!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வல்லூறு | வைரி | Shikra | Falcon | Accipiter badius ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, November 01, 2020

வல்லூறு | வைரி | Shikra | Falcon | Accipiter badius

நம் வீட்டு வேப்ப மரத்தில் வந்து அமர்ந்த வல்லூறு, இறகுகளைக் கோதியதுடன், சிறு கொட்டாவியும் விட்டது (வல்லூறு கொட்டாவி விட்டுப் பார்த்திருக்கிறீர்களா?)

வல்லூறு, என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு இனம். இது மிகவும் விரைவாகப் பறக்க வல்லது. கீழே பாய்ந்து இரையைக் கொல்லும் பொழுது மணிக்கு 290 கி.மீ விரைவிலே பறக்க வல்லது. விலங்கு உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை இந்த வல்லூறுதான். வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக் காட்டிலும் உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லது. மிக விரைவாக உயரப் பறந்து செல்லும்; வாத்து, புறாவினங்களை இது மிக எளிதாகத் தாக்கிக் கொல்லும். இப்பறவை இனம் வைரி, வில்லேத்திரன் குருவி, பறப்பிடியன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது (தரவுகளுக்கு நன்றி விக்கிப்பீடியா). இந்தப் பறவையை அடையாளம் காண உதவிய மறவன்புலவு க.சச்சிதானந்தன், சுந்தர் லெட்சுமணன் ஆகிேயாருக்கு நன்றி.

No comments: