!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> புள்ளி மூக்கு வாத்து | Spot-billed Duck ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, December 08, 2020

புள்ளி மூக்கு வாத்து | Spot-billed Duck

புள்ளி மூக்கு வாத்து அல்லது புள்ளி மூக்கன், நீரின் மேற்பரப்பில் உணவருந்தும் வாத்து வகைகளுள் ஒன்றாகும். இவற்றின் அலகின் நுனியில் ஒரு மஞ்சள் நிறப்புள்ளி இருக்கும். காலை, மாலை வேளைகளில் ஆண், பெண் பறவைகள் எப்போதும் இணையாக இணைந்துதான் இரை தேடும். மதிய நேரத்தில், கண்ணை மூடித் தண்ணீரிலேயே தூங்கும் வழக்கம் கொண்டது.

நேற்று முதல்முறையாகப் புள்ளி மூக்கு வாத்துகளைப் பார்த்தேன். நம் வீட்டுக்குப் பின்னால் உள்ள மதிலில் அழகாக அமர்ந்திருந்தன. அவற்றுடன் ஆள்காட்டிப் பறவைகளும் அமைதியாக அமர்ந்திருந்தன. மடையான் ஒன்று பறந்து வந்து, இவற்றை எல்லாம் விரட்டிவிட்டது.

No comments: