கள் பலரும், இருசக்கர வாகனத்திற்கு மாறி வருகிறார்கள்.



 

அதீத உற்சாகம்!

அதீத உற்சாகம் வந்துவிட்டால், இப்படித்தான்!



 

Tuesday, June 16, 2020

வெட்டிவேர் முகக் கவசம் | Vettiver Face Mask

சென்னை தாம்பரத்தில், வித்யா திரையரங்கின் அருகில் உள்ள அன்னம் இயற்கை விளைபொருள் அங்காடியில் இன்று வெட்டிவேர் முகக் கவசத்தைப் பார்த்தேன். மண்ணின் மணத்துடன் கூடிய இந்தப் புதிய பொருள், உங்களுக்குப் பயன்படலாம் என்பதால் இங்கே அறிமுகப்படுத்துகிறேன். வெளிநாட்டிலிருந்து தீர்வுகளை இறக்குமதி செய்யாமல், நம் தாயகத்திலிருந்து புத்தாக்கங்கள் பிறக்கவேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை ஊக்குவிக்கிறேன். இந்த ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, கொரோனாவை விரைவில் நாம் வெல்வோம்.



 

Mother dog feeding puppies

How a Crow will sleep?

பறவைகள் எப்படி உறங்கும் என்பதைக் கண்டறிந்தேன். நேற்று நள்ளிரவு 1 மணியளவில் இரு காகங்கள் குந்தினாற்போல் உறங்குவதைப் பாருங்கள்.



Recorded this in the midnight 1 AM.



Bird watching | Bird watch



One Man Cricket

Lockdown will not stop us playing Cricket.



ICC & BCCI can consider this new game as Micro Cricket.



காகத்தின் இரவுப் பணி | Crow on night duty

பறவைகள் இரவில் எப்படித் தூங்கும் என்பது என் நீண்டநாள் வினா. பறவை உறங்கி நான் பார்த்ததில்லை. இன்று தற்செயலாக, இரவு எட்டு மணிக்கு மின்சார வடத்தின் மீது இரு காகங்கள் உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். அவற்றுள் ஒன்று, மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தது.



அவை எங்கள் வீட்டுக் கிறித்துமஸ் மரத்தில் ஏழடுக்குக் கூட்டினைக் கட்டியுள்ளன (உலக அதிசயமா என்று தெரியவில்லை). அந்த ஏழாவது கூடு, சற்று பெரிது. இன்னும் கட்டி முடியவில்லை. அதற்காக ஏதோ ஒரு கம்பியை அலகால் வளைத்துக்கொண்டிருந்தது காகம். இரவிலும் காகம் தன் வீட்டுக்காக வேலை செய்துகொண்டிருந்தது கண்டு வியந்தேன். அது ஆண் காகமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.



 


Monday, June 15, 2020

Sunset at Chennai - 2

A glorious Sunset at Chennai!



Cuckoo Trio | ஒரே கிளையில் மூன்று குயில்கள்

Three Cuckoos in one row, fourth in the next row!

ஒரு கிளையில் மூன்று குயில்களும் அடுத்த கிளையில் நான்காவது குயிலும்!



வேப்பங்குயில் | Cuckoo on Neem tree

''மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாரோதோ?

இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல்,

காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ?

நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ?''

என்றுபல வெண்ணி ஏக்கமுறப் பாடிற்றால்.

அன்றுநான் கேட்டது அமரர்தாங் கேட்பாரோ?

குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே

தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே;

அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்;

விந்தைக் குரலுக்கு, மேதினியீர், என்செய்கேன்!



 - குயில் பாட்டில் மகாகவி பாரதி



 

குயில் பேடு | Female Cuckoo

அழகி



Sunday, June 14, 2020

Three Gulmohar Trees - Flame of The Forest

The tree is a visual treat!



 

சூரிய ஒளியில் மின்னும் குயில் | Shining Cuckoo in Sunlight

அசோக மரத்தில் சூரியக் குளியல் போடும் ஜோடிக் குயில்!



 

மீண்டும் தழைக்கும் கருவேல மரம்

New life begins!



தீப்பிடித்து எரிந்த மரம், உயிர்பிடித்து எழுகின்றது!



 

Saturday, June 13, 2020

Sunset | ஞாயிறு மறைவு

சூரியன் மறைகின்றது



 

Puppies Play

நாய்க்குட்டிகளின் விளையாட்டு



 

இலைப் பந்தல்

குளிர்த்தென்றல் தவழும்

குயில்சந்தம் கமழும்

இலைப்பந்தல் விரிக்கும்

ஏகாந்தம் சிரிக்கும்

ஒளிவண்ணம் குழைக்கும்

ஒய்யாரம் தழைக்கும்

பூவுலகு புரக்கும்

புதுக்காதல் பிறக்கும்



பழம்கொண்டு பழகும்

பசிதீர்த்து வருடும்

கிளைமீது கூடும்

கிளியூஞ்சல் ஆடும்

களிமதுரம் சுழற்றும்

ககனம்கண் சிமிட்டும்

ஒருகோடி உயிர்க்கும்

உயிர்கோடி உவக்கும்



கணம்தோறும் நடனம்

கனிந்தாழும் மௌனம்

விதைதோறும் காடு

விடையுண்டு தேடு

மலர்தோறும் வண்டு

திசைதோறும் தொண்டு

இன்னும் என்ன அச்சம்

இதோ புது வெளிச்சம்



https://www.vallamai.com/?p=97778



 


Friday, June 12, 2020

Q&A: மின்னிதழ் தொடங்குவது எப்படி?

பத்திரிகையாளர் பாரதியின் கேள்விக்கு எனது பதில் இங்கே.



 

என் ஜன்னலுக்கு வெளியே | Through my window

இன்றைக்கு என்ன, காற்றில் இவ்வளவு வேகம்? உங்கள் பக்கமும் காற்று இப்படி அடிக்கிறதா? 




இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

இன்பத்தில் ஆடுது என் மனமே



என்ற பாட்டுக்குப் பொருத்தமான ஆட்டம்.



வேப்பமரம் ஆடுவது மட்டும் சாமியாடுவது போலவே இருக்கிறது. அதுவும் இன்று வெள்ளிக்கிழமை வேறு.



 

Thursday, June 11, 2020

சாணை பிடிப்பவர்

Knife sharpening professional of modern world!



முன்னெல்லாம் சாணை பிடிப்பவர் தோளில் அந்தக் கருவியைச் சுமந்துகொண்டு, உரக்கத் தம் சேவையைக் கூவியபடி வருவார். அவர் கத்திக் கத்தியே கத்திக்குச் சாணை பிடிப்பார். இன்று வந்த சாணை பிடிப்பவரைப் பாருங்கள். நவீன உலகிற்கு ஏற்ப, இப்படி ஒவ்வொரு தொழிலும் மாறவேண்டும்.



 

Exclusive: World's first 7 storey nest

Exclusive: Here you watch, how two crows are building the world's first 7 storey nest.



அரிய காட்சி: உலகின் முதல் ஏழடுக்குக் கூட்டினை இரு காகங்கள் கட்டுவதைப் பாருங்கள்.



 

Wednesday, June 10, 2020

பெண் குயில் | Female Cuckoo

ஜோடிக் கருங்குயில் கூவும் காட்சியை இட்டிருந்தேன். பெண் குயில் சிக்கவில்லையா? அது வெள்ளைப் புள்ளிகளுடன் கூடியதாக இருக்கும் என்று ஹரிகிருஷ்ணன் வினவியிருந்தார். அவரது வாய்முகூர்த்தம், இதோ ஒரு பெண் குயில் சிக்கிவிட்டது. இதைப் பார்த்தால், ஆண் குயிலுக்குக் காதல் வரத்தானே செய்யும்!



 

Tuesday, June 09, 2020

Nithila Annakannan Ideas 1

Here is an amazing Idea from my daughter Nithila.



 

அழகு மலர்கள் | Beautiful Flowers - A collection

அழகு மலர்களைத் தொடுத்துக் கட்டிய இந்தக் காணொலி மாலையைக் காணுங்கள், உங்களுக்குள் மன அமைதியும் ஆக்கச் சக்தியும் ஓங்கும். உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கும் இதை அனுப்பி, அவர்களையும் வாழ்த்துங்கள்.



Watch this collection of flowers. You will get peace of mind and positive energy. Instead of forwarded messages, send this to your loved ones and wish them in your words.



 

ஜோடிக் குயில் பாடும் பாடல்

இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்,
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்
வந்து பரவுதல்போல்

என்ற பாரதியின் வரிகளுக்கு இணங்க, இங்கே ஜோடிக் குயில்கள் பாடுகின்றன. அந்த இசை வெள்ளத்தில் ஒரு துளி, உங்களுக்காக.



 





Subscribe the channel.

Monday, June 08, 2020

A free ride of Cuckoo on Buffalo

எருமையின் மீது ஏறி, உல்லாச உலாப் போகிறது இந்தக் குயில். இந்தக் காட்சிக்கு ஏற்ப, உங்களால் ஒரு கதை சொல்ல முடியுமா?



Cuckoo is in the jolly ride on her friend Buffalo. Can you write a story to this visual?