!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருப்பாவை - 16 | நாயகனாய் நின்ற | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 16 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, December 31, 2020

திருப்பாவை - 16 | நாயகனாய் நின்ற | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 16

கதவு என்பதை இலக்கிய நடையில் கதவம் என எழுதுவர். கதவம் என்ற சொல், திருப்பாவையில் மூன்று இடங்களில் வருகிறது. 9ஆம் பாடலில், மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய் என்கிறார். 16ஆவது பாடலில் இரு இடங்களில் கதவம் வருகின்றது. வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய் என்றும் நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய் என்றும் பேசுகின்றார். இதே கதவை வாசற்கடை என்றும் சொல்வதுண்டு. நின் வாசற் கடை பற்றி என்றும் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் என்றும் ஆண்டாள் பாடுகிறார். 

2020ஆம் ஆண்டு முடிந்து, 2021ஆம் ஆண்டின் மணிக்கதவம் திறக்கும் தருணம், இது. புதியன பிறக்கட்டும், நல்லன நடக்கட்டும் என நாயகனை வேண்டுவோம். நாயகனாய் நின்ற நந்தகோபனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

No comments: