!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருப்பாவை - 8 | கீழ்வானம் வெள்ளென்று | சேகர் முத்துராமன் குரலில் | ஆண்டாள் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, December 23, 2020

திருப்பாவை - 8 | கீழ்வானம் வெள்ளென்று | சேகர் முத்துராமன் குரலில் | ஆண்டாள்

குதூகலம் என நாம் இன்று பயன்படுத்தும் சொல்லை, 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள், கோதுகலம் எனப் பயன்படுத்துகிறார். இவற்றுக்கு மூலம், வடமொழியில் உள்ள  --कौतूहल--கௌ1தூஹல--  என்ற சொல்லாகும். இதற்கு உள்ளக் களிப்பு என்று பொருள். கோதுகம் என்றும் இதற்கு இன்னொரு வடிவம் உண்டு. அதன் மூலம்  -- कौतुक--கௌ1து11-- என்ற சொல்லாகும். இதற்கும் உள்ளக் களிப்பு என்றே பொருள். திருப்பாவையின் எட்டாவது பாடலில் கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய் என ஆண்டாள் துயிலெழுப்புகிறார். சேகர் முத்துராமனின் குரலில் கீழ்வானம் வெள்ளென்று என்ற பாடலைக் கோதுகலத்துடன், உள்ளக் களிப்புடன் கேட்போம், வாருங்கள்.

ஓவியத்திற்கு நன்றி - ஷ்யாம்

No comments: