!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> A free ride of Cuckoo on Buffalo - 2 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, June 20, 2020

A free ride of Cuckoo on Buffalo - 2

நீள முகமும், நிமிர்ந்திருக்கும் கொம்புகளும்,

பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும்,

மிஞ்சுப் புறச்சுமையும், வீரத் திருவாலும்,

வானத் திடிபோல 'மா'வென் றுறுமுவதும்,

ஈனப் பறவை முதுகின்மிசை ஏறிவிட்டால்

வாலைக் குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும்,

பல்
காலம்நான் கண்டு கடுமோக மெய்திவிட்டேன்.



வந்துமது காதில் மதுரவிசை பாடுவேன்;

வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன்,

வாலிலடி பட்டு மனமகிழ்வேன், 'மா' வென்றே

ஓலிடுநும் பேரொலியோ டொன்றுபடக் கத்துவேன்,

மேனியுளே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன்,

கானிடையே சுற்றிக் கழனியெலாம் மேய்ந்து, நீர்

மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில்
பக்கத்திருந்து பலகதைகள் சொல்லிடுவேன்



(குயில் பாட்டில் குயில், காளையிடம் பேசுவதாக, பாரதியின் வரிகள்)



No comments: