!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> புள்ளிச் சில்லை | Scaly Breasted Munia | Lonchura Punctulata ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, January 04, 2022

புள்ளிச் சில்லை | Scaly Breasted Munia | Lonchura Punctulata

புள்ளிச் சில்லை என்ற பறவையை இன்று முதல்முறையாகப் படம் பிடித்தேன். இது சிட்டுக்குருவி அளவிலான ஒரு பறவை. ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. இதன் மேற்புறம் பழுப்பாகவும் மார்பு, வயிற்றுப்புறம் செதில் போல் புள்ளிகளுடன் இருப்பதால் புள்ளிச் சில்லை எனப்படுகிறது. இதன் அலகு பெரிதாக கூம்பு வடிவத்தில் இருக்கும். இது புற்களின் கிழங்கினை உணவாகக் கொள்ளும். மேலும் சிறு பூச்சிகளையும் பழங்களையும் உண்ணும்.

#ScalyBreastedMunia #LonchuraPunctulata #bird #Munia #chennaibird #birdphotography #birdwatching #BirdsSeenIn2022 #birds #பறவை #பறவைகள் #சென்னை #தாம்பரம்

No comments: