!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தீபாவளி பலகாரங்களுக்கு ஸ்ரீ காமதேனு ஸ்டோர்ஸ் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, November 11, 2020

தீபாவளி பலகாரங்களுக்கு ஸ்ரீ காமதேனு ஸ்டோர்ஸ்

சென்னை, மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ காமதேனு ஸ்டோர்ஸ் என்ற புதிய கடையைத் தொடங்கியுள்ளார்கள். இதில் தீபாவளி இனிப்புகள், பட்சணங்கள் ஆகியவற்றுடன், சுவையான, ஆரோக்கியமான பல்வேறு பலகாரங்களை, நொறுக்குத் தீனிகளை, சிற்றுணவுகளை விற்கிறார்கள். 

தீபாவளி லேகியத்தில் தொடங்கி, மனோகரம், கைமுறுக்கு, முள்ளு முறுக்கு, தேன்குழல், லட்டு, மைசூர் பாகு, பாதுஷா, ஜாங்கிரி, ரவா லாடு, ராகி லாடு.. எனப் பற்பல இனிப்பு வகைகள் அணிவகுத்து நிற்கின்றன. மைதா இல்லாமல் சிறுதானியத்தில், சீனி இல்லாமல் நாட்டுச் சர்க்கரையில், பனை வெல்லத்தில் தயாரிக்கப்பட்டவை. 

மேலும் 11 வகையான வடகம், வற்றல், விதவிதமான அப்பளம், தொக்கு (பிரண்டைத் தொக்கு), ஊறுகாய், வடுமாங்காய், சூப்பு தயாரிப்பதற்கான பொடி, பல்வகைப் பொடிகள்... என நூற்றுக்கணக்கான வகைகள் இங்கே விற்பனைக்கு உள்ளன. 

ஸ்ரீரங்கத்தில் காவிரியாற்று நீரைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இந்தப் பலகார வகைகள், பண்டிகைக் காலத்திற்கு மட்டுமின்றி அன்றாட நாட்களுக்கும் நமக்குத் தேவையாக இருக்கும். தரம், சுவை, சுகாதாரம் என்பதை இலக்காகக் கொண்டிருக்கும் ஸ்ரீ காமதேனு ஸ்டோர்ஸ் கடைக்குள் சுதா மாதவனின் உலா இங்கே.

No comments: