!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அபிராமி அந்தாதி | அபிராமி பதிகம் | பிரேமா நாராயணஸ்வாமி | Abhirami Anthadhi ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, January 21, 2021

அபிராமி அந்தாதி | அபிராமி பதிகம் | பிரேமா நாராயணஸ்வாமி | Abhirami Anthadhi

திருமதி பிரேமா நாராயணஸ்வாமி அவர்கள், கலைப் பன்முகர். நல்ல ரசனையாளர். இயற்கையை நேசிப்பவர். திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இயல்பாகவே நல்ல குரல் வளம் மிக்கவர். அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி, அபிராமி பதிகம் ஆகிய இரண்டையும் 100 ராகங்களில், நூற்றுக்கும் மேற்பட்டோருக்குப் பயிற்றுவித்துள்ளார். இப்போதும் பலருக்குப் பயிற்றுவித்து வருகிறார். ஆதி சங்கர பகவத் பாதாளின் சௌந்தர்ய லஹரியையும் இவ்வாறே மூன்று பாடல்களுக்கு ஒரு ராகமென, 33 ராகங்களில் கற்றுக் கொடுத்து வருகிறார். இவரது இல்லம், எப்போதும் தெய்வீக மனத்துடன், அங்கு வருபவர்களுக்குத் தெய்வீக மனத்தையும் அருளையும் வாரி வழங்கும். 

இவர் கவிதாயினி. ஸ்ரீ இராமர் குறித்து, ஸ்ரீ இராமாயண கீதமாலை எனும் அருங்காவியத்தை இயற்றியுள்ளார். அழகான, எளிமையான தமிழில், படிப்போரின் இதயத்தை இராமரின் மேல் பக்தி மையலுறச் செய்யும் வகையில் படைத்துள்ளார். தமிழ்க் கடவுளாம் முருகன் மீது அளவிலா அன்பு பூண்டு, முருகு வருகுதே, தமிழ்க் குமர மாலை எனும் நூல்களைப் பக்தி மணம் கமழ, பாங்குடனே படைத்து அளித்துள்ளார். செல்வத் திருமகளாம் இலக்குமியின் பூஜா முறைகளை எளிய தமிழில் செம்மையாக வழங்கியுள்ளார். இவரை நமக்கு அறிமுகம் செய்த சுதா மாதவன் அவர்களுக்கு மிக்க நன்றி.

77 வயதில் அபாரமான குரல் வளத்துடன் பாடும் இவரது அற்புத கானங்களைக் கேட்டு மகிழுங்கள். 

No comments: