!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2022/05 - 2022/06 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, May 31, 2022

Q&A: Sponsor in Tamil | ஸ்பான்சர் - தமிழில் என்ன?

நண்பர் வெங்கி ராமச்சந்திரன், மன்றம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் அண்மை நிகழ்ச்சி ஒன்றின் தொடர்ச்சியாக, லிங்க்டுஇன் (LinkedIn) தளத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். ஸ்பான்சர் (Sponsor) என்ற சொல்லைத் தமிழில் எவ்வாறு வழங்கலாம் என்ற அவரது கேள்விக்கு எனது பதில் இங்கே.

ராம ஹரே ஹரே! கிருஷ்ண ஹரே ஹரே! | Rama Hare Hare! Krishna Hare Hare!

காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலில், முகுந்த  இராமானுஜ  தாசன் குழுவினர் நடத்திய பஜனையிலிருந்து ஒரு பாடல். பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

பெண்குயிலின் இன்குரல்

 ஆண்குயிலின் கேள்விக்குப் பெண்குயிலின் பதில்.


Asian Female Koel's reply to Male Koel.

#awesome #AsianKoel #Koel #SingingKoel #குயில் #பெண்குயில் #குக்கூ #Eudynamysscolopaceus #VoiceofKoel #Koelvoice #Koelsong #songofkoel #FemaleKoel #AsianKoelFemale #Asiankoelscall #asiankoelcalling #Asianfemalekoel #cuckoocuckoo #koo #birdvoice #birdscall #bird #birdfeeding #BirdsSeenIn2022 #birds #birdwatching #birding #nature #NatureBeauty #garden #birdwatcher #birdlovers #birdlover #birders #birdlife

https://youtu.be/ZY24G0ahpDE

Sunday, May 29, 2022

கோவையில் பேருந்துப் பயணம் | Coimbatore Bus Trip

அண்மையில் கோவையில் கவுண்டம்பாளையத்திலிருந்து மாதம்பட்டி அருகில் உள்ள தென்கரை என்ற இடத்திற்குச் செல்ல (25 கி.மீ.), ஓலாவில் வாடகை மகிழுந்தை அழைத்தோம். ரூ.392 கட்டணம் காட்டியது. வந்த ஓட்டுநர், ரூ.700 கேட்டார். முடியாது என்றோம். அவரே சரி என்று ரத்து செய்துவிட்டுச் சென்றார். அடுத்தடுத்த ஓட்டுநர்களும் அதிகம் கேட்டார்கள். எனவே, பேருந்தில் செல்ல முடிவெடுத்தோம். ஆனால், கவுண்டம்பாளையத்திலிருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் செல்ல, ஓலாவில் ரூ.88 காட்டியது. வந்த ஓட்டுநர் ரூ.120 கேட்டார். வேறு வழியில்லாமல் கொடுத்தோம். 

காந்திபுரத்திலிருந்து மாதம்பட்டிக்குப் பேருந்தில் ஏறினோம். ஒருவருக்கு ரூ.15 மட்டுமே கட்டணம், 3 வயது மகனுக்குக் கட்டணம் வாங்கவில்லை. (மொத்தம் 45). மாதம்பட்டியில் இடம் சரியாகத் தெரியாமல், ஒரு நிறுத்தம் முன்னதாக இறங்கினோம். அந்த இடத்திலிருந்து தென்கரை செல்ல (7 - 8 கி.மீ.), ஆட்டோ ஓட்டுநர் ரூ.500 கேட்டார். வேண்டாம் என்று மீண்டும் பேருந்தில் ஏறினோம். இது விரைவுப் பேருந்து போலும். எங்கள் நால்வருக்கும் ஒரு நிறுத்தத்திற்கே தலா ரூ.15 கட்டணம் வசூலித்தார் (மொத்தம் ரூ.60). மாதம்பட்டியிலிருந்து நாங்கள் செல்ல வேண்டிய தென்கரை (5.6 கி.மீ.) என்ற ஊருக்குச் செல்ல, ஆட்டோ கட்டணம் ரூ.150. ஆக, ரூ.375 செலவில் அங்கே சென்று சேர்ந்தோம். 

இந்தப் பயணமும் நன்றாகவே இருந்தது. கோவையில் எங்கள் பேருந்துப் பயணத்தின் சில காட்சிகள் இங்கே. 

நித்திலாவின் புதிய ஜிமிக்கி கம்மல்

நித்திலாவின் புதிய ஜிமிக்கி கம்மல்.


New ear ring of Nithila.


#fancy #ornament #jewellery #jewel #jewelry #jewelrydesigner #jewelrysale #jewels #earring #women #girl #appearance #style #makeup #modern #beauty #lovely #art #Chennai #TamilNadu #India #smile


https://youtu.be/1WQAJlT-xhc

Saturday, May 28, 2022

கருவேப்பிலைக் குழம்பு | Karuveppilai Kuzhambu | Curry Leaves Gravy

How to make tasty & healthy Karuveppilai Kuzhambu (Curry Leaves Gravy) by Sudha Madhavan.

கருவேப்பிலை, தங்கம் போன்றது, பல நோய்களைத் தீர்க்கும் மாமருந்து. அற்புதமான சுவையும் மணமும் கொண்டது. தூக்கி எறியக்கூடியது இல்லை. தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடக்கூடியது. இதைக் கொண்டு கருவேப்பிலைக் குழம்பு செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். 

Friday, May 27, 2022

புலிப்பாணி சித்தர் ஜீவ சமாதி | Pulippani Siddhar Jeeva Samadhi | Palani

போகரின் முதன்மைச் சீடர், புலிப்பாணி. பழநி தண்டாயுதபாணி சுவாமி சிலையை நவபாஷாணத்தைக் கொண்டு போகர் உருவாக்கிய போது, உடனிருந்து உதவியவர். புலிப்பாணி, மருத்துவத்திலும் ஜோதிடத்திலும் வல்லவராக விளங்கியவர். ஜோதிட நூல்கள் பலவற்றை இயற்றியுள்ளார். இவரது வழியில் புலிப்பாணி ஜோதிடம் எனச் சிலர் கணித்து வருகின்றனர். 

அண்மையில் பழநிக்குச் சென்றபோது புலிப்பாணி சித்தர் ஜீவசமாதியைத் தரிசித்தோம். நாம் சென்ற நேரத்தில் பூஜையும் நடைபெற்றது எதிர்பாராதது. 

இந்த ஜீவ சமாதியில் தொட்டிச்சி அம்மன் சந்நிதி உள்ளது. இந்தத் தொட்டிச்சி அம்மன் உருவச் சிலை, பழநி தண்டாயுதபாணியைப் போன்றே உருவ அமைப்புடன் புலிப்பாணியால் வடிக்கப்பெற்றது என அங்கே உள்ள பூசகர் தெரிவித்தார். அந்த அரிய காட்சிகளை இங்கே பாருங்கள். படமெடுக்க நமக்கு அனுமதி வழங்கிய ஸ்ரீமத் போகர் பழநி ஆதீனத்திற்கு நன்றி. 

Thursday, May 26, 2022

இது என்ன காய்? | Which is this Veggi? | Vegetable Identification

அண்மையில் காய்கறிக் கடைக்குச் சென்றோம். காய்கறிகளின் பெயர்களைச் சொல்லு என்று எங்கள் மகன் ஹரி நாராயணனுக்குச் சிறிய தேர்வு வைத்தோம். அவன் தேர்ச்சி பெற்றானா என்பதை நீங்கள்தான் பார்த்துச் சொல்ல வேண்டும்.

Which is this Veggi? A vegetable identification exercise to our son Hari Narayanan.

Immediate Jobs in IT Industry | கைமேல் வேலை | கணியம் சீனிவாசன் நேர்காணல்

வேலை தேடுகிறீர்களா? முன்னேற விரும்புகிறீர்களா? சாதிக்கத் துடிக்கிறீர்களா? உங்களிடம் இந்தப் படிப்பும் இந்தத் திறனும் இருந்தால் போதும். இதோ கைமேல் வேலை. உலகெங்கும் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள், கூவி அழைக்கும் நிறுவனங்கள், கணியம் சீனிவாசன் சொல்வதைக் கேளுங்கள்.

Wednesday, May 25, 2022

English Vadakam | ஆங்கில வடகம் | Designer Vadakam | Alphabets in frying pan

நீ உண்ணும் ஒவ்வோர் பருக்கையிலும் உன் பெயர் இருக்கிறது என்பார்கள். இங்கோ நம் பெயர் வடிவிலேயே உணவு தயாராகிறது. ஆங்கில எழுத்து வடிவில் வடகம். இது தமிழுக்கு வருமா?

Alphabets in frying pan; designer vadakam; stylish food.

#cook #cooking #recipe #southindian #Indianrecipe #உணவு #food #foodblog #foodblogger #foodexperience #tamilfood #indianfood #indianfoodblogger #indianfoodbloggers #sidedish #dish #dishes #kitchen #சமையல் #சாப்பாடு #samayal #sappadu #Design #Designer #tasty #taste #vadakam #vatral #appalam #aplam #papad #வடகம் #வற்றல் #வடாம் #அப்பளம் #எண்ணெய் #பொரியல் #ஆங்கிலம் #தமிழ் #மொழி #புதுமை #வடிவம் #vadaam

Squirrel's attempt to enter kitchen | Mosquito net's another use

A squirrel's attempt to enter our kitchen.

ஜன்னல்களுக்குக் கொசுவலை போடும்போது, கொசுவுக்காக என்றுதான் முதலில் நினைத்தோம். பிறகுதான் குளவி, வண்டு, பல்லி, கரப்பான், சிலந்தி, பூச்சிகள், பூனை போன்ற பலவற்றையும் அவை தடுத்து நிறுத்துவதைக் கண்டோம். இன்று அணில் ஒன்று, நம் சமையலறைக்குள் நுழைய முயல்வதைப் பாருங்கள். கொசுவலை போடாவிட்டால் என்ன ஆகும்?

Tuesday, May 24, 2022

Petrol Rs.102.82

பெட்ரோல் விலை ரூ.9 குறைக்கப்பட்டு, ரூ.102.82 என்ற விலையில் இன்று விற்பனையாகிறது.

Petrol Rs.102.82 at Chennai, nine rupees reduced from Rs.111+

#petrol #fuel #fuelprice #bunk #petrolbunk #petrolstation #oil #petroleum #petrolmeter #chennai #BharatPetroleum #BPCL #சென்னை #பெட்ரோல் #petrolpump #PetrolPrice #PetrolDieselPrice 

https://youtu.be/zTJLNqa4eKQ

Women in IT | How to grow in IT | ஐ.டி துறையில் பெண்கள் முன்னேற | நித்யா துரைசாமி

தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் முன்னேற என்ன செய்ய வேண்டும்? எந்தத் தடைகளைக் கடந்து வர வேண்டும்? எத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்? இந்தத் துறையில் 15 ஆண்டுகளாகப் பணியாற்றும் நித்யா துரைசாமி, தமது அனுபவங்களின் வழியாக நமக்கு வழிகாட்டுகிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்களுக்குத் தெரிந்த பெண்களுடன் பகிருங்கள்.

Monday, May 23, 2022

செம்போத்து என்கிற செம்பகம் | Greater Coucal | Bird Feeding

தமிழீழத்தின் தேசியப் பறவை செம்போத்து, இன்று நம் இல்லத்திற்கு வருகை தந்து, நமது எளிய உணவை ஏற்றுக்கொண்டது.

Greater Coucal's visit to our house today. 

#GreaterCoucal #Coucal #Centropussinensis #செம்பகம் #செம்போத்து #Sembothu #Sembagam #birdfeeding #தமிழீழம் #தமிழ்ஈழம் #ஈழம் #தேசியப்பறவை #eelam #tamileelam #tamil #nationalbird #bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #Birdsofparadise #birds_nature #birding #nature #NaturePhotography #NatureBeauty #garden #birdwatcher #birdlovers #birdlover #birdingphotography #birders #birdlife #Chennai #Tamilnadu #India #Tambaram #பறவை #சென்னை #தாம்பரம் #தமிழ்நாடு

பணவீக்கம் உச்சம் - எதில் முதலீடு செய்வது? | High Inflation - Where to invest?

பணவீக்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்காவில் பணவீக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு (8.5%) உச்ச நிலையைத் தொட்டிருக்கிறது. இந்தியாவிலும் 7 சதத்திற்கும் மேலாக இருக்கிறது. இந்திய வங்கிகளில் ஓராண்டுக்கான வட்டி விகிதம் 5% என்ற அளவிற்கே உள்ளது. இதனால் நம் முதலீட்டு மதிப்பும் வருவாயும் வளருவதற்குப் பதிலாகத் தேய்ந்து வருகின்றன. இந்த நிலையில் நாம் எதில் முதலீடு செய்வது? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் ஆலோசனைகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

High Inflation across the globe. Bank Fixed Deposits are giving negative returns. Where to invest? An interview with Ramakrishnan V Nayak.

#money #investment #inflation #alltimehigh #alert #finance #economics #budget #priceindex #retail #urban #rural #middleincome #income #investor #lowincome #middleclass #return #returns #roi #india #market #nidhi #USA #global #government #FD #fixeddeposit #equity #sharemarket #stockmarket #mutualfund #funds #fund #volatility #பணம் #பணவீக்கம் #நிதி #முதலீடு #வங்கி #வட்டிவிகிதம் #பங்குச்சந்தை #பங்குசந்தை #மியூச்சுவல்பண்டு

Sunday, May 22, 2022

லக்‌ஷன்யா பார்கவன் ஓவியங்கள் | Lakshanya Bhargavan Drawings - A Review

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் எட்டாம் வகுப்புப் படிக்கிறார், லக்‌ஷன்யா பார்கவன். இவர் வரைந்த ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

Here is an art review by Namakkal Balamurthy on the drawings of Lakshanya Bhargavan, a grade 8 student at Congo (Central Africa).

Saturday, May 21, 2022

வாழைப்பழ அல்வா | Banana Halwa Recipe

வாயூறச் செய்யும் சுவையும் வளமான சத்தும் நிறைந்த வாழைப்பழ அல்வா செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். 

How to make tasty & healthy Banana Halwa by Sudha Madhavan.

Fashion Dolls at Pothys

என்னைப் பார், என் அழகைப் பார்' என ஒய்யாரமாக நிற்கும் அழகிகளின் அணிவகுப்பு இதோ. இடம் - போத்தீஸ், குரோம்பேட்டை.
Beautiful fashion dolls at Pothys, Chromepet.

Friday, May 20, 2022

காஞ்சிபுரம் கற்சங்கிலி

கல்லில் வடித்த கவி, காலத்தை வென்ற கலை, நூற்றாண்டுகளைக் கடந்த நூதனம், அந்தரத்தில் அசையும் அதிசயம், கடும்பாறையைக் கொடியென வளைத்த வல்லமை,  உலகோர் வியக்கும் உன்னதம், தரணி போற்றும் தமிழர் கைத்திறம்,


காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலில் ஒளிவீசும் ஒய்யாரக் கற்சங்கிலி இதோ.


https://youtu.be/Bi1mONbuDQk

Thursday, May 19, 2022

உறவுகள் அந்நியமாவது ஏன்? | நிர்மலா ராகவன்

நாம் கண்ணெதிரே காணும் இன்னோர் உண்மை, உறவுகள் அந்நியமாகி வருகின்றன. முன்போல் ஒட்டுதல் இல்லை, நெருக்கம் இல்லை, அடிக்கடி பேசுவதும் பழகுவதும் இல்லை. குடும்ப நிகழ்ச்சிகளில் கூடிக் கலைவதுடன் சரி. இதற்கு என்ன செய்யலாம்? சுதா மாதவன் கேள்விக்கு நிர்மலா ராகவன் வழங்கும் பதில் இதோ.

To Find Heart Attack | மாரடைப்பைக் கண்டுபிடிக்க உதவும் சிரிப்பு யோகா

இதய நோய் உள்ளவர்களுக்குத் தங்களுக்கு இந்த நோய் இருக்கிறது என்பதே தெரியாது. திடீரென்று ஒருநாள் மாரடைப்பு தாக்கும். மாரடைப்பினால் வலி ஏற்படும் போது கூட, இது ஏதோ ஒரு வலி என அலட்சியம் செய்துவிடுவார்கள். ஹாஹோ சிரிப்பானந்தா செய்து காட்டும் இந்தப் பயிற்சியை மட்டும் உங்களால் செய்ய முடிந்துவிட்டால், உங்களுக்கு மாரடைப்பு இல்லை எனக் கொள்ளலாம். செய்ய முடியவில்லை என்றால், உடனே மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

#heartattack #cardio #cardiology #cardiac #cardiacarrest #doctor #hospital #medical #medicine #heart #pain #symptoms #relief  #yoga #laughteryoga #sirippuyoga #haho #sirippananda #சிரிப்பு #சிரிப்புயோகா #சிரிப்பானந்தா #யோகா #மாரடைப்பு #இதயம் #இருதயம் #மருத்துவம் #மருத்துவர்

Wednesday, May 18, 2022

Why I Love Open Source? | கட்டற்ற மென்பொருள் மீது ஏன் காதல்?| Kaniyam Shrinivasan

Why I Love Open Source? Open interview with Kaniyam T.Shrinivasan

கட்டற்ற மென்பொருள் மீது எப்படி ஆர்வம் வந்தது? இது எப்படி தன் வாழ்வையே மாற்றியது? இதில் இருக்கும் வாய்ப்புகள், அற்புதங்கள், ஆச்சரியங்கள் என்னென்ன? இதோ மனம் திறக்கிறார் கணியம் த.சீனிவாசன்.

https://youtu.be/rTuGoXB8Noc

Tuesday, May 17, 2022

Asian Koel Singing - 15 | குயிலின் அமுத கானம் - 15

சென்னையில் இன்று பெருமழை. சட்டென்று பிடித்து, சடசடவென அரை மணி நேரம் பெய்து, டக்கென்று நின்றது. அதன் பிறகு, சூழலே ரம்மியமாக மாறிவிட்டது. மப்பும் மந்தாரமுமான வானம், இதமான குளிர்ச்சி, அளவான வெளிச்சம், சுகமான காட்சிகள் என இருந்த போது இந்தக் குயிலின் குரல் கேட்டது. எத்தனை பாவங்களில் தன் துணையை அழைக்கிறது பாருங்கள். கடைசியில் அதன் துணைக் குயிலும் எதிர்க் குரல் கொடுக்க, அதனை நோக்கி விரைகிறது. உலகம் இனியது.

Asian Koel's call in romantic mood after a heavy rain at Chennai.

Squirrels play

 Squirrels play at our roof.


எங்கள் வீட்டு மாடியில் அணில்கள் விளையாடும் காட்சி.


https://youtu.be/ZrmJKvmbUuQ

Receptionist to Data Scientist | Success Story of Nithya Duraisamy

ரிசப்ஷனிஸ்ட் ஆக வாழ்வைத் தொடங்கிய நித்யா, இன்று பன்னாட்டு நிறுவனங்களில் டேட்டா சயின்டிஸ்ட் ஆகப் பணியாற்றி வருகிறார். பிக் டேட்டா (Big Data), மெஷின் லேர்னிங் (Machine Learning)  உள்ளிட்ட திட்டப் பணிகளில் அனுபவம் பெற்றதுடன் இவை குறித்துப் புத்தகங்களும் எழுதியுள்ளார். டெஸ்டர் என்று தன்னை மட்டம் தட்டியவர்கள் முன்னால், புதிய தொழில்நுட்பங்களில் நிரலாளராக நிமிர்ந்து நிற்கிறார். தமிழ்வழியில் படித்தாலும் முன்னேற முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார். ஊக்கம் தரும் இவரது வெற்றிப் பயணம், இதோ இங்கே.

Monday, May 16, 2022

எஸ்.சுதர்சன் ஓவியங்கள் - ஒரு மதிப்பீடு

சென்னையில் எட்டாம் வகுப்புப் படிக்கும் எஸ்.சுதர்சனின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

Here is an art review by Namakkal Balamurthy on the drawings of Sudharsan. S, a class 8 student at Chennai.

அதிரடி குத்தாட்டம்

 Super Kuthu Dance


அதிரடி குத்தாட்டம்

#palani #kuthu #kuthupattu #kuthudance #dance #art #music #folk #folklore #challenge #பழநி #பழனி #குத்து #குத்துப்பாட்டு #குத்துபாட்டு #குத்தாட்டம்

https://youtu.be/73GdeKnOSQo

Sunday, May 15, 2022

பழநியில் அதிரி புதிரி குத்தாட்டம் | Palani Kuthu Dance

இதை நடனம் ஆடாமல், கை கால் அசையாமல் பார்த்துவிடுங்கள், பார்க்கலாம்.

#palani #kuthu #kuthupattu #kuthudance #dance #art #music #folk #folklore #challenge #பழநி #பழனி #குத்து #குத்துப்பாட்டு #குத்துபாட்டு #குத்தாட்டம் 

Saturday, May 14, 2022

எள்ளு சாதம் என்கிற எள்ளோரை | Sesame Rice Recipe

புளியோதரை சாப்பிட்டிருப்பீர்கள். எள்ளோரை தெரியுமா? சுவையும் சத்தும் கமகம மணமும் கொண்ட எள்ளோரை (எள்ளு சாதம்) செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். 

How to make tasty Sesame Rice by Sudha Madhavan.

மேடவாக்கம் மேம்பாலத்தில் ஒரு பயணம் | A ride in Medavakkam Flyover

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்த மேடவாக்கம் மேம்பாலம், சென்னையின் மிக நீளமான மேம்பாலம் (2.3 கி.மீ.). ரூ.95.21 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்வோருக்குப் பயண நேரம் வெகுவாகக் குறையும். இந்த மேம்பாலத்தின் மீது இன்று ஒரு பயணம்.

A ride in Medavakkam Flyover, 2.3-km three-lane flyover at Medavakkam, the longest in Chennai.

#medavakkam #flyover #bridge #chennai #tamilnadu #infra #infrastructure #road #highways #nationalhighways #mkstalin #stalin #longest #overbridge #மேடவாக்கம் #மேம்பாலம் #முகஸ்டாலின் #ஸ்டாலின் #முதலமைச்சர் #தமிழ்நாடு #தாம்பரம் #வேளச்சேரி #tambaram #velachery #chiefminister 

பழநி முருகன் கோவில் - படியேறிச் சென்று தரிசித்த அனுபவம் | Palani Murugan Temple

பழநிக்குச் செல்ல வேண்டும் என்பது எங்கள் நீண்ட கால விருப்பம். இறையுதிர்காடு தொடர்கதையை விகடனில் படித்த பிறகு அந்த விருப்பம், இன்னும் அதிகரித்தது. போகர், நவபாஷாணத்தால் முருகன் சிலையை வடித்ததை, முருகனின் அற்புத சக்திகளை இந்திரா சௌந்தர்ராஜன் அழகுற அதில் எழுதியிருப்பார். இறையருளால் சில நாள்கள் முன், பழநிக்குச் சென்றோம். மலை உச்சிக்குப் படியேறிச் சென்றோம். எங்கள் மகன் ஹரி நாராயணனும் (மூன்று வயது) பிஞ்சுப் பாதங்களால் படியேறி வந்தான். எங்கள் பயணக் காட்சிகளின் தொகுப்பு இதோ.

Friday, May 13, 2022

வீதியில் ஒலித்த நாதஸ்வரம் | Nadaswaram music on street

தாம்பரம், முடிச்சூர் சாலையில் நண்பகலில் இந்தப் பெரியவரைப் பார்த்தேன். பெரிய நாதஸ்வரத்துடன் ஒவ்வொரு கடை வாசலிலும் சில நொடிகள் மட்டும் வாசித்துச் சன்மானம் பெற்றுக்கொண்டிருந்தார். அவரை மேலும் சிறிது வாசிக்கச் சொல்லிப் பதிவு செய்தேன். இவர் எப்படி வாசிக்கிறார் என்று பாருங்கள்.

Nadaswaram music on street at Tambaram, Mudichur road.

Thursday, May 12, 2022

தனித்திருக்கும் பெற்றோர் - தீர்வு என்ன? | Lonely Parents - What is the solution?

Lonely Parents - What is the solution?

அயல்நாட்டில் பிள்ளைகள் இருக்க, முதிய வயதில் தாய்நாட்டில் பெற்றோர் தனித்திருக்கும் நிலை உருவாகிறது. இதற்கு என்ன தீர்வு? சுதா மாதவன் கேள்வியை முன்வைத்து நிர்மலா ராகவன் உடன் ஓர் உரையாடல்.

#seniorcitizen #seniorcitizens #loneliness #lonely #parents #nananani #nana #nani #abroad #foreign #distance #gap #generationgap #solution #issue #issues #solutions #singleparent #singleparents #retired #retiredlife #olderpeople #olderadults #olderworkers #elderly #eldercare #elderlycare #eldercareservices #elders #elder #elderlypeople #oldagehome #parentslove #oldage #older #old #பெற்றோர் #முதியோர் #முதுமை #தாய் #தந்தை #அப்பா #அம்மா #தகப்பன் #அன்னை #முதியோர்இல்லம் #நானாநானி #தாத்தாபாட்டி #தாத்தா #பாட்டி 

Wednesday, May 11, 2022

ஹரி நாராயணனின் ஆயிரம் கேள்விகள் | Thousand Questions by Hari Narayanan

ஹரி நாராயணனுக்கு மூன்றே முக்கால் வயது. இன்னும் பள்ளிக்குச் செல்லவில்லை. அக்காவிடமும் தொலைக்காட்சி வழியாகவும் நிறையக் கற்றுக்கொள்கிறான். அது என்ன, இது என்ன என ஏராளமாகக் கேள்விகள் எழுப்புவான். தமிழ்ச் சொல்லைக் கேட்டு ஆங்கிலத்திலும் ஆங்கிலச் சொல்லைக் கேட்டுத் தமிழிலும் அதைச் சொல்லச் சொல்வான். இதோ இன்று அவன் எழுப்பிய கேள்விகளின் ஒரு பகுதி.

Fun Play at Balloon Castle | French Carnival

Fun Play in Balloon Castle at French Carnival, Coimbatore.

கோவையில் நடைபெற்ற பிரெஞ்சு கார்னிவல் நிகழ்வில் பலூன் கோட்டை அமைத்திருந்தார்கள். இதில் 15 நிமிடம் விளையாட, ஒருவருக்கு ரூ.50 கட்டணம். நித்திலாவும் ஹரி நாராயணனும் உற்சாகமாக விளையாடினார்கள். குழந்தைகள் குதித்து, கும்மாளம் போட்டு, கொண்டாடிய காட்சிகள் இதோ.

Tuesday, May 10, 2022

Drone camera in action

 Drone camera in action at French Carnival, Coimbatore.

டிரோன் கேமரா வழியாகப் படம் பிடிப்பது இப்போது பரவலாகி வருகிறது. பெரிய இடத்துக் கல்யாணம், தேரோட்டம், மாநாடு, விழா, கூட்டம் போன்ற பல இடங்களில் இவற்றைக் காண்கிறோம். கோவையில் நடைபெற்ற பிரெஞ்சு கார்னிவல் நிகழ்வில் டிரோன் கேமரா சுற்றிச் சுற்றி வந்து படம்பிடித்த காட்சி இதோ.

#drone #dronecamera #camera #aerial #aerialshot #action #coimbatore #cbe #frenchcarnival #thefrenchtown #டிரோன் #ட்ரோன் #கேமரா #காமரா #கோவை #கோயம்புத்தூர் 

https://youtu.be/3EW8qatyneg

சிரிப்பானந்தா - ஓடும் ரயிலில் ஒரு நேர்முகம் | Sirippananda - An interview in running train

நேற்று இரவு சதாப்தி விரைவு ரயிலில் பயணம். கோவையிலிருந்து சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்தோம். C3 பெட்டியில் எங்கள் இருக்கை. C4 பெட்டியில் சிரிப்பானந்தா இருந்தார். இருவரும் சற்றே எழுந்து வெளியே வந்தபோது எதிர்பாராமல் சந்தித்தோம். அதே வேகத்தில், ஓடும் ரயிலிலேயே அவருடன் ஒரு நேர்காணல். 

Yesterday night at Shatabdi Express, met Haho Sirippananda, Laughter Yoga trainer. Instantly interviewed him in the running train from Coimbatore to Chennai.

#சிரிப்புயோகா #SirippuYoga #LaughterYoga #ஹாஹோசிரிப்பானந்தா #HaHoSirippananda #ஹாஹோ #HaHo #Sirippu #Yoga #Laughter #Humour #நகைச்சுவை #ஹாஸ்யம் #சிரிப்பானந்தா #Sirippananda #shatabdi #coimbatore #chennai #train #rail #superfast #indianrailway #railway #comedy #comedian 

Monday, May 09, 2022

அவமானமே வெகுமானம் - தாடி பாலாஜி பேச்சு | Thadi Balaji Speech at Coimbatore

'அவமானமே வெகுமானம். நீங்கள் பெறும் ஒவ்வோர் அவமானமும் உங்களை உயர்த்தும்' என்கிறார் தாடி பாலாஜி. கோவையில் நடைபெற்ற பிரெஞ்சு கார்னிவல் நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சிப் புகழ், நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜியின் ருசிகரப் பேச்சு இதோ.

Comedian Thadi Balaji Speech at Coimbatore French Carnival.

#thadibalaji #dhadibalaji #comedy #comedian #actor #tamilactor #coimbatore #frenchcarnival #thefrenchtown #kamal #rajarajan #drone #dronecamera #vijaytv #yashikaanand 

Yashika Anand Speech | லெஜண்ட் சரவணன் தன்னம்பிக்கையின் உதாரணம் - யாஷிகா ஆனந்த் பேச்சு

'லெஜண்ட்' சரவணன், தன்னம்பிக்கையின் உதாரணம். கோவையில் நடைபெற்ற பிரெஞ்சு கார்னிவல் நிகழ்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த் பேச்சு.

Saturday, May 07, 2022

Paragliding at California

பாராசூட்டைப் பிடித்தபடி கடலில் சறுக்கியும் பறந்தும் நிலத்தின் மீதும் மலையின் மீதும் பறந்தும் செல்லும் சாகச (வீர) விளையாட்டுக்குப் பாராகிளைடிங் என்று பெயர். கலிபோர்னியக் கடற்பரப்பில் பாராகிளைடிங் செய்யும் காட்சிகளை நமக்காகப் பிரத்யேகமாகப் படமெடுத்து அனுப்பியுள்ளார், கார்கில் ஜெய். கண்டு மகிழுங்கள், வானம் வசப்படும்.

Paragliding is the recreational and competitive adventure sport of flying paragliders: lightweight, free-flying, foot-launched glider aircraft with no rigid primary structure. The pilot sits in a harness or lies supine in a cocoon-like 'pod' suspended below a fabric wing. Wing shape is maintained by the suspension lines, the pressure of air entering vents in the front of the wing, and the aerodynamic forces of the air flowing over the outside.

Despite not using an engine, paraglider flights can last many hours and cover many hundreds of kilometres, though flights of one to two hours and covering some tens of kilometres are more the norm. By skillful exploitation of sources of lift, the pilot may gain height, often climbing to altitudes of a few thousand metres.

Friday, May 06, 2022

Sunshine at Snowy Norway

நார்வே தலைநகர் ஓஸ்லோவின் வெண்பனி படர்ந்த வெளிகளில் சூரிய ஒளிக்கதிர்கள் ஊடுருவி செல்லும் அழகிய காட்சி இதோ. படப்பதிவு - வாசுகி ஜெயபாலன்.

A warm welcome to Sun from the snowfields of Oslo, Norway. Video by Vasuki Jayapalan.

#sun #sunshine #sunny #oslo #norway #europe #eu #snow #snowy #snowfield #snowfall 

Thursday, May 05, 2022

ஸ்ரீ ராமா | இசை நடன உரை | கதா காலட்சேபம் | சசிரேகா பாலசுப்பிரமணியன்

சென்னை, திருவல்லிக்கேணி இராமர் கோவிலில் இராம நவமியன்று, கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன் நிகழ்த்திய இசை நடன உரையின் தொகுப்பு இதோ.

Wednesday, May 04, 2022

LIC IPO - Interesting facts to know | எல்ஐசி பங்கு விற்பனை | உண்மைத் தகவல்கள்

மிகவும் எதிர்பார்க்கப்படும் எல்.ஐ.சி. பங்கு விற்பனை குறித்த உண்மைத் தகவல்கள் இதோ. முதலீடு செய்ய விரும்புவோர் கவனியுங்கள். LIC IPO - Interesting facts to know. Insights from Ramakrishnan V Nayak.

Monday, May 02, 2022

அப்பாவின் பிரிவை எதிர்கொள்வது எப்படி? | நிர்மலா ராகவன் பதில்

பல காரணங்களுக்காக, பெற்ற பிள்ளைகளைப் பிரிந்து அப்பாக்கள் வெளியூரில், வெளிநாடுகளில் வசிக்க நேர்கிறது. இதனால் தவிக்கும் மகள் ஒருவர், தம் மனம் திறந்து கேட்டுள்ளார். அப்பாவின் பிரிவை எதிர்கொள்வது எப்படி? என நம் வாசகி எழுப்பிய கேள்விக்கு நிர்மலா ராகவன் பதில் அளித்துள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள்.

#nri #nritamil #father #daughter #parent #parental #child #children #distant #distance #separate #family #jointfamily #foreign #dad #daddy #love #commitments #அப்பா #மகள் #தந்தை #பிரிவு #அயல்நாடு #வெளிநாடு #பாசம் #நேசம் #அன்பு 

Sunday, May 01, 2022

Petrol Rs.110.98 at Chennai

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.110.98


#petrol #bunk #petrolbunk #petrolstation #oil #petroleum #petrolmeter #chennai 


https://youtu.be/C6OJYYxy70U

மே தினம் - உழைப்பாளியின் குரல் | May Day | An appeal by Ananda Rao

உணவகங்களில் உணவு பரிமாறுபவராக 35 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர், ஆனந்த ராவ். பிரபலமான திரைப்பாடல் மெட்டுகளில் தாமே பாடல் இயற்றி, இனிய குரலில் பாடும் ஆற்றல் கொண்டவர். உழைக்கும் வர்க்கப் பாடகர் என்பதில் பெருமை கொள்ளும் இவர், மிக முக்கியமான கோரிக்கையை இந்த மே தினத்தில் எழுப்பியுள்ளார். இந்த உழைப்பாளியின் குரலைக் கேளுங்கள். உரியவர் செவிகளுக்கு இதைக் கொண்டு சேருங்கள். உழைக்கும் தோழர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்.

#Mayday #May1 #மேதினம் #மே1