!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஜெயந்தி சங்கரின் வீணையிசை - 1 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, June 27, 2021

ஜெயந்தி சங்கரின் வீணையிசை - 1

ஜெயந்தி சங்கரின் வீணையிசை - 1

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனப் பன்முகத் திறமை படைத்த ஜெயந்தி சங்கர், வீணை வாசிக்கவும் கற்றுள்ளார். புகழ்பெற்ற காரைக்குடி சகோதரர்களின் பெண்வயிற்றுப் பெயர்த்தியான வீணை விதூஷி, காரைக்குடி ஜெயலஷ்மி சுகுமார் அவர்களிடம் சிங்கப்பூரில் 2010-2013 காலக்கட்டத்தில் வீணையிசை பயின்றார். கஜானனயுதம் என்ற இந்தப் பாடலை 2010-11ஆம் ஆண்டில் வாசித்தார். "என் வாசிப்பில், இனிமையாக, சரியாக இருப்பவை என் மதிப்பிற்குரிய ஆசிரியரின் ஆசிகள். அந்தப் பெருமை அவரையே சேரும். அல்லாதன எல்லாம் என்னைச் சேரும். அதற்காக அவரிடமும் கேட்பவர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார் ஜெயந்தி சங்கர்.

இந்த இன்னிசையைக் கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

No comments: