!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கோவையில் பேருந்துப் பயணம் | Coimbatore Bus Trip ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, May 29, 2022

கோவையில் பேருந்துப் பயணம் | Coimbatore Bus Trip

அண்மையில் கோவையில் கவுண்டம்பாளையத்திலிருந்து மாதம்பட்டி அருகில் உள்ள தென்கரை என்ற இடத்திற்குச் செல்ல (25 கி.மீ.), ஓலாவில் வாடகை மகிழுந்தை அழைத்தோம். ரூ.392 கட்டணம் காட்டியது. வந்த ஓட்டுநர், ரூ.700 கேட்டார். முடியாது என்றோம். அவரே சரி என்று ரத்து செய்துவிட்டுச் சென்றார். அடுத்தடுத்த ஓட்டுநர்களும் அதிகம் கேட்டார்கள். எனவே, பேருந்தில் செல்ல முடிவெடுத்தோம். ஆனால், கவுண்டம்பாளையத்திலிருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் செல்ல, ஓலாவில் ரூ.88 காட்டியது. வந்த ஓட்டுநர் ரூ.120 கேட்டார். வேறு வழியில்லாமல் கொடுத்தோம். 

காந்திபுரத்திலிருந்து மாதம்பட்டிக்குப் பேருந்தில் ஏறினோம். ஒருவருக்கு ரூ.15 மட்டுமே கட்டணம், 3 வயது மகனுக்குக் கட்டணம் வாங்கவில்லை. (மொத்தம் 45). மாதம்பட்டியில் இடம் சரியாகத் தெரியாமல், ஒரு நிறுத்தம் முன்னதாக இறங்கினோம். அந்த இடத்திலிருந்து தென்கரை செல்ல (7 - 8 கி.மீ.), ஆட்டோ ஓட்டுநர் ரூ.500 கேட்டார். வேண்டாம் என்று மீண்டும் பேருந்தில் ஏறினோம். இது விரைவுப் பேருந்து போலும். எங்கள் நால்வருக்கும் ஒரு நிறுத்தத்திற்கே தலா ரூ.15 கட்டணம் வசூலித்தார் (மொத்தம் ரூ.60). மாதம்பட்டியிலிருந்து நாங்கள் செல்ல வேண்டிய தென்கரை (5.6 கி.மீ.) என்ற ஊருக்குச் செல்ல, ஆட்டோ கட்டணம் ரூ.150. ஆக, ரூ.375 செலவில் அங்கே சென்று சேர்ந்தோம். 

இந்தப் பயணமும் நன்றாகவே இருந்தது. கோவையில் எங்கள் பேருந்துப் பயணத்தின் சில காட்சிகள் இங்கே. 

No comments: