!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மழலை மகாலட்சுமி | சித்தநாதேஸ்வரர் கோவில் | கும்பகோணம் | Mazhalai Mahalakshmi ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, October 29, 2021

மழலை மகாலட்சுமி | சித்தநாதேஸ்வரர் கோவில் | கும்பகோணம் | Mazhalai Mahalakshmi

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில், திருநறையூர் ஆகிய தலங்களில் உள்ள மூன்று ஆலயங்களுக்கு வெ.சுப்ரமணியன் அண்மையில் சென்றிருந்தார். இந்த ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு சௌந்திர நாயகி அம்பாள் சமேத சித்தநாத சுவாமி திருக்கோவிலுக்கும் சென்று வழிபட்டு வந்தார். 

வேறெந்தச் சிவாலயத்திலும் இல்லாத அமைப்புகள், இந்த ஆலயத்தில் உள்ளன. இந்தத் திருத்தலத்தில் மேதாவி மகரிஷி, சித்தநாதரைப் பூஜித்து மகாலட்சுமியை மகளாக அடைந்து வளர்த்து, நாச்சியார்கோவில் அருள்மிகு சீனிவாசப் பெருமாளுக்குத் திருமணம் செய்து கொடுத்ததாக ஐதீகம்.

சித்தநாத சுவாமி திருக்கோவிலில் மூன்று தட்சிணாமூர்த்திகள், ஐந்து சண்டிகேஸ்வர்கள், மழலை மகாலட்சுமிக்குத் தனிச் சன்னதி என்று பல சிறப்புகள். நவகிரகங்களைத் தட்சிணாமூர்த்தி பார்த்தவாறு இருப்பது கூடுதல் சிறப்பு. இந்தத் தலத்தின் சிறப்புகளை விளக்குகிறார் T.G. குருநாத சிவாச்சாரியார். பார்த்து மகிழுங்கள்.

No comments: