!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருப்பாவை - 7 | கீசுகீசு என்றெங்கும் | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, December 22, 2020

திருப்பாவை - 7 | கீசுகீசு என்றெங்கும் | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai

அரவம் என்ற சொல், ஆண்டாளுக்குப் பிடித்துப் போயிற்று போலும். திருப்பாவையில் இரண்டு பாடல்களில் நான்கு முறை, இந்தச் சொல் இடம்பெறுகிறது. ஒவ்வொரு முறையும் ஒரே பாட்டில் இரு முறைகள். அதுவும் அடுத்தடுத்த பாடல்களில் வருகின்றது. 6ஆவது பாடலில், வெள்ளை விளிசங்கின் பேரரவம், அரியென்ற பேரரவம் என்கிறார். 7ஆவது பாடலில், ஆனைச்சாத்தனின் பேச்சரவம், தயிரரவம் என்கிறார். நான்கு இடங்களிலும் இதற்கு ஓசை என்றே பொருள். இந்தச் சொல், பாடலுக்குத் தனித்த அழகையும் மிடுக்கையும் தருகின்றது. திருப்பாவையின் 7ஆவது பாடல் கீசுகீசு என்றெங்கும், இதோ செல்வி ஸ்வேதாவின் குரலில். கேட்டு மகிழுங்கள். இணைந்து பாடுங்கள்.

No comments: