!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருப்பாவை - 13 | புள்ளின்வாய் கீண்டானை | சேகர் முத்துராமன் குரலில் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, December 28, 2020

திருப்பாவை - 13 | புள்ளின்வாய் கீண்டானை | சேகர் முத்துராமன் குரலில்

புள்ளும் சிலம்பினகாண் என்பது திருப்பாவையில் இரு இடங்களில் வருகின்றது. 6ஆவது பாடல், 'புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்' எனத் தொடங்குகின்றது. 13ஆவது பாடலில் 'புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்' என வருகின்றது. சிலம்புதல் என்றால் இரட்டிப்பொலி எழுப்புதல், மாறி மாறி ஒலித்தல் எனப் பொருள். புள் எனில் பறவை. பறவை விதவிதமாக இரட்டிப்பு ஒலி எழுப்புவதை நாம் கேட்டிருப்போம். 'கீசுகீசு' என ஆனைச்சாத்தன் பேசுவதை ஆண்டாளே பதிவு செய்துள்ளார். அரிய, அழகிய வாழ்வியற்கூறுகள் நிறைந்த திருப்பாவை, நாம் பெற்ற செல்வம். புள்ளின் வாய் கீண்டானை என்ற 13ஆவது பாடலைச் சேகர் முத்துராமன் குரலில் கேளுங்கள்.

No comments: