!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கன்னியாகுமரியில் வெள்ளப் பெருக்கு | Fierce Flood in Kanyakumari | Part 2 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, November 14, 2021

கன்னியாகுமரியில் வெள்ளப் பெருக்கு | Fierce Flood in Kanyakumari | Part 2

அதிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் அதிகாலையில் ஒருமணி நேரத்துக்கும் மேலாகக் கனமழை  பெய்தது. அதன்பின்னர் பகலில் அவ்வப்போது கனமழை பெய்தது. சில நேரங்களில் வெயில் அடித்தது.

* திற்பரப்பு அருவியில் நேற்று முன் தினத்தை விடக் குறைந்த சீற்றத்துடன் வெள்ளம் பாய்ந்தோடியது. நேற்றைய முன் தினத்தை விடச் சற்று தெளிவாக அருவியில் தண்ணீர் கொட்டியது. அருவியின் மேற்பகுதி தடுப்பணையில் மறுகால் இட்டதால் படகு சவாரி நடக்கவில்லை.

 * மாத்தூர்  தொட்டிப்பாலத்தின் கீழே ஓடும்  பரளியாற்றுத் தண்ணீர், அருவிக்கரை - வேர்க்கிளம்பியை இணைக்கும் சப்பாத்துப் பாலத்தை மூழ்கடித்தபடி நேற்று முன்தினம் முதலே சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை வரை தண்ணீர் வரத்து குறையவில்லை. இதனால் அருவிக்கரை ஊராட்சியில் இருந்து மறு பகுதியிலுள்ள பொன்னன் சிட்டி விளை, முதலார் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை எற்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.  இந்த மழை நேரத்திலும் மாத்தூர் தொட்டிப்பாலத்தைப் பார்க்க, பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை  தந்து தொட்டிப்பாலத்தைப் பார்த்து மகிழ்ந்து சென்றனர்.

களத்திலிருந்து இதோ சில காட்சிகள்.

செய்தி & படப்பதிவு: திருவட்டாறு சிந்துகுமார்

No comments: