வைணவத்தில் ஆழத் தோய்ந்த திருமதி பங்கஜமல்லிகா சேஷாத்ரி, ஆண்டாளின் திருப்பாவைக்கு விளக்கம் சொல்கிறார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், திவ்யப் பிரபந்தத்தில் முதுகலைப் பட்டமும் வைணவத்தில் முதுகலைப் பட்டத்துடன் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை, திருவல்லிக்கேணியில் வசிக்கிறார். ஆண்டாளின் சொற்களைத் திறந்து, மனத்திற்குள் புகுந்து, தமிழ் வேதத்தின் உட்பொருளை நமக்குக் காட்ட முன்வந்துள்ளார். பெண் உரையாசிரியர் யாருமே இல்லையா என்ற கேள்விக்கு இதோ நான் இருக்கிறேன் எனத் தோன்றியுள்ளார். பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ திருப்பாவையின் முதல் பாசுரம், மார்கழித் திங்கள்.
ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா
Decoding Tiruppavai by Pankaja Malliga Seshadri. Art by Vishnuprabha.
#மார்கழி #திருப்பாவை #ஆண்டாள் #tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #Margazhi2022 #Devotional #music #divine #Tamil #TamilNadu

No comments:
Post a Comment