!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கன்னியாகுமரியில் வெள்ளப் பெருக்கு | Fierce Flood n Kanyakumari ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, November 13, 2021

கன்னியாகுமரியில் வெள்ளப் பெருக்கு | Fierce Flood n Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்றுவரை விடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது.

பெருஞ்சாணி அணையில் இருந்து வெள்ளம் திறந்துவிடப்பட்டுள்ளதால் மாத்தூர் தொட்டிப் பாலத்தின்  அருகே அருவிக்கரைப் பகுதியில் பரளியாற்றில்  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

திற்பரப்பு  அருவியின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கும் வெண்ணிறப் புகை மண்டலமாய் அருவித் தண்ணீர் கொட்டுகிறது.  அருவியின் முன்பகுதி சிறுவர் குளத்தை மூழ்கடித்து, கல்மண்டபம் வழியாக தண்ணீர் ஓடுகிறது. குளிக்க அனுமதி இல்லாதாதால் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள், தடுப்பு வேலி வழியாக அருவியைப் பார்த்துத் திரும்பினர். தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் படகு சவாரியும் நடைபெறவில்லை. இதனால் படகுத் துறையில் படகுகள் அனைத்தும் ஓய்வெடுத்துக்கொண்டன.

திருநந்திக்கரை நந்தீஸ்வரர் ஆலயத்தையொட்டி மழை நீர் புகுந்துள்ளது. கோயில் உட்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரங்களைச் சுற்றி மழை நீர் ஆறாக ஓடியிருப்பதோடு விளை நிலங்களுக்கு உள்ளும் புகுந்துள்ளது.

களத்திலிருந்து இதோ சில காட்சிகள்.

செய்தி & படப்பதிவு: திருவட்டாறு சிந்துகுமார்

No comments: