!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2022/08 - 2022/09 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, August 31, 2022

கற்பக விநாயகருக்கு வெள்ளிக் கவசம் | Velli Kavasam to Karpaga Vinayagar

சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகருக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து, விநாயகர் சதுர்த்தியை இன்று மக்கள் கொண்டாடினார்கள். இதை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி, தெருவெங்கும் பந்தல் இட்டு, சரவிளக்குகள் அமைத்து, அந்த நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த உற்சாக விழாவிலிருந்து சில காட்சிகள் இங்கே.

Sri Ganapati | ஸ்ரீ கணபதி | Ganesh Chaturthi | Vinayaka Chaturthi

'ஸ்ரீ கணபதி'  என்ற அழகிய பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

Enjoy the divine song 'Sri Ganapati' in the voice of Krishnakumar. Happy Vinayaka Chaturthi.

#GaneshChaturthi #VinayagarChathurthi #vinayakachaturthi #VinayagarChaturthi #pillaiyar #GaneshaChaturthi #GaneshChaturthi2022 #GaneshPuja #Ganesha #பிள்ளையார் #விநாயகர்சதுர்த்தி  #வினாயகர் #விநாயகர்

Tuesday, August 30, 2022

Vinayaka Ninnu | விநாயகா நின்னு | Ganesh Chaturthi | Vinayaka Chaturthi

'விநாயகா நின்னு' என்ற அழகிய பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். விநாயகர் சதுர்த்தியில் வேழ முகத்தவன் அருளால் வெற்றிகளைக் குவியுங்கள்.

Gajavadana Karuna Sadana | கஜ வதனா கருணா சதனா | Ganesh Chaturthi

'கஜ வதனா கருணா சதனா'  என்ற புகழ்பெற்ற பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்தப் பிள்ளையார் சதுர்த்தியில் பெரும்பேறு பெறுங்கள்.

Monday, August 29, 2022

வேங்கடத்து மலையானே | Venkadathu Malaiyane

'வேங்கடத்து மலையானே' என்ற இனிய பாடலை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

கோதையின் திருப்பாவை | Kothaiyin Thiruppavai | Mohandas Vocal

கண்ணதாசன் இயற்றிய 'கோதையின் திருப்பாவை' என்ற புகழ்பெற்ற பாடலை, ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள் இன்னிசையுடன் பாடுகிறார்கள். சென்னை, கிழக்குத் தாம்பரம், அருள்மிகு இராஜ கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்ற பஜனை. கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Sunday, August 28, 2022

Voice of Sunbird | தேன்சிட்டின் குரல்

Voice of Sunbird today while raining at Chennai, Tambaram

சிற்றலகு திறந்து என்ன பேசுகிறது இந்தத் தேன்சிட்டு?

#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #Birdsofparadise #birds_nature #birding #nature #NaturePhotography #NatureBeauty #garden #birdwatcher #birdlovers #birdlover #birdingphotography #birders #birdlife #பறவை #water #rain #raining #sunbird #தேன்சிட்டு #tree #window #garden #voice #call #song

Bhagyada Lakshmi Baramma - 2 | பாக்யதா லட்சுமி பாரம்மா

'பாக்யதா லட்சுமி பாரம்மா' என்ற புகழ்பெற்ற பாடலை, திருவல்லிக்கேணி பிரபு குழுவினர் வாசிக்கக் கேளுங்கள். சென்னையில், நண்பர் ஹரிகிருஷ்ணன் அவர்களின் மகன் விக்னேஷ் - பிரியங்கா திருமணத்தில் வழங்கிய மங்கல கீதம்.

Saturday, August 27, 2022

பள்ளிக்கூடம் மீது வெறுப்பு ஏன்? | Why Students are averse to School

மாணவர்களுக்குப் பள்ளிக்கூடம் மீது வெறுப்பு ஏன்? அவர்கள் பள்ளிக்குச் செல்ல ஏன் மறுக்கிறார்கள்? பள்ளிக்கூடங்களில் என்னதான் பிரச்சினை? நிர்மலா ராகவன் உடன் ஓர் உரையாடல்.

Why Students are averse to School. A discussion with Nirmala Raghavan.

Friday, August 26, 2022

கிருஷ்ணர் பாதம் | Krishnar Padham | Krishna Foot Steps

கிருஷ்ண ஜெயந்தி அன்று நம் வீட்டில் கிருஷ்ணர் பாதம் வைத்து நடந்த ஹரி நாராயணன்.

Krishnar Padam (Krishnar Foot Steps) by Hari Narayanan on the auspicious Krishna Jayanthi / Janmashtami / Gokulashtami at our house.

#lordkrishna #krishnajanmashtami #krishnalove #krishna #krishnaconsciousness #krishnajanmashtami2022 #krishnajayanthi #gokulashtami #harekrishna #srikrishna #srikrishnajanmastami #கிருஷ்ணஜெயந்தி #ஹரேகிருஷ்ணா #ஜென்மாஷ்டமி #கோகுலாஷ்டமி #கிருஷ்ணா #கண்ணன் #Krishnafootsteps #krishnafootprints #krishnarpadam #krishnarpadham #krishnarpatham #கிருஷ்ணர்பாதம்

Bhagyada Lakshmi Baramma | பாக்யதா லட்சுமி பாரம்மா | ಭಾಗ್ಯದ ಲಕ್ಷ್ಮಿ ಬಾರಮ್ಮಾ

'பாக்யதா லட்சுமி பாரம்மா' என்ற புகழ்பெற்ற பாடலை, தவில் வித்வான் என்.செஞ்சுகுமார் குழுவினர் வாசிக்கக் கேளுங்கள்.

Bhagyada Lakshmi Baramma, a lovely song authored by Sri Purandara dasar, performed by N.Senjukumar & Party at Chennai.

Wednesday, August 24, 2022

மாடு மேய்க்கும் கண்ணே | Maadu Meikkum Kanne | In Nadaswaram & Dhavil

ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் இயற்றிய 'மாடு மேய்க்கும் கண்ணே' என்ற புகழ்பெற்ற பாடலை, தவில் வித்வான் என்.செஞ்சுகுமார் குழுவினர் வாசிக்கக் கேளுங்கள்.

Tuesday, August 23, 2022

Revolving door

Revolving door - Hari Narayanan's favorite spot.

https://youtu.be/ty_jJ8qoBik

கல்யாணம் கல்யாணம் | Kalyanam Kalyanam | Venkatesa Kalyanam | Krishnakumar

'கல்யாணம் கல்யாணம், திருவேங்கடத்தில் நடந்த கல்யாணம்' என்ற பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள்.

Monday, August 22, 2022

அலைபாயுதே கண்ணா | Alai Payuthey Kanna

'அலைபாயுதே கண்ணா' பாடலைத் தவில் வித்வான் என்.செஞ்சுகுமார் குழுவினர் வாசிப்பதைக் கேட்டு மகிழுங்கள். சென்னையில் செல்வன் அனிருத்தின் உபநயன விழாவில் இன்று பொழிந்த இசை.

Sunday, August 21, 2022

Nashik Dhol - A Wow Experience | Black White Nashik Dhol

Nashik Dhol  - A Wow Experience by Black White Nashik Dhol at Sri Raja Krishnar Temple, East Tambaram, Chennai.

Uriyadi - 3 | உறியடித் திருவிழா | Krishna Jayanthi | Sri Raja Krishnar Temple

சென்னை, கிழக்குத் தாம்பரம், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஸ்ரீ இராஜ கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்ற உற்சாக, குதூகல, கோலாகல உறியடித் திருவிழா. இதில் சிறுவர்களும் பங்கேற்று உறியடித்தது சிறப்பு.

Saturday, August 20, 2022

Happy Birthday Krishna | Krishna Jayanthi with Cake | கிருஷ்ண ஜெயந்தி

சென்னை, கிழக்குத் தாம்பரம், ஸ்ரீ இராஜ கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, 'ஹேப்பி பர்த் டே டூ யூ' சொல்லி, கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். இதோ அந்தக் காட்சிகள்.

Friday, August 19, 2022

Uriyadi - 2 | உறியடித் திருவிழா | கிருஷ்ண ஜெயந்தி | Krishna Jayanthi

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை, ஊரப்பாக்கம் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற உறியடித் திருவிழா. இரண்டாம் நிகழ்வு.

வழுக்கு மரம் ஏறும் போட்டி | Greasy Pole | Vazhukku Maram | கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை, ஊரப்பாக்கம் அருள்மிகு ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டி.

Greasy Pole festival, an ancient game, at Sri Iyappan Temple, Urappakkam, Chennai. Happy Krishna Jayanthi!

Uriyadi | உறியடித் திருவிழா| கிருஷ்ண ஜெயந்தி | Krishna Jayanthi Special

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை, ஊரப்பாக்கம் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற உறியடித் திருவிழா. 

Uriyadi festival, an ancient game, at Sri Iyappan Temple, Urappakkam, Chennai. Happy Krishna Jayanthi!

இவன்தான் அம்மா கண்ணபிரான் | கிருஷ்ண ஜெயந்தி | Krishna Jayanthi Special

கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வெளியீடாக, 'இவன்தான் அம்மா கண்ணபிரான்' என்ற இனிய பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள். கிருஷ்ணராக ஹரி நாராயணன் தோன்றுவதைப் பாருங்கள். ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே!

Thursday, August 18, 2022

கோவிந்தா ஹரி கோவிந்தா | Govinda Hari Govinda

'கோவிந்தா ஹரி கோவிந்தா' என்ற இனிய பாடலை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

Wednesday, August 17, 2022

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

பெரியாழ்வார் அருளியது திருப்பல்லாண்டு. இதில் இடம்பெற்ற 'உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை' என்ற அழகிய பாடலை ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள், குன்றத்தூர் திரு ஊரகப் பெருமாள் திருக்கோவிலில் ஆடலுடன் பாடுவதைக் கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Thiruppallandu, songs with divine excellence authored by Periyalvar, sung by the members of Ananda Krishna Bhajanai Sabai from Chennai.

Tuesday, August 16, 2022

வெங்காய பக்கோடா தயாரிப்பது எப்படி? | Making of Onion Pakoda at Kerala Hot Chips

வெங்காய பக்கோடா தயாரிப்பது எப்படி? கேரளா ஹாட் சிப்ஸ் கடையிலிருந்து இதோ சுடச்சுடக் காட்சிகள்.

Making of fast-selling Onion Pakoda at Kerala Hot Chips. 

Monday, August 15, 2022

வா வா வா (இசைப் பாடல்) | அண்ணாகண்ணன் | கிருஷ்ணகுமார் | Vaa Vaa Vaa

அண்ணாகண்ணன் இயற்றிய பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார் 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார். உடன் பாடியுள்ளவர், ஷ்ரேயா கிருஷ்ணகுமார். பவழ விழாக் காணும் சுதந்திர இந்தியாவின் புகழ், பாரெங்கும் ஓங்குக. விடுதலைத் திருநாள் வாழ்த்துகள்.

National Flag Hoisting at Haritha Enclave, Tambaram

National Flag Hoisting at Haritha Enclave, Tambaram on 15th August 2022. Jai Hind! Vande Mataram!

Sunday, August 14, 2022

சங்க காலப் பெண் புலவர்கள் | சென்னை மெட்ரோ தூண் ஓவியங்கள் | Sangam Women ...

சென்னை மெட்ரோ தூண்களில், மீனம்பாக்கத்திலிருந்து கிண்டி வரையுள்ள பகுதியில், சங்க காலப் பெண்புலவர்களின் உருவங்களை வரைந்துள்ளார்கள். அவர்கள் இப்படித்தான் இருந்தார்களோ தெரியாது. ஆனால், ஓவியங்கள் அழகுற அமைந்துள்ளன. ஆதிமந்தியாரைத்தான் ஆதிமந்தையார் என எழுதிவிட்டார்கள். இதை மட்டும் திருத்திவிடுமாறு சென்னை மாநகராட்சியையும் மெட்ரோ நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறேன்.

மங்கல இசை | நாதஸ்வரம் & மிருதங்கம் | Mangala Isai | Nadaswaram & Mridangam

சென்னை, குன்றத்தூர், திரு ஊரகப் பெருமாள் கோவிலில் இசைக்கப்பெற்ற மங்கல இசையைக் கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Saturday, August 13, 2022

கொய்யா அறுவடை 2022 | Guava Harvest 2022

நம் வீட்டுத் தோட்டத்தில் கொய்யா அறுவடை.

Guava harvest at our home garden.

Friday, August 12, 2022

ஓம்சக்தி - துர்க்கையம்மன் வீதி உலா | Om Sakthi - Nerkundram Durgai Amman

'ஓம்சக்தி பராசக்தி' முழக்கத்துடன், பக்தர்கள் கைகளில் செல்லக் குழந்தையாக, நெற்குன்றம் துர்க்கையம்மன் ஆடி அசைந்து வரும் அழகிய காட்சி. கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Hanuman Chalisa | Paritala Swami Ramadas Bhajan

இவர் குரலை இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நீங்கள் அவசியம் வந்து கேளுங்கள் என அழைத்தார் நண்பர். அதிகாலை ஐந்து மணிக்குச் சென்று பரிடாலா சுவாமி இராமதாசர் குரலைப் பதிவு செய்தபோது, நானும் அப்படியே உணர்ந்தேன். ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகில் உள்ள பரிடாலா என்ற ஊரில், ஆசியாவின் மிக உயரமான (135 அடி) திவ்ய சுந்தர அபய வீர ஹனுமான் சிலையை நிறுவியவர் இவர் என்பது பிறகுதான் தெரிந்தது. பக்தியில் தோய்ந்து, லயித்து, தென்றலைப் போல வருடிச் செல்லும் இவரது குரலைக் கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Thursday, August 11, 2022

கோதையின் திருப்பாவை | Kothaiyin Thiruppavai

கண்ணதாசன் இயற்றிய 'கோதையின் திருப்பாவை' என்ற புகழ்பெற்ற பாடலை, ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள் இன்னிசையுடன் பாடுகிறார்கள். குன்றத்தூர் திரு ஊரகப் பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற பஜனை. கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

திருநீர்மலை | மாமலை ஆவது நீர்மலையே | திருமங்கை ஆழ்வார்

திருநீர்மலையை மாமலை ஆவது நீர்மலையே எனத் திருமங்கை ஆழ்வார் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் இயற்றிய பெரிய திருமொழியிலிருந்து காண்டாவனம் என்பதோர் காடு எனத் தொடங்கும் பாசுரத்தை நீலமேகம் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

Wednesday, August 10, 2022

விளக்குக் கம்பம் விழுந்தது | Street Light Felldown at Tambaram

தாம்பரம் ரெயில்வே மேம்பாலத்தில் நின்றிருந்த விளக்குக் கம்பம், இன்று மதியம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இந்தச் சிக்கலைச் சமயோஜிதமாக மக்கள் எப்படிச் சமாளித்தார்கள் என்று பாருங்கள்.

A streetlight fell down across the road this noon at Tambaram Railway bridge. Check how our clever civilians managed this issue. Tambaram Corporation should maintain & monitor all streetlights and ensure the safety of people.

#tambaram #streetlight #traffic #solution #roadsafety

பல்லாண்டு பல்லாண்டு | நாலாயிர திவ்யப் பிரபந்தம் | Pallandu Pallandu

பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு, பக்தர்களின் மனத்துக்கு இனிய மதுர கீதம். இதன் தொடக்கப் பாடலை ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள், குன்றத்தூர் திரு ஊரகப் பெருமாள் திருக்கோவிலில் ஆடலுடன் பாடுவதைப் பாருங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

திரு ஊரகப் பெருமாள் திருவீதி உலா | Thiru Ooraga Perumal Veedhi Ulaa

சென்னை, குன்றத்தூரில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் திரு ஊரகப் பெருமாள், சர்வ அலங்காரத்துடன் நேற்று மாலை திருவீதி உலா வந்த திருக்காட்சி இதோ.

Tuesday, August 09, 2022

Pouch & Pocket Sealing Machine

 Pouch & Pocket Sealing Machine at New Indian Coffee House, Chennai.

#tech #technology #machine #pouch #pocket #sealing  #NewIndianCoffeeHouse #chennai #coffee #package #packaging

பெரிய திருமொழி | திருமங்கை ஆழ்வார் | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

திருமங்கை ஆழ்வார் அருளிய 'பெரிய திருமொழி'யிலிருந்து இரண்டு பாடல்களை இராமதாச இராமானுஜ தாசர் கணீரெனப் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

Monday, August 08, 2022

Turtle crossing the Road

ஆமை ஒன்று, சாலையைக் கடக்கிறது.


A turtle is crossing the road.


#turtle #turtles #tortoise #road #pedestrian #chennai #tambaram #ஆமை #சாலை


பனிக்கடலில் பள்ளிகோளை| பெரியாழ்வார் திருமொழி | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

'பனிக்கடலில் பள்ளிகோளை' எனத் தொடங்கும் பெரியாழ்வார் திருமொழிப் பாசுரத்தை, ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

Periyaazhvaar Thirumozhi, songs with divine excellence authored by Periyaazhvaar (Periyalvar), sung by the members of Sri Navaneetha Krishna Bhajanai Sabai from Chennai.

Sunday, August 07, 2022

Radhe Shyam | Paritala Swami Ramadas Bhajan

Radhe Shyam Shyam Shyam 
Sita Ram Ram Ram

A super bhajan by Paritala Swami Ramadas and group at Thiruneermalai, Chennai on the 525th birthday celebration of Srichand Goswami Tulsidas, the celebrated author of the Hanuman Chalisa and of the epic Ramcharitmanas.

பாடியும் அழைத்தால் பறந்தோடி வருவான் | முகுந்த இராமானுஜ தாசர்

திருநீர்மலை உச்சியில் அமைந்துள்ள ரங்கநாதர் திருக்கோவிலுக்குச் சென்றேன். தற்செயலாக எதிரில் வந்தார், முகுந்த இராமானுஜ தாசர். பாடுங்கள் என்றதும் உடனே இந்தப் பாடலைப் பாடினார். பக்திப் பரவசத்துடன் கூடிய அவரது பாடலைக் கேளுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Enjoy the divine song by Mugunda Ramanuja Dasar on the top of Thiruneermalai Hill at Sri Ranganatha Temple, Chennai.

Saturday, August 06, 2022

Cauliflower Gravy | Gobi Gravy | காலிபிளவர் குழம்பு

நம்ம வீட்டுக் காலிபிளவர் குழம்பு.
a
Cauliflower Gravy at our kitchen.

திருப்பல்லாண்டு - 11 & 12 | நாலாயிர திவ்யப் பிரபந்தம் | Thiruppallandu

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் தொடக்கமாய் அமைந்துள்ளது, பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு. இதன் பதினொன்றாம், பன்னிரண்டாம் பாடல்களை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

Friday, August 05, 2022

வருவாய் லட்சுமித் தாயே | வரலட்சுமி விரதம் | Varalakshmi Vratam

இன்று நம் இல்லத்தில் திருமகள் எழுந்தருளிய காட்சிகளுடன், 'வருவாய் லட்சுமித் தாயே' என்ற இனிய பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். 

Cat visiting Temple

 இந்தப் பூனைக்குத் தான் என்ன ஒரு பக்தி, பாருங்கள்.


Cat visiting an ancient Temple & chanting.


https://youtu.be/7thgQ2hPwFU

Lakshmi Raave Maa Intiki | Varalakshmi Vratham

On this auspicious Varalakshmi Vratam, enjoy the beautiful song 'Lakshmi Raave Maa Intiki' in the voice of Krishnakumar.

Thursday, August 04, 2022

திருப்பல்லாண்டு - 9 & 10 | நாலாயிர திவ்யப் பிரபந்தம் | Thiruppallandu

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் தொடக்கமாய் அமைந்துள்ளது, பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு. இதன் ஒன்பதாம், பத்தாம் பாடல்களை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

Rhymes by Hari Narayanan | ஹரி நாராயணன் பாடல்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த ஹரி நாராயணனுக்கு இன்று நட்சத்திரப் பிறந்த நாள். அவன் அண்மையில் கற்றுக்கொண்ட சில பாடல்கள் இங்கே.

Star Birthday to Hari Narayanan.

Wednesday, August 03, 2022

திருப்பல்லாண்டு - 7 & 8 | நாலாயிர திவ்யப் பிரபந்தம் | Thiruppallandu

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் தொடக்கமாய் அமைந்துள்ளது, பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு. இதன் ஏழாம், எட்டாம் பாடல்களை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

Monday, August 01, 2022

திருப்பாவை | ஆண்டாள் | Thiruppavai | Andal | Krishnakumar & Shreya Krishnakumar

அருட்செல்வி ஆண்டாள் அவதரித்த நாள், ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாள். இத்திருநாளில் ஆண்டாள் அருளிய திருப்பாவையின் முதலிரண்டு பாடல்களை 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமாரும் அவர் மகள் ஷ்ரேயா கிருஷ்ணகுமாரும் பாடக் கேளுங்கள்.

நாகேஸ்வரி அம்மன் தீமிதி உற்சவம் | ஆடித் திருவிழா | Firewalk at Nageswari Amman Temple

சென்னை, தாம்பரம், அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழா,  மிக விமரிசையாக நடைபெற்றது. நேற்று இரவு நடைபெற்ற தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பூ மிதித்தனர். அந்த அனல் பறக்கும் காட்சிகள் இதோ.