!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2020/08 - 2020/09 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, August 30, 2020

பட்டாம்பூச்சிப் பட்டாளம் | A group of butterflies

நம் வீட்டுக்குப் பின்னுள்ள புல்வெளியில் இன்று பட்டாம்பூச்சிப் பட்டாளம் ஒன்று புகுந்து விளையாடியது. அந்தக் கோலாகலக் காட்சி இங்கே.



 

தகதகக்கும் மயில் மாணிக்கம் | Shining Mayil Manickam | Ipomoea quamoclit

இன்று பூத்த மயில் மாணிக்கம், சூரிய ஒளியில் தகதகக்கிறது. சூரிய ஒளி படும்போது அதன் பொலிவு எப்படி ஏறுகின்றது என்று பாருங்கள்.



 

Butterfly - 20 | வண்ணத்துப்பூச்சி - 20

சரக்கொன்றை மரத்தில் அமர்ந்துள்ள அடர்பழுப்பு நிற வண்ணத்துப்பூச்சி, சிறகுகளை அசைத்துக்கொண்டே இருக்கிறது. மரத்தின் கீழிருந்து படம் எடுத்ததால், வண்ணத்துப்பூச்சியின் கீழ்ப்புறக் கோணம் மட்டும் கிடைத்துள்ளது.



 

Saturday, August 29, 2020

Butterfly - 19 | வண்ணத்துப்பூச்சி - 19

சற்றுமுன், வீட்டு வாயிற்கதவில் உள்ள வேல்முனையில் ஒரு வண்ணத்துப்பூச்சி வந்து அமர்ந்தது. நெடுநேரம் அங்கேயே இருந்தது. ஒரு வேலையில் இறங்கினால், இப்படித்தான் ஆழமாக அதில் ஈடுபட வேண்டும்.



 

மூலிகை வளர்க்கும் ஆட்டோ ஓட்டுநர் | 'Herbal' Auto driver

சென்னை, குரோம்பேட்டையில் சாலையோரம் ஓர் ஆட்டோ நின்றிருந்தது. பின்னிருக்கையில் ஆட்டோ ஓட்டுநர் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டிருந்தார். அவர் எதிரே தூதுவளைக் கொடி ஒரு குவியலாகக் கிடந்தது. கத்திரிக்கோலைக் கொண்டு, அதன் இலைகளை மட்டும் தனியே வெட்டி எடுத்துக்கொண்டிருந்தார்.



அவர் பெயர் பரமசிவம். தன் வீட்டில், பிரண்டை, தூதுவளை, முடக்கத்தான், முசுமுசுக்கை, முருங்கை, மணத்தக்காளி ஆகியவற்றை வளர்த்து, வேண்டுவோருக்கு அவர்களின் வீட்டில் கொண்டு போய்க் கொடுக்கிறார். ஆட்டோ ஓட்டுவதோடு இந்த மூலிகை வளர்ப்பைத் தனித் தொழிலாகச் செய்துகொண்டிருக்கிறார். வேண்டுவோர், இவரை அணுகலாம் (பரமசிவம், ஆட்டோ ஓட்டுநர், செல்பேசி எண் - 9444473801). அவருடன் ஓர் உரையாடல்.



 

Friday, August 28, 2020

மஞ்சள் தும்பி | Yellow Dragonfly

A flying dragonfly in yellow and black color.



மஞ்சள் நிறத்தில் கறுப்புப் புள்ளிகள் கொண்ட தும்பி ஒன்றை இன்று கண்டேன். அது பறந்துகொண்டே இருந்தது. உட்கார்ந்த நிலையை விட, பறக்கும் நிலையில் படம் எடுப்பது ஒரு சவால். அது நகர நகர, அதே வேகத்தில் நாமும் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஏதோ என்னால் இயன்ற வரை இந்த மஞ்சள் தும்பியைப் படம் பிடித்தேன்.



 

குயில், என் தோழி | Cuckoo, my girlfriend

அழகி, சற்றே ஓய்வெடுக்கிறாள்.



 

குயில், என் நண்பன் | Cuckoo, my friend

ஒரு புதிய கோணத்தில், குயில்.



 

Butterfly - 18 | வண்ணத்துப்பூச்சி - 18

மலருக்கு மலர் தாவும் வண்ணத்துப்பூச்சி.



 

Grasshopper | Caelifera | வெட்டுக்கிளி

இன்று ஒரு வெட்டுக்கிளியைப் பார்த்தேன். பச்சையும் மஞ்சளும் கலந்த வண்ணத்தில் அழகாக இருந்தது.



 

மயில் மாணிக்கம் அல்லது மயிர் மாணிக்கம் | Ipomoea quamoclit

மயிர் மாணிக்கம் என்ற பெயரைப் பலரும் சொன்னாலும் அது பொருத்தமானதாக எனக்குப் படவில்லை. இதன் இலைகள் மயிர் போல் இருக்கின்றன என்பதும் ஏற்புடையதாக இல்லை. இத்தகைய அமைப்பு கொண்ட வேறு இலைகளை மயிர் என நாம் சொல்வதில்லை. மயில் மாணிக்கம் என்ற பெயரே எனக்குப் பிடித்திருக்கிறது. எனினும் மயிர் மாணிக்கம் என்று சொல்வோரும் இருப்பதால், அந்தப் பெயரையும் இணைத்துள்ளேன். மையல் மாணிக்கம் என்ற பெயர், மயில் மாணிக்கம் என மருவியிருக்கும் வாய்ப்பையும் நாம் சிந்தித்துப் பார்க்கலாம்.



இன்று நம் தோட்டத்தில் பூத்திருக்கும் மயில் மாணிக்கப் பூக்கள், காற்றில் நடனம் ஆடுவது, கொள்ளை அழகு. யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்.



 

ஆள்காட்டிப் பறவையின் சூரியக் குளியல் | Sunbath of Red wattled Lapwing

A sunbath of Red-wattled lapwing in this morning at Chennai.



ஆள்காட்டிப் பறவை, தன் சிறகுகளை நன்றாக விரித்து வைத்துச் சூரியக் குளியல் மேற்கொள்கிறது.



 

Thursday, August 27, 2020

பூனைகளைப் புரிந்துகொள்வோம் - நிர்மலா ராகவன் உடன் ஒரு நேர்காணல் | Nirmala...

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வசிக்கும் எழுத்தாளர் நிர்மலா ராகவன், 30 ஆண்டுகளாக இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவரது நூல்கள் பலவும், அச்சு நூல்களாக, மின்னூல்களாக, ஒலி நூல்களாக வெளிவந்துள்ளன. வல்லமையில் தொடர்ந்து பத்திகள் எழுதி வருகிறார். பாடல்கள் புனைந்து பாடியுள்ளார். எழுத்தாளர் என்ற முகத்தைக் கடந்து, இவருக்கு இன்னொரு முகமும் உண்டு. இவர், பூனைகள் வளர்த்து வருகிறார்.



 பூனைகள் தொடர்பான எனது காணொலிகள் சிலவற்றை அண்மையில் யூடியூபில் வெளியிட்டேன். அதில் பூனைக்கு என்ன மன அழுத்தம் என்று கேட்டிருந்தேன். பூனைக்கு எதனால் எல்லாம் மன அழுத்தம் ஏற்படும் என எனக்கு விளக்கினார்.



 அதைத் தொடர்ந்து, பூனைகள் தொடர்பான எனது கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாகவும் பூனையுடனான அவரது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலும் இந்த நேர்காணலை வடிவமைத்தோம்.



இந்த அமர்வில், பூனைகளின் இயல்புகள், நடத்தை, பழக்க வழக்கங்கள், உணர்வுகள் உள்ளிட்ட பலவற்றையும் மிக அழகாக விளக்கியுள்ளார். பூனையின் அசைவுகளை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என விளக்கினார் (

பூனை மல்லாக்கப் படுத்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?)



மனித மொழியைப் பூனை புரிந்துகொள்கிறது (பூனைக்குத் தமிழ் புரியும்). பூனை கர்நாடக சங்கீதமும் பாடும். பூனைக்கு மனிதனை விட ஐந்து மடங்கு அதிகமான நுண்ணிய கேட்கும் திறன் உண்டு என்றார். பூனையின் வேட்டைத் திறன் பற்றியும் விளக்கினார் (இவர் வீட்டுப் பூனை, நான்கு பாம்புகளைக் கொன்றுள்ளது).



 பூனை வளர்ப்போர், வளர்க்க விரும்புவோர் ஆகியோருடன் பூனைகளைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் இந்தப் பதிவை அவசியம் பாருங்கள்.



 

Wednesday, August 26, 2020

செம்பகம், தமிழீழத்தின் தேசியப் பறவை | Centropus sinensis

இன்று கடைக்குப் போய்விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். திடீரென்று தோன்றியது. வழக்கமான தெருவின் வழியல்லாது, பக்கத்துத் தெரு வழியாகச் செல்வோமே என்று வண்டியைத் திருப்பினேன். அந்தத் தெருவில் குகுக் குகுக் எனப் பெரிய ஒலி தொடர்ச்சியாகக் கேட்டது. அது ஒரு பறவையின் குரல். இதுவரை நான் கேட்காத குரல்.



வண்டியை நிறுத்திவிட்டு, பறவையைத் தேடத் தொடங்கினேன். குரல் மட்டும் நன்றாகக் கேட்டது. பறவையைக் காணவில்லை.

முதலில் ஒன்றிரண்டு காக்கைகள் கரைந்தன. அவை இதர காக்கைகளையும் அழைத்தன. சிறிது நேரத்தில் ஏராளமான காக்கைகள் அந்தப் பகுதியில் குவிந்து கரையத் தொடங்கின.



இறுதியில் அந்தப் பறவையைக் கண்டேன். காகம் போன்ற தோற்றத்தில் கபில நிற இறக்கைகளைக் கொண்டிருந்தது. ஜோடிப் பறவையாக வந்திருக்க வேண்டும். நான் ஒரு பறவையை மட்டும் கண்டேன். மற்றது குரல் கொடுத்துக்கொண்டிருந்தது.



 இந்தப் பறவையின் பெயர், செம்பகம். இதைத் தமிழீழத்தின் தேசியப் பறவையாகப் பிரபாகரன் பிரகடனம் செய்துள்ளார். செம்போத்து, செம்பகம், செங்காகம் (Centropus sinensis) என்ற பெயர்களைக் கொண்ட இது, குயில் வரிசையில் உள்ள பறவை. இதைச் செம்பூழ் என்று சங்க இலக்கிய நூல்களான அகநானூறும் ஐங்குறுநூறும் குறிப்பிடுகின்றன.குகுக் குகுக் என்ற செம்பகத்தின் ஒலி, மிகத் தொலைவு வரை கேட்கக் கூடியது.



 நாம் திட்டமிடாமலே சில செயல்கள் நிகழ்கின்றன. இன்று நான் செம்பகத்தைக் கண்டதும் அப்படி ஓர் எதிர்பாராத நிகழ்வே.



 


கோவைக் கொடி | Ivy gourd

புங்கை மரத்தில் படர்ந்திருக்கும் கோவைக் கொடி. இந்த மரத்தில் குயில் அடிக்கடி ஏன் வந்து அமர்கிறது என்பதற்கான காரணம் புரிந்தது.



 

Tuesday, August 25, 2020

சென்னையில் கனமழை | Heavy rain at Chennai | 25.08.2020

சென்னையில் கடந்த மாத இறுதியில் (28.07.2020) கனமழை பெய்தது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து, இன்று அதே போல், சென்னை, தாம்பரத்தில் கனமழை பெய்து வருகிறது.



 

Butterfly - 17 | வண்ணத்துப்பூச்சி - 17

இந்த வண்ணத்துப்பூச்சி, அடிக்கடி இலையின் அடிப்புறத்தில் அமர்கிறது. இதர வண்ணத்துப்பூச்சிகள் இவ்வாறு இலையின் புறத்தே அமர்ந்து நான் பார்க்கவில்லை.



 

Male and female Cuckoos at one frame

For the first time, I have captured both male and female Cuckoos at one frame.



வழக்கமாக ஆண்குயில்களே ஜோடியாக வலம் வரும். அவற்றையே ஜோடிக் குயில் எனச் சில முறைகள் பதிவு செய்தேன். இன்று முதல்முறையாக ஆண்குயிலையும் பெண்குயிலையும் ஒரே காட்சியில் பதிவு செய்தேன்.



 

Monday, August 24, 2020

மாலை நேரப் பறவைகள் - 3 | Evening birds - 3

Evening birds today. You can watch that one bird leads the group.



 இன்றைய மாலைப் பொழுதை அணிசெய்த பறவைகள் இங்கே. இவற்றுள் ஐந்து பறவைகள், ஓர் அணியாகப் பறந்தன. அவற்றுள் ஒரு பறவை, தலைவரைப் போல் முன்னே பறக்க, மற்ற நான்கும் அதைப் பின்தொடர்ந்தன. தொலைதூரப் பறவைகள், இந்த முறையைப் பின்பற்றுகின்றன என நினைக்கிறேன்.



 

ஊஞ்சலாடும் குயில் | Cuckoo on swing

The Cuckoo is on swing in a unique style.



உச்சி வெயிலில், இதமான காற்றில் இந்தக் குயில், ஊஞ்சல் ஆடுவது ஒரு தனி அழகு.



 

தையல் சிட்டு - 2 | Tailorbird - 2

அரை நிமிடத்தில் இந்தத் தையல் சிட்டு, என்னவெல்லாம் செய்கிறது, பாருங்கள்.



 

Self-licking Cat | தன்னைத் தானே நக்கிக்கொள்ளும் பூனை

பூனை தன்னைத் தானே நக்கிக்கொள்வது, தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள அல்லது மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ள என்கிறார்கள். பூனைக்கு என்ன மன அழுத்தம்?



 

How to convert a 'bubble top water can' to a plant pot?

How to convert a 'bubble top water can' to a plant pot? Here is a tutorial.



தண்ணீர் பிடித்துவைக்கும் பழைய நெகிழிக் குடுவையை (பிளாஸ்டிக் கேன்) செடி வைக்கும் தொட்டியாக மாற்றுவது எப்படி? இதோ ஒரு வழிகாட்டி.



 

சரக்கொன்றையில் ஒரு பெண்குயில் | Female Cuckoo on Golden Shower tree

சரக்கொன்றை மரத்தில் அமைதியாக அமர்ந்திருக்கும் இந்தப் பெண்குயிலுக்குக் கவலை ஏதுமில்லை. ஆனால், சுதந்திரம் மிகவுண்டு.

Sunday, August 23, 2020

ஹேமா பிறந்த நாளுக்காக | Plantation on Hema's birthday

என் மனைவி ஹேமா பிறந்த நாளை முன்னிட்டு, இன்று எங்கள் வீட்டுத் தோட்டத்தில் நான், ஹேமா, மகள் நித்திலா, மகன் ஹரி நாராயணன் ஆகியோர், விதைகளை விதைத்தோம், செடிகள் நட்டோம். ஹேமா நீடூழி வாழ்க.



 

Saturday, August 22, 2020

கணபதிராயன் | Lord Ganesha

இன்று முடிச்சூர் சாலையில் சென்றபோது, ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் வாசலில் இருந்த பிள்ளையாருக்கு அப்போதுதான் அபிஷேகம் முடிந்து, அலங்காரம் தொடங்கியிருந்தது. கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவேன் எனப் பிடித்து, நின்னைச் சில வரங்கள் கேட்பேன், அவை நேரே இன்றெனக்குத் தருவாய் எனப் பாரதி கேட்பது போல், எனக்குக் கேட்க ஏதுமில்லை. எனினும் பக்தர்கள் உள்ளம் குளிர, அந்த அருட்காட்சியைப் படம் பிடித்து வந்தேன்.



 

சிவப்புத் தும்பி | Red Dragonfly

The Japanese consider red dragonflies to be “very sacred,” offering a symbol of courage, strength and happiness. American Indians believe red dragonflies can “bring a time of rejuvenation after a long period of trials and hardship.”



Today I saw a red Dragonfly.



 

Lord Ganesha Orchestra

Happy Ganesh Chaturthi.

Watch Lord Ganesha's orchestra.



விநாயகப் பெருமான் கச்சேரி செய்வதைப் பாருங்கள்.

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.



 

Friday, August 21, 2020

Two Mynas | இரண்டு மைனாக்கள்

Two cute Mynas are looking around from a Guava tree. Are they sisters, brothers, friends or lovers? Write your own story.



கொய்யா மரத்தில் அமர்ந்து சுற்றிலும் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த இரண்டு அழகிய மைனாக்களும் என்ன உறவு? சகோதரர்களா? நண்பர்களா? காதலர்களா? உங்கள் கற்பனைக் கதையை எழுதுங்கள்.



 

Four Mynas | நான்கு மைனாக்கள்

Four Mynas are playing in a Guava tree.



கொய்யா மரத்தில் நான்கு மைனாக்கள் கொட்டம்.



 

கொய்யா மரக்கிளையில் மைனா | Myna in Guava tree

Myna in swing on a Guava tree.



கொய்யா மரக்கிளையில் ஊஞ்சல் ஆடும் மைனா.



 

தத்திச் செல்லும் தவிட்டுக் குருவிகள் | Yellow-billed babblers in jogging

Do you want to jog with these Yellow-billed babblers? \



தவிட்டுக் குருவிகள் எவ்வளவு அழகாகத் தத்திச் செல்கின்றன என்று பாருங்கள். இவற்றுடன் இணைந்து தத்திச் செல்ல உங்களுக்கு விருப்பமா?



 

அசோக மரத்தில் ஒரு குயில் | Cuckoo in Ashoka tree

வேப்பம்பழங்களைக் குயில் சாப்பிடும் என்பது தெரியும். அசோக மரத்துக் கனிகளைக் குயில் சாப்பிடும் என்பதே எனக்கு இன்றுதான் தெரியும். இன்று காலை குயில், அசோகக் கனி ஒன்றை முழுதாக வாயில் கவ்விச் சென்றது. அதைப் படம் எடுக்க முடியவில்லை. ஆனால், இந்தக் காணொலியில் அசோகக் காய்கனிகள் அருகில் குயிலைக் காணலாம்.



 


இரட்டைப் பப்பாளி | Dual Papaya

உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பப்பாளி, இங்கே இரட்டை மரங்களில் கொத்துக் கொத்தாய்.



 

Butterfly - 16 | வண்ணத்துப்பூச்சி - 16

இன்று காலையில் ஜன்னலைத் திறந்ததும் ஒரு மிகப் பெரிய வண்ணத்துப்பூச்சியைக் கண்டேன். வேப்ப இலையில் அதற்கு வேண்டியது ஏதோ இருக்கிறது போலும். நெடுநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தது.

Thursday, August 20, 2020

Butterfly - 15 | வண்ணத்துப்பூச்சி - 15

Two butterflies in a single grass.



இன்று மாலை ஒரு புல்லில் இரு வண்ணத்துப்பூச்சிகள் வீற்றிருக்கக் கண்டேன். அருகில் சென்றால் அவை பறந்துவிடும் என்பதால், 8 அடி தூரத்தில் நின்று படம் எடுத்தேன். அடுத்து மேலும் நெருங்கி, 6 அடி தூரத்தில் மீண்டும் படம் எடுத்தேன். அவை அசையாமல் இருக்கவே, 4 அடி தூரத்தில் நின்று மீண்டும் எடுத்தேன். அப்போதும் அவை அசையாமல் இருக்கவே, 2 அடி தூரத்தில் நின்று எடுத்தேன். காற்று அடித்துப் புல் ஆடியபோதும், அந்தப் புல்லில் எறும்பு ஒன்று ஏறியபோதும் கூட, இந்த வண்ணத்துப்பூச்சிகள் அசையவில்லை. இவற்றை யோகிகள் என அழைக்கலாமா?



 

குஞ்சுக்கு உணவூட்டும் காக்கை | Crow feeds child

நம் வீட்டுக் கிறிஸ்துமஸ் மரத்தில் கூடு கட்டிய காக்கைகள், மூன்று குஞ்சுகளை பொரித்துள்ளன. அவை இரண்டே மாதத்தில் ஓரளவு தத்தித் தத்திப் பறக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளன. ஆனால், இன்னும் குஞ்சுகளே. அவற்றின் வாய், செக்கச்செவேர் என இருக்கும். அவற்றில் ஒரு குஞ்சுக்குக் காக்கை உணவூட்டுவதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இதில் இரண்டு முறை, குஞ்சுக்குக் காக்கை உணவூட்டுகிறது. இரண்டாவது முறை ஊட்டும் முன் உணவைக் கவ்விச் சென்று, அருகில் உள்ள குட்டையில் கழுவி எடுத்து வந்து ஊட்டுகின்றது. இந்தச் செயல்கள் அனைத்தும் ஒரே காட்சியில் பதிவாகியிருக்கின்றன.

Hovering Sunbird | Loten's Sunbird | தேன்சிட்டு

For the first time, I saw a hovering Sunbird (Loten's Sunbird).



தேன்சிட்டின் ஒரு வகையான Loten's Sunbird பறவையை இன்று பார்த்தேன். அந்தரத்தில் ஒரே இடத்தில் நின்றவாறு சிறகடித்த காட்சியை இன்று முதன்முறையாகக் கண்டேன்.



 

Wednesday, August 19, 2020

மாலை நேரப் பறவைகள் - 2 | Evening birds - 2

Evening birds today, a visual treat.



 இன்றைய மாலைப் பொழுதை அலங்கரித்த பறவைகள்.



 

Yawning Cuckoo - 4 | கொட்டாவி விடும் குயில் - 4

Multiple yawning by this Cuckoo; four times in 50 seconds; a very rare scene, I have captured today.



இன்று மதியம் 50 விநாடி இடைவெளியில் 4 முறைகள் அடுக்கடுக்காகக் கொட்டாவி விட்டது குயில். அத்துடன் நெடுநேரம் வாயைத் திறந்து வைத்தபடி இருந்தது. 7 நிமிடங்களுக்கு மேல் நீளும் இந்தப் பதிவில் குயிலின் அசைவுகளை, பார்வைகளை, உணர்வுகளை, மனநிலையை நாம் புரிந்துகொள்ள முடியும்.



 

வெட்டுக்காயப் பூண்டு | கிணற்றுப்பாசான் | தாத்தாப்பூ | Tridax procumbens

எங்கள் வீட்டு வாசலில் இந்தப் பூக்கள் நிறைய உள்ளன. தமிழகமெங்கும் வேலியோரங்களில், வயற்காடுகளில் இவை காணப்படும். வெட்டுக்காயப் பூண்டு, கிணற்றுப்பாசான், வெட்டுக்காயப் பச்சிலை, செருப்படித்தழை, மூக்குத்திப்பூண்டு, காயப்பச்சிலை எனப் பலவாறாக இது அழைக்கப்படுகிறது. இலங்கையில் தமிழ் மக்கள் இச் செடியைக் கோணேசர் மூலிகை என அழைப்பர்.

இந்தச் செடியின் இலைகளை வெட்டுக் காயங்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துவர். குழந்தைகள் இதன் பூவை நீண்ட காம்புடன் கொய்து தாத்தா தாத்தா தல குடு என்று சொல்லியபடி கிள்ளி விளையாடுவார்கள். எனவே இதற்குத் தாத்தாப்பூ என்ற பெயரும் உண்டு.

இந்தப் பூவின் மீது, வண்ணத்துப்பூச்சிகள் அவ்வப்போது அமர்ந்து தேன்குடிக்கும். நீண்ட காம்புடன் கூடிய இந்த மெல்லிய பூவில் ஒரு கனத்த வண்ணத்துப்பூச்சி அமர்ந்தால், தாண்டுக் குச்சியை(Pole vault)ப் போல் இவை நன்கு வளையும்.

குலை தள்ளிய வாழை

குலை தள்ளிய வாழையைப் பார்ப்பது நல்ல சகுனம் என்பர். அது ஒரு பூரண நிலை. அதனால்தான் திருமண மண்டபங்களில், சுப நிகழ்ச்சிகளில் வாசலில் வாழை மரம் கட்டுகிறார்கள். மங்கலம் மிகுந்த வாழையை இன்று கண்டேன்.



 

Tuesday, August 18, 2020

மாலை நேரப் பறவைகள் | Evening birds

இன்றைய மாலைப் பொழுதை ரம்மியமாக்கிய பறவைகளின் அணிவகுப்பு இங்கே.



 

கோவைப்பூ | Flower of Ivy gourd

Here is the flower of Coccinia grandis, the Ivy gourd, also known as Scarlet gourd, Tindora and Kowai fruit.



கோவைக்காயை, கோவைப் பழத்தைப் பார்த்திருப்பீர்கள். கோவைப்பூவைப் பார்த்திருக்கிறீர்களா? அந்த எழில்மிகு மலர், இதோ.



 

Butterfly - 14 | வண்ணத்துப்பூச்சி - 14

ரூபாய் நோட்டைக் கொடுக்கும்போது சில நேரங்களில் ஒன்று கொடுக்கையில் இரண்டு வந்துவிடும் இல்லையா? அதுபோல் ஒரு பட்டாம்பூச்சியைப் படம் எடுத்தேன். அதற்குப் பக்கத்திலேயே இன்னொன்றும் இருந்ததைப் பிறகுதான் பார்த்தேன்.



 

சின்னானின் மாலை நேரப் பாடல் | The evening song of Red-vented Bulbul

நேற்று மாலை சின்னான் பாடிய பாடலைக் கேளுங்கள்.



 

பாயும் குயில் - 4 | Diving Cuckoo - 4

Is this Cuckoo is trying to scale the sky!



வானை அளக்க முயல்கிறதோ, இந்தக் குயில்!



 

பசுவும் கன்றும் | Cow and the calf

யார் வீட்டிலோ வளர்க்கப்படும் பசுவும் கன்றும் நம் தெருவுக்கு வந்து, வாசலில் வைத்த சாதத்தை உண்டு சென்றன.



 

Monday, August 17, 2020

The walking Myna | நடக்கும் மைனா

Say Hi to the walking Myna.



 சிறுநடை பயிலும் மைனாவுக்கு வணக்கம் சொல்லுங்க.



 

Butterfly - 13 | வண்ணத்துப்பூச்சி - 13

படம் எடுக்கத் தொடங்கிய பிறகுதான் இந்த உலகையே நான் கவனிக்கத் தொடங்கியிருக்கிறேன். இந்தச் சாம்பல் நிற வண்ணத்துப்பூச்சியை இன்று முதன்முதலில் கண்டேன்.



 

ஜோடி மைனா | Dual Myna

இரு மைனாக்கள் எங்கும் ஜோடியாகப் பறப்பதும் நடப்பதும் அமர்வதும் பாடுவதுமாக இருக்கும். சில நேரங்களில் கிளைகளில் அமர்ந்து ஊஞ்சல் ஆடும். சாப்பிடும்போது கூட, ஒன்றாக அமர்ந்து கொத்தித் தின்னும். இந்த மதிய வேளையில், வேப்ப மரத்தில் அமர்ந்து இவை செய்வது என்ன?



 

மைனாவின் கொட்டாவி | The yawn of Myna

After Cuckoo, Myna is yawning now. Also note, this Myna is having white eyes.



மைனாவின் கொட்டாவியை இன்று தான் பார்த்தேன். இந்த மைனாவின் கண்கள், வெண்ணிறத்தில் உள்ளன. இப்படி ஒரு மைனாவைப் பார்த்ததுண்டா?



 

Butterfly - 12 | வண்ணத்துப்பூச்சி - 12

A new butterfly in our garden!



இந்தப் புது வகை வண்ணத்துப்பூச்சி, சில நொடிகளே என் முன் தோன்றியது. ஒரு மாயமான் போல், இரு சிறகை விரித்து ஜால வித்தை காட்டிச் சென்றது.



 

வெண்சங்குப்பூ | White Clitoria

நீல நிறச் சங்குப்பூவை முன்பு பகிர்ந்தேன். இன்று வெண்ணிறச் சங்குப்பூ. இந்தப் பூவின் மீது எறும்பு ஒன்று நடமாடுவது இன்னும் அழகு.



 

குயிலின் கொட்டாவியும் வேப்பங்கொட்டையும் | Yawning Cuckoo is spitting the...

நல்லதொரு கச்சேரிக்குப் பிறகு, இன்று காலை 9 மணிக்கே குயில் கொட்டாவி விட்டது. வாயில் வைத்திருந்த வேப்பங்கொட்டையைத் துப்பியது. இதைப் பதிவு செய்யும் வாய்ப்பு, இன்று எனக்கு அமைந்தது.



 

Sunday, August 16, 2020

Dual Squirrel | ஜோடி அணில்

இரு அணில்பிள்ளைகள், ஏறி இறங்கி, ஓடித் திரிந்து, கொறித்து விளையாடும் அழகிய காட்சி, இது. ஓர் அணில், அச்சம் ஏதுமின்றி, என் கால்கள் வரை நெருங்கி வந்தது. இந்தப் பதிவின் கடைசிக் காட்சியில் தெரிவது கிளையா, பாம்பா என்பது குழப்பமாக இருக்கிறது.



 

Butterfly - 11 | வண்ணத்துப்பூச்சி - 11

இந்த மஞ்சள் வண்ணத்துப்பூச்சியின் இறகு ஓரங்கள் மட்டும் கருநிறத்தில் உள்ளன. ஒரு சுடர்போல் படபடக்கும் இதன் வேகம், நம்மையும் சுறுசுறுப்பாய் இயங்க வைக்கும்.



 

மயில் மாணிக்கம் பூத்தது | Mayil Manickam | Ipomoea quamoclit

எங்கள் தோட்டத்து மயில் மாணிக்கம் பூத்தது. பளிச்சிடும் செந்நிறத்தில் ஒயிலும் எழிலும் ஒருங்கே அமைந்தது. இதன் தாவரவியல் பெயர், Ipomoea quamoclit. மலையாளத்தில் இதை ஆகாசமுல்லை என்கிறார்கள். தெலுங்கில் காசிரத்தினம் என்கிறார்கள். மராத்தியில் கணேஷ் வேல் என்கிறார்கள். வங்காளதேசத்தில் அதைத் தாருலதா, காமலதா, குஞ்சலதா என்றெல்லாம் அழைக்கிறார்கள். ஆண்டுத் தாவரமான இது, சில இடங்களில் மட்டுமே வளர்கிறது. மருத்துவப் பண்புகள் கொண்டது.

Ipomoea quamoclit (cypress vine, cypressvine morning glory, cardinal creeper, cardinal vine, star glory or hummingbird vine) is a species of vine in the genus Ipomoea, , trumpet-shaped with five points, and can be red, pink or white.

In southern India, it is called mayil manikkam in Tamil: மயில் மாணிக்கம். In Malayalam, it is called ākāśamulla. In Assamese it is known as Kunjalata (কুঞ্জলতা), while in the Marathi language it is known as Ganesh Vel. In Bangladesh, it has the vernacular names Tarulata, Kamalata, Kunjalata and Getphul.[1] In Telugu, it is called 'Kasiratnam'. In Mizo, it is called 'Rimenhawih'

This vine is one of the best plants for attracting hummingbirds, and is a vigorous grower. In warmer climates, this plant can be extremely invasive.

Saturday, August 15, 2020

குயில் முகம் | The face of Cuckoo

இன்று காட்சி தந்த குயில், நன்றாக இலைகளுக்கு நடுவே அமர்ந்திருந்தது. ஆயினும் சற்றே இரங்கி, எனக்காகத் தன் எழில் முகம் காட்டியது.



 

The diving Squirrel | தாவும் அணில்

இந்த அணில், மரத்துக்கு மரம், கிளைக்குக் கிளை. கம்பத்துக்குக் கம்பம் சர்வ சாதாரணமாகத் தாவுகிறது, ஏறுகிறது, இறங்குகிறது, கொறிக்கிறது. துருதுரு, சுறுசுறு அணிலே உன்னைப் போற்றுகிறேன்.

Here is a diving Squirrel with great enthusiasm and attitude, which I admire.

தாழைக் கோழி | Common Moorhen

Saw this red nosed bird today morning, for the first time. This is called Common Moorhen.

இன்று காலை, இந்தப் பறவையைக் கண்டேன். இதன் பெயர், தாழைக் கோழி. ஆங்கிலத்தில் Common Moorhen என்று அழைக்கப்படுகிறது. இது நீர்க்கோழி வகையான Rallidae குடும்பத்தைச் சார்ந்தது. இது உலகம் முழுவதும் பரவி காணப்படுகிறது.

தண்ணீரில் நீந்தும்போது வாத்துப் போலவும் தரையில் திரியும் போது கானான் கோழி போலவும் தோற்றம் தருவது. சிலேட் சாம்பல் நிற உடலைக் கொண்ட இதனை வாலடி வெள்ளையாக இருப்பது கொண்டு அடையாளம் காணலாம்.

தமிழகம் எங்கும் பரவலாகக் காணப்படும் நீர்க்கோழி இனம் இது ஒன்றே. ஆணும் பெண்ணும் இணையாக நீர்ப்பரப்பின் மீது வாலை அசைத்தபடி வாத்தைப் போல நீந்தியவாறு தாவர விதைகள், நத்தை, தவளை, சிறு மீன் ஆகியவற்றைத் தேடித்தின்னும், கரையோரத்தில் உள்ள நாணல், தாழைப் புதர்களை விட்டு தண்ணீரில் நெடுந்தொலைவு நீந்திச் செல்லும் பழக்கம் முற்படும்போது சற்று நேரம் இறக்கை அடித்துப் பின் எழுந்து பறக்கும். பறக்கும் திறமை குறைந்தது எனினும் இடம் பெயர நேரும் போது உயர்ந்த மலைகளையும் கடந்து பறந்து செல்லும். நீரில் மூழ்கி மறைந்தபடி ஆபத்திலிருந்து தப்பிக்கவும் முயலும். க்க்ரீக் க்ரெக் ரெக் ரெக் என இனப்பெருக்க காலத்தில் குரல் கொடுக்கக் கேட்கலாம்.

முதல் கத்திரிக்காய் | The first Brinjal

First Brinjal from our plant. It looks awesome.



நாம் வைத்த கத்திரிச் செடி, முதன்முதலாகக் காய்த்துள்ளது. ஆஹா, என்ன ஓர் அழகு.



 

Friday, August 14, 2020

திருவனந்தபுரம் முத்தாரம்மன் கோவில் திருவிழா

திருவனந்தபுரம் முத்தாரம்மன் கோவில் திருவிழா, கடந்த ஆண்டு நடந்தபோது, நான் அங்கே இருந்தேன். நம் ஊர் ஆடி வெள்ளி போல், மிக விமரிசையாக, தடபுடலாக, அதிரடி இசையுடன் நடைபெற்றது. அந்தக் கோலாகல வைபவத்தின் ஒரு பகுதியைப் பாருங்கள்.



 

அம்பா அம்பா - மெட்டு 2 | Amba Amba - Version 2

அம்பா அம்பா பாடலின் இன்னொரு மெட்டு



 

அம்பா அம்பா - அண்ணாகண்ணன் பாடல்

அம்மனுக்காக ஒரு பாடலை எழுதி, இரு விதமாகப் பாடியுள்ளேன். இந்த ஆடி வெள்ளியில் என் அம்மன் பாடல்களைக் கேளுங்கள். இதோ முதல் பாடல்.



 

Butterfly - 10 | வண்ணத்துப்பூச்சி - 10

இன்று எங்கள் தோட்டத்தில் ஒரு புது வகை வண்ணத்துப்பூச்சியைக் கண்டேன். இது, இறக்கைகளில் இரண்டு கண்கள் விழித்துப் பார்ப்பது போல், வடிவம் இருந்தது. இது, இறக்கைகளை விரித்து மூடுவது இன்னும் அழகு.

இரை தேடும் புறா | The Pigeon in search

Just keep searching and you will find what you are looking for.



 உங்கள் தேடல் எதுவானாலும் முயற்சியை நிறுத்த வேண்டாம். தேடுங்கள், கண்டடைவீர்கள்.



 

காற்றில் ஆடும் கல்வாழைப் பூ | Canna Indica flower

Canna Indica flower is dancing to the breeze.



காற்றில் நடனம் ஆடுகிறது, கல்வாழைப் பூ. அதைப் பார்ப்பவர்களுக்கு எழும் சிலிர்ப்பு, உதட்டில் சிரிப்பு, உள்ளத்தில் பூரிப்பு, ஆஹா புல்லரிப்பு!



 

Thursday, August 13, 2020

அமுதுண்ணும் மைனா | Myna is having lunch

மதிய வேளையில் மைனா, பசியாறுகிறது. இப்படியாகப் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவும் நீரும் வைப்பவர்களுக்குப் புண்ணியம் சேருகிறது.



 

Q & A: எங்கே புத்தாக்கம்? - அண்ணாகண்ணன் பதில்கள்

தமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் ‘எங்கே புத்தாக்கம்?’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். அதைத் தொடர்ந்து, ஆய்வாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தேன். இதில் பேராசிரியர்கள் உமாராஜ், சிதம்பரம், துரை.மணிகண்டன், மென்பொருளாளர் நீச்சல்காரன், யாழ்பாவாணன், எட்வர்டு பாக்கியராஜ், ஆய்வு மாணவர் தமிழ் பாரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்தக் கேள்வி - பதில் அமர்வை, இந்தப் பதிவில் காணலாம்.



 09.08.2020 அன்று இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு Teamlink செயலி ஊடாக இந்த அமர்வு தொடங்கி நடைபெற்றது.



 நன்றி: முனைவர் துரை.மணிகண்டன், தமிழ் இணையக் கழகம்



 

வண்ணப் பெண்குயில் | Colorful female Cuckoo

இன்று காலை ஜன்னலைத் திறந்ததும் இந்தப் பெண்குயிலின் தரிசனம் கிடைத்தது. பக்கத்திலேயே இரு மைனாக்கள் ஒவ்வொரு கிளையாகத் தாவித் தாவி அருகே வரவே, பெண்குயில் செவ்வாய் திறந்தது. அது மிரண்டதா, மிரட்டியதா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.



 

Wednesday, August 12, 2020

அண்ணாகண்ணன் யூடியூப் - 400 காணொலிகள்

 2007இல் என் யூடியூப் கணக்கைத் தொடங்கினாலும் இதில் நான் கவனம் செலுத்தவில்லை. ஒன்றிரண்டு பதிவுகளை இட்டதோடு சரி. கடந்த ஐந்து மாதங்களாக இதில் முனைப்புடன் ஈடுபட்டேன். இன்று திரும்பிப் பார்க்கையில், கடந்த ஐந்து மாதங்களில் 400 காணொலிப் பதிவுகளை ஏற்றியுள்ளேன்.


Annakannan 400 videos.jpg


இந்தப் பதிவுகள், என்றேனும் யாருக்கேனும் பயன்படலாம் என்று கருதியே வெளியிட்டு வருகிறேன். இந்தப் பதிவுகள் குறித்த உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். இன்னும் எத்தகைய பதிவுகளை எதிர்பார்க்கிறீர்கள் என்றும் தெரிவிக்க வேண்டுகிறேன்.


https://www.youtube.com/user/annakannan


இணையுங்கள் | விரும்புங்கள் | கருத்துரையுங்கள் | பகிருங்கள்

Monday, August 03, 2020

பாயும் குயில் | Diving Cuckoo

The Cuckoo is diving into the sky and dancing with the joy!



 விண்ணுக்கும் மண்ணுக்கும் இந்தக் குயில் பாயும் அழகு, அந்தரத்தில் ஆடும் ஓர் எழில் நாட்டியம்!



 

பூனையைத் தாக்கும் காக்கை - 2 | Crow attacks Cat - 2

பூனைக்கும் காக்கைக்கும் ஜென்மப் பகை உருவாகிவிட்டது. நள்ளிரவில் மரமேறி, காக்கைக் குஞ்சுகளைப் பிடிக்க, பூனை முயன்றது. பகலில் பூனையை விரட்டிக் காக்கை தாக்குகிறது. இன்று மாலை, காக்கையின் விரட்டலுக்கு அஞ்சி, பூனை மீண்டும் வேப்ப மரத்தில் ஏறியது. அதை நெருங்கி வந்து காக்கை கொத்த முயன்றது. நேரடியாக வந்து கொத்துவதை விட, சற்றுத் தொலைவில் அமர்ந்து, அலகைச் சாய்த்துக் கோணலாகப் பார்த்து, கரகர குரலில் வில்லனைப் போல் காக்கை மிரட்டுவது, பூனையின் இதயத் துடிப்பை நிச்சயம் எகிற வைக்கும். படபடக்க வைக்கும் அந்தப் படக்காட்சி, இங்கே.



 

Ready Steady Action

செயல், இயக்கம், துடிப்பு. இவற்றை முன்வைத்து, பல காட்சிகளைத் தொகுத்து, ஒரே காணொலியை உருவாக்கியுள்ளேன். இந்தப் புதிய முயற்சியைப் பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.



 

கொட்டாவி விடும் குயில் | Yawning Cuckoo

This Cuckoo is yawning twice within two minutes, while sitting on a Neem tree. Earlier I had captured male and female Cuckoo's yawning in the same tree. Yawning is the effect of Neem?



இரண்டு நிமிடத்திற்குள் இரண்டு முறைகள் கொட்டாவி விடுகிறது இந்தக் குயில். இதற்கு முன்பு ஆண்குயிலும் பெண்குயிலும் கொட்டாவி விட்டதைப் படம் எடுத்துப் பகிர்ந்திருந்தேன். அவையும் வேப்ப மரத்தில் அமர்ந்தபோதே கொட்டாவி விட்டன. வேப்ப மரத்தில் அமர்ந்தாலே கொட்டாவி வருமோ?



 

Sunday, August 02, 2020

பீட்ரூட் விதைப்பு | Beetroot Seedling

ஆடிப் பட்டம் தேடி விதை என்பர். இன்று ஆடிப் பெருக்கு நாளில், எங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில் மனைவியின் வழிகாட்டலில் மகள் நித்திலா. பீட்ரூட் விதைகளை விதைத்தாள். இப்படியாக மரபு தொடர்வதில் மகிழ்ச்சி.



 

Evening sky at Chennai - 13

இன்று முழு ஊரடங்கு என்பதால், நேற்று வெளியே சென்று சில பொருள்களை வாங்கி வந்தோம். திரும்பி வருகையில் அந்தி வானத்தைப் படமெடுத்தேன். அப்போது வானத்தோடு பூமியும் சேர்ந்தே பதிவானது. வெளியே செல்ல முடியாதவர்கள் இதைப் பார்த்தால், ஒரு பயணம் போய்வந்த உணர்வு கிடைக்கும் எனத் தோன்றுகிறது. நீங்களும் இந்தப் பயணத்தில் இணைகிறீர்களா?



 

Yawning Cuckoo - A close-up look - 3

Pretty male Cuckoo's cute yawn with a close-up look!



என் ஜன்னலோரம் உள்ள வேப்ப மரத்தில் குயில், மைனா, கம்புள், காக்கை, தையல் சிட்டு, தவிட்டுக் குருவி, அணில், ஓணான், தும்பி, பட்டாம்பூச்சி, வண்டு, இன்னும் பெயர் தெரியாத பறவைகள்.... எனப் பலவும் தினமும் வருகை தருகின்றன. எனவே, கிளுகிளு,கலகல, கூக்கூ, கீக்கீ என நாள்முழுவதும் கச்சேரி தான். சில நேரங்களில் அவை, இந்தா எடுத்துக்கொள் என்று நன்றாகக் காட்சி தருவதும் உண்டு. இன்றைக்கு அப்படி ஒரு குயில் காட்சி தந்தது. அதன் அழகு, சொல்லில் அடங்காதது. அதுவும் இன்று அது ஒரு கொட்டாவியும் விட்டது. முன்பே பெண்குயிலின் கொட்டாவியை வெளியிட்டேன். இதோ, ஆண்குயிலின் கொட்டாவியை இந்தப் பதிவில் பாருங்கள்.

90s KIDS MITTAI | 90'ஸ் கிட்ஸ் மிட்டாய்

90களில் பிறந்து வளர்ந்தவர்கள் என்னென்ன மிட்டாய்களையும் தின்பண்டங்களையும் சுவைத்துப் பார்த்திருப்போம்? அவற்றுள் பலவும் இப்போது கிடைப்பதில்லை என்ற ஏக்கம், பலருக்கும் இருக்கலாம். கவலையை விடுங்கள். இந்தக் குறையைத் தீர்க்க, 90'ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை என்றே ஒருவர் திறந்திருக்கிறார். அவரிடமிருந்து நாங்கள் ஒரு தொகுப்பை வாங்கிவந்தோம். தேன்மிட்டாய், பல்லிமிட்டாய், புளிமிட்டாய், ரோஸ்மிட்டாய், சூடவில்லை, பால்கோவா... என்று பலவும் அதில் இருந்தன. இன்னும் அதில் என்னென்ன இருக்கின்றன என்று பாருங்கள்.

Saturday, August 01, 2020

நள்ளிரவில் மரமேறிய பூனையும் விரட்டிய காக்கைகளும் | Cat's midnight hunt a...

நேற்று நள்ளிரவு 12 மணியிருக்கும். திடீரென்று காக்கைகள் அலறின. என்னவென்று மொட்டை மாடிக்குச் சென்றால், அங்கே காக்கைக் குஞ்சுகளைப் பிடித்துத் தின்ன, பூனை ஒன்று, மரமேறிக்கொண்டிருந்தது.



அந்தக் கிறிஸ்துமஸ் மரத்தில்தான் உலக அதிசயமாக, ஒரே மரத்தில் அடுக்கடுக்காக ஏழு கூடுகளைக் காக்கை கட்டியிருந்தது. அதன் ஏழாவது உச்சிக் கூட்டில் ஒரு மாதம் முன்பு, காக்கை குஞ்சு பொரித்தது. நாலைந்து குஞ்சுகள் இருக்கும். அதனால் இரண்டு மாதமாக நாங்கள் அங்கே நடமாட முடியவில்லை. எப்போது எந்தப் பக்கமிருந்து பாய்ந்து வருமோ, எனச் சுற்றி முற்றிப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். சற்று அசந்தால், காதுக்கருகே சர்ரென்று பறக்கும்.



இந்நிலையில் இந்த மரத்தில் பூனை ஏறுவதைப் பார்த்துவிட்டு, காக்கைகள் வீரிட்டு அலறின. அதைச் சுற்றிச் சுற்றி வந்து விரட்டின. நான் மொட்டை மாடி மின்விளக்கை இட்டு, கேமராவுடன் அருகில் சென்றதும் பூனை மெல்லக் கீழே இறங்கிவிட்டது.



 இதற்கு முன்பும் பூனை இப்படிக் குஞ்சுகளை வேட்டையாட முயன்றிருக்கிறது. அதனால்தான் 12 நாள்கள் முன்பு, பூனையை இரு காக்கைகளும் விரட்டின. பூனை பயந்து, வேப்ப மரத்தில் ஏறிக்கொண்டது. அந்தக் காட்சியை 2020 ஜூலை 19 அன்று நான் வெளியிட்டிருந்தேன்.



 இதோ, நேற்றைய நள்ளிரவைக் கிடுகிடுக்க வைத்த காட்சியைப் பாருங்கள்.