!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கதை பிறந்த கதை - 2: நிர்மலா ராகவன் நேர்காணல் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, October 22, 2020

கதை பிறந்த கதை - 2: நிர்மலா ராகவன் நேர்காணல்

மலேசிய எழுத்தாளர் நிர்மலா ராகவன், தமது எழுத்துலக அனுபவங்களைத் தொடர்ந்து பகிர்கின்றார். கதைகளுக்கான கரு எங்கிருந்து கிடைக்கிறது? கதைகளில் உண்மையும் கற்பனையும் எவ்வாறு கலக்கின்றன? எந்த விகிதத்தில் கலக்கின்றன? எவ்வளவு காலம் கழித்து ஒரு சம்பவம் கதையாகிறது? உள்ளிட்ட பலவற்றைச் சில எடுத்துக்காட்டுகளுடன் நமக்கு விளக்குகிறார்.

கருவில் குழந்தை இருக்கும்போது, அதன் தாயின் மீது விதவிதமான ஆண்கள் பலரும் கட்டைக் குரலில் பேசியபடி வந்து, படுத்து அமுக்குகிறார்கள். கருவில் இருக்கும் குழந்தைக்கும் உடலெங்கும் வலிக்கிறது. வலி தாங்காமல் அது புரண்டு படுக்கிறது. தாயும் குழந்தையைத் திட்டுகிறாள். அந்தக் குழந்தை, எதிர்காலத்தில் என்னவாக ஆகிறது? வித்தியாசமான கருவில் அமைந்த தனது கதைகள் குறித்து நிர்மலா ராகவன் விவரிக்கிறார். 

மேலும், யோக முத்திரைகள் சிலவற்றை நமக்காகப் பிடித்துக் காட்டியுள்ளார். மயக்கமா? குழப்பமா? மனதிலே நடுக்கமா? இந்த யோக முத்திரையைப் பிடித்தால் போதும். உங்கள் குழப்பம் தீர்ந்து, தெளிவு கிடைக்கும். இது என்ன முத்திரை என்று தெரிந்துகொள்ள, இந்த நேர்காணலைப் பாருங்கள்.

No comments: