!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வரி வாலாட்டிக் குருவி | வெண்புருவ வாலாட்டி| Voice of White-browed Wagtail ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, December 26, 2021

வரி வாலாட்டிக் குருவி | வெண்புருவ வாலாட்டி| Voice of White-browed Wagtail

வரி வாலாட்டிக் குருவி (White-browed wagtail) அல்லது வெண்புருவ வாலாட்டி என்பது இந்தியாவில் காணப்படும் ஒரே ஓர் இடம்பெயரா வாலாட்டிக் குருவி. இதன் உடலின் மேலே கருப்பு மற்றும் கீழே வெள்ளையுடன், வெள்ளைப் புருவமும் கொண்டது. இது தனது நீண்ட வாலிறகைத் தொடர்ந்து ஆட்டும் பண்பினைக் கொண்டது. நீண்ட தூரங்களுக்கு மிக வேகமாகப் பறக்கும். மணிக்கு 40 கி. மீ. வேகத்தில் பயணிக்கும். 

இந்தியாவில் பண்டைய காலங்களில், இந்தச் சிற்றினம் கூண்டுப் பறவையாக வளர்க்கப்பட்டது. இதன் குரலுக்காகப் பாராட்டப்பட்டது. இதன் மார்பில் விஷ்ணுவின் சாலிகிராம் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதால் இதைக் காண்பதை நல்ல சகுனமாகக் கருதினர். இந்தப் பறவை எங்கு அமர்கிறது, என்ன செய்கிறது என்பதன் மூலம் எதிர்காலம் பற்றிய பல்வேறு நம்பிக்கைகள் சரத்சந்திர மித்ராவால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. (விக்கிப்பீடியா)

பலவிதமான ஒலிக் குறிப்புகளுடன் கூடிய இதன் குரலைக் கேளுங்கள்.

No comments: