!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> இந்தியக் குளத்துக் கொக்கு அல்லது மடையான் | Indian pond heron ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, November 21, 2020

இந்தியக் குளத்துக் கொக்கு அல்லது மடையான் | Indian pond heron

நம் வீட்டுக்குப் பின்னுள்ள வெளியில் இந்தப் பறவையை அடிக்கடி பார்க்கிறேன். இதன் பெயர், இந்தியக் குளத்துக் கொக்கு. இது, அளவில் சிறிய ஒரு கொக்கினம். இப்பறவை குருட்டுக் கொக்கு, மடையான், குள நாரை என்றும் அழைக்கப்படுகிறது. தன்னை வேட்டையாடும் இரையாடிகள் அருகே நெருங்கும் வரை அசையாமலிருந்து, திடீரெனப் பறப்பதால், இவை "அசமஞ்சம்" என்னும் பொருள்படும் மடையான் என்ற பெயர் பெற்றுள்ளன. 

இப்பறவையின் கழுத்து குறுகிக் காணப்படும். குட்டையான வலிமையான அலகுகளைக் கொண்டிருக்கும். முதுகுப் புறத்தில் செவ்வரியோடிய மர வண்ணத்தில் இறகுகள் இருந்தாலும், கீழ்ப்பகுதி முழுதும் வெண்ணிறமாகவே தோன்றும். பறக்கும் போது இதன் வெண்ணிறச் சிறகுகளைப் பார்க்கலாம். நான் பல முறைகள் பார்த்திருக்கிறேன்.

நீர் நிலையில் அசையாமல் நின்று கொண்டும், மூழ்கியும், நீருக்கு மேல் பறந்தும், துரத்தியும், மீன்கள், தலைக்காலிகள், கணுக்காலிகள், பூச்சிகள், தட்டான், தேனீ, வண்டு, அட்டைகளைப் பிடித்துத் தின்னும். இது தென் ஈரானில் இருந்து கிழக்கில் இந்தியா, பர்மா, வங்கதேசம், இலங்கை வரை வாழ்கிறது. இது பரவலாகக் காணப்படும் பறவைகளுள் ஒன்றாக இருப்பினும் அவற்றின் நிறத்தின் காரணமாக எளிதாக கண்ணுக்குப் புலப்படாது.

No comments: