!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2021 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, August 01, 2021

கலைஞர், ஜெயலலிதா, மோடி, அம்பானி... எல்லோரையும் பாடுவேன் - ஆனந்த ராவ்

உழைக்கும் வர்க்கப் பாடகர் ஆனந்த ராவ், ஓட்டல்களில் உணவு பரிமாறுபவராக (சப்ளையர்) வேலை பார்த்தவர். 79 வயதிலும் படபடவெனப் பேசுகிறார். திரைப்பாடல் மெட்டுகளில் தானே பாட்டுக் கட்டி, இனிய குரலில் பாடுகிறார். விவசாயப் பணியாளர், கட்டடத் தொழிலாளர், சமையல் கலைஞர், தையல் கலைஞர், ஆட்டோ ஓட்டுநர்... எனப் பலரையும் பாடியவர். அத்துடன் நில்லாமல் கலைஞர், ஜெயலலிதா, மோடி, அம்பானி... எனப் பலரையும் புகழ்ந்து பாடியிருக்கிறார். யாரைப் பற்றியும் பாட முடியும், எல்லோரையும் நேசிக்கிறேன் என்கிறார். இந்தப் பதிவில் தமது பாடல்கள் பலவற்றையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். சுவையான இந்த உரையாடலைக் கேட்டு மகிழுங்கள்.

சிரிப்பு யோகா - பயிற்சி 8 | குரு சிரிப்பு | ஹாஹோ சிரிப்பானந்தா

'சிரிப்பு யோகா' தொடரில் எட்டாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. இதைத் தொடர்ந்து செய்து வர, அனாவசிய கொழுப்புகள் குறையும், வாழ்க்கைத் தரம் மேம்படும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம், வாங்க.

Saturday, July 31, 2021

நாகேஸ்வரி அம்மன் தேர் ஆயத்தம்

சென்னை தாம்பரம் அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழாவும் பிரம்மோற்சவமும் ஒருசேர நடைபெற்று வருகின்றன. இன்று மதியம், தேரில் அம்மன் பவனி வந்தாள். அதற்கு முன்னதாக நடந்த தேர் ஆயத்தப் பணிகளை இங்கே காணலாம். சிவப்புக்கல் மூக்குத்தியும் நீலக்கல் மூக்குத்தியும் அணிந்து, சர்வாலங்காரத்துடன் அன்னை வீற்றிருக்கும் அழகைப் பாருங்கள்.

கொய்யா அறுவடை - 6 | Guava Harvest - 6 | 2021

இன்றைய கொய்யா அறுவடை, அமோகம்!


சிரிப்பு யோகா - பயிற்சி 7 | தேநீர்ச் சிரிப்பு | Tea Laughter

தேநீர்ச் சிரிப்பு (Tea Laughter) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதோ பயிற்சி வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா Haho Sirippananda Sampath. அவருடன் சேர்ந்து, தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் ஊழியர்களும் அட்டகாசமாகச் சிரிப்பதைப் பாருங்கள்.

Friday, July 30, 2021

சிரிப்பு யோகா - பயிற்சி 6 | ஹாஹோ சிரிப்பானந்தா

'சிரிப்பு யோகா' தொடரில் ஆறாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. சர்க்கரை நோய் எனப்படுகிற நீரிழிவைச் சரிசெய்கிற பேராற்றல், இந்தப் பயிற்சிக்கு உண்டு. தொடர்ந்து தொண்டு ஆற்றுவோம், சேவை ஆற்றுவோம், வாருங்கள்.

Thursday, July 29, 2021

White Tiger - On the move

உலகப் புலிகள் தினத்தில் இந்த வெள்ளைப் புலியைப் பாருங்கள்.

Watch this in International Tiger Day.

சக்தி கானம் 5 - உலகாளும் தாயே

சமயபுரம் மாரியம்மனைக் கொண்டாடும் 'உலகாளும் தாயே' என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். சக்தி கானம் இசைப் பேழையிலிருந்து ஐந்தாவது பாடல். ஓம் சக்தி! பராசக்தி!

சிரிப்பு யோகா - பயிற்சி 5 | ஹாஹோ சிரிப்பானந்தா

'சிரிப்பு யோகா' தொடரில் ஐந்தாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால், நமது முகமே சூரியகாந்திப் பூவைப் போல் மலர்ச்சி உடையதாக மாறிவிடும். செய்து பாருங்கள்.

Wednesday, July 28, 2021

Very Good! Very Good! Hey!

ஹாஹோ சிரிப்பானந்தா கற்றுத் தரும் சிரிப்பு யோகாவை, எங்கள் மகன், இரு வயதுச் சிறுவன் ஹரி நாராயணன் செய்கின்றான். 

இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும் காட்சியை வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்பினால், அதையும் வெளியிடுவோம். உங்கள் வீடியோ காட்சிகளை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

வீதியில் பொழிந்த வித்தக இசை

அருள்மிகு நாகேஸ்வரி அம்மன், தாம்பரம் கடைத்தெருவில் நேற்று இரவு வீதி உலா வந்தார். அம்மன் தேருக்கு முன்னால், வாத்தியக் குழுவினர், நடந்துகொண்டே வாசித்தனர். அம்மன் வருகையை மங்கல இசையால், மக்களுக்கு அறிவித்தனர். நாகஸ்வரமும் மேளமும் இழையும் இந்த இன்னிசையைக் கேட்டு மகிழுங்கள்.

நாகேஸ்வரி அம்மன் வீதி உலா | ஆடித் திருவிழா | தாம்பரம்

ஆடித் திருவிழாவை முன்னிட்டு, சென்னை தாம்பரம் முத்துரங்கம் பூங்காவில் கோவில் கொண்டுள்ள அருள்மிகு நாகேஸ்வரி அம்மன், தாம்பரம் சந்தைக் கடைத்தெருவில் வீதி உலா வரும் காட்சி. 

Tuesday, July 27, 2021

கொய்யா அறுவடை - 5 | Guava Harvest - 5 | 2021

இன்றைய கொய்யா அறுவடை, மகிழ்ச்சி!

Monday, July 26, 2021

இங்கே என்ன நடக்குது?

இங்கே நடப்பது என்ன? மாநாடா? வகுப்பா? சந்திப்பா? உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

வி.கிருத்திகா ஓவியங்கள் - ஒரு மதிப்பீடு

திண்டிவனத்தில் எட்டாம் வகுப்புப் படிக்கும் வி.கிருத்திகாவின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

Sunday, July 25, 2021

நம் மாடித் தோட்டத்து அறுவடை | Garden Harvest

நம் மாடித் தோட்டத்தில் காராமணி, தக்காளி, நட்சத்திர வெண்டை, யானைத் தந்த வெண்டை, முள்ளங்கி ஆகியவற்றை இன்று அறுவடை செய்தோம். இளசான, குளிர்ச்சியான, பசுமையான காய்கறிகளைப் பார்த்து மகிழுங்கள்.

சிரிப்பு யோகா - பயிற்சி 3 | ஹாஹோ சிரிப்பானந்தா

'சிரிப்பு யோகா' தொடரில் மூன்றாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. உற்சாகத்துக்கு நாங்கள் உத்தரவாதம்.

#Shorts: Passion Flower | கிருஷ்ண கமலம் | Passiflora | Krishna Kamal

கிருஷ்ண கமலத்திற்குப் பாண்டவ கௌரவர் பூ என இன்னொரு பெயர் உண்டு. இந்தப் பூ, மகாபாரதத்தையே தன்னுள் கொண்டுள்ளதாகச் சித்திரிக்கப்படுகிறது. சுற்றிலும் இழை இழையாக உள்ளவை கௌரவர்கள். நடுவில் உள்ள ஐந்து மகரந்த இழைகள் பாண்டவர்கள். மையத்தில் உருண்டையாக உள்ளது திரௌபதி. அதற்கும் மேலே உள்ள மூன்று இழைகள் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகள். உட்புறம் தெரியும் கருநீல (பர்ப்பிள்) வளையம் கிருஷ்ணர் கையிலிருக்கும் சுதர்சனச் சக்கரம் என வர்ணிக்கிறார்கள். இந்தப் பூவை வீட்டில் வளர்த்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது பலரின் நம்பிக்கை. இதைப் பார்த்து மகிழுங்கள்.

Saturday, July 24, 2021

சிரிப்பு யோகா - பயிற்சி 2 | ஹாஹோ சிரிப்பானந்தா

'சிரிப்பு யோகா' தொடரில் இரண்டாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. இரட்டிப்புக் கரவொலியுடன் உங்களை இந்தப் பயிற்சிக்கு வரவேற்கிறோம். வருக! வருக!

இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும் காட்சியை வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்பினால், அதையும் வெளியிடுவோம். உங்கள் வீடியோ காட்சிகளை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

சக்தி கானம் 4 - பொழுது விடிந்தது

ஆடி மாதம், அம்மன் மாதம். சக்தி கானம் இசைத் தொகுப்பிலிருந்து இதோ, அடுத்த பாடல். இந்த இடர்காலம் நீங்கி, நல்ல பொழுது விடிய, நம் ஆத்தாள் பாதாளப் பொன்னியம்மன் அருளட்டும்.

Friday, July 23, 2021

கொய்யா அறுவடை - 4 | Guava Harvest - 4 | 2021

மாடியிலிருந்து பார்த்தபோது, மஞ்சள் நிறத்தையும் கடந்து நல்ல சந்தன நிறத்தில் கொய்யாப் பழங்கள் மின்னின. பறித்துச் சாப்பிட்டுப் பார்த்தேன், ஆஹா என்ன சுவை, என்ன மணம். நம் தோட்டத்தில் இன்று மீண்டும் கொய்யா அறுவடை.

சிரிப்பு யோகா - பயிற்சி 1 | ஹாஹோ சிரிப்பானந்தா

'சிரிப்பு யோகா' தொடரில் முதல் பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. பலத்த கரவொலியுடன் உங்களை இந்தப் பயிற்சிக்கு வரவேற்கிறோம். வருக! வருக!

இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும் காட்சியை வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்பினால், அதையும் வெளியிடுவோம். உங்கள் வீடியோ காட்சிகளை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

Thursday, July 22, 2021

சிரிப்பு யோகா - அறிமுகம் | Laughter Yoga | ஹாஹோ சிரிப்பானந்தா

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில், பலரும் சிரிப்பையே மறந்துவிட்ட நிலையில், சிரிப்பு யோகா மூலம் உடலுக்கும் மனத்துக்கும் ஒருசேரப் புத்துணர்ச்சி ஊட்டுகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. நம் யூடியூப் அலைவரிசையின் மூலம், நேயர்களுக்குச் சிரிப்பு யோகா கற்றுத் தர முன்வந்துள்ளார். இந்த ஜாலியான பயிற்சியில் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் இணைந்து பங்குபெறுங்கள். வாய்விட்டுச் சிரிப்போம், வாருங்கள். 

இன்றைய அறுவடை | Today's Harvest

நம் மாடித் தோட்டத்தில் இன்றைய அறுவடை

Wednesday, July 21, 2021

வண்டியை வெளியே எடுப்பது எப்படி?

மண்ணில் சக்கரங்கள் புதைந்த இந்த வண்டியை, ஓரிரு மணி நேரம் முயன்ற பிறகு வெளியே எடுத்தார்கள். எப்படி வெளியே எடுத்தார்கள், தெரியுமா? இந்தச் சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?

சக்தி கானம் 3 - பவனி வரா

ஆடி மாதத்திற்கு அழகு சேர்க்க வருகிறது, இந்த அம்மன் பாடல். சக்தி கானம் இசைத் தொகுப்பிலிருந்து இதோ, 'பவனி வரா பவனி வரா பாளையக்காரி'.

வாடாமல்லியில் வண்ணத்துப்பூச்சி - 2 | Butterfly on Gomphrena Globosa

வாடாமல்லியிலும் துளசியிலும் மாறி மாறி அமரும் வண்ணத்துப்பூச்சி, தன் பட்டுச் சிறகை விரித்துத் தேனருந்தும் பேரழகுக் காட்சி.

Tuesday, July 20, 2021

How Smooth is Chennai Bypass Road? | Test Drive

உயர்வகை மகிழுந்து தயாரிக்கையில், அதைச் சோதிக்க ஒரு பரிசோதனை உண்டு. ஒரு குவளையில் தண்ணீர் நிரப்பி வைத்துவிட்டு ஓட்டுவார்கள். மேடுபள்ளங்களில் அதிலிருந்து தண்ணீர் சிந்தாமல், தண்ணீர் ஆடாமல் இருப்பதை வைத்து அதன் தரத்தை முடிவு செய்வார்கள். அதிவேக ரெயிலிலும் தண்ணீர்க் குவளையில் உள்ள நீர் அசையாமல் இருப்பதை அண்மையில் யூடியூபில் பார்த்தேன். 

இந்த வாரத்தில் சென்னைப் புறவழிச்சாலையில் ஒருமுறை பயணித்தேன். சாலையின் சமநிலையைப் பரிசோதிக்கும் ஆர்வம் வந்தது. எங்கெல்லாம் சாலை சமமாக இருக்கிறது, எங்கெல்லாம் மேடுபள்ளம் இருக்கிறது என்பதைக் கேமராவின் அசைவை வைத்துத் தீர்மானிக்கலாம். சாலை அமைப்போர், இப்படியெல்லாம் பரிசோதனை செய்வதில்லையா? 


#Shorts: Squirrel on Electric Wire

மின்வடத்தில் ஒரு துருதுரு அணில், தாவிச் செல்வதைப் பாருங்கள்.

காவ்யஸ்ரீ ஓவியங்கள் - ஒரு மதிப்பீடு

பெங்களூருவில் ஆறாம் வகுப்புப் படிக்கும் காவ்யஸ்ரீயின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

Monday, July 19, 2021

ஒரே நாளில் 50 கொய்யாப் பழங்கள்

இன்று நம் வீட்டுக் கொய்யா மரத்தில் ஒரே நாளில் 50 கொய்யாப் பழங்கள் கிடைத்தன. அறுவடைக் காட்சிகள் இங்கே.

விதைகள் | Seeds | ஆடிப் பட்டம்

ஆடிப் பட்டம் தேடி விதை என்பர். மயில் மாணிக்கம், புடலை, வெண்டை, மிளகாய், தூதுவளை, காராமணி ஆகியவற்றின் விதைகள் எப்படி இருக்கும் தெரியுமா? அவற்றை அந்தந்தச் செடிகொடியிலிருந்து எப்படி எடுக்க வேண்டும் தெரியுமா? இந்தப் பதிவைப் பாருங்கள்.

சக்தி கானம் 2 - ஊரே கூடுது

ஆடி மாதம் என்றாலே அம்மன் பாடல்கள் களைகட்டும். சக்தி கானம் இசைத் தொகுப்பிலிருந்து இதோ இரண்டாவது பாடல், மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும், சரவெடி போன்ற அதிரடிப் பாடல்.

பாடல் - ஊரே கூடுது
பாடலாசிரியர்  - வாரணா
இசையமைப்பாளர் - கிறிஸ் மார்ட்டின் போனாமி
பாடியவர் - கிருத்திகா
தயாரிப்பாளர் - ரமேஷ் வெங்கட்ரமணன்
தயாரிப்பு நிறுவனம் - ஆர்.எம்.கிரியேஷன்ஸ்

Sunday, July 18, 2021

ஆனந்த் ராமச்சந்திரன் ஓவியங்கள் - ஒரு மதிப்பீடு

திருவண்ணாமலையில் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் ஆனந்த் ராமச்சந்திரனின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

Saturday, July 17, 2021

சக்தி கானம் 1 - எடுத்த காரியமும் ஜெயமாக

ஆர்.எம்.கிரியேஷன்ஸ் நிறுவனம், சக்தி கானம் என்ற தலைப்பில் ஒலிப்பேழை ஒன்றை வெளியிட்டது. அதில் இடம்பெற்ற ஏழு பாடல்களையும் நம் யூடியூப் அலைவரிசையில் வெளியிட, தயாரிப்பாளர் ரமேஷ் வெங்கட்ரமணன் அனுமதி அளித்துள்ளார். அவருக்கும் இந்த முயற்சியை ஒருங்கிணைத்த நண்பர் வாரணா அவர்களுக்கும் நன்றி. 

ஆடி மாதம், அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில், சக்தி கானத்தை வெளியிடுவதில் மகிழ்கிறோம். இதோ, முதல் பாடல். வெற்றி கணபதியை வணங்கித் தொடங்குகிறோம். 

பாடல் - எடுத்த காரியமும் ஜெயமாக
பாடலாசிரியர்  - வாரணா
இசையமைப்பாளர் - கிறிஸ் மார்ட்டின் போனாமி
பாடகர் - கிறிஸ் மார்டின் போனாமி
தயாரிப்பாளர் - ரமேஷ் வெங்கட்ரமணன்

Friday, July 16, 2021

வெற்றிலைக் கொடி | Vetrilai | Betel

நம் வீட்டுத் தோட்டத்தில் வெற்றிலைக் கொடி. இதன் அழகைப் பார்த்து மயங்கிவிட்டேன். 

ஏழாம் அறிவே கல்வி - ஆனந்த ராவ் பாடல் | Ananda Rao song on Education | Kalvi

கல்வியின் பெருமைகளை,  துள்ளாத மனமும் துள்ளும் பாடலின் மெட்டில், எளிய தமிழில் தாமே இயற்றிப் பாடுகிறார், ஆனந்த ராவ். மாணவர்கள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பாடல். மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கேட்டு, மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் பகிருங்கள். கல்வியின் பெருமைகளை உணர்ந்து போற்றுவோம்.

Thursday, July 15, 2021

கீர்த்திதேவி ஓவியங்கள் - ஒரு மதிப்பீடு

பெங்களூருவில் ஆறாம் வகுப்புப் படிக்கும் கீர்த்திதேவியின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

மகராசர் காமராசர் - மூன்று மெட்டுகளில் ஷைலஜாவின் குரலிசை

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில், 'மகராசர் காமராசர்' என்ற எனது பாடலைக் கேளுங்கள். ஷைலஜா, மூன்று மெட்டுகளில் பாடி, இதற்கு இனிமையும் பெருமையும் சேர்த்துள்ளார்.

Wednesday, July 14, 2021

கொய்யா அறுவடை - 2 | Guava Harvest - 2 | 2021

இன்றைய எங்கள் கொய்யா அறுவடை!

எம்.எல்.கிஷோர் ஓவியங்கள் - ஒரு மதிப்பீடு

தஞ்சாவூரில் ஆறாம் வகுப்புப் படிக்கும் எம்.எல்.கிஷோரின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

Tuesday, July 13, 2021

எங்கள் மாடித் தோட்டம் | Garden Tour | Terrace Garden Tour

எங்கள் வீட்டு மாடித் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கலாம், வாங்க.

Home Tour | 2 BHK Flat For Sale In Sri Mitra Symphony In Hoodi, Bangalore

எங்கள் குடும்ப நண்பர் வெளிநாட்டுக்குக் குடிபெயர்ந்ததால், பெங்களூரு ஹூடி பகுதியில் உள்ள அவரது அடுக்குமாடி வீட்டை விற்கவுள்ளார். இந்த வீட்டுக்கு நாங்கள் குடும்பத்துடன் ஒருமுறை சென்று வந்துள்ளோம். நல்ல காற்றோட்டமான, அமைதியான, அனைத்து வசதிகளும் உள்ள வீடு. பிரதான இடத்தில் அமைந்துள்ளது. இந்த வீட்டைப் பார்வையிட விரும்பும் அன்பர்கள், இந்தப் பதிவைப் பாருங்கள். வீடு வாங்கும் ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்குப் பகிருங்கள்.

Monday, July 12, 2021

பாடகர் ஆனந்த ராவ் உடன் நேர்காணல் | Interview with Singer Ananda Rao

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஆனந்த ராவ், இந்த 79 வயதிலும், தமிழில் பாடல்கள் இயற்றி இனிமையாகப் பாடுகிறார். பழைய திரைப்படப் பாடல்களின் மெட்டுகளில் இவர் தமிழிலும் தெலுங்கிலும் பாடல்கள் இயற்றியுள்ளார். இவற்றை டி.எம்.எஸ்., கே.பி.சுந்தராம்பாள், ஜேசுதாஸ், எம்.எஸ்.வி., டி.ஆர்.மகாலிங்கம், கண்டசாலா... உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் முன்னிலையில் பாடிப் பாராட்டுப் பெற்றுள்ளார். 

சுவாகத் ஓட்டலிலும் உட்லண்ட்ஸ் ஓட்டலிலும் உணவு பரிமாறுபவராகப் பணியாற்றிய இவர், அங்கு உணவருந்த வந்த அண்ணா, கலைஞர், சி.என்.ஏ.பரிமளம், ம.பொ.சி. உள்ளிட்ட பிரமுகர்களுக்கு உணவு பரிமாறியுள்ளார். ஜேசுதாஸ், பித்துக்குளி முருகதாஸ், ஹரிதாஸ் கிரி ஆகியோருடன் இணைந்து கோரஸ் பாடியுள்ளார். 

சமையல் கலைஞர்கள் நலவாரியம், கட்டடத் தொழிலாளர் நலவாரியம், கோவில் பணியாளர் நலவாரியம், தையல் தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட பலவற்றில், அவர்களின் விழாக்களில் அந்தத் தொழிலாளர்களைப் பற்றிய பாடல்களைப் பாடி, உழைக்கும் வர்க்கப் பாடகர் எனப் பாராட்டுப் பெற்றுள்ளார். 

மேலும் தனக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், மருந்துக் கடைக்காரர்கள், செவிலியர்கள் எனப் பலர் மீதும் பாடல்கள் இயற்றி அவர்களை மகிழ்வித்துள்ளார். இதனால் மருத்துவத்திற்குக் கட்டணம் இல்லாமல், அவர்கள் இவருக்கு பரிசுத் தொகையும் கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த வகையில் இவர், மன்னர்களையும் வள்ளல்களையும் புகழ்ந்து பாடிய சங்க காலப் புலவர் மரபில் வருகிறார். 

தொலைபேசி வழியிலான இந்த நேர்காணலில் இவரது இனிய பாடல்களையும் அனுபவங்களையும் கேட்டு மகிழுங்கள்.

இவரை எனக்கு அறிமுகம் செய்வித்த நண்பர் குமரி எஸ்.நீலகண்டனுக்கு நன்றி.

Sunday, July 11, 2021

Asian Koel in tight closeup

சூரிய ஒளியில் தகதகவெனக் கரும்பட்டுப் போல மின்னும் மேனியுடன், நம் ஜன்னலோரக் கருவேப்பிலைப் பழங்களை உண்ணும் குயிலை மிக மிக அருகில், அலகுடன் உங்கள் மூக்கு உரசும் தூரத்தில் பாருங்கள்.

Saturday, July 10, 2021

இது எதன் குரல்? | Which voice this is?

இது எதன் குரல்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

ரப்பர்பேண்டு கிடார் செய்வது எப்படி? | How to make Rubberband Guitar?

ரப்பர்பேண்டு கிடார் செய்வது எப்படி? இதோ விளக்குகிறார், நித்திலா.

Friday, July 09, 2021

A Walk in Durdle Door

இங்கிலாந்தில் உள்ள டர்டில் டோர் (Durdle Door) என்ற சுற்றுலாத் தலம், மிகவும் புகழ்பெற்றது. திரைப்படங்கள் பலவும் இங்கே படமாக்கப்பட்டுள்ளன. இந்த வனப்பு மிகுந்த இடத்தில், நவ்யாவுடன் இணைந்து நடக்கலாம், வாருங்கள்.

Thursday, July 08, 2021

பச்சைமா மலைபோல் மேனி | Pachai Maa Malai Pol Meni | Krishnakumar

தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்றிய 'பச்சைமா மலைபோல் மேனி' என்ற அருட்பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

#Shorts: Belgium Deers | பெல்ஜியம் மான்கள்

பெல்ஜியத்தில் வசிக்கும் கிறிஸ் வேய்னான்ட்ஸின் தோட்டத்தில் அவர் வளர்க்கும் மான்கள். எழுத்தாளர் மாதவன் இளங்கோ, அங்கே சென்றபோது செல்லம் கொஞ்சிய பேரழகுக் காட்சிகள். பார்த்து மகிழுங்கள்.

Wednesday, July 07, 2021

வேப்பம்பழம் உண்ணும் குயில் | Asian Koel eats Neem fruit

வேப்பம்பழம் மரத்தில் இருக்கும்போதே அதன் தோலைக் கழற்றிப் போட்டு, தொங்கும் கொட்டையை மட்டும் குயில் லாகவமாக லபக் செய்யும் காட்சி.

#Shorts: Pomegranate flower | மாதுளம்பூ

அபிராமி அந்தாதியில் அன்னையை மாதுளம்பூ நிறத்தாள் என்று அபிராமி பட்டர் பாடுகிறார். 

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை....

இந்த மாதுளம்பூ நிறம் எப்படி இருக்கும்? இந்தப் பதிவைப் பாருங்கள்.

Tuesday, July 06, 2021

ஜெயந்தி சங்கர் பிறந்து வளர்ந்த கதை

சிங்கப்பூரில் வாழும் தமிழ் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், இந்தியாவில் பிறந்து வளர்ந்து, 22 வயது வரை தான் பெற்ற அனுபவங்களை, கற்ற கலைகளை, பயணித்த ஊர்களை, சந்தித்த மனிதர்களைப் பற்றி இந்த அமர்வில் பகிர்ந்துகொண்டுள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 40 புத்தகங்களை எழுதியவர், எனக்குப் பிடித்த மொழி மலையாளம் எனக் கூறுகிறார். இந்தச் சுவையான உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

Monday, July 05, 2021

Mayfield Lavender Farm at London

Mayfield Lavender is a family farm based just 15 miles from Central London. The farm is divided between two locations five kilometers apart and has a 25 acre Organic lavender farm in Banstead and a 12 acre Plant Nursery with Orchard and Shop in Epsom. Mayfield Lavender also makes and sells beautiful lavender products and loves to welcome visitors to experience the beauty of Lavender.

Video by Navya.

ஜெயந்தி சங்கரின் வீணையிசை - 2

ஜெயந்தி சங்கரின் வீணையிசையில் இதோ இன்னொரு ரத்தினம்

பாடல்: மகாகணபதிம்
இயற்றியவர்: முத்துசாமி தீக்‌ஷிதர்
ராகம்: நாட்டை
தாளம்: ஆதி

Sunday, July 04, 2021

பூமகள் ராமச்சந்திரன் ஓவியங்கள் - ஒரு மதிப்பீடு

திருவண்ணாமலையில் ஏழாம் வகுப்புப் படிக்கும் பூமகள் ராமச்சந்திரனின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

மின்கம்பத்தில் அணில் - 2 | Squirrel on Electric Post - 2

இன்று காலையில் இந்த அணில், மின்கம்பத்தில் ஏறி ஆராய்ந்து பார்த்துவிட்டு, தொங்குபாலம் போன்று நீண்டிருந்த மின்கம்பியில் சரசரவென நடந்து வித்தைகள் காட்டியது. அந்தரத்தில் நடக்கும் இந்தச் சுந்தரத்தைப் பாருங்கள்.

வாடாமல்லியில் வண்ணத்துப்பூச்சி | Butterfly on Gomphrena Globosa

கர்மயோகத்துக்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு. 

Saturday, July 03, 2021

நல்ல கூந்தல் பெற - நிர்மலா ராகவன் உடன் ஒரு நேர்காணல்

நல்ல கூந்தல் பெற என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைத் தன் நேரடி அனுபவங்கள் வாயிலாக நகைச்சுவையுடன் எடுத்துரைக்கிறார் நிர்மலா ராகவன். முடி வளர, முடி உதிர்வது நிற்க, வழுக்கையிலிருந்து முடி வளர, முடி கெட்டியாக இருக்க, பொடுகு நீங்க... பற்பல குறிப்புகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அமாவாசையன்று இப்படிச் செய்தால் முழங்காலைத் தொடும் அளவுக்கு முடி வளரும் என அவர் சொல்வது ஓர் ஆச்சரியத் தகவல். இந்தப் பயனுள்ள உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

Friday, July 02, 2021

#Shorts: Achamillai Achamillai | அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே - எங்கள் மகன் ஹரி நாராயணனின் வீறுமிகு வீர முழக்கம்.

Thursday, July 01, 2021

பெல்ஜியத்தில் செர்ரிப் பழ அறுவடை | Cherry Harvest at Belgium

பெல்ஜியத்தின் தீனன் நகரில் வாழும் எழுத்தாளர் மாதவன் இளங்கோ, தன் வீட்டில் உள்ள பச்சைப் பசேல் செர்ரி மரத்திலிருந்து செக்கச் சிவந்த செர்ரிப் பழங்களை அறுவடை செய்கிறார். உண்ணும்போது மட்டுமில்லை, காணும்போதும் தித்திக்கும் பழங்கள் இவை. கண்டு மகிழுங்கள்.

ஆண்டவன் அன்பே சக்தி தரும் | Andavan Anbe Sakthi Tharum | பாபநாசம் சிவன்

பாபநாசம் சிவன் இயற்றிய 'ஆண்டவன் அன்பே சக்தி தரும்' என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். ஆண்டவன் என்று பொதுவாகக் குறிப்பிட்டிருப்பதால், எல்லா மதங்களை, மார்க்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும். இந்தப் பாடலைக் கேட்டுச் சக்தி பெறுங்கள்.

Wednesday, June 30, 2021

Asian Koel Call - 2

இன்று கேட்ட குயிலின் அமுத கானம், நீங்களும் கேட்டு மகிழுங்கள். யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

Tuesday, June 29, 2021

Images of Singapore | History Museum | Pioneers of Singapore & Surrender...

சிங்கப்பூரின் செந்தோசாத் தீவில், சிங்கப்பூரின் வரலாற்று அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் சிங்கப்பூரின் மொத்த வரலாறும் அருமையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் காலத்தில், மலேசிய ஆட்சியில், ஆங்கிலேயர் ஆட்சியில், ஜப்பானிய ஆதிக்கத்தில், விடுதலைக்குப் பிறகு பிரதமர் லீ குவான் யூ ஆட்சியில் சிங்கப்பூர் எப்படியெல்லாம் இருந்தது என்பதை நேரடியாகக் காணும் வகையில் தனித் தனி உள்ளரங்க வடிவமைப்புடன் அமைத்துள்ளார்கள். புகைப்படங்களை மாதிரியாகக் கொண்டு அதே போல் தத்ரூபமாகச் சிலைகளையும் உள்ளரங்கத்தையும் ஒளி ஒலி அமைப்புகளையும் செய்துள்ளார்கள். சில இடங்களில் சிலைகள் அசைகின்றன, பேசுகின்றன. வரலாற்றுக் காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்வதில் இவை வெற்றி பெற்றுள்ளன. இந்த அபாரமான அருங்காட்சியகத்தைக் கண்டு மகிழுங்கள்.

படப்பதிவு - ஹேமமாலினி லோகநாதன்

Monday, June 28, 2021

பக்கச் சுவரில் பொன்முதுகு மரங்கொத்தி | Black-rumped Flameback on Sidewall

செங்குத்தான மரத்தில் பக்கவாட்டைப் பற்றி எளிதில் அமரும் பொன்முதுகு மரங்கொத்தி, அதே போல் ஒரு சுவரில் பக்கவாட்டைப் பற்றி அமருகின்றது. அத்துடன் பக்கவாட்டிலேயே நகருகின்றது. இந்த அரிய காட்சியைப் பாருங்கள்.

தாரிகாவின் ஓவியங்கள் - ஒரு மதிப்பீடு

சென்னையில் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் தாரிகாவின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

Sunday, June 27, 2021

ஜெயந்தி சங்கரின் வீணையிசை - 1

ஜெயந்தி சங்கரின் வீணையிசை - 1

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனப் பன்முகத் திறமை படைத்த ஜெயந்தி சங்கர், வீணை வாசிக்கவும் கற்றுள்ளார். புகழ்பெற்ற காரைக்குடி சகோதரர்களின் பெண்வயிற்றுப் பெயர்த்தியான வீணை விதூஷி, காரைக்குடி ஜெயலஷ்மி சுகுமார் அவர்களிடம் சிங்கப்பூரில் 2010-2013 காலக்கட்டத்தில் வீணையிசை பயின்றார். கஜானனயுதம் என்ற இந்தப் பாடலை 2010-11ஆம் ஆண்டில் வாசித்தார். "என் வாசிப்பில், இனிமையாக, சரியாக இருப்பவை என் மதிப்பிற்குரிய ஆசிரியரின் ஆசிகள். அந்தப் பெருமை அவரையே சேரும். அல்லாதன எல்லாம் என்னைச் சேரும். அதற்காக அவரிடமும் கேட்பவர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார் ஜெயந்தி சங்கர்.

இந்த இன்னிசையைக் கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

Saturday, June 26, 2021

நட்சத்திர வெண்டை | ஸ்டார் வெண்டை | Star Vendai | Star of David Okra

நம் வீட்டுத் தோட்டத்தில் விளைந்துள்ள நட்சத்திர வெண்டையை (ஸ்டார் வெண்டை) இன்று அறுவடை செய்தோம். அதன் உள்ளே எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

கமலா வல்லப கோவிந்தா | Kamala Vallaba Gopala | கிருஷ்ணகுமார் | ஷ்ரேயா குமார்

'கமலா வல்லப கோவிந்தா' என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார், ஷ்ரேயா குமார் குரலில் கேளுங்கள்.

Friday, June 25, 2021

மின்கம்பியில் ஒரு தவிட்டுக் குருவி | Yellow-billed babbler in Electric line

பறவைகளுக்கு மின்கம்பிகளின் மீது அமர்ந்து ஊஞ்சலாடுவது, பிடித்தமான ஒரு விளையாட்டு. இதனால் எல்லாம் மின்தடை ஏற்படுமா என்று தெரியவில்லை. இதோ மின்கம்பியில் ஒரு தவிட்டுக் குருவி.

Thursday, June 24, 2021

மின்கம்பத்தில் அணில் | Squirrel on Electric Post

மின் தடைக்கு அணிலும் ஒரு காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மின்கம்பத்தில் அணில் தாவி விளையாடும் காட்சியை இங்கே நீங்கள் காணலாம்.

Asian Koel Call

இந்தக் குயில் என்ன உணர்வுடன் கூவுகிறது என்று சொல்ல முடியுமா?

Wednesday, June 23, 2021

ஹர்ஷினி பிரசன்னா ஓவியங்கள் - ஒரு மதிப்பீடு

சென்னையில் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் ஹர்ஷினி பிரசன்னாவின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

கம்புள்கோழியும் ஆள்காட்டியும் | Waterhen and Lapwing

ஒரே காட்சியில் கம்புள்கோழியையும் சிவப்புமூக்கு ஆள்காட்டியையும் காணுங்கள்.

Tuesday, June 22, 2021

Asian Koel Female in Close-up | பெண்குயில் மிக மிக அருகில்

இதற்கு முன் இவ்வளவு நெருக்கத்தில் ஒரு பெண்குயிலைப் பார்த்ததில்லை. நம் ஜன்னலோரம் அமர்ந்து கருவேப்பிலைப் பழங்களைக் கவ்வி உண்ணும் காட்சியை அணுக்கமாக, நுணுக்கமாகப் பார்க்க, ஓர் அரிய வாய்ப்பு.

Monday, June 21, 2021

ஐஷ்வர்யாவின் ஓவியங்கள் - ஒரு மதிப்பீடு

சென்னையில் ஆறாம் வகுப்புப் படிக்கும் எஸ்.ஐஷ்வர்யாவின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் | வள்ளலார் | கிருஷ்ணகுமார்

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்ற அமுத வாசகத்தை அருளிய வடலூர் வள்ளல் பெருமான், இராமலிங்க அடிகள் இயற்றிய 'வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்' என்ற வானளாவிய புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

Sunday, June 20, 2021

பெண்குயிலுக்கு வேப்பம்பழம் ஊட்டிவிடும் ஆண்குயில்

ஆண்குயில் வேப்பம்பழத்தைக் கவ்விக்கொண்டு வந்து பெண்குயிலுக்கு ஊட்டிவிடும் அரிய காட்சி இதோ. இதில் இன்னொரு புதுமை என்னவென்றால், ஆண்குயில் வாயிலிருந்து பெண்குயில் தானாகவே எடுத்து உண்பதும் அது எடுத்துக்கொள்வதற்காகவே ஆண்குயில் வாயில் வைத்துக் காத்திருப்பதும் காவியக் காதலின் ஒரு சொட்டு. கண்டு மகிழுங்கள்.

Saturday, June 19, 2021

இரண்டு கம்புள்கோழிகள் குளிக்கின்றன - 2 | Two Waterhens Taking Bath - 2

இன்று மாலை பெய்த மழையைத் தொடர்ந்து, இரண்டு கம்புள்கோழிகள் ஒரே நேரத்தில் போட்ட ஆனந்தக் குளியல். இதைப் பார்த்தால், உங்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

Asian Koel | Black Koel | கருங்குயில் | Close-up

குயிலை மிக அருகில் பாருங்கள்.

Friday, June 18, 2021

அந்திமந்தாரை | Mirabilis Jalapa | Marvel of Peru

நம் வீட்டுத் தோட்டத்தில் ஒரே நாளில், நான்கு நிறங்களில் அந்திமந்தாரை பூத்துள்ளது. அந்தியில் மலர்ந்து காலையில் மூடிக்கொள்வதால், இது அந்திமந்தாரை எனப் பெயர் பெற்றுள்ளது. இதுவே பெருவின் அதிசயம் ((Marvel of Peru ) என்றும், நான்கு மணித்தாவரம் ( Four O’ Clock Plant), நாலு மணிப்பூ அல்லது அஞ்சு மணிப்பூ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர், மிராபிலிஸ் ஜலாபா (Mirabilis Jalapa). ‘மிராபிலிஜஸ்’ என்ற இலத்தீன் சொல்லுக்கு ‘அற்புதமான’ என்று பொருள். இந்த அற்புத மலரைக் கண்டு மகிழுங்கள்.

ஸ்ரீநிதியின் ஓவியங்கள் - ஒரு மதிப்பீடு

சென்னையில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் கே.எஸ்.ஸ்ரீநிதியின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 9841120975.

Thursday, June 17, 2021

காக்கைச் சிறகினிலே நந்தலாலா | பாரதியார் | கிருஷ்ணகுமார்

மகாகவி பாரதியாரின் 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' என்ற அற்புதமான பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

மயில் மாணிக்கம் மலர்கள் | Mayil Manickam | Ipomoea Quamoclit

இந்த மலர்களைப் பார்த்தால், உங்களுக்கு மகிழ்ச்சி கிட்டும். டும் டும் டும்.

Wednesday, June 16, 2021

வால்காக்கையின் குரல் | Voice of Rufous Treepie | Dendrocitta Vagabunda

வால்காக்கை, கோகீ கோகீ எனக் குரல் கொடுக்கும்போதே படம் எடுக்க விரும்பினேன். அது ஒருவாறாக நிறைவேறியது. ஆனால் என்ன, வால்காக்கையைப் பின்புறத்திலிருந்தே படம் எடுக்க முடிந்தது. 

Asian Koel Singing - 14 | குயிலின் அமுத கானம் - 14

இன்று காலை, குயில் அருளிய அமுத கானம்

Tuesday, June 15, 2021

கருவேப்பிலைப் பழம் | Curry Tree Fruit | Karuveppilai | Murraya Koenigii

கருவேப்பிலையைச் சமையலில் சேர்க்கின்றோம். அதன் சுவை என்னவென்று நமக்குத் தெரியும். ஆனால், கருவேப்பிலைப் பழத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதன் சுவை எப்படி இருக்கும் என்று தெரியுமா? நம்ம வீட்டுக் கருவேப்பிலை மரத்திலிருந்து இன்று பெற்ற அனுபவம், இதோ.

படப்பதிவு - ஹேமமாலினி லோகநாதன்

Innocent Piglets | பன்றிக் குட்டிகள்

பறவைக் குரலுக்குப் பயந்து, தெறித்து ஓடும் அப்பாவிப் பன்றிக் குட்டிகள். 

#Shorts: Mike in Watch?

இந்த மாம்பழ வியாபாரி, கைக்கடிகாரத்தில் ஒலிபெருக்கி (மைக்) வைத்திருக்கிறாரா, என்ன?

Sunday, June 13, 2021

பச்சைச் சூரியன் | Green Sun

இன்று மாலை சென்னையில் பலத்த காற்றுக்கு நடுவே பச்சைச் சூரியனைத் தரிசித்தேன். இந்த அரிய காட்சியைக் கண்டு மகிழுங்கள்.

சூரியக் குருவி | Yellow-billed Babbler over Sun

இன்றைய அந்திச் சூரியன் முன்னே ஒரு தவிட்டுக் குருவி.

Saturday, June 12, 2021

காக்கை என்ன சாப்பிடுகிறது?

இந்தக் காக்கை என்ன சாப்பிடுகிறது? பார்த்துச் சொல்லுங்கள்.

அரசமரக் கன்றும் நவதானிய விநாயகரும்

பறவை எச்சத்தில் முளைத்த அரசமரக் கன்றை எடுத்துவந்து, அதனடியில் நவதானிய விநாயகரைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்கிறார், நாமக்கல் பாலமூர்த்தி. விநாயகருக்கு இருபுறமும் நாகர் சிலைகளுக்குப் பதிலாக, மரூள் தாவரத்தை நட்டுள்ளார். ஊரடங்கின் காரணமாக, கோவிலுக்குச் செல்ல முடியாத நிலையில், வீட்டுத் தோட்டத்திலேயே இயற்கையாக ஒரு கோவிலை எழுப்பியுள்ளார். இந்தப் புதிய முயற்சியைப் பாருங்கள், பகிருங்கள்.

Friday, June 11, 2021

இரண்டு கம்புள்கோழிகள் குளிக்கின்றன | Two Waterhens Taking Bath

இரண்டு கம்புள்கோழிகள் இன்று மாலை ஒரே நேரத்தில் முங்கி முங்கிக் குளித்த அழகிய காட்சி, இங்கே.

ஆண்குயில் - பெண்குயில் - காதல் | Asian Koel Male and Female in Romance

ஆண்குயிலையும் பெண்குயிலையும் ஒன்றாகப் பார்ப்பதே அரிது. அதிலும் அவை காதலிப்பதைப் பார்ப்பது இன்னும் அரிது. இதோ, இங்கே ஒரு பெண்குயிலை ஆண்குயில் எப்படி நெருங்குகிறது என்று பாருங்கள். இந்த நேரத்தில் ஆண்குயிலின் குரல் எப்படிக் குழைகிறது என்று கேளுங்கள்.

மனம் எனும் மேடையில் | தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி | கிருஷ்ணகுமார்

தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகளைப் பற்றிய 'மனம் எனும் மேடையில் ஆடுகின்றான்' என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

Thursday, June 10, 2021

Voice of Tailorbird | தையல் சிட்டின் குரல்

Enjoy the voice of Tailorbird.

தையல் சிட்டின் குரலைக் கேளுங்கள்.

சிறகுலர்த்தும் கரிச்சான் | Black Drongo

மழையில் நனைந்த கரிச்சான் குருவி, மின்கம்பியில் அமர்ந்து தன் சிறகுகளை உதறி உலர்த்துகிறது.

Wednesday, June 09, 2021

#Shorts: London Natural History Museum

இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் உள்ளே ஓர் உலா.

படப்பதிவு - நவ்யா

சென்னையில் இடி, மின்னல் | Thunder and Lightning in Chennai

முந்தாநாள் (2021 ஜூன் 7, திங்கட்கிழமை அன்று) இரவு 10.45 மணி முதல் 12 மணி வரை சென்னையில் பயங்கரமான இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நீளமான இடியும் மின்னலும் தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்தன. உச்சியை உலுக்கி, கிடுகிடுக்க வைக்கும் அந்த அசாதாரண நிகழ்வின் ஒரு பகுதி இங்குள்ளது. படக்கருவியை வான்நோக்கிப் பிடித்து, தரையைப் பார்த்தபடி இந்தக் காட்சிகள் பலவற்றையும் படம்பிடித்தேன். இதோ, நீங்களும் அந்த மெய்சிலிர்க்கும் அனுபவத்தைப் பெறுங்கள்.

Tuesday, June 08, 2021

இயற்கை வழியில் நான் கண்ட தீர்வுகள் - Roots Organics தீபிகா

எந்திரப் பொறியாளரான தீபிகாவுக்கு வெளியூரில் சென்று வேலை செய்யத் தொடங்கியதும் முடி உதிர்வுச் சிக்கல் ஏற்பட்டது. கோலம் போடும்போது கையில் தோல் உரிந்தது.  சித்த மருத்துவரான தம் தந்தையின் உதவியுடன், தாயின் ஆலோசனைகளுடன் தனக்கான இயற்கைவழிப் பொருள்களை உருவாக்கத் தொடங்கினார். நல்ல பலன் கிடைத்தது. நெருங்கிய தோழிகளின் சிக்கல்களுக்கும்  இதே போல் தீர்வு கண்டார். 

எங்களுக்கும் கிடைக்குமா எனப் பலரும் கேட்டதால், ரூட்ஸ் ஆர்கானிக்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் வழியே நலங்கு மாவு, சிகைக்காய் மாவு, முடி உதிர்வைத் தடுக்கும் தைலம், வழுக்கையைப் போக்கும் தைலம், நரைமுடியை மாற்றும் தைலம், கண் மை, உதட்டுப் பூச்சு, பாத்திரம் தேய்க்கும் தூள், பற்பொடி, கோலப் பொடி, ஹோலிப் பண்டிகைக்கான வண்ணப் பொடி... எனப் பலவற்றை இயற்கை முறையில் உருவாக்கி விற்பனை செய்து வருகிறார். 

தான் உற்பத்தி செய்வதை, தான் பயன்படுத்திப் பார்த்து, தானே பரிசோதித்துப் பார்த்து, அதன் பிறகே மற்றவர்களுக்கு வழங்குகிறார். தனது வெற்றிப் பயணத்தை இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

Monday, June 07, 2021

#Shorts: Greater Painted - Snipe | மயில் உள்ளான்

குளியல் போடும் மயில் உள்ளான்.

Sunday, June 06, 2021

திருக்குறள் படிப்பது தண்டனையா?

குற்றவாளிகள், திருக்குறளைப் படிக்க வேண்டும் என்பதைக் காவலர்களும் நீதிபதிகளும் ஒரு நல்ல நோக்கில் சொல்கிறார்கள். 

ஆனால், ஒரு தண்டனையாகத் திருக்குறளைப் படிக்க வைப்பது, திருக்குறளின் மீது வெறுப்பினை உண்டாக்கும் வாய்ப்பு உண்டு. 

தொண்டு இல்லத்தில் சமூக சேவை செய்யச் சொல்வதற்கும் இது பொருந்தும்.

இரண்டு ஆள்காட்டிப் பறவைகள் | A Pair of Lapwings

இன்று மதியம் இரண்டு சிவப்புமூக்கு ஆள்காட்டிப் பறவைகளை (Red Wattled Lapwings) ஜோடியாகப் பார்த்தேன். அதுவும் காதல் உணர்வுடன் ஒன்றை மற்றொன்று பின்தொடர்ந்தது. ஆண்பறவை நெருங்கி நெருங்கி வர, பெண்பறவை தள்ளித் தள்ளிச் செல்ல, இந்தக் காதல் நாடகத்தைக் கண்டு களியுங்கள்.

நம்ம வீட்டுச் செம்பருத்தி | Hibiscus at our garden

நம்ம வீட்டுச் செம்பருத்தி

Saturday, June 05, 2021

நித்திலாவின் வானவில் | Rainbow of Nithila

இன்று மாலை மயங்கிய வேளையில், மொட்டை மாடியில் நித்திலாவும் ஹரி நாராயணனும் தரையில் வரைந்துகொண்டிருந்தனர். அவர்களுக்குத் தெரியாமல், அதை மேலேயிருந்து நான் படம் பிடித்தேன். மண்ணில் தெரியுது வானம் என்றான் பாரதி. இதோ தரையில் தெரியுது வானவில்.

மாம்பழ வியாபாரிகள் | Mango Sellers

இது மாம்பழப் பருவம் என்பதால், மாம்பழ விற்பனை களை கட்டியிருக்கிறது. ஆட்டோ, மூன்று சக்கர வண்டி, வேன் எனப் பல வாகனங்களிலும் பல வகை மாம்பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. நம் தெருவுக்கு அண்மையில் வந்த மாம்பழ வியாபாரிகளையும் அவர்கள் 'வாங்கம்மா வாங்க', 'பழம்மா பழம்' எனக் கூவி விற்கும் முறைகளையும் இந்தப் பதிவில் பாருங்கள். மாம்பழ விலை என்ன தெரியுமா?

Two Kingfishers | இரண்டு மீன்கொத்திகள்

இரண்டு மீன்கொத்திகள் அருகருகே அமர்ந்து, சிறகுகளை விரித்து, குரலெழுப்பிப் பேசுவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஆம், இதில் மீன்கொத்தியின் குரலையும் நீங்கள் கேட்கலாம். ஜூன் 5, உலகச் சுற்றுச் சூழல் தினத்தில் இந்தக் காட்சியைக் கண்டு மகிழுங்கள்.

Group Dance of Mayil Manickam

ஜூன் 5, உலகச் சுற்றுச் சூழல் தினம். ஒரு கொடியில் பூத்த மயில் மாணிக்க மலர்களின் குழு நடனத்தை இன்று கண்டுகளியுங்கள். மாடியில் கைப்பிடிச் சுவர் மீது ஏறி நின்று எடுத்த படம்.

A Pair of Red vented Bulbuls | இரண்டு சின்னான் குருவிகள்

ஜூன் 5, உலகச் சுற்றுச் சூழல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், இந்தச் சின்னான் ஜோடிக் குருவிகளைப் பாருங்கள்.

Friday, June 04, 2021

Voice of Asian Koel - Female | பெண்குயிலின் குரல்

பெண்குயில் கூவும்போது படம் பிடிக்க வேண்டும் என்று கடந்த ஒன்றரை ஆண்டாகக் காத்திருந்தேன். இன்றுதான் அது நிறைவேறியது. இந்த அரிய காட்சியைப் பார்த்து மகிழுங்கள்.

#Shorts: Dance of Mayil Manickam

பஞ்சமுகக் குத்துவிளக்கைப் போல் இருக்கும் இந்த மயில் மாணிக்கம், இன்று ஆடிய நடனத்தைப் பாருங்கள்.

மயில் மாணிக்கம் | Pink Mayil Manickam | Ipomoea quamoclit

நம் வீட்டுத் தோட்டத்தில் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற மயில் மாணிக்கம் பளீரெனப் பூத்துச் சிரிக்கிறது. பார்த்து மகிழுங்கள்.

Thursday, June 03, 2021

Asian Koel Female - Close-up

இன்று நம் ஜன்னலோரக் கருவேப்பிலை மரத்தில் அமர்ந்த ஒரு பெண்குயில், கருவேப்பிலைக் காயைக் கடித்துத் தின்றது. அதை மிக நெருக்கத்தில் படம் பிடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இந்த அரிய காட்சியைப் பார்த்து மகிழுங்கள்.

லலிதா நவரத்தின மாலை | Lalitha Navarathna Mala

லலிதா நவரத்தின மாலை, அகத்திய மாமுனிவர் அருளியது. இதில் அகத்தியர், அம்பாளை நவரத்தினங்களாக வர்ணித்துப் போற்றுகின்றார். இந்த எளிய தமிழ்ப் பாடல், பக்திச் செறிவும் அருட்பிழிவும் மிக்கது. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்துக்கு இணையாகக் கருதப் பெறுகின்றது. சக்தி வாய்ந்த இந்தப் பாடலைப் பாடுவோருக்கும் கேட்போருக்கும் சகல நன்மைகளும் கிட்டும். இந்தப் பேரிடர் காலத்தில் இதைப் பாடியும் கேட்டும் பயன் பெறுங்கள். 

பாடியோர்: கிருஷ்ணகுமார் & ஷ்ரேயா குமார்

கலைஞர் பற்றி ஜெயகாந்தன் - சுகதேவ் நேர்காணல் | Sugadev Interviews Jayakanthan

கலைஞர் பிறந்த நாளான இன்று, கலைஞர் குறித்து ஜெயகாந்தன் சொல்வதைக் கேளுங்கள். உடன் உரையாடுபவர், மூத்த பத்திரிகையாளர் சுகதேவ்.

Wednesday, June 02, 2021

#Shorts: Voice of Loten's Sunbird

பேரலகுத் தேன்சிட்டின் (Loten's Sunbird) குரலைக் கேட்டிருக்கிறீர்களா?

நம்ம வீட்டு மாங்காய் அறுவடை | Mango Harvest

நம்ம வீட்டுத் தோட்டத்தில் இன்று மாங்காய் அறுவடை!

Tuesday, June 01, 2021

குட்டி குட்டி பசி எடுத்தால் - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 15

நம்மில் பலருக்கும் அவ்வப்போது குட்டி குட்டி பசி எடுக்கும். சிலருக்குக் காலையில் எழுந்தவுடனே பசி, வயிற்றைக் கிள்ளும். சிலருக்குக் குளித்தவுடன் வயிறு பரபரக்கும். சிலருக்குச் சாப்பிட்ட உடனே மீண்டும் பசிக்கும். சிலருக்கு வேலை செய்தால் கபகபவெனப் பசிக்கும். சிலருக்கு ஓய்வெடுத்தாலே பசிக்கும். இந்த ஊரடங்கில் இஷ்டத்திற்கு வெளியில் சென்று, வாங்கிச் சாப்பிட முடியாது. இந்நிலையில் வீட்டில் இருக்கும் பண்டங்களைக் கொண்டே சுவையான, ஆரோக்கியமான உணவை எளிதில் தயாரிப்பது எப்படி? இதோ ஏராளமான குறிப்புகளை அள்ளித் தருகிறார், ஓவியர் ஸ்யாம். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்கள் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Monday, May 31, 2021

மின்கம்பியில் ஒரு தேன்சிட்டு | Sunbird in an electric line

ஒரு விநாடியும் சும்மா இல்லாமல், துருதுருவென ஏதாவது செய்துகொண்டிருக்கும் இந்தத் தேன்சிட்டினைப் பாருங்கள். சுறுசுறுப்புக்குப் பொதுவாகத் தேனீயை உதாரணம் காட்டுவார்கள். இந்தத் தேன்சிட்டைத் தானே, நாம் காட்ட வேண்டும்!

Sunday, May 30, 2021

கூடு திரும்பும் பறவைகள் - 5 | Birds returning to nest - 5

இன்று மாலை பறவைகள், கூடு திரும்பிய அழகிய காட்சி. 

Asian Koel Singing - Close-up

இன்று காலை ஜன்னலருகே ஒரு குயில் கூவத் தொடங்கியது. அதைச் சற்று நெருக்கமாகப் படம் பிடிக்கும் வாய்ப்பு அமைந்தது. சூரிய ஒளியில் அதன் அலகும் கண்களும் கருமேனியும் மின்ன, அது கூவும் அழகைக் காணுங்கள்.

#Shorts: Water Pot

Please keep water for birds.

பறவைகளுக்குத் தண்ணீர் வையுங்கள்.

Saturday, May 29, 2021

இணையத்தில் நேர மேலாண்மை | Time management in Internet

'இணையத்தில் நேர மேலாண்மை' என்ற பொருண்மையில் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.04.2020 அன்று ஜூம் வழியே வழங்கிய உரையின் பதிவு இங்கே. இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த பேராசிரியர் நறுமுகை இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.

Friday, May 28, 2021

கூடு திரும்பும் பறவைகள் - 4 | Birds returning to nest - 4

No lockdown for birds.

இன்று மாலை பறவைகள், கூடு திரும்பிய காட்சி. 

The Voice of White-breasted Waterhen | கம்புள்கோழியின் குரல்

கம்புள்கோழியின் குரலைக் கேளுங்கள்.

Listen the Voice of White-breasted Waterhen.

Thursday, May 27, 2021

கூடு திரும்பும் பறவைகள் - 3 | Birds returning to nest - 3

இன்று மாலை பறவைகள், கூடு திரும்பிய காட்சி.

#Shorts: Asian Koel Singing


அசோக மரத்தில் அமர்ந்து இன்று இந்தக் குயில் இசைத்த பாடலைக் கேளுங்கள்.

Dhanvantari Maha Mantra | தன்வந்திரி மகாமந்திரம்

மகாவிஷ்ணுவின் அவதாரமாகப் போற்றப்படும் தன்வந்திரி, பாற்கடலைக் கடைந்தபோது தோன்றினார். இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிழ்தத்தைத் தேவர்கள் உண்டதால் நிறைவாழ்வு பெற்றார்கள். ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தையாக வணங்கப்பெறும் தன்வந்திரி, எல்லா நோய்களையும் அச்சங்களையும் நீக்க வல்லவர். கொரோனா அலைகளால் உலகமே துன்புறும் இக்காலத்தில், மிகச் சக்தி வாய்ந்த இந்தத் தன்வந்திரி மகாமந்திரத்தை ஜபியுங்கள். நலமும் குணமும் அருளும் திடமும் பெறுங்கள். 

ஜபம் - கிருஷ்ணகுமார், ஷ்ரேயா குமார்
இசை - சூர்யா நீலகண்டன்

Wednesday, May 26, 2021

சங்கர குரு ஜெய சங்கர குரு | Shankara Guru Jaya Shankara Guru

காஞ்சி மாமுனிவர் பிறந்த அனுஷ நட்சத்திரத்தில், இந்தப் பாடலை வெளியிடுகிறோம். கேட்டு மகிழுங்கள். குருவருள் பெறுங்கள்.

பாடல் - சங்கர குரு ஜெய சங்கர குரு 
பாடியவர்கள் - கிருஷ்ணகுமார், ஷ்ரேயா குமார்

பரமஹம்ச மாஸ்ரயே | காஞ்சி மகாபெரியவா | கிருஷ்ணகுமார்

காஞ்சி மகாபெரியவரின் நட்சத்திரமான இந்தப் பௌர்ணமி அனுஷ நன்னாளில், 'பரமஹம்ச மாஸ்ரயே' என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

தேன்சிட்டின் சங்கீதம் | The Voice of Sunbird

The Voice of Sunbird @ 5:30 AM.

அதிகாலை 5:30 மணிக்குத் தேன்சிட்டு இசைத்த தேனிசை இதோ.

Tuesday, May 25, 2021

Myna is eating without yellow bill | அலகில்லாமல் உண்ணும் மைனா

அலகுடைந்த மைனா எப்படிச் சாப்பிடும் என முந்தைய பதிவில் கவலை தெரிவித்தேன். ஆனால், இன்று என் மனைவி வைத்த உணவைக் காக்கையும் இந்த அலகுடைந்த மைனாவும் பகிர்ந்து சாப்பிட்டன. இந்த மைனாவால் சாப்பிட முடிகிறது என்பது நிம்மதி அளிக்கிறது. அடிபட்ட மைனாவுக்காகக் காக்கை விட்டுக் கொடுத்துப் பரிவு காட்டுவது, ஓர் உன்னத நிகழ்வு.

Hi Myna, Where is your Yellow Bill? | மைனா, உன் அலகு எங்கே?

இன்று காலை இந்த அலகுடைந்த மைனாவைக் கண்டேன். எங்கோ பலமாக மோதியிருக்கிறது போலும். ஐயோ, பாவம்! இனி இது எப்படிச் சாப்பிடும்? 

Bleaching powder in Bare hand

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு, இன்று காலை தாம்பரத்தில் நம் தெருவுக்கு வந்த தூய்மைப் பணியாளர், கொரோனா தடுப்புப் பணிக்காக, வெறும் கையால் பிளீச்சிங் பவுடர் தூவுவதைப் பார்த்தேன். இதைக் கருவிகள் வழியாக அல்லது ஒரு டப்பாவில் எடுத்து, பவுடர் டப்பா மாதிரி அமுக்கித் தூவலாமே. கை படாமலே தூவ, வேறு நிறைய வழிகள் உண்டே. கையுறைகள் அணியலாமே. அரசு உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும். இதன்வழியே பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். 

White-breasted Waterhen Bath

இன்று அதிகாலை கம்புள்கோழி குளித்த காட்சி

Monday, May 24, 2021

இறங்கத் தெரியாத பூனை | Cat on Christmas Tree

இன்று மதியம் எங்கள் வீட்டுக் கிறிஸ்துமஸ் மரத்தில் ஒரு பூனை விறுவிறுவென ஏறியது. அதைத் துரத்தி வந்த இன்னொரு பூனை, இறங்கிச் சென்றது. இந்த மரத்தில் கூடு கட்டி வசிக்கும் காக்கைகள், மேலே ஏறிய பூனையைச் சுற்றிச் சுற்றி வந்து கரைந்தன. பூனையோ இறங்கத் தெரியாமல் அல்லது இறங்க விரும்பாமல் மரத்திலேயே சுற்றிச் சுற்றி வந்தது. இதர பறவைகள் பரபரவென்று பறந்தன. இந்த நவரச நாடகத்தைப் பாருங்கள் (என் பழைய கேமரா, இன்று மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டது).

Sunday, May 23, 2021

கறவைப் பசுக்களும் கழுத்து மணியும்

நம் வீட்டுக்குப் பின்னுள்ள வெளியில், கழுத்து மணியொலிக்கக் கறவைப் பசுக்கள் புல்மேயும் அழகிய காட்சியைப் பாருங்கள். இந்தக் கழுத்துமணிகளின் இன்னிசை, மங்கலகரமாய் ஒலிப்பதைக் கேளுங்கள்.

Juvenile Asian Koel Female

காக்கைக் கூட்டில் குயில் முட்டையிடுவது தெரிந்ததே. குஞ்சுகள் பொரிந்து, காக்கைகளுடன் குயிலும் சேர்ந்தே வளரும். குயில் பெரிதாக வளரும் வரை, காக்கைக்கு வேறுபாடே தெரியாது. தன் குஞ்சு போலவே வளர்க்கும். அப்படித்தான் இந்தக் குயில் குஞ்சைப் பார்த்தேன். காக்கைக்குப் பக்கத்தில் உரிமையுடன் அமர்ந்திருந்தது. நான் குயில் குஞ்சைச் சற்று நெருங்கிச் சென்று படமெடுத்தபோது, காக்கைகள் என்னைச் சுற்றி வளைத்துக் கரைந்தன. 

Saturday, May 22, 2021

சரக்கொன்றை | Golden Shower Tree

நம்மவீட்டுச் சரக்கொன்றை பொன்னாரங்களாகப் பூத்துக் குலுங்கும் காட்சியைக் கண்ணாரக் கண்டு மகிழுங்கள்.

Friday, May 21, 2021

நாமக்கல் பாலமூர்த்தியின் வீட்டுத் தோட்டம் - 3

நம்மாழ்வாரின் மாணவர் நாமக்கல் பாலமூர்த்தி, தம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மூலிகைச் செடிகளையும் அவற்றின் பயன்களையும் நமக்கு விளக்குகிறார். இதோ, மூன்றாவது பகுதி.

Thursday, May 20, 2021

Sentosa Musical Fountain | Laser Show | Singapore

Sentosa Musical Fountain, also known as the Magical Fountain of Sentosa, or as the Musical Fountain by locals, was a former musical fountain water feature and entertainment venue on Sentosa Island in Singapore. It was located on a now-demolished portion of the Imbiah Lookout entertainment zone on the island. The Musical Fountain was officially opened on 11 June 1982, and ceased operations 25 years later on 26 March 2007, and was demolished that same year. The venue arena could accommodate more than 5000 people. It hosted five different shows through the 25 years it had been in operation, including the famous Magical Sentosa show which ran during the last 5 years of the fountain's operations. (From Wikipedia)

சிங்கப்பூரின் செந்தோசாத் தீவில் நடைபெற்ற இசை நீரூற்று நடனத்தையும் லேசர் ஒளிக்கற்றைக் காட்சிகளையும் இந்தப் பதிவில் கண்டுகளியுங்கள். 25 ஆண்டுகளாக நடைபெற்ற இந்தக் கண்கவர் வண்ண நிகழ்ச்சி, 2007இல் நிறுத்தப்பட்டது. ஆயினும் இப்போதும் இது நம்மைத் தொடர்ந்து வசீகரிக்கிறது.

Tuesday, May 18, 2021

குயிலும் ஓணானும் | Asian Koel and an Oriental Garden Lizard

வேப்ப மரத்தில் ஒரு குயில் பாட, ஓணான் கேட்க, இலைகள் சலசலத்துத் தாளமிட, இதோ ஒரு கச்சேரி.

#Shorts: Chameleon | பச்சோந்தி

கடந்த ஆண்டு திருச்சிக்குச் சென்றபோது, இந்தப் பச்சோந்தியைக் கண்டேன். பட்டப் பகலில் தனியே நடந்து சென்றது. இதன் நடை, சற்றே வித்தியாசமாக, புதுமையாக இருப்பதைக் கவனித்தீர்களா?

Monday, May 17, 2021

ஸ்ரீ ஞானானந்த கிரி நவரத்தின மாலை | கோபால் ஐயா | கிருஷ்ணகுமார்

ஸ்ரீ ஞானானந்த கிரி நவரத்தின மாலை

அமரர் கோபால் ஐயா இயற்றிய ஸ்ரீ ஞானானந்த கிரி நவரத்தின மாலை, இதோ கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில். இதைப் பாடிடுவோர், சிவரத்தினமாய் வாழ்ந்திடுவார். 

Sunday, May 16, 2021

Shorts: Street Circus at Singapore

நம் ஊரைப் போல் சிங்கப்பூரிலும் சாலையோரம் வித்தை காட்டிப் பிழைப்போர் உண்டு. இந்தப் பெண் காட்டும் வித்தையைப் பாருங்கள்.

Street Circus at Singapore in 2002.

Video by Hemamalini Lokanathan.

Saturday, May 15, 2021

White-breasted Waterhen on Mango tree | மாமரத்தில் கம்புள்கோழி

நம் ஜன்னலை ஒட்டியுள்ள மாமரத்தில் இன்று கம்புள்கோழி ஒன்று சற்றே நெருங்கி வந்து அமர்ந்திருந்தது. அதன் முகமும் கண்களும் மிக அழகு. நீங்களும் பார்த்து மகிழுங்கள்.

Friday, May 14, 2021

Yellow-billed Babbler | தவிட்டுக் குருவி

இன்று நம் அறை ஜன்னல் அருகே வந்தமர்ந்த தவிட்டுக் குருவி.

Asian Koel - Male | Cuckoo Cuckoo | ஆண்குயில்

இந்தக் குயில் என்ன சொல்கின்றது என்று கேட்டுச் சொல்லுங்கள்.

Thursday, May 13, 2021

மாதிரிமங்கலம் | Mathirimangalam

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள மாதிரிமங்கலம் கிராமத்தில், வயல்களினூடே இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது எடுத்த காட்சிகள்.

படப்பதிவு - மது என்கிற ரங்காச்சாரி சேஷாத்ரி

A visit to Sanatorium lake, Australia

ஆஸ்திரேலியாவின் சானடோரியம் ஏரிக்கரையில் பொடிநடையாக நடப்போம் வாருங்கள்.

படப்பதிவு - பாகேஸ்வரி

The Sanatorium Lake is located in Macedon Ranges. It is a 250 meter walk from the car park. You can see largely Australian native plants shrubs and trees everywhere. There are also trail links with the 29 km Macedon Ranges Walking Trail, which includes much of Macedon Ranges scenic highlights, including Camels Hump, Memorial Cross and lookouts with outstanding views to Port Philip Bay, the You Yangs and the Dandenong Ranges. Historically, the Sanatorium Lake was built in 1899 to provide water to a hospital specialising in treating Tuberculosis, which was never built.

Video by Bageswari

Wednesday, May 12, 2021

Fitting a wheel in seconds | Impact gun

A mechanic at MRF Tyres, Tambaram, changed my two-wheeler tyre in seconds. 

என் இருசக்கர வாகனத்தின் பின்சக்கர டயர் தேய்ந்துவிட்டது என்று தாம்பரத்தில் உள்ள எம்.ஆர்.எப். டயர் விற்பனையகத்துக்குச் சென்றேன். அங்கிருந்த எந்திரப் பொறியாளர், சில விநாடிகளில் சக்கரத்தைக் கழற்றினார். டயரை மாற்றிச் சில விநாடிகளில் பொருத்தினார். உள்ளூர் மெக்கானிக்குகள் பலரும் இன்னும் கையால்தான் ஒவ்வொரு மரையாகத் திருகிக் கழற்றுகிறார்கள், மாட்டுகிறார்கள். இவர் இதை எப்படிச் செய்கிறார் என்று பாருங்கள்.

A walk into Curtain Square Park, Australia

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மாநகரில் அமைந்துள்ள கர்ட்டன் ஸ்கொயர் பூங்காவில் காலார ஒரு நடை போய்வரலாம் வாருங்கள்.

படப்பதிவு - பாகேஸ்வரி

Curtain Square is a green space parkland in city of Melbourne. It is usual sight to see children play and young adults sitting and roaming around the park. It occupies 1.46 hectares and was established for recreational space in 1876. Earlier, between 1853 a 1866, this park was used as a quarry worked by convicts . This park is situated near Carlton Street, which is famous for its wide range of Italian restaurants. The park is also closer to Melbourne University.

Video by Bageswari

Tuesday, May 11, 2021

Two horses | இரண்டு குதிரைகள்

நம் தெருவுக்குத் திடீர் வருகை புரிந்த விருந்தினர்கள்

Monday, May 10, 2021

என் அம்மா சத்தியபாமா - ஓவியர் ஸ்யாம் உருக்கமான உரையாடல் - 14

அன்னையர் தினத்து அன்று ஓவியர் ஸ்யாம் அவர்களுடன் அவர் அம்மாவைப் பற்றி உரையாடினோம். ஸ்யாம், தம் அம்மாவைப் பற்றிய நினைவுகளையும் அவரைக் காப்பாற்ற நிகழ்த்திய போராட்டங்களையும் நம்முடன் உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். உடல்நலம் பெற ஜெபிக்க வந்த கிறித்தவர்களால், அவர் அம்மா கிறித்தவராக மாறியது, ஞானஸ்நானம் செய்துகொண்டது, தம் நகைகளை எல்லாம் கழற்றி உண்டியலில் இட்டது, கர்த்தர் காப்பாற்றுவார் என்று மருத்துவத்தை மறுத்தது... எனப் பலவும் நம்மை அதிர வைக்கக்கூடியவை. மனத்தை உலுக்கக்கூடிய இந்தச் சம்பவங்களை ஸ்யாம் சொல்லக் கேளுங்கள்.

Rainbow Lorikeet - Parrot of Australia

ஆஸ்திரேலியக் கிளியான ரெயின்போ லாரிகீட், வானவில்லைப் போல் வண்ணங்களைக் கொண்டது. கண்ணைக் கவரும் இந்த வானவில் கிளி, மரத்தில் தலைகீழாக நின்றபடி, தன் அலகால் இரையைக் கொத்தி உண்ணும் அழகிய காட்சி இதோ.

படப்பதிவு - பாகேஸ்வரி

Sunday, May 09, 2021

அம்மா என்றழைக்காத உயிரில்லையே | கிருஷ்ணகுமார் குரலில்

இளையராஜா இசையில், வாலி வரிகளில், ரஜினி - பண்டரிபாய் நடிப்பில், உலகப் புகழ்பெற்ற, அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். இந்த அன்னையர் தினத்தைக் கொண்டாடுங்கள்.

Saturday, May 08, 2021

Asian Koel - Voice of Male and Female

Female Koel here makes kwik-kwil-kwik sound & male Koel sings the familiar song kooo-ooo. 

குக்கூ குக்கூ என்ற பாடல், அண்மையில் அதிவேகப் புகழ்பெற்றது. கூ, குக்கூ என நாம் வழக்கமாகக் கேட்பது, ஆண்குயிலின் குரல். குவிக் குவிக் குவிக் என்ற பெண்குயிலின் குரலைப் பலரும் கேட்டிருக்க மாட்டார்கள். அதுவும் ஆண்குயிலும் பெண்குயிலும் அடுத்தடுத்துப் பாடுவது அரிது. இன்று நம் ஜன்னலோரம் அமர்ந்த ஆண்குயிலும் பெண்குயிலும் அடுத்தடுத்துக் கூவுவதைக் கேளுங்கள். 

Friday, May 07, 2021

A ride in Singapore Cable Car

The Singapore Cable Car is a gondola lift providing an aerial link from Mount Faber (Faber Peak Singapore) on the main island of Singapore to the resort island of Sentosa across the Keppel Harbour.

சிங்கப்பூர் கேபிள் காரில், செந்தோசாத் தீவு நோக்கி, இதோ ஓர் இனிய பயணம். அண்ணாந்து பார்க்கின்ற கட்டடங்களை எல்லாம், இதில் குனிந்து பார்க்கின்றோம். பறவைப் பார்வையில் சிங்கப்பூரையும் கெப்பல் துறைமுகத்தையும் மெர்லயன் சிலையையும் நீலக் கடலையும் கப்பல்களையும் இதில் நீங்கள் காணலாம்.

உடல்மொழி சொல்லும் உண்மைகள் | நிர்மலா ராகவன் நேர்காணல் | Body Language

நம் உடல்மொழி வெளிப்படுத்துவது என்ன? பிறரின் உடல்மொழியை நாம் புரிந்துகொள்வது எப்படி? பெண், வேண்டாம் என்றால் வேண்டும் என்று அர்த்தமா? பெண்ணின் கடைக்கண் பார்வைக்கு என்ன பொருள்? காதலை வெளிப்படுத்துவது எப்படி? மேடையில் பேசும்போது எத்தகைய உடல்மொழி தேவை? பார்வையாலேயே வல்லுறவு கொள்பவரை என்ன செய்வது? போலிப் பணிவையும் குழைவையும் கண்டுகொள்வது எப்படி? உடல்மொழியின் உண்மைகள், ரகசியங்கள் பலவற்றையும் நிர்மலா ராகவன் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். இந்த ரகளையான உரையாடலைப் பார்த்து மகிழுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Thursday, May 06, 2021

#Shorts: Heart Shaped Potato

இதோ, இதய வடிவ உருளைக்கிழங்கு. இதைக் காதல் பரிசாகக் கொடுத்தால், காதலி என்ன சொல்வார்?

குரு கிருபை | தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி | கிருஷ்ணகுமார்

தபோவனம் சத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகளைப் பற்றி, பூஜ்யஸ்ரீ முரளீதர சுவாமிகள் இயற்றிய 'குரு கிருபை இல்லாமல் ஹரி கிருபை இல்லை' என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். குருவருளும் திருவருளும் பெறுங்கள்.

Wednesday, May 05, 2021

நம்ம வீட்டுத் தக்காளித் தோட்டம் | Tomato Garden

நம்ம வீட்டுத் தக்காளித் தோட்டத்தில் எத்தனை வகையான தக்காளிகள் இருக்கின்றன என்று பாருங்கள்.

Monday, May 03, 2021

#Shorts: Peacock Knock Knock

கதவைத் தட்டும் மயில்

திருப்பூரில் வாழும் இரா.சுகுணாதேவி (வழக்குரைஞர்), தன் வீட்டைச் சுற்றி வசிக்கும் மயில்களுக்கும் பறவைகளுக்கும் உணவளித்துக் காத்து வருகிறார். காலையில் அவர் வீட்டுக் கதவை யாரோ தொடர்ந்து தட்டவே, யார் என்று பார்த்தால், இந்த மயிலார். வாசலில் வைத்த அரிசியும் நீரும் தீர்ந்துவிட்டதாம். கதவைத் தட்டிக் கேட்கிறார். இப்படியில்ல, உரிமையாக் கேட்கணும்!

Microsoft Excel | எக்செல் மூலமாக வரவு, செலவு, வட்டி கணக்கிடுவது எப்படி?

வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையைக் கணக்கிடுவது எப்படி? காப்பீட்டுப் பாலிசி ஒன்றின் உண்மையான வளர்ச்சி விகிதத்தை அறிவது எப்படி? தொடர் முதலீட்டின் இறுதியில் பெறப் போகும் தொகையைக் கண்டறிவது எப்படி? வீட்டு பட்ஜெட்டை நுணுக்கமாகத் தயாரிப்பது எப்படி? Goal Seek தெரிவு மூலமாக நம் இலக்கை எட்டுவது எப்படி? நிதி நிறுவனங்கள் காட்டும் வட்டிக் கணக்கீட்டைச் சரிபார்ப்பது எப்படி? மைக்ரோசாப்ட் எக்செல் தரும் வாய்ப்புகள் என்னென்ன? இதோ வழிகாட்டுகிறார், ஸ்ரீராம் நாராயணன்.

Sunday, May 02, 2021

Scratch & Win Game

1970, 80, 90களில் பிறந்தவர்கள், இதை விளையாடியிருக்கலாம். நீங்க இதை விளையாடியிருக்கீங்களா? 

தேர்தல் முடிவுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

Saturday, May 01, 2021

#Shorts: Voice of Asian Koel | Cuckoo Cuckoo

இன்று கேட்டேன், குயிலின் அமுத கானம்

Friday, April 30, 2021

போற்றுவேன் போற்றுவேன் | அண்ணாகண்ணன் பாடல் | கிருஷ்ணகுமார் இசையில்

எந்தச் சுப நிகழ்ச்சியிலும் பாடத்தக்க வகையில் நான் இயற்றிய 'போற்றுவேன் போற்றுவேன்' என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார், ராகமாலிகையாக இசையமைத்துப் பாடியுள்ளார். கண்டும் கேட்டும் மகிழுங்கள்.

This is my first 'lyric video'.

#Shorts: White-breasted Waterhen

நம் ஜன்னலை ஒட்டியுள்ள மாமரத்திலும் வேப்பமரத்திலும் கம்புள்கோழி ஒன்று சிறுநடை பயில்வதைப் பாருங்கள்.

Thursday, April 29, 2021

Playing Cricket @ 76

76 வயதில் கிரிக்கெட் விளையாடும் இளைஞரைப் பாருங்கள்.

Wednesday, April 28, 2021

ஓய்வு பெற்றவர்கள் எதில் முதலீடு செய்யலாம்? | ஸ்ரீராம் நாராயணன் நேர்காணல் - 2

வேறு எவரைக் காட்டிலும், முதியவர்கள், ஓய்வு பெற்றவர்கள், ஓய்வூதியதாரர்கள், எதிர்காலத்தைக் குறித்துப் பெரிதாகத் திட்டமிடாதவர்கள் ஆகியோரின் நிலை, மேலும் சிக்கலாகியிருக்கிறது. வட்டி விகிதம் குறைந்ததால், அதை மலைபோல் நம்பியிருந்தவர்கள், கையைப் பிசைந்து நிற்கிறார்கள். விரைவில் ஓய்வு பெறப் போகிறவர்களுக்கும் இந்தக் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்? எதில் முதலீடு செய்யலாம்? இதோ வழிகாட்டுகிறார், ஸ்ரீராம் நாராயணன். பார்த்துப் பயன் பெறுங்கள். நண்பர்களுக்கும் பெரியவர்களுக்கும் பகிருங்கள்.

Tuesday, April 27, 2021

மீனாட்சி திருக்கல்யாணம் | Meenakshi Thirukalyanam | கிருஷ்ணகுமார்

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், அண்மையில் நடைபெற்றது. இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பானது. பக்தர்கள் வீட்டிலிருந்தே கண்டு வழிபட்டனர். மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, கண்ணன் கணேசன் எழுதிய பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள். மாணிக்கவல்லி மரகதவல்லி அன்னை மீனாட்சி அருள்விழியின் கருணை மழையில் நனையுங்கள்.

A ride in Navi Mumbai during Lockdown

எப்போதும் பரபரப்பாக இயங்கும் நவி மும்பை, ஊரடங்கின்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இதை நமக்காகப் படமெடுத்து அனுப்பிய சாந்தி மாரியப்பனுக்கு நன்றி.

குயிலின் அமுத கானம் - 8 | Singing Cuckoo - 8

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குயிலின் அமுத கானத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பு அமைந்தது. நம் ஜன்னலோரத்து வேப்ப மரத்தில் அமர்ந்த குயில், குரலெடுத்துப் பாடுவதையும் வேப்பங்கொட்டையைத் துப்புவதையும் பாருங்கள்.

Monday, April 26, 2021

ஆலயம் அருளாலயம் | தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி | கிருஷ்ணகுமார்

சித்திரா பவுர்ணமியில் குருவை வணங்குவது மரபு. அந்த வகையில், தபோவனம் சத்குரு ஞானானந்த கிரி சுவாமிகளைப் பற்றி, ஜி.எஸ்.மணி இயற்றிய 'ஆலயம் அருளாலயம்' என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். குருவருள் பெறுங்கள்.

மலையாளக் கரையோரம் - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 13

திருச்சூர் பூரம் திருவிழா அனுபவங்களில் தொடங்கி, ஒட்டுமொத்தக் கேரள அனுபவங்களையும் சுவையாக விவரிக்கிறார், ஓவியர் ஸ்யாம். இதில் யானை பவனி, வெடிகட்டு, தொலைக்காட்சியில் பூரம் திருவிழாவைப் பார்த்தபடி நடனமாடும் மலையாளி எனப் பலவற்றின் காணொலிக் காட்சிகளையும் இடையிடையே நீங்கள் கண்டு களிக்கலாம். சுவையான இந்த உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

Sunday, April 25, 2021

இரட்டை இலை | IRATTAI ILAI | DOUBLE LEAF

இரட்டை இலையின் அழகைப் பாருங்கள்.

Saturday, April 24, 2021

சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்வது? | ஸ்ரீராம் நாராயணன் நேர்காணல் - 1

பரவலாக வட்டி விகிதங்கள் குறைந்துவிட்ட நிலையில், இனி வட்டி வருவாயை மட்டும் நம்பி வாழ்க்கையை நடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வட்டி வருவாயை மட்டுமே நம்பி இருந்த ஏழை, நடுத்தர மக்கள், சிறு முதலீட்டாளர்கள் பலரும் செய்வதறியாது நிற்கின்றார்கள். இந்தப் பின்னணியில் இப்போது நாம் என்ன செய்வது? நமக்கு முன்னுள்ள வாய்ப்புகள் என்னென்ன? அமெரிக்கவாழ் நண்பரும் இந்திய நிதிச் சந்தையைத் தொடர்ந்து கவனித்து எழுதி வருபவருமான ஸ்ரீராம் நாராயணன், நம் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார். பார்த்துப் பயன் பெறுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Playing with Pyramid Blocks

அடுக்குகளை வைத்து எப்படி விதவிதமாகப் பிரமிடு கட்டுவது என்று ஒரு விளையாட்டு. இங்கே நமக்காகப் பிரமிடுகளை உருவாக்கிக் காட்டுகிறார், சகஸ்ரா அஜய்.  

இதைப் பார்த்த பிறகு ஒரு யோசனை. இப்படியான அடுக்குகளை வைத்து எப்படிக் கோவில் கட்டுவது என்பதை ஒரு விளையாட்டாகச் சொல்லித் தரலாமே. நம் தஞ்சாவூர்ப் பெரிய கோவிலை, திருவரங்கம் கோவிலை, திருவில்லிபுத்தூர்க் கோவிலைச் சீனாவிலும் ஜப்பானிலும் கொரியாவிலும் கட்டி எழுப்பிக் குழந்தைகள் விளையாடினால் எப்படி இருக்கும்?

கலைஞர் பற்றி ஜெயகாந்தன் - சுகதேவ் நேர்காணல் | Sugadev Interviews Jayakanthan

தன் எழுத்துகளால் சமூகத்தில் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தியர், ஞானபீட விருது பெற்றவர், கம்பீரத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்தவர், எந்தக் கருத்தையும் துணிவுடன் உரைக்கும் ஆளுமை படைத்தவர், ஆற்றல்மிகு எழுத்தாளர், ஜெயகாந்தன். அவருடைய 87ஆவது பிறந்த நாளான இன்று, அவரது குரலைக் கேளுங்கள். உடன் உரையாடுபவர், மூத்த பத்திரிகையாளர் சுகதேவ்.

A ride in Ohio - Part 3

அமெரிக்காவில் இப்போது வசந்த காலம். மொட்டையாக இருந்த மரங்களில் பூக்களும் இலைகளும் பெருகத் தொடங்கியுள்ளன. வசந்த காலத்துப் பனிப் பொழிவில் ஊரே உஜாலாவுக்கு மாறியிருக்கிறது. பார்த்து மகிழுங்கள். படமெடுத்து அனுப்பிய திலகா சுந்தருக்கு நன்றி.

Friday, April 23, 2021

பூலோக வைகுந்தம் ஸ்ரீரங்கம் | SRIRANGAM | BOOLOKA VAIKUNTAM | THE PARADISE ON EARTH

பூலோக வைகுந்தம் எனப் போற்றப்படும் திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்குள் ஒரு சிறு உலா. 

#Shorts: Yellow-billed Babblers

உண்மையில் காக்கைகளைவிட, சேர்ந்து உண்ணுவது, உட்கார்வது, பறப்பதற்கு நல்ல உதாரணம், தவிட்டுக் குருவிகள். இதோ, இங்கே தவிட்டுக் குருவிகள் சேர்ந்துண்ணும் அழகைப் பாருங்கள்.

Thursday, April 22, 2021

ராம நாமமே துதி மனமே | தஞ்சாவூர் சங்கர ஐயர் | கிருஷ்ணகுமார்

தஞ்சாவூர் சங்கர ஐயர் இயற்றிய ராம நாமமே துதி மனமே என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். ராம நாமத்தை ஜபியுங்கள். 

இராமருக்குத் தாடி, மீசை ஏன்? - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 12

இராமரைத் தாடி, மீசையுடன் வரைந்தது ஏன்? இராமர் 30 அடி உயரமும் சீதை 25 அடி உயரமும் இருந்தார்களா? ஓவியத்தில் இராமரையும் கிருஷ்ணரையும் எப்படி வேறுபடுத்தி வரைகிறீர்கள்? அவதார் படத்தின் பாத்திரத்துக்கு இராமர்  தூண்டுதலாக இருந்தாரா? சில ஓவியங்களை அல்லது சிற்பங்களை எங்கிருந்து பார்த்தாலும் நம்மையே பார்ப்பது போல் இருப்பது எப்படி? இத்தகைய கேள்விகள் பலவற்றுக்கும் ஓவியர் ஸ்யாம், ஸ்ரீ ராம நவமி அன்று பதில் அளித்தார். அவருடைய சுவையான பதில்களைப் பாருங்கள்.

Wednesday, April 21, 2021

வால்மீகியின் இராம காதை - எளிய பாடலாக | கிருஷ்ணகுமார்

மூல வடிவமான வால்மீகி இராமாயணத்தை எளிய தமிழ்ப் பாடலாக நமக்கு வழங்குகிறார், கான பிரம்மம் கிருஷ்ணகுமார். கேட்டு மகிழுங்கள். இந்த இராம நவமியில் அண்ணல் இராமபிரான் அருள் பெறுங்கள்.

சீர்காழிச் சீராம விண்ணகரம் - ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாணம்

இந்த ஸ்ரீ ராம நவமியில், சீர்காழிச் சீராம விண்ணகரம் - ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு களியுங்கள். 

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இ‘ராம’ என்று இரண்டு எழுத்தினால்

எனக் கம்பநாடன் கூற்றுக்கு அமைய, உங்களுக்கு எல்லா நலன்களும் பெருகட்டும். உங்கள் இல்லத்தில் மங்கலமும் மகிழ்ச்சியும் திகழட்டும். 

அர்ச்சகர் - சாரங்கன் பட்டாச்சாரியார்
ஒருங்கிணைப்பு - ராம்குமார்

Tuesday, April 20, 2021

சீதம்மா மாயம்மா | Seethamma Mayamma | Thyagaraja Kriti | Krishnakumar

இராம நவமியை முன்னிட்டு, தியாகராஜர் கிருதியான 'சீதம்மா மாயம்மா' என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.  இராமபிரான் அருள் பெறுங்கள்.

Singapore Sri Krishnan Temple & Chinese Temple

சிங்கப்பூரின் வாட்டர்லூ தெருவில் கிருஷ்ணன் கோவிலும் சீனக் கோவிலும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இதில் ஒரு கோவிலுக்கு வரும் பக்தர்கள், அடுத்த கோவிலுக்கும் சென்று வழிபடுகின்றனர். பல்லின மக்கள் வாழும் சிங்கப்பூரில், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக இவை திகழ்கின்றன. இந்தக் கிருஷ்ணன் கோவில், 1870இல் கட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் மிகப் பழைமையான கோவில்களுள் ஒன்றான இது, அந்நாட்டின் தேசிய நினைவுச் சின்னமாகவும் அறிவிக்கப்பெற்றுள்ளது. இராம நவமியை முன்னிட்டு, இந்தக் கோவில்களைக் கண்டு மகிழுங்கள்.

Sri Krishnan Temple & Kwan Im Thong Hood Cho Temple are situated next to next in Waterloo Street, Singapore. These temples are known for having evolved a social practice termed "cross-worshipping", where many devotees of either temple also worship at the other. This practice is commonly seen as a microcosm of Singapore's multi-religious society.

Monday, April 19, 2021

அன்பே ஆரமுதே அருட்கடலே | தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி | கிருஷ்ணகுமார்

ஞானானந்தகிரி சுவாமிகள், ஓர் அத்வைத வேதாந்தி. ஆதிசங்கரர் இந்தியாவில் உருவாக்கிய நான்கு அத்வைத மடங்களுள் ஒன்றான ஜோதிர்மடத்தின் பீடாதிபதியாக விளங்கியவர். இமயமலையில் தவமியற்றி, கங்கோத்ரியில் பல ஆண்டுகளைக் கழித்த ஞானானந்தர், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றதோடு, திபெத், நேபாளம், இலங்கை, மலேசியா முதலிய இடங்களுக்கும் சென்று வந்தார். 

திருக்கோவிலூருக்கு அருகில் தபோவனம் ஒன்றை ஏற்படுத்தி, பக்தர்களுக்கு வழிகாட்டினார். நாம சங்கீர்த்தனத்தில் பெரிதும் ஆர்வமுடைய ஞானானந்தரைப் பின்பற்றி இன்றளவும் இவர்தம் சீடர்கள் பஜனைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இவரைப் பற்றிய 'அன்பே ஆரமுதே அருட்கடலே' என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். குருவருளும் திருவருளும் பெறுங்கள்.

#Shorts: Agarbathi against Gravity

Have you ever seen such a rise against gravity in an agarbathi?

நம் வீட்டில் புவியீர்ப்பை மீறி, வான் நோக்கி நிமிர்ந்த அகர்பத்தியின் சாம்பல். இது மாதிரி பார்த்திருக்கீங்களா?

Sunday, April 18, 2021

உருகி உருகி உன்னை அழைக்கின்றேன் | URUGI URUGI UNNAI AZHAIKINDREN | தபோவனம் ஞானானந்தா

தபோவனம் சத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி அவர்களைப் பற்றிய 'உருகி உருகி உன்னை அழைக்கின்றேன்' என்ற புகழ் பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். குருவருள் பெறுங்கள்.

நடிகர் விவேக்கிற்குச் சிலை வைக்கணும் - ஓவியர் ஸ்யாம்

நடிகர் விவேக்கிற்கு ஓவியர் ஸ்யாம், தன் ஓவியத்தின் மூலம் அஞ்சலி செலுத்துகிறார். விவேக் உடனான தம் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். விவேக்கிற்குச் சிலை வைக்கணும் என்று அவர் சொல்வது ஏன்? பதிவைப் பாருங்கள்.

Saturday, April 17, 2021

விதைகள் | Seeds

மயில் மாணிக்கம், புடலை, வெண்டை, மிளகாய், தூதுவளை, காராமணி ஆகியவற்றின் விதைகள் எப்படி இருக்கும் தெரியுமா? அவற்றை அந்தந்தச் செடிகொடியிலிருந்து எப்படி எடுக்க வேண்டும் தெரியுமா? இந்த விதைகள் உங்களுக்கு வேண்டுமா? இந்தப் பதிவைப் பாருங்கள்.

#Shorts: Climbing Cats

மரமேறும் பூனைகள்

Friday, April 16, 2021

A Ride to Palm Springs, USA

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், பாம் ஸ்ப்ரிங்ஸ் (Palm Springs) என்ற பகுதியில் உள்ள ஆண்ட்ரியாஸ் கேன்யான் (Andreas Canyon), இந்தியன் கேன்யான் (Indian Canyon) ஆகியவை புகழ் பெற்றவை. இங்கே பழைமை வாய்ந்த பனை மரங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் பனைமர உயரத்திற்குப் பனையோலைகள் தொங்குகின்றன (கலிபோர்னியக் கூந்தல் பனை?).

இந்தப் பயணத்தில் அமெரிக்காவின் நெடுஞ்சாலைகளின் இரு புறத்தையும் நாம் பார்த்துக்கொண்டே போகலாம். வழியெங்கும் உள்ள மலைகள், மரங்கள், காற்றாலைகள், சாலை அமைப்பு, கட்டமைப்பு... எனப் பலவற்றையும் நாம் கண்டுகளிக்கலாம். அமெரிக்காவின் விரிந்து பரந்த நிலப்பரப்பையும் ஒவ்வொரு நிலப்பரப்பின் தன்மையையும் நாம் பார்க்க முடியும். தமிழ்ப்பெண் ஒருவர் மகிழுந்தை ஓட்டிச் செல்ல, தமிழில் பேசியபடி அனைவரும் பயணிப்பது, கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுவரை பார்க்காத அமெரிக்காவை, இதில் நீங்கள் பார்க்கலாம்.

படப்பிடிப்பு - ஹேமமாலினி லோகநாதன்

Thursday, April 15, 2021

குப்பைமேனியை உண்ணும் பூனைகள் | Cat eats Kuppaimeni | Acalypha Indica

தன் உடலில் உள்ள நச்சுகளை நீக்க, குப்பைமேனி இலைகளையும் வேர்களையும் பூனை சாப்பிடும். இதனால் குப்பைமேனிக்குப் பூனைவணங்கி என்ற பெயரும் உண்டு. நம் தெருவில் ஒரு வீட்டில் குப்பைமேனிச் செடிகளைப் பிடுங்கி வீதியில் தூக்கிப் போட, பூனைகள் அவற்றை ஆவலுடன் கடித்து உண்பதைப் பாருங்கள். 

Wednesday, April 14, 2021

ஆரோக்கியத்தின் ரகசிய சாவி - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 11

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஓவியர் ஸ்யாம் தமது ஆரோக்கியத்தின் ரகசியங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மார்க்கண்டேயராக, என்றும் இளைஞராக விளங்கும் அவரது வாழ்க்கை முறை, உணவு முறை, மருத்துவ முறை ஆகியவை, பிறருக்கு வழிகாட்டக் கூடியவை. அனுபவம் சார்ந்த இந்தக் குறிப்புகள், உங்கள் அன்றாடச் சிக்கல்கள் பலவற்றைத் தீர்க்கக் கூடியவை. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

பிலவ - தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் | 12 ராசிகளுக்கும் | வேதா கோபாலன்

நண்பர்கள் அனைவருக்கும் பிலவ தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்தப் புத்தாண்டு உங்களுக்கு எப்படி இருக்கும்? வேதா கோபாலன் வழங்கும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்களைப் பாருங்கள்.

Tuesday, April 13, 2021

தண்டுக் கீரையை உண்ணும் பூனை | Cat is eating Thandu Keerai

நேற்று இரவு 7 மணியளவில் எங்கள் வீட்டின் எதிரே வளர்ந்திருந்த தண்டுக் கீரைச் செடியைப் பூனை ஒன்று உண்ணக் கண்டேன். பூனையை வளர்ப்பவரிடம் கேட்டதற்கு, சும்மா கடிக்கும், சாப்பிடாது என்றார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Monday, April 12, 2021

சென்னை மெட்ரோவில் ஒரு சிற்றுலா | A ride in Chennai Metro

சென்னை மெட்ரோவில் 2020 டிசம்பர் 10ஆம் நாள் (எங்கள் திருமண நாள்) குடும்பத்துடன் சிற்றுலா வந்தோம். அதில் சில காட்சிகள் இங்கே.

சந்திர சேகரேந்திர சரஸ்வதியே சரணம் | Chandra Sekarendra Saraswathi

சந்திர சேகரேந்திர சரஸ்வதியே சரணம்
காஞ்சிவாழ் தயாநிதியே

என்ற பாடலைக் கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். காஞ்சி மகான் அருள் பெறுங்கள்.

Sunday, April 11, 2021

நம்ம வீட்டு மாங்காய் | Mangoes at our Garden

மங்கல நிகழ்வுகளில் மாவிலைகள் கட்டுவார்கள். மாவிலைகள் எப்போதுமே இருக்கின்ற மாமரம், எத்தனை மங்கலகரமானது! இந்தப் பருவத்தின் முதல் விளைச்சலாக, நம் வீட்டு மாமரத்தின் கொடை இதோ.

Sparkling Sun | மின்னும் சூரியன்

மாமரக் கிளைகளின், இலைகளின் ஊடே மின்னும் சூரியன்!

Saturday, April 10, 2021

மும்பையில் ஓர் உலா | A Trip into Mumbai

மும்பை மாநகரில் 2015இல் குடும்பத்துடன் ஓர் உலாச் சென்றோம். மும்பையின் பிரமாண்டத்தையும் வானுயர்ந்த கட்டடங்களையும் கடல் மீது எழுப்பிய பாலத்தையும் இதில் நீங்கள் பார்க்கலாம். அடுத்து மும்பையிலிருந்து ஷிர்டிக்குப் பயணித்தோம். அந்தப் பகுதிகள் இன்னும் கிராமிய மணத்துடன் இருக்கின்றன. இங்கே நூறு கிலோமீட்டருக்குள் நூற்றாண்டு இடைவெளியை நீங்கள் காணலாம்.

#Shorts: தூதுவளை | Solanum Trilobatum

நம் வீட்டுத் தோட்டத்தில் தூதுவளைக் கொடி. இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

Friday, April 09, 2021

#Shorts: Red vented Bulbul - A closeup look

என் ஜன்னலுக்கு அருகே சின்னான் (செங்குதக் கொண்டைக் குருவி), சற்றே இளைப்பாறியது. செங்குதம் என அழைப்பதற்கு ஏற்ப, அதன் வாலடி இரத்தச் சிவப்பாக இருப்பதைப் பாருங்கள்.

கற்றாழை - அப்படியே சாப்பிடலாம் | Aloe Vera

கற்றாழை எதற்கு மருந்து? அதை எப்படிச் சாப்பிடுவது? எப்போது சாப்பிடுவது? இதோ பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

Thursday, April 08, 2021

கலைஞர் பற்றி ஜெயகாந்தன் - சுகதேவ் நேர்காணல் | Sugadev Interviews Jayakanthan

முரசொலி அறக்கட்டளை வழங்கிய கலைஞர் விருதினை 2007இல் ஜெயகாந்தன் பெற்றார். அப்போது, இந்த விருது தனிச் சிறப்புக்குரியது எனக் குறிப்பிட்டார். விருதினைப் பெற்றதற்காக, ஜெயகாந்தன் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்தத் தருணத்தில், மூத்த பத்திரிகையாளர் சுகதேவ், ஜெயகாந்தனைச் சந்தித்து உரையாடினார். இவர்களின் உரையாடல், அண்ணாகண்ணன் ஆசிரியராக இருந்த தமிழ் சிஃபி இணைய இதழில் 2007 மார்ச் 6ஆம் தேதி வெளியானது. ஜெயகாந்தன் நினைவு நாளான இன்று (ஏப்ரல் 8), ஜெயகாந்தனின் குரலைக் கேளுங்கள்.

நியூசிலாந்தில் வீட்டுத் தோட்டம் | Home Garden in New Zealand

நம் யூடியூப் அலைவரிசையில் இது வரை ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆப்பிரிக்க  கண்டங்களிலிருந்து காட்சிகளை வழங்கினோம். இப்போது, ஓசியானியா கண்டத்திலிருந்து ஒரு பதிவு.

சொர்க்கப் பறவை (Bird of Paradise) உள்ளிட்ட அரிய வகைப் பூக்களையும் தாவரங்களையும் வளர்த்து வரும், நியூசிலாந்தில் வாழும் திருமதி துளசி கோபால் அவர்களின் வீட்டுத் தோட்டம் இதோ. கண்டு மகிழுங்கள்.

Wednesday, April 07, 2021

A simple idea - 9

ஒரு காலி டப்பாவை செல்பேசிக் கூடாக உருவாக்க முடியும். எப்படி என்று பாருங்கள்.

Tuesday, April 06, 2021

அதிசார குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 | வேதா கோபாலன் | Athisara Gurupeyarchi Palan 2021

இன்று (06-04-2021) குருபகவான் மகர ராசியிலிருந்து அதிசாரமாக கும்ப ராசிக்குப் பெயர்ச்சி அடைந்தார். 15-09-2021 வரை கும்ப ராசியிலேயே சஞ்சரித்து, மீண்டும் மகர ராசிக்குத் திரும்புவார். இந்த அதிசார குருப்பெயர்ச்சி, உங்களுக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை உரிய பரிகாரங்களுடன் ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.

Monday, April 05, 2021

Cat on the car

Cat on the car.

மகிழுந்து மேலொரு பூனை.

பெல்ஜியத்தில் வீட்டுத் தோட்டம் | Home Garden in Belgium

அழகுணர்வும் ரசனையும் ஒரு புள்ளியில் சேர்ந்தால் எப்படி இருக்கும்? இதோ இப்படித்தான் இருக்கும். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் ராகுல், ஸ்வேதா தம்பதியினரின் வீட்டுத் தோட்டம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

Sunday, April 04, 2021

#Shorts: Sunset at 600% Speed

Increased the speed from 100% to 600%

பொறுமையாகப் பார்ப்பதற்குப் பலருக்கும் நேரம் இருப்பதில்லை. எனவே, 100% வேகத்தில் எடுத்த இந்தக் காட்சிகளை 600% வேகத்திற்கு முடுக்கியுள்ளேன். 

சூரியன் மறையும் காட்சிகள் - ஒரு தொகுப்பு

சூரியன் மறையும் காட்சிகள் - ஒரு தொகுப்பு.

A playlist of Sunset.
https://www.youtube.com/playlist?list=PLMaFf7VrfFhKB7XMEfGM4GFmIYOD7VuR8